மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திர 1-ஆம் பாதம் இடம்பெறுகின்றன. அஸ்வினி நட்சத்திரத்திற்கு கேது தசையும், பரணி நட்சத்திரத்திற்கு சுக்கிர தசையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு சூரிய தசையும் ஆரம்பமாகிறது. இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் அஷ்டமத்து ராசியாக விருச்சிகம் வரும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் தேவகணம் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் அரசு உயர திகாரியாகவோ, சமுதாயத்தில் பேசப் படுபவர்களாகவோ இருப்பார்கள்.

sss

அற்ப ஆசை இல்லாதவர்களாக- வாக்கு வண்மை, கோப குணம், முரட்டு சுபாவங்களுடன் கம்பீரமாகத் தோற்றமளிப்பார்கள். தெய்வீக வழிபாடுகள், சாஸ்திர ஆச்சார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்றவர்களாகவும் இருப் பார்கள். கல்வியில் திறமை பெற்றிருப் பார்கள். மெலிந்த சரீரத்துடன் நீண்ட கழுத்து, கை, கால்களுடன் இருப் பார்கள். நீண்ட ஆயுளுடன், உடல் பலத்துடன் வாழ்வார்கள்.

Advertisment

மேஷ ராசி என்பது மேடான ராசி என்றும், அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந் தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன் கீர்த்தி, செல்வாக்கு, சுகம் ஆகியவற் றைப் பெற்றிருப்பார்கள் என்றும் பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான பரிகாரங்களைச் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறமுடியும். (பரிகாரம் இறுதியில் தரப்பட்டுள்ளது.)

மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் அதிகமான பேர் மிகவும் அழகாக இருப்பார்கள். ஆணாக இருந் தால் அவர்களுக்குப் பின் பெண்ணே பிறக்கும் என்றும், பெண்ணாக இருந் தால் ஆண் குழந்தை பிறக்குமென்றும் கூறிவிடலாம். அதனையும் மீறி அடுத்த வாரிசாக ஒரே இனத்தில் வந்தால் அவர்கள் பிரம்மஹத்தி தோஷமடைந்தவர்கள் என்று பொருள். இப்படிப்பட்டவர்கள் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரம் செய்துகொள்ளவேண்டும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூமி, நிலபுலன்கள், வீடு, விவசாயத் தொழிலில் மேன்மை, ஆள், அதிகாரங்களுடன் இருப்பார்கள். இவர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கமாட்டார்கள். ஓரளவு உயரமாக இருப்பார்கள். ஆணாக இருந்தால் சிறப் பாக வாழ்வார். பெண்ணாக இருந்தால் சிறப் பில்லை; வாழ்க்கை முழுவதும் சிரமமாக இருக்கும். தாய்- தந்தை ஒற்றுமையுடன் இருக்கமாட்டார்கள்.

Advertisment

மேஷ ராசி, கார்த்திகை 1-ஆம் பாத நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கணத்தில் ராட்சஸ கணமாக வருகி றார்கள். ஆனால் மிருகத்தில் வரும் பொழுது பெண் ஆடு. எனவே ராட்சஸ குணமிருக்காது. இவர்கள் சற்று உயரமாக இருப்பார்கள். கார்த்திகை 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் பெரும் பாலும் சுயநலவாதிகள். இவர்களில் பெரும்பான்மையினர் கடல்கடந்து சென்று வேலைசெய்து வருவார்கள் அல்லது வியாபார நுணுக்கங்களைப் பெற்றிருப்பார்கள்.

பரிகாரம்

அஸ்வினி நட்சத்திரக்காரர் களுக்கு: "ஓம் ஹ்ரீம் ஆதித்யாச மங்களாய புதாய குரு சுக்கிர சனிப் ரயச்ச ராகவே கேதவே நமஹ' என்று தினமும் சொல்லி வணங்கிவர வறுமை, பிணி, பகை நீங்கி மேன்மையுறலாம். இவர்கள் வணங்கவேண்டிய தெய்வம் சனீஸ்வரர். முடிந்தால் திருநள்ளாறு சென்று வழிபட்டுவரவேண்டும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு: இவர்கள் மகாகாளியை வணங்க வேண்டும். முடிந்தால் சென்னை அடுத்து திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு சென்று சிவனையும் காளியையும் வழிபட்டுவரலாம். இவர்களை பிரம்மஹத்தி தோஷம் பாதித்திருக்கும். எனவே கும்ப கோணம் அருகில் திருவிடை மருதூரில் எழுந்தருளியுள்ள மகாலிங் கேஸ்வரர் கோவிலிலில் காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது. கட்டணம் அங்குள்ளபடி.

கார்த்திகை 1-ஆம் பாத நட்சத் திரக்காரர்களுக்கு: இந்த நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷனை வணங்கவேண்டும். ஒருமுறையாவது நாகப்பட்டினம் சென்று அங்குள்ள ஆதிசேஷனை வணங்கிவரவேண்டும். தோஷம் நீங்கும்.

மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து, சம்பந்தப்பட்ட கடவுளின் நாமம் சொல்லிலி வணங்கிவர மேன்மையடையலாம்.

செல்: 94871 68174