மணமுறிவுக்கு நிவாரணம்! - கே. விஜயராகவன்

/idhalgal/balajothidam/relief-divorce-k-vaijayaraakavana

வாழ்க்கை என்பது மேடுபள்ளங்கள் நிறைந்தது. ஒருசமயம் சிக்கலில்லாமல் போகும்; திடீரென்று எதிர்பாராத விதமாக சறுக்கல் ஏற்படும். எது எப்படி இருந்தாலும், குடும்பம் என்னும் கட்டமைப்பு வலுவாக இருந்தால், எந்த சோதனையான காலத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வாழ்க்கையில் ஜொலிக்க முடியும். குடும்பம்தான் சமுதாயத்தின் ஆணிவேர். இதில் கணவனும் மனைவியும் சரிபாதியாக முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவர்களில் உயர்ந்தவர்- தாழ்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. குறைகள் இல்லாதவரே உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்து, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து வாழ்ந்தால், இல்லறம் நல்லறமாக விளங்கும்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் தோல்வியில் முடிவது அதிகரித்துவருகிறது. விவாகரத்து வழக்குகள் பெருகிக்கொண்டே இருப்பது ஒரு வேதனையான விஷயம். பெற்றோர் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமாக இருந்தாலும் விவாகரத்து என்ற மோசமான திசையில் முடிவதைப் பார்க்க முடிகிறது.

சமூக, பொருளாதார, குடும்பப் பிரச்சினைகள் ஒருபுறம்; உடலியல்ரீதியாக தாம்பத்திய உறவில

வாழ்க்கை என்பது மேடுபள்ளங்கள் நிறைந்தது. ஒருசமயம் சிக்கலில்லாமல் போகும்; திடீரென்று எதிர்பாராத விதமாக சறுக்கல் ஏற்படும். எது எப்படி இருந்தாலும், குடும்பம் என்னும் கட்டமைப்பு வலுவாக இருந்தால், எந்த சோதனையான காலத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வாழ்க்கையில் ஜொலிக்க முடியும். குடும்பம்தான் சமுதாயத்தின் ஆணிவேர். இதில் கணவனும் மனைவியும் சரிபாதியாக முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவர்களில் உயர்ந்தவர்- தாழ்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. குறைகள் இல்லாதவரே உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்து, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து வாழ்ந்தால், இல்லறம் நல்லறமாக விளங்கும்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் தோல்வியில் முடிவது அதிகரித்துவருகிறது. விவாகரத்து வழக்குகள் பெருகிக்கொண்டே இருப்பது ஒரு வேதனையான விஷயம். பெற்றோர் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமாக இருந்தாலும் விவாகரத்து என்ற மோசமான திசையில் முடிவதைப் பார்க்க முடிகிறது.

சமூக, பொருளாதார, குடும்பப் பிரச்சினைகள் ஒருபுறம்; உடலியல்ரீதியாக தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்த முடியாமல் போவது, கணவன்- மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பது போன்றவையும் விவாகரத்துக்குக் காரணங்களாகக் கூறப் படுகின்றன.

பத்துப் பொருத்தம் பார்த்து செய்த திருமணமும் தோல்வியில் முடிவது ஏன்? வெறும் பொருத்தம் மட்டும் பார்த்தால் போதாது. ஆண்- பெண் இருவரின் ஜாதகக் கட்டங்களையும் ஆராய வேண்டும். பொதுவாக, லக்னத் திற்கு இரண்டாமிடம் குடும்பஸ்தானம் எனப்படும். ஏழாமிடம் களத்திரஸ்தானம். இதை காமஸ்தானம் என்றும் அழைப்பார்கள். இத்துடன் எட்டாமிடம் பெண்களுக்கு மாங்கல்யஸ்தானம் எனப் படும். அடிப்படையாக, இந்த மூன்று பாவங்களும், இதன் அதிபதிகளும் நல்ல முறையில் அமைவது அவசியம். இத்துடன் பெண்களுக்கு குருவின் நிலையும் ஆண்களுக்கு சுக்கிரனின் அமைப்பும் கவனத்தில் கொள்ளவேண்டியவையே. பொதுவாக சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை சிறப்பானதல்ல.

சிலருக்கு ஏன் திருமணம் செய்தோம் என்று சொல்லும்வகையில், திருமண வாழ்க்கை "நரகமாக' இருக்கும். ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருப்பது அல்லது ஏழாம் வீட்டைப் பார்ப்பது அல்லது எவ்வகையிலாவது ஏழாமிடத்திற்கு சூரியனின் சம்பந்தம் இருந்தால் சிறந்த மனைவி அமைய மாட்டாள்.

bb

திருமணத்துக்கு தாம்பத்திய சுகமும் ஒரு காரணமாக இருக்கிறது. ஆணோ- பெண்ணோ தாம்பத்தியத்தில் அதீத ஈடுபாடு இருந்து, அதற்கு ஈடுகொடுக்க இயலாத வாழ்க்கைத் துணை அமையும்போது தவறான உறவுக்குத் தூண்டுகிறது. பொதுவாக, செவ்வாய் உஷ்ணகிரகம்; ரத்த காரகனும்கூட! இவர் லக்னத்திற்கு நடத்தையைக் குறிக்கும் நான்கு, காமத்தை- அந்தரங்கத்தைக் குறிக்கும் எட்டு மற்றும் கட்டில் சுகத்தைக் காட்டும் பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருந்தால், ஆணோ- பெண்ணோ அவர்களுக்கு கட்டில் சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். இதற்கேற்றாற்போல் மற்றவர் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும்படி சேர்த்தால் பிரச்சினை இல்லை.

அப்படியில்லாவிட்டால், மற்ற பாவகிரகங்களின் பார்வை , சேர்க்கை, சம்பந்தத்தைப் பொருத்து வேலி தாண்டுவதும், அதனால் விவாகரத்தும் ஏற்படும்.

இன்னும் சில காரணங்களும் விவாகரத்து பெறவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. உதாரணமாக, ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாவது வீட்டுக்குடைய கிரகம் சத்ருஸ்தானம் என்னும் ஆறாமிடத்தில் இருந்தால், மனைவியால் ஜாதகர் பல தொல்லைகள் அனுபவிப்பார். ஆசைகள் நிறை வேறாமல் செய்வது, ஆசைப்பட்டதை அனுபவிக்க விடாமல் தடுப்பது போன்றவற்றோடு, மனைவியால் வம்பு வழக்குகளையும் தேவையற்ற அவமானங்களையும் ஜாதகர் சந்திக்க நேரும். மேலும், ஜாதகரின் உறவுகள், நண்பர்களை அவமானப்படுத்தி, அவர்களிடமிருந்து பிரித்து விடுவாள். இதேபோல் ஏழுக்குடையவன் எட்டில் இருந்தால் ஜாதகரின் மனைவி அவரை மிரட்டுவதோடு, பல தொல்லைகள் தந்து துன்புறுத்துவாள்.

இதேபோல் பெண்ணின் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் ஏழாமிடத்தில் எந்த கிரகமும் இல்லாமலிருந்து, ஏழாமிடமும் அதன் அதிபதியும் பலவீனமாக இருந்து, சுபர் பார்வையோ சம்பந்தமோ இல்லாமலிருந்தால் கணவன் மோசமான குணமுள்ளவனாக இருப்பான். பெண்ணின் ஜாதகத்தில், ஏழாம் பாவத்தில் புதன், சனி சேர்ந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு ஆண்மையற்ற கணவன் அமைய வாய்ப்புண்டு.

மேலே கூறியவை தவிர இன்னும் சில கிரக அமைப்புகளும் விவாகரத்து பெற காரணங் களாக உள்ளன. உதாரணமாக, குடும்பஸ்தானாதிபதி என்னும் இரண்டாமாதிபதி ஆட்சி அல்லது உச்சம்பெற்று, உபகளத்திர ஸ்தானாதிபதி என்னும் பதினொன் றாமிட அதிபதியோடு எவ்வகை யிலாவது சம்பந்தப்பட்டிருந்தால் அந்த திருமணம் விவாகரத்தில் முடியும். குடும்பாதிபதி பன்னிரண் டாம் அதிபதியின் நட்சத்திரத் தில் சஞ்சரிக்க, ஏழுக்குரியவனுடன் எவ்வகையிலாவது சம்பந்தம் இருக்குமானால் திருமணம் விவாகரத்தில் முடியும் என்று கூறலாம்.

பொதுவாக, நடக்கவேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கூடிவராமல் போவது; எல்லா தகுதியும் இருந்தாலும் திருமணம் தடைப்படுவது; விவாகரத்து ஏற்படுவது; சிலருக்கு விவாகரத்து பெறுவதிலும் இழுபறி; குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது- இப்படி வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு அவரவர் முற்பிறவி சார்ந்த சாபங்கள்- அதாவது பித்ரு சாபம் ஸ்த்ரீ சாபம், களத்திர சாபம், புத்திர சாபம் போன்ற பிரச்சினைகளே காரண மாக இருக்கும். இதைக் கண்டறிந்து, மந்திர சாஸ்திரரீதியான பரிகாரங் களாக சாப நிவர்த்தி ஹோமங்கள் செய்வது, தீட்சை பெற்று ரட்சை ஏற்பது, உரிய யந்திரப் பிரதிஷ்டை செய்வது போன்றவற்றால் நிவாரணம் பெறலாம்.

செல்: 95660 27065

bala180222
இதையும் படியுங்கள்
Subscribe