Advertisment

மதம் என்னும் பேய்! - விசு அய்யர்

/idhalgal/balajothidam/religion-ghost-vishu-iyer

ருத்துவம் என்பது, நோய்களில் இருந்து மீட்டெடுப்பது அல்ல. ஆரோக்கிய மான வாழ்வை கற்றுதருவதே. நடைமுறையில் ஆரோக்கிய குறைவு கள் ஏற்படும்போது மட்டும், மருத்துவத்தை நாடி, நோய்களில் இருந்து மீண்டு ஆரோக்கியமான சூழலுக்கு வருவதற்கு என பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். சோதிடம் என்பது, எதிர்கால பலனை சொல்வதற்கு மட்டுமல்ல. மக்களிடம் நேர்மறை எண்ணங் களை விதைத்து, ஒழுக்கமான வாழ்க்கை முறையில், ஆரோக்கிய மான வாழ்வை பெற்றுதருவதற்கே. ஆனால், நடைமுறையில், எதிர்கால பலனை சொல்வதற்கு என நினைத்துக்கொண்டு, சோதிடம் சொல்பவர்களை சில நூறு அல்லது சில ஆயிரம் ரூபாய்களுக்கு வாங்கிவிடலாம் என குறுகிய மன நிலையில் உள்ளவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

Advertisment

குறித்தது கூறாமை கொள்வாரோடு ஏனை உறுப்போர் அனையரால் வேறு.

உரு

உருவத்தால் நம்போல அவர்கள் இருந்தாலும், குறிப்புகளை கொண்டு மனதில் கருதியதை சொல்லவருபவர்கள் அறிவால் வேறுபட்டவர்கள் என்று வள்ளுவம் சொல்கிறது.

Advertisment

vv

இந்த நிலையில் மதம் என்றால்.... என்ற ஐயப்பாடு நம்மில் பலருக்கும் இருக்க வாய்ப்பு உண்டு. அதுவும் இளைய தலைமுறையினருக்கு அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களை நல்வழிபடுத்தி, அடிப்படை அறிவு தரவேண்டும் என்ற நோக்கில் மலர்ந்ததுதான் இந்த தொடர்.

மதங்களை மையப்படுத்தி வாழ்க்கை நிலையை சிலர் அடையாளம் காட்டுவார்கள். மதம் என்பது குறித்து சாத்திரங்கள் மற்றும் தோத்திர நூல்களில் என்ன சொல்லி இருக்கிறது என்ற அறிவு குறைபாடு இன்றைய நாளில், பலருக்கும் இருக்கிறது. அதனால் பூசல்களும், கருத்து திணிப்பும் தவிர்க்க முடியாதது ஆகிறது. சிலர் இதை காரணமாக வைத்துக்கொண்டு அறியாமையில் உள்ளவர்களை ஏமாற்றி பணம், பதவி எனன் சம்பாதித்து விடுகின்றனர்.

அவர்கள் போலி என தெரியும்போது, நாம் இழந்தது அதிகம் என உணரமுடியும்.

அது குறித்த அடிப்படை சிந்தனைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த தொடர் இனி தொடர்ந்து வரும். இந்த தொடரில் வரும் கருத்துக்கள் யாருடைய சிந்தனைகளையும் ஊறு செய்யாமல், சாத்திர தோத்திர நூல்களை மேற்கோள் காட்டிவரும். அதனால், இதுதான் மதம் என்று யாராவது சொல்லிவிட்டால், "ஓ. ...

அப்படியா...' என்ற மனம் பேதலித்து அவர்கள் சொல்வதே சரி என்ற மன நிலையில் இருந்து விலகி, சரியானதை சரியாக தெரிந்துகொள்ள உங்களை தயார்படுத்திக்கொள்ள இந்த தொடர் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

இந்த தொடர் சிந்தனையில் உடன் பயணித்து வந்தால், உங்களுக்குள் ஒரு தெளிவு ஏற்படும். தர்க்கரீதியில் உங்களை அறிவால், வெல்ல அவர்களால் முடியாது, தவறாக மூளை சலவை செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கமுடியும். உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டும் இந்த தொடரை தொடர்ந்து படித்து ஊக்கம் பெறுங்கள்.

"மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்' என வடலூர் வள்ளல் பெருமகனார் அருளிச்செய்த சிந்தனையை அறியாதவர்கள் தமிழ் அறிந்த நல் உலகம் நன்கு அறியும்.

மதம் என்னும் பேய் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர் வாழ்ந்த காலத்திலேயே இதுபோன்ற மதம் என்ற போர்வையில் தவறான சிந்தனைகளை பரப்பும் சிந்தனையாளர்கள் இருந்து இருக்கிறார்கள் என்பது நம் ஆய்வுக்கு சிந்திக்க தோன்றுகிறது.

ஆவிகளுடன் பேசும் சோதிட முறை உண்டு. இதில் ஆவிகள் வேறு. பேய் வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். வள்ளுவத்தில்கூட அலகை என இந்த பேயை சொல்லி இருப்பார்.

"அட... பேய் என ஒன்று இருக்குதா... அப்படி இருந்தால் அதை காட்டுங்கள் பார்க்கலாம்' என சிலர் வாதம் செய்யக்கூட வருவார்கள். திரைப்படத்தில் படத்தில் வெள்ளை நிற உடை அணிந்துகொண்டு தலையை விரித்த படி மனதில் பதிய சித்தரித்து காட்டுவார்கள். இப்போது நாகரீகம் என்ற போர்வையில், பெண்களே விரித்த தலையுடன்தான் உலாவருகிறார்கள் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அது குறித்து தனியாக இந்த தொடரில் சிந்திப்போம்.

அந்த பேயை எப்படி மதத்திற்கு ஒப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் என்ற சிந்தனையை தொடர்ந்து வரும் தொடரில் தெரிந்துகொள்ளலாம். மதம் பற்றிய தெளிவான அறிவை பெறலாம். மதத்தின் போர்வையில் ஏமாற்றுபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கலாம்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.

செல்: 94443 27172

bala140723
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe