கர ராசியில் உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் உள்ளன.

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவந்த மேனி உடையவர்கள். இந்த நட்சத் திரத்தின் மிருகம் மலட்டுப் பசு. இவர்களுக்குப் பிடிவாத குணம் அதிகமிருக்கும். யாருக் காகவும் விட்டுக்கொடுத்துப் போகமாட்டார்கள்.

மற்றவர்கள் இவர்களுக்கு அடிபணிய வேண்டு மென்று நினைப்பார்கள். இவர்களைப் பொருத்த வரை 50 வயதுவரை தன் போக்கிலேயே போவார்கள். அதற்குமேல்தான் பக்குவப்படு வார்கள். அதுவரை வாழ்க்கை போராட்ட மாகவே இருக்கும். 50 வயதுக்குமேல் அபார கீர்த்திகளுடன், சன்மானங்களுடன், சந்தோஷ சுகங்களுடன், பூமி, வீடு போன்ற சொத்துகளுடன், வாகனங்களுடன் வாழ்வார்கள். நாற்பது வயதில் தந்தையை இழப்பார்கள். 50 வயதுவரை தாயார் அரவணைப்பில் வாழ்வார்கள்.

mm

Advertisment

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய கண்களையும், உடலில் மச்சங்களையும், உயர்ந்த கம்பீரமான உடலமைப்பையும் பெற்றிருப்பார்கள். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். தனது அந்தஸ்துக்கேற்ற இடங்களில் மட்டுமே உணவருந்துவார்கள்.

யாரையும் லட்சியம் செய்யா மல் தன் இஷ்டம்போல காரியங் களைச் செய்வார்கள். இவர் களது மிருகம் பெண் குரங்கு; தேவ கணம். இவர்களில் பெரும் பான்மையினர் தங்கள் திருமணத்தை தாங்களே முடிவுசெய்வார்கள். காதல் திருமணமாக அமையும். யார் தடுத் தாலும் கேட்கமாட்டார்கள். தனக்கு நிகர் யாரு மில்லை என்ற கர்வத்தோடு இருப்பார்கள்.

Advertisment

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, நடுத்தர வயதில் சிரமங்களை அனுபவித்து, பிற்காலத் தில் பெரிய அந்தஸ்தையும், செல்வ சுகங் களையும், ஸ்திர சொத்துகளையும் பெறு வார்கள். குடும்பம் மகிழ்வுடன் இருக்கும். பலர் 79 வயதுவரை வாழ்வார்கள். இவர்களுக்குப் பெண் பிறந்தால் 19 வயது முடிவதற்குள் வயிற்றுவலியால் அவதிப்படுவார்கள். பின்பு மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்களில் பெரும் பாலோருக்கு குரு 8-ல் இருப்பதால் வயிற்று வலி தொந்தரவு வரும். மகர ராசியில்- குறிப்பாக அவிட்ட நட்சத்திரத்தில் பெண்ணாகப் பிறந்திருந்தால் மட்டுமே "தவிட்டுப் பானையெல்லாம் தங்கமாய்' என்ற நிலை வரும். (கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நிலை வராது.) மகர ராசி- அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு புத்திர சந்தானங்களில் குறைவிருக் காது. மனைவியிடம் அதிகமாகப் பிரிய மிருக்கும். மனைவியின் போக்கின்படி நடந்து கொள்வார்கள். வாசனை திரவியங்களில் பிரியமும், ஆடை, ஆபரணங்களின்மேல் ஆசையும் நிறைந்திருப்பார்கள்.

பரிகாரங்கள்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கா தேவியையும், வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்தியையும் வணங்கிவரவேண்டும். இவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கும். கும்பகோணம் அருகில் திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் காலை 7.00 மணிமுதல் 9.00 மணிக்குள் தோஷநிவர்த்தி செய்வார்கள். ஒருமுறை அங்குசென்று நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

திருவோண நட்சத்திரக்காரர்கள் ராஜகாளியம்மனை வணங்கிவர நன்மையுண்டு. ராஜகாளியம்மனை எப்போதும் வணங்க லாம். இதற்கு காலம், நேரம் கிடையாது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ அனுகூலம் பெற்றவர்கள்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

மகர ராசியாக இருந்தால்- குறிப்பாகப் பெண்கள் வயிற்றுவலி தொந்தரவுகளுடன் இருப்பார்கள். அவர்கள் வயதுக்குவந்த நாள்முதல் 27 கருப்புக் கொண்டைக் கடலையை எடுத்து, மஞ்சள் துணியில் முடிந்து, தலையணையில் வைத்து தைத்து விடவேண்டும். v பின்னாளில் திருமணமாகும்போது எடுத்து விடலாம். இதனால் வயிற்றுவலி தொந்தரவு நீங்கும். ஈரோடு அருகிலுள்ள கொடுமுடிக்கு ஒருமுறையாவது சென்று சனீஸ்வரரையும், நாகராஜரையும் வணங்கிவரவேண்டும். வாரம் தவறாமல் சனிக்கிழமைகளில் சனியை யும் ராகுவையும் அருகிலிருக்கும் கோவிலில் வணங்கிவர நன்மையுண்டாகும்.

செல்: 94871 68174