பொதுவாக, ஒவ்வொரு மனிதரும் பலவிதமான கஷ்டங்களை சந்தித்துவருகின்றனர். பலர், பட்ட கஷ்டத்திற்கான நல்ல பலனோ, உழைத்த உழைப்பிற்கான ஊதியமோ, திறமைக்கேற்ற வேலையோ, மன நிம்மதியோ கிடைக்காமல், வாழ்க்கை போகும் பாதையில் பயணிக்கிறார்கள். இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளும் பணம் என்னும் காகிதத்திடமிருந்துதான் பிள்ளையார் சுழி போடுகிறது.
பணம் மனிதனைப் படைத்ததா? மனிதன் பணத்தைப் படைத்தானா என வியக்கும் வகையில் பணத்தேவைகள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்துவருகிறது.
இன்றைய நவநாகரிக உலகில் "பணம் வைத் திருப்பவர்கள் பணக்காரர்கள் அல்ல. செலவு செய்பவர்களே பணக்காரர்கள்' என்கிறார்கள். அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் பெருகியிருக்கும் இந்த காலத்தில் சிறிய பணத் தேவைகளை , ரொக்க அட்டை, கடன் அட்டைகள் (க்ங்க்ஷண்ற் ஸ்ரீஹழ்க், ஸ்ரீழ்ங்க்ண்ற் ஸ்ரீஹழ்க்) மூலம் கடன் வாங்கியாவது செலவுசெய்யும் மனோபாவம் இன்று பலரிடமும் நிறைந் திருக்கிறது.
நீண்டகாலக் கடன்களான வீட்டுக்கடன், விவசாயக்கடன், கல்விக் கடன், வாகனக் கடன், தனிநபர்க் கடன், நகைக்கடன் எனப் பல பெயர்களில் வங்கிகளும் கடன் வழங்கிவரு கின்றன. அதனால், பெரும்பாலானவர்களுக்குக் கடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. தவணைசெலுத்தி (ஊஙஒ) வாழ்க்கையை வெறுத்துவிடுகின்றனர்.
தங்களுடைய வரவிற்கு அதிகமாகக் கடன் வாங்கிய பலர், கடன் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாமல் பணக்காரனாக வாழமுடியாவிட்டாலும் பரவாயில்லை, கடனில்லாமல் வாழவேண்டும் என்னும் மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஜாதகம் பார்க்க வரும் நடுத்தர வர்க்கத்தில் பலருடைய ஆதங்கம்- "கடனில்லாத இன்பமான வாழ்க்கைக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்பதாகவே இருக்கிறது.
ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு ஜாதகருக்குக் கடன் ஏற்படுவதற்குக் காரணம் பூர்வ ஜென்ம கர்மவினைகளே. கடன் தொடர்பான அனைத்துப் பிரச்சினை களையும்- அதாவது கடன் ஏற்படும் காலம், அதனால் உருவாகும் மன உளைச்சல் மற்றும் வம்பு, வழக்கு, கடனில் இருந்து மீளும் காலம் ஆகியவற்றை ஒருவரின் ஜனனகால ஜாதகத்தின் கீழ்க்காணும் காரணிகளே தீர்மானம் செய்கின்றன. அவை-
1. ஆறாம் இடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுக்தி அந்தரக் காலம் கடன் கொடுக்கிறது.
2. ராகு- கேதுக்களின் தசாபுக்திகள் மற்றும் ராகு-கேதுக்களுடன் சேர்ந்த கிரகங்களின் தசாபுக்திகள் கடனை ஏற்படுத்துகின்றன.
3. எந்த லக்னமாக இருந்தாலும், புதன் தசை, புதன் புக்திகளில் கடன் ஏற்படுகிறது.
4. ஆறாம் பாவத்துடன் தொடர் புடைய எல்லா கிரகங்களுக்கும் கடனை ஏற்படுத்தும் அதிகாரம் உள்ளது.
5. ஆறாம் பாவத்தை அல்லது ஆறாம் அதிபதியைப் பார்த்த கிரகம் கடன் வாங்கத் தூண்டுகிறது.
6. லக்னாதிபதி, ஆறாம் அதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் தங்களுடைய நிதானமற்ற ஆசையால் கடன் வலையில் சிக்குகிறார்கள்.
7. இரண்டு மற்றும் ஆறாமதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்ற வரவுக்குமீறி கடன் சுமையில் தவிப்பார்கள். தவணை (ஊஙஒ) கட்டியே வாழ்க்கையே வெறுத்துவிடுவார்கள்.
8. மூன்று, ஆறு மற்றும் பதினொன் றாம் அதிபதி சம்பந்தம் இருப்பவர் களுக்கு ஜாமின் பிரச்சினையால் கடன் தேடிவரும்.
