Advertisment

12 லக்னத்திற்கும் சுக்கிர தோஷம் போக்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-12th-ascendant-and-sukra-dosha

ரு மனிதனுக்கு அழகு, கவர்ச்சியைக் கொடுப்பதும் சுக்கிரன்தான். ஒருவருடைய திருமண வாழ்க்கை, காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்வுக்குத் தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள் போன்றவற்றுக்கு காரக கிரகம் சுக்கிரன்.

Advertisment

சுக்கிரன், வாழும்வரை ஜாலியாக வாழ்ந்துவிட்டுப் போகவைக்கும் கிரகம். பணம் மட்டும் இருந்தால் போதும்; அதை எப்படி வேண்டுமானாலும் அனுபவித்து செலவழிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில், பணம் இருந்தாலும், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை.

அதனால் சுக போகத்தின் அதிபதி சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும், கெடாமல் வலுப்பெற்றிருக்கவேண்டும் அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம் பரமான கார், சொகுசான- இன்பமயமான வாழ்க்கை இத்தனையையும் ஒருவருக்குக் குறைவின்றிக் கொடுக்கும் கிரகம் சுக்கிரன்.

சுக்கிரன் பாவக, ஆதிபத்தியரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்கிரனின் காரகங்களான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை, கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும். கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து பெரிய உயரத்தையும் தொடவைக்கும். காரக, பாவக, ஆதிபத்தியரீதியாக சுக்கிரன் பலம்குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பிருக்கும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும்.

Advertisment

ஒரு மனிதன் யோகமான வாழ்க்கை வாழ்ந் தால், "அவனுக்கென்னப்பா... சுக்கிர தசை, பிச்சுகிட்டு கொட்டுகிறது' என்று படிக்காத பாமரனும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

12lakhs

உண்மையைச் சொன்னால் சுக்கிரன், எல்லாருக்கும் நல்ல பலனை அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. சுக்கிரன் தன்னுடைய நண்பர்களான புதன், சனியின் லக்னங்களுக்கு யோக கிரகமாக வரும் பொழுது, அவருடைய தசையில் மிகச்சிறப் பான யோகப் பலன்களைக் கொடுக்கும். சுக்கிரனின் பகை கிரகமான குருவுக்கு, சுக்கிரன் எந்தவிதத்திலும் நல்ல பலனைத் தரு வதில்லை. அதேபோல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள், இரு பாவகத்திற்குள்ள பலன்களை நடத்தியே தீரும்.

இனி பன்னிரண்டு லக்னத்திற்கும் சுக்கிர தோஷம் போக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் 2, 7-ஆமதிபதி. தன ஸ்தானாதிபதி. களத்திர ஸ்தானாதிபதி. சுக்கிரன் பலம்பெற்றால் பொருளாதார வெற்றி, வீடு, மனை, வாகனம் போன்றவை கி

ரு மனிதனுக்கு அழகு, கவர்ச்சியைக் கொடுப்பதும் சுக்கிரன்தான். ஒருவருடைய திருமண வாழ்க்கை, காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்வுக்குத் தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள் போன்றவற்றுக்கு காரக கிரகம் சுக்கிரன்.

Advertisment

சுக்கிரன், வாழும்வரை ஜாலியாக வாழ்ந்துவிட்டுப் போகவைக்கும் கிரகம். பணம் மட்டும் இருந்தால் போதும்; அதை எப்படி வேண்டுமானாலும் அனுபவித்து செலவழிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில், பணம் இருந்தாலும், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை.

அதனால் சுக போகத்தின் அதிபதி சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும், கெடாமல் வலுப்பெற்றிருக்கவேண்டும் அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம் பரமான கார், சொகுசான- இன்பமயமான வாழ்க்கை இத்தனையையும் ஒருவருக்குக் குறைவின்றிக் கொடுக்கும் கிரகம் சுக்கிரன்.

சுக்கிரன் பாவக, ஆதிபத்தியரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்கிரனின் காரகங்களான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை, கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும். கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து பெரிய உயரத்தையும் தொடவைக்கும். காரக, பாவக, ஆதிபத்தியரீதியாக சுக்கிரன் பலம்குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பிருக்கும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும்.

Advertisment

ஒரு மனிதன் யோகமான வாழ்க்கை வாழ்ந் தால், "அவனுக்கென்னப்பா... சுக்கிர தசை, பிச்சுகிட்டு கொட்டுகிறது' என்று படிக்காத பாமரனும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

12lakhs

உண்மையைச் சொன்னால் சுக்கிரன், எல்லாருக்கும் நல்ல பலனை அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. சுக்கிரன் தன்னுடைய நண்பர்களான புதன், சனியின் லக்னங்களுக்கு யோக கிரகமாக வரும் பொழுது, அவருடைய தசையில் மிகச்சிறப் பான யோகப் பலன்களைக் கொடுக்கும். சுக்கிரனின் பகை கிரகமான குருவுக்கு, சுக்கிரன் எந்தவிதத்திலும் நல்ல பலனைத் தரு வதில்லை. அதேபோல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள், இரு பாவகத்திற்குள்ள பலன்களை நடத்தியே தீரும்.

இனி பன்னிரண்டு லக்னத்திற்கும் சுக்கிர தோஷம் போக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் 2, 7-ஆமதிபதி. தன ஸ்தானாதிபதி. களத்திர ஸ்தானாதிபதி. சுக்கிரன் பலம்பெற்றால் பொருளாதார வெற்றி, வீடு, மனை, வாகனம் போன்றவை கிடைக்கும். சுக்கிரனின் தன்மைகொண்ட வாழ்க்கைத் துணை அமையும். அழகு, காதல் உணர்வு, நல்ல புரிந்துணர்வு, தாம்பத்திய சுகம் போன்றவை கிடைக்கும். மனதிற் கினிய வாழ்க்கைத் துணை அழகு, அந்தஸ்து டையவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் ஏற்படும். திருப்புமுனை உண்டாகும் மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் சிறப்பான திருமண வாழ்க்கையுண்டு. சுக்கிரன் பாதிக்கப்பட்டால் பொருளாதாரத்தில் தன்னிறைவு இருக் காது. வறுமை, கடன் போன்றவற்றால் தம்பதிகளிடம் நெருக்கம் குறையும். வாழ்க் கைத் துணையால் மன நிம்மதி போகும். சிலருக்கு திருமணமே நடக்காது

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடவேண்டும்.

ரிஷபம்

ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதி மற்றும் ஆறாமதிபதி. இவர் களுக்கு சுக்கிரன் வலுப் பெற்றால் ஆடம்பரத் திற்காக கடன் பெறுவார்கள். ஜாத கரின் கடன் பிரச் சினைக்கு ஜாதகரின் நடவடிக்கைகளே காரணமாக இருக்கும். ஜாதகரின் சகிப்புத்தன்மையற்ற நடவடிக் கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும். நோய்க்கு வைத்தியம் செய்ய கடன் பெறுவார்கள். கடனுக்கு பயந்து நோய் கூடிக்கொண்டே போகும். அதேபோல் சுக்கிரன் பலம்குறைந் தாலும் தசா புக்திக் காலங்களில் கடன், நோய் பாதிப்பு, எதிரி தொல்லை இல்லாமல் போகாது. இவர்களுக்கு சுக்கிர தசை, புக்திக் காலங்களில் பாதிப்பு அதிகமாகவும், பிற நேரங்களில் பாதிப்பு குறைவாகவும் இருக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை யில் லட்சுமி நரசிம்மரை வழிபடவேண்டும்.

மிதுனம்

மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி. விரயாதிபதி. சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்பெற்றால் குல கௌரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோ டும் வாழ்வார்கள். தலைமைப் பதவி தேடி வரும். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாகத் தேடிவரும். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர்களால் இவர்களுக்கும், இவர்களால் புத்திரர்களுக்கும் பயனுண்டு. அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப் படுவாள். தொட்டது துலங்கும். சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சிபெற்றாலும், அசுப கிரக சம்பந்தமிருந்தாலும் பூர்வீகத்தில் வாழமுடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சையுண்டு. பிள்ளைகளால் மன வேதனை மிகும். குலதெய்வ அருள் கிடைக்காது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சர்க்கரைப் பொங்கல் படைத்து குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

கடகம்

கடக லக்னத்திற்கு சுக்கிரன் 4, 11-ஆமதிபதி. சுகாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதி. கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி. துலாத்தில் ஆட்சி பலம்பெற்ற சுக்கிரனும், மீனத்தில் உச்சம்பெற்ற சுக்கிரனும் நிறைவான சொத்து சுகத்தையும், நிறைந்த லாபத்தையும், தாய்வழி உறவுகளின் அனுசரணையையும், வழக்குகளில் வெற்றியையும், முன்னோர் களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாகப் படிப்பார்கள். கற்ற கல்வியால் பயனுண்டு. ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். இவர்களின் ஆலோ சனைக்கு, ஏவலுக்குக் கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்கள். ரிஷபத்தில் ஆட்சி பலம்பெற்ற சுக்கிரன் பாதகத்தை மிகைப் படுத்துவார். சனி பலம்குறைந்தால் மறு மணத்தை நடத்துவார். அசுப வலிமை படைத்த சுக்கிரன் காதல், காமத்தால் வம்பு, வழக்கைத் தருவார்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் சிவசக்தியை வழிபடவும்.

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு சுக்கிரன் சகாய ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, 3, 10-ஆமதிபதி. சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்பெற்றால் புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம் மிகும். கவர்ச்சியான விளம் பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார் கள். உடன்பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். 8-ல் உச்சம்பெற்ற சிலருக்கு தொழிலில் பெரும் இழப்பு, நட்டம், அவமானம், வம்பு, வழக்கைத் தருகிறது. சுக்கிரன் பலம்குறைந்தால் தகுதி, திறமைக்குத் தகுந்த நிரந்தரத் தொழில் உத்தியோகம் அமையாது. சிலர் உடன்பிறப்பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்கத் தெரியாத ஏமாளியாக இருப்பார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் சிவவழிபாடு செய்யவும்.

கன்னி

கன்னி லக்னத்திற்கு சுக்கிரன் தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. 2, 9-ஆமதிபதி. சுக்கிரன் பலம்பெற்றால் நிர்வாகத் திறமை யுண்டு. தனது சாதுர்யப் பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார்- உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர் கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவர்கள். பிற நாட்டுத் தொடர்பாலும் அரசு மூலமாக வும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ்பெறுவர். அமைச்சராகும் அந்தஸ்துண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் அல்லது சுக்கிரன் பலம்குறைந்தால் நிலையான பொருள் வரவிருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தந்தை மற்றும் தந்தைவழி உறவு களின் ஆதரவு குறையும். மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் சிலருக்கு மாரகத்தை மிகைப் படுத்தும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கவும்.

துலாம்

துலா லக்னத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதி, அஷ்டமாதிபதி. சுக்கிரன் எந்த நிலையில் இருந் தாலும் தசை, புக்திக் காலங்களில் அவமானம், கடன், வம்பு, வழக்குண்டு. தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால், தசை முடியும் போது அவயோகமுண்டு. துலா லக்னத்திற்கு சுக்கிர தசை வராமலிருப்பது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை யில் லட்சுமி குபேர பூஜை நடத்தவேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகத்திற்கு சுக்கிரன் 7, 12-ஆமதிபதி. களத்திர ஸ்தானாதிபதி. விரயாதிபதி. 5, 7-ல் பலம்பெற்ற சுக்கிரன் காதல் திருமணத்தைத் தருகிறது. குலதெய்வ அருள் கிடைக்கும். அயன, சயன போகம் சிறந்த நிலையில் இருக் கும். ஜாதகர் அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்யக்கூடிய தன்மை கொண்டவ ராக இருப்பார். 12-ல் ஆட்சி பலம்பெற்ற சுக்கிரன் எளிதில் திருமண வாழ்க்கையை அமைத்துத் தராது. பலருக்குத் தவறான உறவை மிகைப்படுத்துகிறது. வயோதிகத்தில் சுக்கிர தசை மாரகத்தைத் தருகிறது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலபைரவரை வழிபடவேண்டும்.

தனுசு

தனுசு லக்னத் திற்கு சுக்கிரன் 6, 11-ஆமதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. லாபாதிபதி. சுக்கிரன் வலுத்த தனுசு லக்னத்தினர் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்படுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவ தும் மதிமந்திரியாக இருப்பார். அனுபவரீதி யாக கேது தசையில் கடன் பட்ட தனுசு லக்னத்தினர் சுக்கிர தசையில் கடன் நிவர்த்தி பெறுகின்றனர். கேது தசையில் கடன் படாத தனுசு லக்னத்தினர் சுக்கிர தசை முழுவதும் கடனால் அவதிப்படுகிறார்கள். கேது குறுகிய கால தசை. சுக்கிரன் நீண்டகால தசை. சுய ஜாதகத்தில் சுக்கிரனும் கேதுவும் நின்ற நிலைக்கேற்ப பலன் மாறுபடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவேண்டும்.

மகரம்

மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து, பத்தாமதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி. சுய ஜாதகத் தில் சுக்கிரன் வலுத்த மகர லக்னத்தினர் அதிர்ஷ்டசாலிகள். ஒரு கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதி. பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கௌரவப் பதவியுண்டு. சிலர் குலத்தொழில் செய்பவர்கள். சமுதாய அங்கீகாரம் நிறைந்த வர்கள். நல்ல பண்பான, பணிவான புத்திரர் கள் பிறப்பார்கள். குலதெய்வக் கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். சுக்கிரன் வலுக் குறைந்தால் நிலையான பதவி, புகழ் இருக்காது. ஆன்மிக நாட்டம் குறையும். பிள்ளைகளால் மனக் கஷ்டம் மிகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை குலதெய்வத் திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடவும்.

கும்பம்

கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் 4, 9-ஆமதி பதி. சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. கும்பத்திற்கு 9-ல் அமர்ந்த சுக்கிரன் நிச்சயம் பாதகத்தை தசை, புக்திக் காலங்களில் செய்வார். சுக்கிரனும், சனியும் நட்பு கிரகங் கள் என்பதால் பாதகத்தைச் செய்யமாட்டார் என பலர் கூறினாலும், வினையை அனுபவிப்ப வர்களுக்கு மட்டும்தான் வலியின் வேதனை புரியும். சுக்கிரன் சுய ஜாதகத்தில் சுபவலுப் பெற்றவர்கள் பூமியினாலும், பயிர்களினா லும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்குப் பயன்படுத்துவர். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள். தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள்மீது பற்றும் பாசமுமுண்டு. சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்குறைந்தால் தசை, புக்திக் காலங்களில் பாதகம் குறையும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை குளிகை நேரத்தில் சிவவழிபாடு செய்யவேண்டும்.

மீனம்

மீன லக்னத்திற்கு சுக்கிரன் முயற்சி ஸ்தானாதி பதி. அஷ்டமாதிபதி. 3, 8-ஆமதிபதி. உடன் பிறந்த சகோதரர்களால் இன்னல்கள், வம்பு வழக்கு, நஷ்டம் மிகுதியாகும். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடியாது. முக்கிய சொத்துகள், பாகப் பிரிவினை போன்ற எதற்கும் முறையான ஆவணம் இருக்காது. சொத்துத் தகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங் கும். தெய்வ நம்பிக்கை குறையும். சிலருக்கு அடிக்கடி தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். சொல் புத்தியும் இருக்காது. சுய புத்தியும் கிடையாது. பய உணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரியம் குறைவுபடும். கற்பனையில் வாழ்வார்கள். செவித்திறன் குறைவுபட லாம். கீழ்ப்படியாத வேலையாட்கள் கிடைப் பார்கள். திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் தோல்வியை சந்திப்பார்கள். விலையுயர்ந்த ஆபரணங்களை அடிக்கடி கைமறதியாக வைப்பார்கள் அல்லது அடகு வைப்பார்கள். மீன லக்னத்திற்கு சுக்கிர தசை வரவே கூடாது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகு காலத் தில் துர்க்கை, காளியை வழிபட வேண்டும். மேலே சொன்ன பலன்கள் அவரவர்கள் ஜாதகத்தில் சுக்கிரனோடு இணைந்த- பார்த்த மற்ற கிரகங்களைப் பொருத்து பலனில் சிறு மாற்றத்தைத் தரும்.

செல்: 98652 20406

bala240323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe