ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்னும் ஒரு வரையறை வைத்துக்கொண்டு, கோடு போட்டு வாழ்வேன் என துவங்கப் படுகிற பலரது வாழ்கையில் விதி ரோடு போட்டு அலைக்கழித்து விடுகிறது. எவரை நாம் குறைசொல்லுகிறோமோ அவரைப்போல் நாம் மாறவேண்டிய காலமும், அவரிடம் போய் கைகட்டி உதவி கேட்கவேண்டிய சூழ்நிலையும் அமைந்துவிடுகிறது. ஆசைப்பட்டதை யெல்லாம் அடைய வேண்டும்; ஆனால் கெட்ட பெயர் எடுக்கக்கூடாது என எதிர்பார்ப்பவர்கள் ஏராளமாகிவிட்டனர்.
வாழ்க்கை வித்தியாசமானது என்றால், அதைவிட கடவுள் படைத்த மனிதர்கள் விசித்திரமானவர்கள்.
நல்லவர்கள்
அடுத்த மனிதருக்குத் தீங்கு நினைக்காதவரே நேர்மையானவர். நல்லவர். லக்னத்தில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன், லக்னாதிபதி கேந்திர கோணங்களில் இருந்து, சுபகிரகப் பார்வை பெற்ற ஜாதகர் வசதியான நல்ல பெற்றோர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை யாகப் பிறப்பார். தசா புக்திகள் சிறப்பாக அமைந்தால் அறிவாளி யாகவும் நல்ல குணத்துடனும் வளர ஆரம்பிப்பார். இரண்டாமிடம், நான் காமிடம் சிறப்பாக இருக்கும்போது கல்வியைத் தடையின்றி முடிப்பார். பத்தாமிடம் சிறப்பாக இருந்து, அங்கு நிற்கும் கிரகங்களுக்கு சுபகிரகப் பார்வை பட்டால் பெரிய பதவியுடன் கூடிய, அதிக வருமானம் கொண்ட தொழிலோ அரசுப் பதவியோ பெற்று அந்தஸ்துடன் வாழ்வர். ஆறு, எட்டு, பன்னிரண்டாமிட தசைகள் வராமலும், கெட்ட கிரகங்கள் கெட்டு வலுவின்றியும் இருந்தால் நோய், எதிரி, கடன் பிரச்சினையின்றி நீண்ட ஆயுளுடன் இப்பிறவியை நிறைவு
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்னும் ஒரு வரையறை வைத்துக்கொண்டு, கோடு போட்டு வாழ்வேன் என துவங்கப் படுகிற பலரது வாழ்கையில் விதி ரோடு போட்டு அலைக்கழித்து விடுகிறது. எவரை நாம் குறைசொல்லுகிறோமோ அவரைப்போல் நாம் மாறவேண்டிய காலமும், அவரிடம் போய் கைகட்டி உதவி கேட்கவேண்டிய சூழ்நிலையும் அமைந்துவிடுகிறது. ஆசைப்பட்டதை யெல்லாம் அடைய வேண்டும்; ஆனால் கெட்ட பெயர் எடுக்கக்கூடாது என எதிர்பார்ப்பவர்கள் ஏராளமாகிவிட்டனர்.
வாழ்க்கை வித்தியாசமானது என்றால், அதைவிட கடவுள் படைத்த மனிதர்கள் விசித்திரமானவர்கள்.
நல்லவர்கள்
அடுத்த மனிதருக்குத் தீங்கு நினைக்காதவரே நேர்மையானவர். நல்லவர். லக்னத்தில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன், லக்னாதிபதி கேந்திர கோணங்களில் இருந்து, சுபகிரகப் பார்வை பெற்ற ஜாதகர் வசதியான நல்ல பெற்றோர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை யாகப் பிறப்பார். தசா புக்திகள் சிறப்பாக அமைந்தால் அறிவாளி யாகவும் நல்ல குணத்துடனும் வளர ஆரம்பிப்பார். இரண்டாமிடம், நான் காமிடம் சிறப்பாக இருக்கும்போது கல்வியைத் தடையின்றி முடிப்பார். பத்தாமிடம் சிறப்பாக இருந்து, அங்கு நிற்கும் கிரகங்களுக்கு சுபகிரகப் பார்வை பட்டால் பெரிய பதவியுடன் கூடிய, அதிக வருமானம் கொண்ட தொழிலோ அரசுப் பதவியோ பெற்று அந்தஸ்துடன் வாழ்வர். ஆறு, எட்டு, பன்னிரண்டாமிட தசைகள் வராமலும், கெட்ட கிரகங்கள் கெட்டு வலுவின்றியும் இருந்தால் நோய், எதிரி, கடன் பிரச்சினையின்றி நீண்ட ஆயுளுடன் இப்பிறவியை நிறைவு செய்வர்.
இப்படி ஒரு மனிதருக்குத் தேவையானவையெல்லாம் தானாக கிடைத்து, நினைத்த தெல்லாம் நடந்தால்தான் கடைசிவரை நேர்மையானவராக வாழமுடியும். தன் தேவைக்காகப் பொய் பேசவேண்டிய அவசியம் இருக்காது. உண்மையைப் பேசி உதவிகள் செய்தால் எல்லாரிடமும் நல்லவர் என பெயரெடுக்க முடியும்.
கெட்டவர்கள்
வாழ்க்கையையும் மனிதர்களையும் புரிந்துகொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. மறைவிட அதிபதி தசை, ராகு தசை, சனி தசை, ஏழரைச் சனிக் காலங் களிலும்; மிதுனம், சிம்மம், கும்ப லக்னங் களிலும்; ஆடி, ஐப்பசி மாதங்களிலும் பிறந் தால் பாலாரிஷ்ட தோஷத்தால் நோய் பாதிப்பு, பெற்றோருக்கு கண்டம், பிரிவு, பொருளா தாரக் கஷ்டம், அவபெயர் வந்து, குழந்தைப் பருவ வாழ்க்கையிலேயே சோதனை தொடங்கி விடுகிறது. இரண்டாமிடத்தை பாவ கிரகங்கள் பார்ப்பதும், இரண்டாமிடத்தில் பாவிகள் நிற்பதும், முரண்பாடான கூட்டு கிரகங்கள் அமைவதும் குணத்தைக் கெடுத்து விடுகிறது. கல்வியை மந்தப்படுத்தி விடுகிறது. நான்காமிடம் கெட்டுவிட்டால் உயர்கல்வி தடைப்பட்டுவிடுகிறது. ஏழரைச் சனி, 6, 8, 12-ஆம் அதிபதி தசை, பாதகாதிபதி தசைகள் தீய பழக்கவழகங்களையும், கூடா நட்பையும், நிலையற்ற வருமானத்தையும், கெட்ட வழியில் சம்பாதிக்கும் எண்ணங்களையும் தந்து தொழிலைக் கெடுத்துவிடும். தன் வாழ்க்கையை வாழவே போராட்டமாக இருக்கும்போது அடுத்தவர்களைப்பற்றி எண்ணிக்கூட பார்க்கமுடியாத நிலையும், அடுத்தவர்கள் வாழ்க்கையைப் பிடுங்கி வாழவேண்டிய நிலையும் ஏற்பட்டு கெட்டவராகிவிடுகின்றனர்.
மாரகாதிபதி தசை, அஷ்டமாதிபதி தசை வரும்போது கெட்டவனாகவே மறையும் பிறவியாய் அமைந்துவிடுகிறது.
நடுநிலையாளர்
பிறக்கும்போது அஷ்டமச் சனி, ஏழரைச்சனியாக, குழந்தைப் பருவம்வரை சுமாரான தசைகள் அமைந்தால் ஜாதகருக்கு நோய்களாலும் விபத்துகளாலும் கண்டங் களும், பெற்றோர்களுக்கு மனஸ்தாபங் களும், சின்னச் சின்ன பிரிவுகளும், பொருளா தாரச் சிக்கல்களும் வந்து வந்து விலகும். இரண்டு, நான்காம் அதிபதிகள் சுப, அசுப கிரகப் பார்வை பெற்று, சுப, அசுபக் கலவை யான தசைகள் அமைந்தால், சில புக்திகளில் மந்தமும், சில புக்திகளில் நல்ல மதிப் பெண்களும் பெற்று, வெற்றி, தோல்விகள் பழகி, சராசரி வாழ்க்கையைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் பெற்றவர்களாகிவிடுவர்.
தொழில் அதிபதி மறைவிடங்களில் இருந்தாலும், சுமாரான தசா புத்தியும் கோட்சார சுபப் பலனும் கிடைத்தால் வாழ்க்கைக்குத் தேவையானதை சுய உழைப்பால் பெற்று துக்கமின்றி நல்ல வாழ்க்கை வாழ்வர். யாருக்கும் கொடுக்கின்ற வசதியில்லாவிட்டாலும், யாரிடமும் கையேந்தாத கௌரவமான வாழ்க்கையை அனுபவித்து வாழ்வர்.
திடீர் அதிஷ்டசாலிகள்
இவன் தேறமாட்டான் என மனிதர்களால் கைவிடப்படுபவர்கள் கடவுளால் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப்படுவார் என்கிற ஆச்சரியமான அதிர்ஷ்டம் வெகுசிலருக்கே வாழ்க்கையில் அமையும். பிறக்கும்போது பாதகாதிபதி, மாரகாதிபதி தசை தொடங்கி அல்லல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, பாவ கிரகங்கள் மறைவிடங்களில் அமைந்து விபரீத ராஜயோகமாகி, சுப கிரகப் பார்வை, இணைவு பெற்ற தசை ஆரம்பித்ததும் யாரும் எண்ணிப்பாராத திடீர் வளர்ச்சி ஏற்படும். பலர் பொறாமை கொள்ளுமளவு பணம், பெயர், புகழைக் குறைந்த காலத்தில் பெற்றுவிடுவர். இதனைக் கொண்டுதான், பொதுவாக ஜாதகத் தில் முதல் பாதி கடினமாக இருந்தால் இரண்டாம் பாதி நன்றாக இருக்கும் என கூறுவர். முதல் பாதியில் ஏற்படும் அவமானம், அனுவங்களைக் கொண்டு இரண்டாம் பாதி வாழ்க்கையில் சரிசெய்து கொள்வார்கள்.
பிறப்பிலிருந்து நல்ல தசாபுத்தியால் தொடர்ந்து நன்மை நடந்தால் எச்சரிக் கையாக இருக்கவேண்டுமென எண்ணாமல், இரண்டாம் பாதி வாழ்க்கையைப் பலர் கஷ்டத்தில் கழிப்பர். திடீரென்று ஏற்படும் ஏமாற்றத்தால் பெரிய தோல்விகளை சமாளிக்க முடியாமல், விரக்தியால் தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.
தொடர் தோல்விகள் விரக்தியைத் தந்தாலும், தவறுகளைத் திருத்தி வெற்றியாக மாற்றும் வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும். நினைத்ததெல்லாம் எளிதாகக் கிடைத்துவிட்டால் வெற்றிக்கான வழியும் தெரியாது; தோல்வியின்போது வலிதாங்க முடியாது.
சராசரியாளர்கள்
பூமியில் அதிக மனிதர்கள் கஷ்ட, நஷ்டங்களை சகித்துக் கொண்டு சராசரி வாழ்க்கை வாழக்கூடியவர்கள். அவர்களுக்கு ஒன்றிரண்டு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று, பெரும்பாலான கிரகங்கள் நட்பு, சமம், பகை என்னும் அமைப்பில் சில தோஷங்கள் , சில யோகங்கள் கொண்டதாக இருக்கும். தசா புத்திகளும் மோசமின்றி சுமாராக இருக்கும். கிரகங்கள் மோசமாக இருப்பவர்கள் அதிகக் கஷ்டத்துடனும், சுமாராக இருப்பவர்கள் குறைந்த கஷ்டத்துடன் காலத்தைக் கடந்துபோவர். எதற்கும் பெரிய சந்தோஷமோ வருத்தமோ படாமல் அன்றாடம் காய்ச் சியாக இருந்தாலும் கிடைத்தில் மகிழ்வாக வாழ்வர். சுபகிரகப் பார்வை பெற்றவர்கள் கீழ்நிலைத் தொழிலில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பர். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் மனக் கவலையின்றி சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.
கிரகங்களில் ஒன்றுக்கொன்று எதிரியாக இருக்கும் கிரக இணைவுகள், புதன் வலுவின்றி, தேய்பிறைச் சந்திரன் பார்வை, இணைவு பெறுதல், லக்னத்தில் சனி, சந்திரன் பார்வை, இணைவு போன்ற கிரக அமைப்புகள் மனதையும் உடலையும் கெடுத்து குழப்பவாதிகள் ஆக்கிவிடும்.
தைரிய வீரிய ஸ்தானங்கள் வலுக்குறைந்து, செவ்வாய், சனி பார்வை, இணைவுகள் இருந்தால் மனம் ஒரு நிலையின்றி, காலத்திற்கேற்ப மாறும் சந்தர்ப்பவாதிகளாக இருப்பர். சுபகிரங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், பாவ கிரகங்கள் வலுத்தன்மை பெற்று சம்பந்தம் பெற்றால் சுயநலவாதிகளாக இருப்பர். சுபகிரகப் பார்வை சுயநலத்தால் நன்மையும், பாவகிரகப் பார்வையுடன் தசை நடந்தால் சுயநலத்தால் கஷ்டத்தையும் அனுபவிப்பர்.
சூழ்நிலையும் பரிகாரமும்
பலவகை மனிதர்கள் இருந்தாலும் சில நேரங்களில் கெட்டவர்கள் என அறியபட்டவர்களுக்கு சுபகிரகப் பார்வை அல்லது சுபகிரக தசையில் நல்லது செய்யவேண்டிய சூழலும், நல்லவர் என எண்ணிக்கொண்டிருந்தவர்கள் ஏழரைச்சனி, பாவகிரக தசையால் தீமை செய்யவேண்டிய சூழலும் அமைந்துவிடும். மக்கள், இவனைப் போய் நல்லவர்னு நினைச்சோம் என சலித்துக் கொள்வதும், இப்படிப்பட்ட நல்லவரையா கெட்டவரெனநினைச்சோம் என எண்ணவேண்டிய காலமும் வந்துவிடும்.
எதுவும் நிலையற்றது. சூழ்நிலையாகிய தசாபுக்திகள்தான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. நடக்கும் தசா புக்திகளுக்கேற்ப மனநிலையை அமைத்துக் கொண்டால் தோல்விகளை மனதில் ஏற்றாமல் வெற்றிகளை அடையலாம்.
செல்: 96003 53748