Advertisment

கசக்கும் இல்லறத்தை இனிப்பாக்கும் புனர்விவாகம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/remarriage-sweetens-crushing-home-prasanna-astrologer-i-anandi

பூமியில் மனித னாய்ப் பிறந்த அனைவருக்கும் திருமணம் மிக அவசியம். சமுதாய மேன்மையைக் கடைப் பிடிக்கவும், சந்ததி விருத்திக்கும் வாழ்க் கைத்துணை மிக அவசியம். வாலிப வயதையடைந்த ஆண்- பெண்களுக்கு, பொதுவாக உலகி லுள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் விருப்பம் வந்துவிடும். அத்தகைய ஆனந்தம் தரும் ஆரம்பநிகழ்ச்சியாக அமைவது திருமணம். பூர்வஜென்ம புண்ணியத்திற்கேற்ப அமையும் திருமண வாழ்க்கையானது சிலருக்கு உரிய வயதில் வாழ்நாள் முழுவதும் வசந்தத்தைத் தரும்விதமாக அமைந்துவிடும். சிலருக்கு காலம் தாழ்ந்து திருமணம் நடை பெற்றாலும் அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை கிடைக்கிறது. ஒரு பிரிவினருக்கு எந்த வயதில் நடந்தாலும், எத்தனை முறை நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்வைத் தருவதில்லை. சிலர் எந்தப் பிரச்சினை வந்தாலும் நடப்பதை எதிர் கொண்டு எதார்த்தமாக வாழப் பழகிவிடுகிறார்கள். ஒருசிலர் பிரிந்து வாழும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஒருவரின் ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரக அமைப்புகளின்படி ஏற்படும் பிரிவினைகளை ஐந்தாக வகைப் படுத்தலாம்.

Advertisment

mm

1. கிரகங்களால் ஏற்படும் பிரிவினை

ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிடமென்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்குமிடமாகும். ஏழாமதிபதி ஆட்சி, உச்சம், கேந்திர, திரி

பூமியில் மனித னாய்ப் பிறந்த அனைவருக்கும் திருமணம் மிக அவசியம். சமுதாய மேன்மையைக் கடைப் பிடிக்கவும், சந்ததி விருத்திக்கும் வாழ்க் கைத்துணை மிக அவசியம். வாலிப வயதையடைந்த ஆண்- பெண்களுக்கு, பொதுவாக உலகி லுள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் விருப்பம் வந்துவிடும். அத்தகைய ஆனந்தம் தரும் ஆரம்பநிகழ்ச்சியாக அமைவது திருமணம். பூர்வஜென்ம புண்ணியத்திற்கேற்ப அமையும் திருமண வாழ்க்கையானது சிலருக்கு உரிய வயதில் வாழ்நாள் முழுவதும் வசந்தத்தைத் தரும்விதமாக அமைந்துவிடும். சிலருக்கு காலம் தாழ்ந்து திருமணம் நடை பெற்றாலும் அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை கிடைக்கிறது. ஒரு பிரிவினருக்கு எந்த வயதில் நடந்தாலும், எத்தனை முறை நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்வைத் தருவதில்லை. சிலர் எந்தப் பிரச்சினை வந்தாலும் நடப்பதை எதிர் கொண்டு எதார்த்தமாக வாழப் பழகிவிடுகிறார்கள். ஒருசிலர் பிரிந்து வாழும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஒருவரின் ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரக அமைப்புகளின்படி ஏற்படும் பிரிவினைகளை ஐந்தாக வகைப் படுத்தலாம்.

Advertisment

mm

1. கிரகங்களால் ஏற்படும் பிரிவினை

ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிடமென்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்குமிடமாகும். ஏழாமதிபதி ஆட்சி, உச்சம், கேந்திர, திரி கோணம் மற்றும் நட்புநிலையில் இருக்கும் போது கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயரும். மாறாக ஏழா மிடத்தில் லக்னரீதி யான அசுபர் இருந் தால் மணவாழ்வு சங்கடம் தரும். பலருக்கு சனி, செவ்வாய், ராகு- கேது மட்டுமே திருமண வாழ்வைத் தடைசெய்யும். மற்ற கிரகங்கள் பாதிப்பைத் தருவதில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. திருமணத்தை எந்த கிரகம் தடைசெய்தாலும் பழியைச் சுமப்பவர் கள் ராகு- கேது, செவ்வாய், சனி மட்டுமே. ஏழாமிடத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் இருத்தல் நலம். ஏழாமிடத்தில் நிற்கும் கிரகத்| தின் ஏழாம் பார்வையால் லக்னம் பாதிக்கப் படும். லக்னம் பாதிக்கப்பட்டால் ஜாதகரின் சிந்தனை, செயல்திறன் குறையும். எனினும் தனித்த கிரகங்களால் பெரிய பாதிப்பிருக்காது.

2. கிரகச் சேர்க்கைகள் தரும் பிரிவினைகள்

லக்னத்திற்கு ஏழாமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்திருப்பது, சம்பந்தம் பெறுவது பல தீய விளைவுகளுக்குக் காரணமாகிறது. ஏழாம் அதிபதியுடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம்பெறுவது திருமண வாழ்வில் பிரிவினையைத் தருகிறது. மேலும் சுக்கிரன் இல்லற வாழ்வுக்குரியவர். சுக்கிரன் ஆணுக்கு மனைவியைப் பற்றியும், பெண்ணுக்கு மணவாழ்க்கையைப் பற்றியும் சொல்கின்றவர். சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க் கைத்துணையை அமைத்துக் கொடுப்பவர். சுக்கிரன் ஜாதகக் கட்டத்தில் நல்லநிலையில் இருப்பது அவசியம்.

ஆணுடைய ஜாதகத்தில் சுக்கிரன் ராகு- கேதுவுடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்றாலும் கருத்து வேறு பாட்டை மிகைப்படுத்து கிறது.

செவ்வாய் ஆண்களுக்கு வீரியத்தையும், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்தையும் தருபவர். பெண்களின் ஜாதகத் தில் செவ்வாய் ராகு- கேதுவுடன் சம்பந்தம் பெற்றால் மனப்போராட்டத்தால் பிரிவினை ஏற்படுகிறது.

3. பாவகம் மற்றும் பாவகாதிபதிகளால் உருவாகும் பிரிவினை

ஜோதிடரீதியாக, தம்பதிகளின் ஜனனகால ஜாதகத்தில் 2, 7ஆம் பாவகம் மற்றும் அதிபதிகள்- 6, 8, 12-ஆம் பாவகம் மற்றும் அதிபதி களுடன் சம்பந்தம் பெறும்போது பிரிவினை ஏற்படுகிறது. 2, 7-ஆம் அதிபதிகள் வக்ரம் பெற்றால் மனநிறைவான மணவாழ்க்கையைத் தருவதில்லை.

4. தசாபுக்தி தரும் பிரிவினைகள்

ஜாதகருக்கு 6, 8, 12-ஆம் அதிபதிகள் மற்றும் 6, 8, 12-ல் நின்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங் களில் மனதிற்குப் பிடிக்காத பல சம்பவங்கள், வம்பு, வழக்கு, பிரிவினை ஏற்படுகிறது. குறுகியகால தசை நடத்தும் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற கிரகங்களாக இருந்தால் பாதிப்பும் குறுகிய காலமாகவே இருக் கிறது. நீண்டகாலம் நடக்கும் குரு, சனி, ராகு, புதன், சுக்கிர தசைகள் வாழ்நாள் முழுவதையும் பிரிவினையுடனேயே கழிக்கச் செய்கின்றன.

5. கோட்சாரம் தரும் பிரிவினைகள்

வருட கிரகங்களான குரு, சனி மற்றும் ராகு- கேதுக்களின் பெயர்ச்சிகள் லக்னத்திற்கு ஏழாமிடத்திற்கோ ஏழாம் அதிபதிக்கோ சம்பந்தம் பெறும்போது மனக்கசப்பில் பிரிவினையைத் தந்துவிடுகின்றன. ஜனனகால ஜாதகத்தில் இதுபோன்ற குறைபாடுகள் இருப்பவர்கள், சாஸ்திர சம்பிரதாய முறைப்படி ஆண் மற்றும் பெண் ணுக்கு தாராபலம் நிறைந்த நாளில் திருமணம் நடத்தவேண்டும். முகூர்த்த லக்னத்திற்கு ஏழாமதிபதி வலிமையுடன் இருக்கும் நேரத்தில் திருமணம் செய்யும்போது பெரிய பாதிப்பு நிச்சயம் தவிர்க்கப்படும். தம்பதிகள் மகிழ்சியுடன் இல்லறம் நடத்துவார்கள்.

புனர்விவாகம்

திருமணவாழ்வில் ஏற்படும் பிரிவினைகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம். வெகுசிலர் பிரியாமல் அதீத கருத்துவேறுபாட்டுடன், தினமும் சண்டை சச்சரவுடன், மன வேதனையுடன் வாழலாம். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்துவாழ விரும்ப லாம். அல்லது கருத்துவேறுபாட்டுடன் வாழ்பவர்கள் நிம்மதிக்கான தீர்வைத் தேடலாம்.

இதுபோன்ற மன சங்கடங்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்ட தீர்வே புனர்விவாகம்.

அதாவது பிரச்சினையுடைய தம்பதிகள் மீண்டும் ஒருமுறை சுபநாளில் திருமணம் செய்துகொள்வது.

இந்த புனர்விவாகத்தை இல்லற வாழ்வில் இணக்கமும், மனநிறைவும் இல்லாதவர்கள், விருப்பமில்லால் திருமணம் செய்து கடமைக் காக வாழ்ந்து, பின்நாட்களில் மனமொத்து வாழநினைக்கும் தம்பதிகள், மரபுவழியில் முழுமையான திருமணச் சடங்கு நடக்காத வர்கள், பதிவுத் திருமணம் செய்தவர்கள், நல்ல முகூர்த்த லக்னத்தில் திருமணம் நடைபெறாத வர்கள், திருமணத்தன்று மணப்பெண் வீட்டு விலக்காகி திருமணம் நடந்தவர்கள், தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாகப் பிரிந்து வாழ்பவர்கள், திருமணம் நடந்தபிறகு பிரிந்து, மீண்டும் சேர்ந்துவாழ விரும்பும் தம்பதிகள் நடத்தலாம்.

குறைந்தது 48 நாட்கள் இல்வாழ்க்கையில் ஈடுபடாமலிருந்து, சாஸ்திர சம்பிரதாய முறைப் படி மரபுவழி திருமணச் சடங்குகளை முறையாகக் கடைப்பிடித்து புனர்விவாகம் செய்து புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.

கோட்சாரமும் புனர்விவாகமும்

கோட்சாரத்தில் ரிஷபம், கடகம், கன்னி, மகரம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசி மற்றும் லக்னத் தைச் சேர்ந்தவர்களுக்கு புனர்விவாகம் வாழ்வில் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும்.

எனவே திருமணவாழ்வில் சங்கடத்தை அனுபவிப்பவர்கள் புனர்விவாகம் செய்து கொண்டு ஆதர்சன தம்பதிகளாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.

செல்: 98652 20406

bala080121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe