ரோக்கியமான மணவாழ்வுக்கு சுலபமாகக் கிடைப்பது தாம்பத்திய உணர்வுகள்தான் என்று கொச்சைப்படுத்தாவிடினும், ஊனமில்லா உறவுகள் தாம்பத்தியத்திற்கு மிக அவசியம். இல்லற இன்பத்தை கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கினால் தான் புத்துணர்வைப் பெற இயலும். அதில் தொய்வு நிலை ஏற்படும்போது உணர்வுகள் படிதாண்டிப் போய்விடுகின்றன.

பாலுறவில் திருப்தியும் சந்தோஷமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. இன்றைய தலைமுறையினரோ தாம்பத்திய விஷயத்தில் அதிகம் தெரிந்தவர்கள். அக்காலத்து தாய்- தந்தையரைப்போல், பி.யு. சின்னப்பா பாடல்போல் "காதல் கனிரசமே' என முனங்கு வதில்லை. அஜீத், மாதவன், சிம்ரன் ரேஞ்சில், "வசீகரா உன் நெஞ்சினிக்க...' என உள்ள உணர்வுடன், சாந்தி முகூர்த்தத்தை எதிர்பார்க்கிறார்கள்.

rr

பண்டைய நாட்களில் ஆண்கள் பலர் சுய இன்பம், விலைமாது என்று திசைமாறி, வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி, சீர்கேடு களை மூடிமறைத்து, மனப்புழுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். இப்போது இதற்கான மருத்துவர், சின்னத்திரையில் கேள்வி- பதில் என எளிதாக ஆலோசனைகள் பெற இயலும். காலம் மாறிவிட்டது. (1980 ஜூலை யிலிருந்து 1981 ஜூன்வரை 14,631 பேர் பால்வினை நோய்க்காக சிகிச்சை பெற்றனராம். அதுவும் அரசு மருத்துவமனையில்!) சில மாதங்களுக்குமுன் வடநாட்டில் வழக்குத் தொடர்ந்த தம்பதியருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது "ஒரு ஆணும் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்யாமலே, உள்ளத்தால் ஒருவரையொருவர் புரிந்து வாழ்க்கையை நடத்திச்செல்ல தடையேதும் இல்லை' என்பதுதான் அது. ஆனால் இருவரும் ஒன்றா கக் கலக்கும்போது ஜனனமாகும் ஜீவனுக்கு சட்டப்படி இது எப்படி அரணாக அமையும் என தெரியவில்லை.

தலைப்புக்கேற்ப ஜோதிட சாஸ்திரம் எவ்வாறு வழிகாட்டுகிறது என சுருக்கமாக ஆய்வுசெய்வோம்.

பொதுவாக குருபகவான் 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்திருந்தாலும், சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் காதல் திருமணமென்றாலும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமென்றாலும் சுவையில்லா- மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ஏற்பட்டுவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலை யில் வித்தியாசமான, விதவிதமான தாம்பத் தியத்தில் மணமானவர்களுக்கு மோகம் ஏற்படும். அங்கேதான் கிரகநாதர்கள் பிடியிலி ருந்து தப்பிக்க இயலாமல் சிக்கல்கள் உருவாகும். இதற்கான சிறு பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.

குடும்பத்திலுள்ள யாவருடனும் மரியாதை யுடன் செயல்படவேண்டும். வீட்டினுள் ஆலயம் இருப்பது கூடாது. ஆண்கள் பிற மாதுடன் தொடர்பு கொள்ளுதல் கூடாது. வீட்டினுள் கிணறு இருந்தால் அதில் பார்லி அரிசியும், தேங்காயும் திருமண நாளில் போடவேண்டும். ஆலய அரச மரத்திற்குத் தண்ணீர் பாய்ச்சலாம். சீரற்ற இடத்தில் துளசிமாடம் இருப்பது கூடாது. ஒரு மஞ்சள் துணியில் சிறு தங்கநகையை முடிந்து பூஜையறையில் இருக்கச் செய்யலாம். சாதுக்களுக்கு உதவுதல் கூடாது. பிச்சை எடுப்போரை உதாசீனம் செய்வது கூடாது. கருட புராணம் படிப்பது நன்று. மஞ்சள்நிறப் பூஞ்செடி வளர்க்கலாம். படுக்கையறையில் கருப்பு, நீல வண்ண விரிப்பு, துணி கூடாது.

திருமணமானபின் தாம்பத்திய வாழ்க்கை எவ்வாறு அமையக்கூடும் என்பதையறிய வழிகாட்டுவது, அவரவர் ஜாதகத்தில் ஏழாம் பாவமாகும். அதன் பலனறிய அந்த ஸ்தானத்திற்கு அதிபதியாகிய கிரகத்தின் தன்மையையும், அந்த ஸ்தானத்தைப் பார்வையிடும் கிரகங்களின் தன்மையையும், களத்திர காரகாதிபதியாகிய சுக்கிரனைப் பற்றியும், சுக்கிரனுடன் சேர்ந்த கிரகங்களின் தன்மையைக் கொண்டும்; சுக்கிரன் அமைந்த ராசி, நவாம்சத்தைக் கொண்டும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

சில ஆடவர்களின் நிலை தனித்தன்மை வாய்ந்து காணப்படும். கீழே தரப்பட்டுள்ள ஜாதக அமைப்புடையோர் பிற மாதரை சிறிதும் விரும்பாதவர்களாக- அதாவது ஏகபத்தினி விரதர்களாக இருப்பார்கள். அவர்கள் மனைவியை எப்படியும் சமாளித்துவிடுவர். பிறரை ஏறெடுத்தும் பார்க்காத கூச்ச சுபாவம் காணப்படும்.

மேஷம்: லக்னத்திற்கு 7-ல் சுக்கிரன் இருப்பது.

ரிஷபம்: லக்னத்திற்கு 5-ல் புதனும், 7-ல் செவ்வாயும் இருப்பது.

மிதுனம்: லக்னத்திற்கு 2-ல் சந்திரனும், 7 அல்லது 10-ல் வியாழனும் இருத்தல்.

கடகம்: லக்னத்திற்கு 2-ல் சூரியனும், 7-ல் சனியும் இருத்தல்.

சிம்மம்: லக்னத்திற்கு 2 அல்லது 11-ல் புதனும், 7-ல் சனியும் இருப்பது.

கன்னி: லக்னத்திற்கு 9-ல் சுக்கிரனும், 4, அல்லது 7-ல் வியாழனும் இருப்பது.

துலாம்: லக்னத்திற்கு 7-ல் செவ்வாய் இருப்பது.

விருச்சிகம்: லக்னத்திற்கு 5-ல் வியாழனும், 7-ல் சுக்கிரனும் இருப்பது.

தனுசு: லக்னத்திற்கு 2-ல் சனியும், 7 அல்லது 10-ல் புதனும் இருப்பது.

மகரம்: லக்னத்தில் சனியும், 7-ல் சந்திரனும் இருப்பது.

கும்பம்: லக்னத்திற்கு- 2 அல்லது 11-ல் வியாழனும், 7-ல் சூரியனும் இருப்பது.

மீனம்: லக்னத்திற்கு 9-ல் செவ்வாயும், 4-ல் புதனும் இருப்பது.

இத்தகைய அமைப்புடையவர்கள் குடும் பத்தாரையும் மனைவியையும் சமாளித்து விடுவார்கள். இவர்களுடைய குருவிரல் சனி விரலுக்கு இணையாக நீண்டு காணப்படும். சுண்டுவிரல் மிகக் குட்டையாக அமைந்தி ருக்கும்.

மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய லக்னங் களில் பிறந்தவர்களுக்கு சூரியன் ஏழாமிடத் தில் நின்றால் வாழ்க்கைத் துணைவி விருப்பத் திற்கேற்றபடி அமைவதுடன், நீடித்த சுகம், இல்லற இன்பம், வாழ்க்கை வசதியும் உண்டா கும். சிலருக்கு காலம் கடந்த திருமணம் ஏற்படும். இதுவும் நன்மையாகவே அமையப் பெறும்.

சூரியன் 6, 8, 12-ஆமிடங்களுக்கு அதிபராகி துலா ராசியில் நீசமடைந்திருந்தாலும், சுக்கிரனுடன் சேராமல் குரு பார்வை பெற்றிருப்பின் பாதகங்கள் அகன்றுவிடும்.

ஆசைக்கு அணைபோடவேண்டிய தாம்பத்தியம் யாருக்கு?

மேஷ லக்னக்காரர்களுக்கு துலாத்தில் குரு இருந்தால் திருப்தியற்ற மணவாழ்க்கை. கடகத்தில் சந்திரன், தனுசில் ராகு, விருச் சிகத்தில் குரு அமையப்பெற்றால் அவர்கள் கற்பனை செய்த வாழ்க்கை மலராது. ரிஷப லக்னத்தில் பிறந்தோருக்கு அவர்கள் ஜாதகத் தில் விருச்சிகத்தையோ செவ்வாயையோ சனி பார்த்தாலும் கூடினாலும் மணவாழ்க்கை நிறைவு தராது. மிதுன லக்னத்தில் பிறந் தோருக்கு குருவோ சுக்கிரனோ அஸ்தமனமடைந்திருந்தால் வாழ்க்கை சுவைக்காது. பெருவிரலை ஒட்டிய சுக்கிரமேடு நீசமடைந்து காணப்படும். அதற்கு மாறாக உச்சமடைந்து காணப்பட்டால் அன்பைப் பரிமாறுவதில் திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும்.

கடக லக்னக்காரர்களின் ஜாதகத்தில், கன்னியில் ராகு இருந்தால் விபரீதமான சந்தேகங்களும் சச்சரவுகளும் தொடர்கதை யாகும். ஜாதகத்தில் ராகுவும், புதனும் சேர்ந்திருந்து, 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்- இப்படிப்பட்ட ஜாதகர் ஆணோ பெண்ணோ ஒருவரையொருவர் சந்தேகப் பார்வை செலுத்துவதால் வீண் வம்புகளை எதிர்கொள்ளச்செய்யும்.

சிம்ம லக்னத்தினருடைய ஜாதகத்தில், கும்பத்தில் சனி அமர்ந்திருந்தால் மண வாழ்க்கை சோபிக்காது. இவர்களுடைய துணை எதிர்பார்த்ததைவிட அழகாகவே அமைந்துவிடுவார். ஆனால் முன்கோபம் உடையவர்களிடத்தில் சந்திரனும் ராகுவும் சேர்ந்திருந்தால் திருப்தியில்லா மணவாழ்க்கை தொடரும்.

கன்னி லக்னத்தாருக்கு கடகத்தில் சந்திரன், ரிஷபத்தில் ராகு, புதன் சேர்க்கை மற்றும் உள்ளங்கை மத்திம பாகம் பள்ளமாகக் காணப் பட்டால், வெறுப்பான மணவாழ்க்கை பொருளாதாரரீதியாகத் தோன்றும். எனவே இவர்கள் ஆசைக்கு அணைபோட்டால்தான் வாழ இயலும்.

இவை சில உதாரணங்களே. கீழே தரப்பட்டுள்ள அமைப்புள்ள ஜாதகர் அல்லது ஜாதகி திருமணத்தை விரும்பாமல் தனித்தே வாழ விருப்பமுள்ளவர்களாக இருப்பர்.

மேஷம்: சுக்கிரன் பாவருடன் சேர்ந்து 6, 8, 12-ல் இருப்பது; ரிஷபம்: புதன், செவ்வாய், சுக்கிரன் 6, 8, 12-ல் இருப்பது; மிதுனம்: சந்திரன், சுக்கிரன், பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; கடகம்: சூரியன், சனி, சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; சிம்மம்: புதன், சனி, சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; கன்னி: சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; துலாம்: செவ்வாய், சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; விருச்சிகம்: சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; தனுசு: சனி, புதன், சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; மகரம்: சனி, சந்திரன், சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; கும்பம்: சூரியன், சுக்கிரன் பாவருடன் 6, 8, 12-ல் இருப்பது; மீனம்: செவ்வாய், புதன், சுக்கிரன் 6, 8, 12-ல் பாவருடன் இருப்பது இதனை உணர்த்தும்.

இவர்களுடைய உள்ளங்கை அமைப்பில் சுண்டுவிரலின் கீழ்பாகத்தில் அமைந்துள்ள புதன் மேட்டில் காணப்படும் திருமண ரேகை, சுண்டுவிரலின் உட்பாகத்தில் மூன்றாவது அங்குலாஸ்தியில் அமைவதை உணரலாம்.

மங்கையின் 7-ஆமிடமும் தாம்பத்திய செய்திகளும் ஒருவருடைய ஜென்ம லக்னத்திற்கு 7-ஆமிடம் சிம்ம ராசியாக அமைந்து விட்டால் பண்புள்ளவர், சகலகலா வல்லவரா கத் திகழ்வார். அவர் 3, 12, 21 ஆகிய தேதிகளில், மார்ச், ஜூன், டிசம்பரில் பிறந்திருந்தால், துணைவியாரின் குற்றங்குறைகளைக் கண்டுகொள்ளமாட்டார். அவமானத்தை அள்ளிக்கொடுத்தாலும் துணையை அரண் போல் காப்பவராக இருப்பார். இவர் கையில் சுக்கிர வளையம் சூரிய மேட்டை இணைத்துக் காணப்பட்டால் ஊடலில் முன் அனுபவம் பெற்றவராக இருப்பார்.

ஏழாமிடம் மேஷம் அல்லது விருச்சிகமா னால் ஆத்திரம், கோபம், கொடுமை குணம் கொண்டவராக இருப்பினும், மனைவியை மனங்கோணாமல், மனைவியே கதியென வாழ்பவர் அமைவார். மனைவியின் கட்டளை எதுவானாலும் தயங்காமல் செய்யும் ஆற்றல் கொண்டவராகவும், மனங்கோணாது அரவணைக்கும் அசகாய சூரராகவும் இருப்பார்.

ஏழாமிடம் மிதுனம், கன்னியானால் இல்லத்தாளின் கொடியிடையிலேயே மயங்கிவிடுவார். கலைகளில் நாட்டமிருக்கும்; வசீகரத்தை விரும்பினாலும் சிற்றின்ப ஈடுபாடு மந்தமாகவே இருக்கப்பெறும்.

ஏழாமிடம் தனுசு, மீன ராசியானால், மனதை அடக்கியாளும் திறமை மிக்கவராக அமைவார். இவர்களுடைய சுட்டுவிரல் நீண்டும், குருமேடு உச்சம் பெற்றாலும், மேலும் ஏப்ரல், செப்டம்பரில் பிறந்திருந்தால் இச்சைக்கேற்ற நாட்டமில்லாதவர்களாக இருப்பார்கள். தாம்பத்தியத்திற்கு ஏற்றவர். ஏனென்றால் சீக்கிரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர் அல்ல.

ஏழாமிடம் ரிஷபம், துலா ராசியானால், அட்டகாசமான உல்லாச வாழ்க்கை! தேன் நிலவே களைகட்டும். அழகை ஆராதிக்கும் ஆண்மகனாக அமைவார்.

செல்: 93801 73464