9. நான்கு மற்றும் ஆறாம் அதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் வீடு, வாகனத்தில், அழகு, ஆடம்பரப் பொருட்களில் தவறான முதலீட்டால் கடனை விலைக்கு வாங்குவார்கள்.
10. ஐந்து, ஒன்பது மற்றும் ஆறாம் அதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ஆன்மிகம் மற்றும் அறவழிச்செலவினால் கடன்படுவார்கள் அல்லது தந்தை, தந்தைவழி முன்னோர்களால், முன்னோர்களின் சொத்துப் பிரச்சினை போன்றவற்றால் கடன் உருவாகும். அதாவது கௌவரச் செலவால் கடன் ஏற்படுவது.
11. ஆறாம் அதிபதி, ஏழாமதிபதி சம்பந்தம் இருப்பவர்களுக்கு நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியால் வஞ்சிக்கப்படுதல் அல்லது மனைவி மற்றும் தாய்மாமன்மூலம் பொருள் இழப்பால் கடன் அவதியிருக்கும்.
13. ஆறு மற்றும் பத்தாம் அதிபதி சம்பந்தம், தொழில் நட்டத்தால் கடன் தொல்லையைத் தரும். 5, 6, 10-ஆம் அதிபதிகள் சம்பந்தம்- கர்மம் செய்ய புத்திரப் பாக்கியத்திற்கு செலவு செய்தல் அல்லது குழந்தைகளின் இனம்புரியாத நோய்த் தாக்கத்திற்கு வருமானத்திற்குமீறிய செலவால் கடன் வரும்.
14. ஆறாம், எட்டு, பன்னிரண்டாம் அதிபதி சம்பந்தம்- தவறான ஷேர் முதலீடு, அதிர்ஷ்டத்தை வரவழைக்க மாந்த்ரீகம், சூதாட்டம், கோர்ட் கேஸ் பிரச்சினை, அதிக வட்டிக்குப் பணம் வாங்குவதால் வட்டிக்கு வட்டிகட்டி தன்னையே மாய்த்துக் கொள்ளுதல் அல்லது கடனால் தலைமறைவாக வாழ்தல் போன்ற சூழலை ஏற்படுத்தும்.
கடன் பிரச்சினையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.
1. கௌரவக் கடன்
இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அல்லது ஒரு குறுகிய காலகட்டத்திற்கு கடன் பிரச்சினை இருக்கும்.
கடன் பணம் வீடு தேடிவரும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். எவ்வளவு கடன் வாங்கினாலும், எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் வெளியில் தெரியாது. கௌரவரப் போர்வையால் காக்கப்படுவார்கள்.
ஒருசிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் கடன் தள்ளுபடியாகும் அல்லது கடன் தொகையைக் கட்டாமல் தப்பித்து விடுவார்கள் அல்லது எளிதில் அடைபட்டுவிடும். இவர்களுடைய ஜாதகத்தில் 3, 6, 8, 12-ஆம் அதிபதிகள் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை இழந்திருப்பர்.
2. அவமானக் கடன்
இந்த அமைப்பினருக்கு வாழ்நாள் முழுவதும் ஏதாவதொரு ரூபத்தில் கடன் இருந்துகொண்டே இருக்கும். கடனுக்காக வாழ்க்கையா? அல்லது வாழ்வதற்கு கடனா என்னும்ரீதியில் வாழ்நாளைக் கழிப்பார்கள். 100 ரூபாய்க் கடனை 1000 ரூபாய்க் கடனாகத் திரும்பச் செலுத்துவார்கள். இவர்களின் கடன் வாழ்க்கை கௌரவத்தைக் குறைத்து அவமானத்தைத் தேடித்தரும். உளவியல்ரீதியாகக் கடன் பிரச் சினைக்குத் தீர்வுகாண முயலவேண்டும். அவசியம், ஆடம்பரம் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத வாழ்க்கை வாழ்வது. வாங்கிய நோக்கத்திற்கு கடன் தொகையைப் பயன்படுத்தாமல் வேறுவகையில் செலவு செய்து திரும்பக் கட்ட முடியாமல் திணருவது போன்றவற்றை உணரவேண்டும்.
கடனில்லா பெருவாழ்வு வாழ 5 கட்டளை களைப் பின்பற்ற வேண்டும்
1. அவசியமில்லாத பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து, வீட்டுக்குத் தேவையான பொருள்களை மட்டும் வாங்க வேண்டும்.
2. பட்ஜெட் போட்டு வாழவேண்டும். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.
3. எதிர்காலத் தேவைக்கு சிறுசேமிப்பாவது அவசியம் இருக்கவேண்டும்.
4. கடன் தொகையை வாங்கிய நோக்கத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
5. முடிந்தவரை சிறுசிறு தானதர்மங்கள் செய்து பிறரை மகிழ்விக்க வேண்டும்.
இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும்.மேலும், குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, அஷ்டமி திதி ஆகிய இந்த நான்கு நாட்களிலும் விநாயகருக்கு அறுகம்புல் மாலையை செலுத்தி, கடனால் பாதிக்கப்பட்டவரின் பெயருக்கு அர்ச்சனையும் செய்யவேண்டும்.
வாங்கிய கடனை நாம் அடைக்காமல் போவதால்தான் பிறவிகளை எடுத்துப் போராடவேண்டியிருக்கிறது. கடன் முழுவதுமாக அடைபட வேண்டுமானால் கும்பகோணம் அருகிலிருக்கும் திருச்சேறை சாரநாதரை திங்கள்கிழமை நேரில்சென்று வழிபடவேண்டும்.
சனிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கினால் பிறவிக்கடனை சேர்த்தே அடைக்கலாம்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மகாலஷ்மியை வழிபடவேண்டும்.
அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு "மைத்ர முகூர்த்தம்' எனப் பெயர். இந்த முகூர்த்தத்தில் கடன் தொகையில் சிறுதொகையைக் கொடுத்தால், கொடுக்கவேண்டிய தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அக்கடன் விரைவில் தீர்ந்துவிடும்.
செல்: 98652 20406
__________________
சார்வரி வருடத்தின் மைத்ர முகூர்த்த நாட்கள்:
2-7-2020, வியாழக்கிழமை மதியம் 3.05 மணிமுதல் மாலை 5.05 மணிவரை;
13-7-2020, திங்கள்கிழமை இரவு 12.12 மணிமுதல் 2.12 மணிவரை;
18-7-2020, சனிக்கிழமை காலை 6.08 மணிமுதல் 8.08 மணிவரை; மதியம் 12.08 மணிமுதல் 2.08 மணிவரை; மாலை 6.08 மணிமுதல் இரவு 8.08 மணிவரை;
29-7-2020, புதன்கிழமை மதியம் 1.52 மணிமுதல் 3.52 மணிவரை;
9-8-2020, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.32 மணிமுதல் 12.32 மணிவரை;
26-8-2020, புதன்கிழமை மதியம் 12.36 மணிமுதல் 2.36 மணிவரை;
6-9-2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.48 மணிமுதல் 10.48 மணிவரை;
22-9-2020, செவ்வாய்க்கிழமை காலை 10.20 மணிமுதல் மதியம் 12.20 மணிவரை;
3-10-2020, சனிக்கிழமை இரவு 7.00 மணிமுதல் 8.32 மணிவரை;
20-10-2020, செவ்வாய்க்கிழமை காலை 8.12 மணிமுதல் 9.38 மணிவரை;
30-10-2020, வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிமுதல் 6.45 மணிவரை;
31-10-2020, சனிக்கிழமை மாலை 4.49 மணிமுதல் 6.49 மணிவரை;
16-11-2020, திங்கள்கிழமை காலை 6.08 மணிமுதல் 8.08 மணிவரை;
27-11-2020, வெள்ளிக்கிழமை மாலை 4.01 மணிமுதல் 6.01 மணிவரை;
12-12-2020, சனிக்கிழமை காலை 10.46 மணிமுதல் 12.46 மணிவரை; மாலை 4.46 மணிமுதல் 6.46 மணிவரை; இரவு 10.46 மணிமுதல் 12.46 மணிவரை;
13-12-2020, ஞாயிற்றுக்கிழமை காலை 4.23 மணிமுதல் 6.23 மணிவரை;
24-12-2020, வியாழக்கிழமை மாலை 3.16 மணிமுதல் 5.16 மணிவரை;
10-1-2021, ஞாயிற்றுக்கிழமை காலை 5.18 மணிமுதல் 7.18 மணிவரை;
20-1-2021, புதன்கிழமை மதியம் 2.00 மணிமுதல் 2.55 மணிவரை;
21-1-2021, வியாழக்கிழமை மதியம் 1.10 மணிமுதல் 3.10 மணிவரை;
17-2-2021, புதன்கிழமை காலை 10.32 மணிமுதல் 12.32 மணிவரை;
5-3-2021, வெள்ளிக்கிழமை இரவு 11.05 மணிமுதல் 1.05 மணிவரை;
16-3-2021, வெள்ளிக்கிழமை காலை 8.04 மணிமுதல் 10.04 மணிவரை;
1-4-2021, வியாழக்கிழமை இரவு 8.48 மணிமுதல் 10.48 மணிவரை;
13-4-2021, செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணிமுதல் 7.45 மணிவரை;
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையப்பாகத்தைப் பயன்படுத்துவது நன்று.