Advertisment

100% நீங்கள் நினைத்ததை நிறைவேற்றும் பரிகாரங்கள்! பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி

/idhalgal/balajothidam/remedies-100-do-what-you-think-prasanna-astrologer-i-anandhi-continuation

பித்ரு தோஷம் விலக ஒருவர் எவ்வளவுதான், ஆலய வழிபாடுகள், தர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்தாலும் பித்ருக்கள் வழிபாடு செய்யவில்லை என்றால் நற்பலன்கள் ஏற்படுவதில்லை. பித்ருக்களை வழிபடுவதற்கு உரிய காலங்களாக முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள "வியதீபாதம்' காலங்களில் முறையான வழிபாடு செய்வதன்மூலம் பல பிரச்சினைகள் விலகும். அளவற்ற நற்பலன்களைப் பெறலாம்.

Advertisment

பொதுவாக யோகங்களை மூன்றுவிதமாக முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

1. ஜனனகால ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் யோகங்கள்.

2. நட்சத்திர சேர்க்கையின் அடிப்படையில் ஏற்படும் யோகங்கள். (சித்தயோகம், அமிர்த யோகம், மரணயோகம் போன்றவை).

Advertisment

3. சூரிய சந்திரனுக்கிடையே ஏற்படும் தொடர்பால் உண்டாகும் யோகங்கள்.

இந்த மூன்றாவது வகையில் விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 விதமான யோகங்கள

பித்ரு தோஷம் விலக ஒருவர் எவ்வளவுதான், ஆலய வழிபாடுகள், தர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்தாலும் பித்ருக்கள் வழிபாடு செய்யவில்லை என்றால் நற்பலன்கள் ஏற்படுவதில்லை. பித்ருக்களை வழிபடுவதற்கு உரிய காலங்களாக முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள "வியதீபாதம்' காலங்களில் முறையான வழிபாடு செய்வதன்மூலம் பல பிரச்சினைகள் விலகும். அளவற்ற நற்பலன்களைப் பெறலாம்.

Advertisment

பொதுவாக யோகங்களை மூன்றுவிதமாக முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

1. ஜனனகால ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் யோகங்கள்.

2. நட்சத்திர சேர்க்கையின் அடிப்படையில் ஏற்படும் யோகங்கள். (சித்தயோகம், அமிர்த யோகம், மரணயோகம் போன்றவை).

Advertisment

3. சூரிய சந்திரனுக்கிடையே ஏற்படும் தொடர்பால் உண்டாகும் யோகங்கள்.

இந்த மூன்றாவது வகையில் விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 விதமான யோகங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் வியதீபாதம்.

ff

குறிப்பிட்ட துல்லியமான கிரகசேர்க்கைகள், யோகங்கள் ஏற்படும் நேரங்களில் செய்யப்பெறும் வழிபாடுகள், மற்ற நேரங்களில் செய்யும் வழிபாட்டைவிட பன்மடங்கு புண்ணியப் பலன்களை அள்ளித்தரும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இப்படிப்பட்ட யோகக் காலங்களைத் தேர்வு செய்து வழிபாடுகளை நிகழ்த்துவதன்மூலம் அளவிலாத நன்மைகளை அடைய இயலும்.

ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை விலக தற்போது போலி பத்திரப் பதிவை தடைசெய்ய அரசால் பல்வேறு சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனா லும் பலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் சொத்துப் பிரச்சினை, பட்டா, சிட்டா அடங்கல் இல்லாத சொத்துப் பிரச்சினை, உயிலால் முறையான பத்திரங்கள் இல்லாததால் நிலவும் சொத்துப் பிரச்சினை, பாகப்பிரிவினை பிரச்சினை, காசோலை பிரச்சினை, பணம் கொடுக்கல்- வாங்கலுக்கு முறையான ஆதாரமின்மை, பெயர் மாற்றம், உரிமை மாற்ற பிரச்சினை பல்வேறுவிதமான ஆவணங்கள் தொடர்பான சொத்துப் பிரச் சினைகள் உள்ளது. அவர்கள் புதன்கிழமை ராகு காலத்தில் பகல் 12.00 மணிமுதல் 1.30 மணிவரையான ராகு வேளையில் சரபேஸ் வரரை வழிபட, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

இழந்ததை மீட்க புனர்பூச நட்சத்திரநாளில் குரு ஓரையில் இராமர் பட்டாபிஷேக படத்தின்முன் அமர்ந்து ஸ்ரீராமஜெயம் எழுத பிரிந்த கணவன்- மனைவி, இழந்த சொந்தங்கள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள். இழந்த பொன், பொருள் மீண்டும் கிடைக்கும்.

உயர் அதிகாரிகளால் ஏற்படும் சங்கடங்கள் விலக சனிக்கிழமை எட்டு உடல் ஊனமுற் றோருக்கு கருப்பு கம்பளி தானம் தர செய்யத் தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகும். நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதி காரிகளால் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.

நம்பிக்கை துரோகம், ஜாமின் பாதிப்பு விலக புதன்கிழமை புதன் ஓரையில் சக்கரத் தாழ்வாருக்கு ஐந்து நெய்தீபமேற்றி துளசியால் அர்ச்சனைசெய்து வழிபட, ஜாமின் தொடர் பான பிரச்சினை அகலும். நம்பிக்கை துரோ கத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.

கருப்பை மற்றும் மாதவிடாய் கோளாறு சீராக

திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிக்குள் மாதுளை பழச் சாறால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் கருப்பை, மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

அரசாங்க உத்தியோக இடர்கள் விலக

ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிமுதல் 1.30 மணிவரையான எமகண்ட நேரத்தில் நமச்சிவாய என்ற மந்திரத்தை 108 முறைச் சொல்வதுடன் சாலையோரத்தில் வாழும் ஆதரவற்றவர்கள் ஏழு பேருக்கு முழுச்சாப்பாடு, தண்ணீருடன் தானம் தர, அரச பதவி நிலைக்கும். அரசாங்க உத்தி யோகத்திலுள்ள இடர் தீரும்.

அரசு உத்தியோகம், அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாக

ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையான சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்து சூரிய நமஸ்காரம் செய்ய அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசு வகை உதவி கிடைக்கும்.

தடைப்பட்ட வீடுகட்டும் பணி துரிதமாக

வியாழக்கிழமை காலை 7.00 மணிமுதல் 8.00 மணிவரையான செவ்வாய்க்கிழமை ஓரையில் சித்தர்கள் ஜீவசமாதிக்கு 108 முறைச் செங்கல் தானம் வழங்க நிதிப்பற்றாக் குறையால் தடைப்பட்ட வீடுகட்டும் பணி துரிதப்படுத்தப்படும்.

பிரம்மஹத்தி தோஷம் விலக

சனிக்கிழமை காலை 7.00 மணிமுதல் 8.00 மணிவரையான குரு ஓரையில் கோபூஜை நடத்த தோஷம் குறையும். இயலாதவர்கள் பசுவிற்கு அகத்திக் கீரை தந்தால் போதும்.

தந்தை- மகன் கருத்து வேறுபாடு விலக

ஞாயிற்றுக்கிழமை காலை சனி ஓரையில் சிவனுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபட கருத்து வேறுபாட்டால் பிரிந்த தந்தை- மகன் மீண்டும் இணைவார்கள்.

bala260124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe