Advertisment

100% நீங்கள் நினைத்ததை நிறைவேற்றும் பரிகாரங்கள்! பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remedies-100-do-what-you-think-prasanna-astrologer-i-anandhi

முற்பிறவியில் செய்த நல்ல- தீய வினைகளின் விளைவுகளே இந்த பிறவி.பூர்வஜென்ம புண்ணிய பலத்திற்கு ஏற்ப இந்த ஜென்மத் தில் நன்மை- தீமைகள் நடைபெறு கிறது. நன்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனம் தீமைகளை ஏற்றுக் கொள்வதில்லை. உலகி லுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான இன்னல்களை தினமும் சந்திக்கி றார்கள். அதிலிருந்து மீளமுடியா மல் தவிப்பவர்கள் கீழே தரப்பட் டுள்ள எளிய பரிகாரங்களை பயன் படுத்தினால் நூறு சதவிகிதம் வெற்றி நிச்சயம்.

Advertisment

பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாக வியாழக் கிழமையும் பௌர்ணமியும் இணைந்தநாளில் அல்லது வியாழக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்தநாளில் பிராமணர் களுக்கு உணவு, உடை தானம் வழங்கி கிருஷ்ணர் வழிபாடு செய்ய தனவரவு தாராளமாகும்.

Advertisment

ff

பாகப்பிரிவினை சுமூகமாக ஒருவரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் அல்லது 3-ஆமிடம் பலம் குறைந்தாலும் உடன் பிறந்த வர்களுடன் கருத்து வேறுபாடு

முற்பிறவியில் செய்த நல்ல- தீய வினைகளின் விளைவுகளே இந்த பிறவி.பூர்வஜென்ம புண்ணிய பலத்திற்கு ஏற்ப இந்த ஜென்மத் தில் நன்மை- தீமைகள் நடைபெறு கிறது. நன்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனம் தீமைகளை ஏற்றுக் கொள்வதில்லை. உலகி லுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான இன்னல்களை தினமும் சந்திக்கி றார்கள். அதிலிருந்து மீளமுடியா மல் தவிப்பவர்கள் கீழே தரப்பட் டுள்ள எளிய பரிகாரங்களை பயன் படுத்தினால் நூறு சதவிகிதம் வெற்றி நிச்சயம்.

Advertisment

பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாக வியாழக் கிழமையும் பௌர்ணமியும் இணைந்தநாளில் அல்லது வியாழக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்தநாளில் பிராமணர் களுக்கு உணவு, உடை தானம் வழங்கி கிருஷ்ணர் வழிபாடு செய்ய தனவரவு தாராளமாகும்.

Advertisment

ff

பாகப்பிரிவினை சுமூகமாக ஒருவரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் அல்லது 3-ஆமிடம் பலம் குறைந்தாலும் உடன் பிறந்த வர்களுடன் கருத்து வேறுபாடு நிலவும். சொத்துகளுக்கு முறையான பத்திரம் இருக்காது. பாகப் பிரிவினையில் கருத்து வேறுபாடு ஏற்படும். சொத்துகளில் எல்லைத் தகராறு இருக்கும்.

சனிக்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமை மாலை 4.30 மணிமுதல் 6.00 மணி வரையான பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபட தீராத வழக்கு, சொத்து பிரச்சினைகள் தீரும்.

மாமியார்- மருமகள் பிணக்கு, தாய்- மகள் கருத்து வேறுபாடு நீங்க பழங்காலத்தில் மாமியார்- மருமகள் கருத்து வேறுபாடு மிகுதியாக இருந்துவந்தது. பெண் பாதுகாப்புச் சட்ட திட்டங்கள் தற்போது கடுமையாகி விட்டதால் சற்று குறைந்துள்ளது. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன், சம்பந்தம் இருந்தால் மாமியார் அல்லது தாயுடன் சற்று கருத்து வேறுபாடு அதிகமாகும். இதனால் குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் கூடும். இதுபோன்ற அசவுகரியத்திலிருந்து விடுபட வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மல்லிகைப் பூ சாற்றி மாரியம்மனை வழிபடவேண்டும்.

தந்தை- மகன் கருத்து வேறுபாடு விலக ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன் ராகு, சூரியன்- சனி சம்பந்தம் இருந்தால் தந்தை- மகன் கருத்து வேறுபாடு உண்டாகும். இதய நோய், கண் பார்வை குறைபாடு ஏற்படும்.

ஞாயிறு மாலை 4.30- 6.00 வரையான ராகு வேளையில் பிரதோஷ நேரத்தில் நெய் தீபமேற்றி துர்க்கையை வழிபட தந்தை- மகன் பிணக்கு, இதய நோய், பார்வை குறைபாடு ராகு- கேது தோஷம், கால சர்ப்ப தோஷத்தின் பாதிப்பு குறையும்.

இனம்புரியாத நோயிலிருந்து விடுபட

6, 8, 12-ஆம் அதிபதிகளின் தசை புக்திக்காலங்களில் ராகு, கேது, சனி தசை, புக்திக் காலங்களில் ஏழரை அஷ்டமச்சனி காலத்தில் அல்லது 6, 8-ல் கோட்சார ராகு- கேது சஞ்சரிக்கும் காலத்தில் எளிதில் அடையாளம் காணமுடியாத நோய் தாக்கம் உருவாகும்.

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இரவு 8.00 மணிமுதல் 9.00 மணிவரை யான செவ்வாய் ஓரையில் முருகனுக்கு அரளி மாலை அணிவித்து வழிபட விபத்து, கண்டம் போன்ற பாதிப்புகள் விலகும். தீராத, இனம்புரியாத நோய் குணமாகும். மாணவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்க புதனின் ஆதிக்கம் நிறைந்த புதன்கிழமை நாளில் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையான புதன் ஓரையில் ஹயக் கீரிவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட கற்றல் குறைபாடு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் கூடும்.

காணாமல் போனவர்கள், தலைமறைவாக வாழ்பவர்கள் பற்றிய தகவல் கிடைக்க சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு வாழைப்பழ மாலை சாற்றி வழிபட கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றவர்கள், தலைமறைவாக வாழ்பவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் கிடைக்கும்.

திருமணத்தடை அகல

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக் கிழமை வயதான சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், ஜாக்கெட் பிட், இனிப்பு வழங்கி ஆசிபெற திருமணத்தடை அகலும்.

அரசாங்க வேலை, அரச பதவியிலுள்ள இடர்கள் நீங்க ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் 11.00 மணிக்குள் ஒரு கிலோ கோதுமையை தானம் தர அரசியல் பதவி, அரசாங்க உத்தியோகத்திலுள்ள இடர்கள் நீங்கும்.

மனக் குழப்பம், மன நோய் பாதிப்பு விலக

திங்கட்கிழமை காலை 10.00 மணிமுதல் 11.00 மணிக்குள் பச்சரியால் செய்த உணவை தானம் வழங்க சித்த பிரம்மை, மனக்குழப்பம், மனநோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, சுய முடிவு எடுக்கமுடியாத நிலை இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டு.

உத்தியோகத்தில் விரும்பிய இடப்பெயர்ச்சி உண்டாக

சில வருட கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் தசா புக்தி சாதகமற்ற காலங்களில் இடப்பெயர்ச்சியால் குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து சௌகரியமான இடத்தில் வேலை பார்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

சந்திரனின் பரிபூரண ஆதிக்கம் நிறைந்த திங்கட்கிழமை காலை 6.00 மணிமுதல் இரவு 7.00 மணி வரையான சந்திர ஓரையில் பச்சரிசி மாவில் விளக்கு செய்து 2 நெய் தீபமேற்றி சிவபெருமானை வழிபட விரும்பிய ஊருக்கு உத்தியோக மாற்றம் கிடைக்கும்.

தம்பதிகளிடம் ஒற்றுமை மேலோங்க

செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிமுதல் 4.30 வரையான ராகு வேளையில் எலுமிச்சை சாதம் செய்து ஏழு பேருக்கு தானம் செய்வதுடன் துர்க்கை, காளியை வழிபட திருமணத்தடை, கணவன்- மனைவி கருத்து வேறுபாடு அகலும்.

தொடரும்

செல்: 98652 20406

bala190124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe