"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்'

என்பது வள்ளுவர் வாக்கு.

குழந்தைப்பேறு எவ்வளவு பெரிய பாக்கியம் என்பது குழந்தைப்பேறுக்காக ஏங்குபவர்களுக்கு மட்டுமே புரியும். குழந்தைப்பேறு என்பது பாக்கியம். பாக்கிய ஸ்தானமான 9-ஆம் பாவகம் வலிமை பெற்றவர்கள் மட்டுமே நல்ல புத்திரர்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் இருப்பதே புத்திர பாக்கியம் பெற்றவர். ஆண் அல்லது பெண் குழந்தை மட்டும் இருந்தாலும் புத்திர தோஷமே.

Advertisment

புத்திர தோஷம் என்பது குழந்தை பிறப்பிற்குமுன் அல்லது குழந்தை பிறப்பதில் உள்ள பிரச்சினையைக் குறிக்கும்.

குழந்தை பிறந்தபிறகு குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள், மனவேத னையே புத்திர சோகம் ஆகும். குழந்தை பெற்றவர்கள் எல்லாம் பாக்கியவான்கள் அல்ல. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பாக்கியமற்ற வர்களும் அல்ல. புத்திரப் பேறின்மூலம் ஒருவர் பெறும் நன்மை, தீமைகளே புத்திர தோஷம், புத்திர சோகத்தைத் தீர்மானிக்கிறது. இதிலிருந்து 9-ஆம் பாவகமான பாக்கியஸ்தானம் எவ்வளவு முக்கியமானது என்பது புரியும். தனக்குப்பிறகு குலதர் மத்தைத் தொடர்ந்து கடைப் பிடிக்க கர்மபுத்திரனைப் பெறாதவர்களையும், கன்னிகா தானம் செய்து கொடுக்கும் பாக்கியத்தைப் பெறாதவர்களையும் கொடிய பாவிகள் என்றும், இவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த பாவத்திலிருந்து தப்பிக்க புத்திர பாக்கியம் அவசியம் ஏற்படவேண்டும். புத்திர பாக்கியம் ஏற்படுவது பூர்வ புண்ணியத்தால் மட்டுமே. பூர்வ புண்ணி யத்தைப் பெற உதவுவது 5-ஆம் பாவம். பெரும்பாக்கியவான்களுக்கு மட்டுமே நல்ல புத்திரர்கள் கிடைக்கப்பெறும்.

Advertisment

ஒரு ஜனன ஜாதகத்தில் 5, 9-ஆம் பாவகத் தைக்கொண்டே புத்திர பாக்கியத்தைத் தீர்மானிக்க வேண்டும். ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியம். புத்திர காரகராகிய குருவுக்கு புத்திர பாக்கியம் தருவதில் மிக முக்கிய பங்குண்டு. செவ்வாய், பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பவர். சுக்கிரன் உயிரணுவிற்கும், கருமுட்டைக்கும் காரகர். ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால், விரும்பிய புத்திர யோகம் தானாகக் கூடிவரும்.

புத்திர சோகத்தை ஒன்பது வகைப்படுத்தலாம்.

parigaram

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியமே ஏற்படாது என்ற நிலை. ஆண்வாரிசு இல்லாமை. குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு சந்தோஷம் இல்லாமை. இளம்வயதில் குழந்தைகள் நோயினால் கஷ்டப்படுவது. ஊனமுற்றவர்களாகப் பிறப்பது. பெற்றோர்களைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டு ஓடிப்போவது. குழந்தைகள் நல்லபடியாக இருந்தும் பெற்றோர்கள் சாபத்தை வாங்குவது; பெற் றோரைக் கொடுமைப்படுத்துவது. சொத்துக் காகவும், வேறுசில விஷயங்களுக்காகவும் கொல்லப்படுவது. ஆசையோடு வளர்த்துவரும் பிள்ளைகள் நோயின் காரணமாகவும், விபத்தின் காரணமாகவும் நடுவயதில் அகால மாக உயிர் துறப்பது என ஒன்பது வகையான புத்திர தோஷங்கள் உண்டு.

Advertisment

இவற்றில் சில தோஷங்கள் சிலகாலம்வரை நீடிக்கும். பல தோஷங்கள் பல வருஷங்களாக நீடிக்கும். மேலும் சில கடைசிவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இத்தனை தோஷங்களையும் தாண்டி குழந்தைகள் பிறப்பது, நல்லபடியாகப் பிறப்பது, நல்லபடியாகப் படிப்பது, பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அனுகூலமாக இருப்பது, ஒழுக்கத்துடன் இருப்பது, குலப் பெருமையைக் கட்டிக் காப்பது போன்ற நல்ல குணத்துடனுள்ள குழந்தை களும் பிறக்கிறார்கள். இது பெற்றோர்கள் செய்த புண்ணியம். இவர்களுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சுபவலிமை பெற்றிருக்கும். தோஷங்கள் இருக்காது.

ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பன்னிரண்டாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான கிரகம், வேறு கெட்ட கிரகங்களோடு சேர்ந்து அசுப பார்வை பார்க்கும்பொழுதும், அவற்றில் தசா, புக்தி, அந்தரம் நடை பெறும் பொழுதும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, அஷ்டம குரு காலங்களிலும் குழந்தைகளால் மன சஞ்சலமும், வெறுப்பும், விரக்தியும், நஷ்டமும், வருத்தமும், இழப்பும் ஏற்படும். பலருக்கு ஜனன ஜாதகத்தில் 5-ஆம் வீட்டில் பிரச்சினை, தோஷம் இல்லாவிட்டாலும் 5-ஆம் வீட்டிற்கு அசுப கோட்சார கிரகங்கள் வரும்போதும், தசாபுக்தியாலும், ஐந்தாம் வீட்டில் தோஷம் இல்லாவிட்டாலும் பலருக்கு குழந்தைகளால் மனக்கஷ்டம் இருக்கும்.

பெற்ற பிள்ளைகளால் வரும் மனவேதனை யைத் தவிர்த்து, மூன்றாவது பிரிவு ஒன்றுள்ளது. தத்தெடுத்த குழந்தைகளால் படும் வேதனை. பிறந்தவுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட எத்தனையோ குழந்தைகள் தங்களைத் தத்தெடுத்தவர்களைப் படுத்தும்பாடு மிகக்கொடூரமாக உள்ளது. தாங்கள் தத்துக் குழந்தை என்று தெரியாதவரை பிரச்சினை செய்யாத குழந்தைகள், தத்துக் குழந்தை என தெரிந்தவுடன் வளர்த்தவர்களிட மிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள் .அல்லது தங்கள் தேவைக்கு மட்டும் வளர்த்தவர் களைப் பயன்படுத்தி, தங்களுக்கு தேவையில்லாத நிலை வந்தவுடன் தவிக்க விடுகிறார்கள்.

அண்மையில் என்னை ஒரு 70 வயது முதியவர் சந்தித்தார். தன்னுடைய 23 வயது மகனின் ஜாதகத்தைக் காண்பித்தபோது, அந்த முதியவரின் ஜாதகத்திற்கும் அந்த பையனின் ஜாதகத்திற்கும் சிறிய ஒற்றுமைகூட இல்லை. அந்த பையனின் ஜாதகத்தில் தவறு இருப்பதுபோல் தோன்றியதால், நாடிமுறையைப் பயன்படுத்திக்கூறிய பலன்கள் 90 சதவிகிதம் ஒத்துவந்த நிலையில், இந்த ஜாதகம் தவறாக உள்ளது என்று கூறியபிறகு, "இது பிறந்து ஒரு மாதத்தில் தத்தெடுத்த குழந்தை' என்று கூறினார். அவர், தன் தத்துக்குழந்தையால் படும் இன்னல்கள், மனவேதனை அளப்பரியது. அந்த முதியவர், "எனக்கு எதுவும் செய்யவேண்டாம். தன் நிலையை சரிசெய்துகொண்டால் போதும்' என்று கண்ணீர்மல்க நின்ற காட்சி கல் மனதைக்கூட கரைத்துவிடும். அந்த பையன் அந்த முதியவரை மிரட்டி மிரட்டிப் பணம் பறித்து, எல்லா விதத்திலும் அவர் மனதை புண்ணாக் கிக்கொண்டே இருக்கிறான். இவருக்கும் அந்த பையனுக்குமான உறவு முன்ஜென்ம கொடுக்கல்- வாங்கலை சரிசெய்ய ஏற்பட்ட தொடர்பே தவிர, ஆத்மார்த்த அன்பை தத்துக்குழந்தையிடம் இருந்து பெறும் பாக்கியமில்லை.

எத்தனையே தத்துக்குழந்தைகள் நன்றி யுடன், வளர்த்தவர்களை கவனித்து வருவ தையும் பார்க்கிறோம். இன்றைய தத்துக் குழந்தைகளுக்கு நேரம் சரியாகக் கணக்கிட முடியாவிட்டாலும், பிறக்கும்போதே 8-ஆம் பாவகம் வேலைசெய்யும் குழந்தைகளே பெற்றோரைவிட்டுப் பிரிகிறார்கள். பிறந்த ஓரிரு நாட்களே ஆன குழந்தைகளின் பிறந்த நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட வாய்ப் புள்ளது. மூன்று நாட்களுக்குமேல் ஆன குழந் தைகளைத் தத்தெடுக்கும்போது ஜாதகக் கணிதம் துல்லியமாக இருக்காது.

30 வருடத்திற்கு முன்புவரை குழந்தை பாக்கியமில்லாதவர்கள் நல்ல இனம், குலத்தில் பிறந்த, தெரிந்த குழந்தைகளைத் தத்தெடுத்து, குழந்தை பாக்கியப் பலன் பெற்றார்கள். தெரிந்த குலத்தில் பிறந்த குழந் தைகளின் பிறந்த குறிப்பு- துல்லியமாக இருந்ததால், அவர்கள்மூலம் தத்தெடுப் பவர்கள், குழந்தைகள் நற்பலன்கள் பெற்றார்கள்.

அறிவியல் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், பணத்தால் சாத்தியமல்லாத செயலே கிடையாது என்பதால், ஆன்லைனில் குழந்தையைத் தத்தெடுக்கும்போது, பிறந்த குறிப்பு துல்லியமாக இருக்கும் வாய்ப்புக் குறைவு என்பதால், தம்பதியினரின் ஜனன ஜாதகத்தின் 5, 9-ஆம் பாவகம், அதிபதியின் மேல் அமரும் கிரகம், திரிகோண நட்பு கிரகம் அமரும்போது தம்பதியினருக்கு வலிமை கூட்டுவதாக இருக்கும். சந்திரன் இருக்கும் இடம் மாறுமே தவிர்த்து, வருட, மாத கிரகங்கள் மாறும் வாய்ப்புக் குறைவு. இது மிக சூட்சுமமான விஷயம்.

இவ்வாறு ஆழ்ந்து, சீர்தூக்கித் தத்தெடுக்கும்போது சிரமம் குறையும். தத்துக் குழந்தைக்கும், தத்து எடுப்பவர்களுக்கும் உறவும் சுமுகமாக இருக்கும்.

குழந்தை பாக்கியத்தைத் தடைசெய்யும் சில முக்கிய அமைப்புகள்

1. ஜென்ம லக்னம், ராசி மற்றும் 5-ஆம் இடத்தை சனி பார்ப்பது.

2. ஐந்தாம் அதிபதி அல்லது 5-ல் நின்ற கிரகம் தனித்து புதன் வீட்டில் நின்று, பாவகிரகங்களின் சம்பந்தம் பெறுவது.

3. 7-ல் சனி, 8-ல் செவ்வாய், 5-ல் கேது நிற்பது.

4. 9-ல் சூரியன், செவ்வாய் இணைந்து, லக்னாதிபதி, சனி 11-ல் அமர புத்திர தோஷம் ஏற்படும்.

5. 1, 5, 8, 12-ல் சனி, செவ்வாய் இணைவு பெறுவது புத்திர தோஷம்.

6. ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து, செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு.

7. ஐந்து, ஒன்பதாம் அதிபதிகள் கேதுவுடன் சம்பந்தம் பெறுவது.

8. ஆண், பெண்ணின் 5, 9-ஆம் அதிபதிகளுக்குத் தொடர்பின்மை.

9. குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம்.

10. 5, 8-ஆம் அதிபதிகள் அல்லது 5, 12-ஆம் அதிப திகள் பரிவர்த்தனை பெற்று, குரு பலமில்லாமல் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

11. 9-ஆம் அதிபதி 12-ல், 5-ஆம் அதிபதி 6-ல் நின்று குரு அஸ்தமனம் பெற்றால் புத்திர தோஷம் ஏற்படும்.

12. 5-ஆம் அதிபதி 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது கருச்சிதைவை ஏற்படுத்தும்.

13. 5-ஆம் இடத்தில் நீசம் பெற்ற கிரகம் இருப்பது.

14. திதி சூன்ய அதிபதிகள் 5-ஆம் அதிபதி சம்பந்தம் பெறுவது.

15. 5-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் செவ்வாய், ராகு கருக்கலைப்பை ஏற்படுத்தும்.

16. ஐந்தாம் அதிபதியும், குருவும் பலவீனமடைந்தால் புத்திரத் தடை; ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாகத் குழந்தை பிறக்கும்.

17. சர்ப்ப தோஷம், கிரகண தோஷம் மற்றும் கடுமையான பல்வேறு விதமான சர்ப்ப தோஷங் கள் உள்ளன. சர்ப்ப கிரகங் கள் நின்ற இடத்தை மட்டும் வைத்து முடிவுசெய்யக் கூடாது. ஷட்பல நிர்ண யத்தில் சுக்கிரன், 9-ஆம் அதிபதி வலுவாக இருந்தால் சர்ப்ப தோஷ சாந்திப் பரிகாரம் நல்ல பலன் தரும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406