த்தாம் வீடு பதவிதரும் சிறப்பான கேந்திர ஸ்தானமாகும். பத்தாம் வீடுதான் ஒருவருக்குத் தொழிலை அமைத்துக்கொடுக்கும் இடமாகும்.

Advertisment

பத்தாம் வீட்டில் ஒரு உச்ச கிரகம் நிற்க, பத்துக்குரியவர் உச்சம்பெற்று நிற்க, சந்திர ராசிக்கு பத்துக்குரியவரும் உச்ச நிலையில் இருக்க, இருவரும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றால் அது கிரீட யோகமாகும்.

உதாரணமாக, மேஷ லக்னம், மிதுன ராசியாகி, லக்னத்திற்கு பத்துக்குரிய சனி துலாமில் நிற்க, ராசிக்கு பத்துக்குரிய குரு கடகத்தில் நின்றால் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெறுவார்கள். மேலும் 10-ல் செவ்வாய் நின்றால் இந்த கிரீட யோகம் சித்தியாகும். இதுவொரு அபூர்வ யோகமாகும். மூன்று கிரகங்கள் உச்சம் பெறுவதால் மிகச்சிறப்பான ராஜயோகமாகும். இந்த யோகம் பெற்றவர்கள் அரசாங்கத்தில் பெரும் பதவி வகிக்கும் சூழ்நிலை உண்டாகும். பெரிய தொழிற்சாலையை நிர்வாகிக்கும் திறமை உண்டாகும். பலமான அமைப்பென்பதால் ஆளடிமைகள் இருப்பார்கள். அரசனுக்கு நிகரான சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள். அரசாங்கத்தில் ஆட்சியாளர்களாக சிலர் இருக்க வாய்ப்புண்டாகும். சிலருக்கு புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கு வாய்ப்புண்டாகும்.

இனி 12 லக்னங்களுக்கும் இந்த யோகத்தைக் காண்போம்.

sivan

மேஷம்

Advertisment

10-க்குரிய சனி துலாமில் நிற்கவேண்டும். 10-ல் செவ்வாய் நிற்கவேண்டும். மிதுன ராசி, மீன ராசியாக இருந்தால் குரு கடகத்தில் நின்று சனிக்கு உச்ச கேந்திரம் பெற்று கிரீட யோகம் சித்தியாகும். விருச்சிக ராசியாக இருந்தால் பத்துக்குரிய சூரியன் சனிக்கு உச்ச கேந்திரம் பெற்று கிரீட யோகம் சித்தியாகும்.

ரிஷபம்

10-ல் உச்சன் நிற்க வாய்ப்பில்லை. எனினும் 10-க்குரிய சனி துலாமில் நிற்க, மீன ராசி, மிதுன ராசி, விருச்சிக ராசி, கும்ப ராசி, கடக ராசி ஆகியவற்றுக்கு பத்துக்குரியவர்களான குரு, சூரியன், செவ்வாய் ஆகியோர் சனிக்கு உச்ச கேந்திரம் பெறுவதால் கிரீட யோகம் சித்தியாகும்.

மிதுனம்

10-ல் சுக்கிரன் உச்சம் பெறவேண்டும். 10-க்குரிய குரு 2-ல் உச்சம் பெறவேண்டும். பத்துக்குரிய குருவுக்கு கேந்திரத்தில் ராசிக்குரிய ஜீவனாதிபதி உச்சம்பெற்றால் கிரீட யோகம் சித்தியாகும். மேஷ ராசி, ரிஷப ராசி, கடக ராசி, கும்ப ராசி, விருச்சிக ராசியாக இருக்கவேண்டும்.

கடகம்

Advertisment

10-ல் சூரியன் உச்சம்பெற்று நிற்கவேண்டும். 10-க்குரிய செவ்வாய் மகரத்தில் நிற்கவேண்டும். மகரச் செவ்வாய்க்கு கேந்திரத்தில் ராசியின் ஜீவனாதிபதி உச்சம்பெற்றால் அது கிரீட யோகமாகும். மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, மீன ராசி, விருச்சிக ராசி போன்ற ராசிகளாக இருக்கவேண்டும்.

சிம்மம்

10-ல் சந்திரன் உச்சம்பெற வேண்டும். 10-க்குரிய சுக்கிரன் மீனத்தில் உச்சம்பெற வேண்டும். சந்திரனுக்கு 10-க்குரிய சனி துலாமில் உச்சம்பெற்று நிற்கும்போது சுக்கிரனுக்கு கேந்திரம்பெற வாய்ப்பில்லை. எனினும் யோகம் உண்டு.

கன்னி

10-ல் உச்சன் நிற்க வாய்ப்பில்லை. 10-க்குரிய புதன் லக்னத்தில் உச்சம் பெறவேண்டும். புதனுக்கு கேந்திரத்தில் உச்சன் நிற்க வாய்ப்பில்லை. எனவே கடக ராசி, துலா ராசியாக இருந்தால் 10-க்குரியவர்கள் புதனுக்கு கோணத்தில் உச்சம்பெறும் நிலையானால் கிரீட யோகம் உண்டாகலாம்.

துலாம்

10-ல் குரு நிற்கவேண்டும். 10-க்குரிய சந்திரன் ரிஷபத்தில் நிற்கவேண்டும். சந்திரனுக்கு கேந்திரத்தில் உச்சன் நிற்க வாய்ப்பில்லை. (ராகு- கேதுக்கள் சந்திரனோடு சேரக்கூடாது.) எனவே சந்திரனுக்கு 10-ல் சனி நின்றால் கிரீட யோகம் சித்தியாகலாம்.

விருச்சிகம்

10-க்குரிய சூரியன் 6-ல் உச்சம் பெறவேண்டும். 10-ல் உச்சன் நிற்க வாய்ப்பில்லை. சூரியனுக்கு கேந்திரத்தில் ராசியின் ஜீவனாதிபதி உச்சம் பெற்றால் அது கிரீட யோகமாகும். விருச்சிக லக்னம், மீன ராசி, மிதுன ராசி, மேஷ ராசி, ரிஷப ராசி, கும்ப ராசி, கடக ராசி ஆகிய அமைப்புகளாக இருந்து, ஜீவனாதிபதிகள் உச்ச நிலையில் இருந்தால் அது கிரீட யோகமாகும்.

தனுசு

10-ல் புதன் உச்ச நிலையில் இருக்கவேண்டும். புதனுக்கு கேந்திரத்தில் உச்சர்கள் இருக்க வாய்ப்பில்லை. புதனுக்கு கோணத்தில் இருக்கும் உச்சனால் கிரீட யோகம் உண்டாகலாம். கடக ராசி, துலா ராசியாக இருந்து 10-க்குரியவர் உச்சம்பெற்றால் கிரீட யோகம் உண்டாகும்.

மகரம்

10-ல் சனி நிற்கவேண்டும். 10-க்குரிய சுக்கிரன் மீனத்தில் நிற்கவேண்டும். சுக்கிரனுக்கு கேந்திரத்தில் உச்சர்கள் நிற்க வாய்ப்பில்லை. சுக்கிரனுக்கு கோணத்தில் ராசியின் ஜீவனாதிபதி உச்சம்பெற்றால் யோகம் உண்டு. எனவே மீன ராசி, மிதுன ராசியாக இருந்து குரு கடகத்தில் நின்றால் யோகம் உண்டு.

கும்பம்

10-ல் கேது நிற்கவேண்டும். 10-க்குரியவர் மகரத்தில் நிற்கவேண்டும். மகரச் செவ்வாய்க்கு கேந்திரத்தில் ராசியின் ஜீவனாதிபதி உச்சம்பெற்றால் கிரீட யோகம் உண்டாகும். விருச்சிக ராசி, கடக ராசி, மிதுன ராசி, மீன ராசியாக இருப்பது, மேஷ ராசி, ரிஷப ராசியாக இருப்பது மட்டுமல்லாமல், ராசியின் ஜீவனாதிபதி உச்சம்பெற்றால் கிரீட யோகம் உண்டாகும்.

பின்குறிப்பு: உச்சன் அஸ்தமனமோ, வக்ரமோ, கிரகண தோஷமோ பெறக்கூடாது.

மீனம்

10-ல் உச்சன் நிற்க வாய்ப்பில்லை. 10-க்குரியவர் கடகத்தில் நிற்கவேண்டும். கடக குருவுக்கு கேந்திரத்தில் ராசியின் பதவி ஸ்தானாதிபதி உச்சம்பெற்றால் கிரீட யோகமாகும். மேஷம், ரிஷபம், கடகம், கும்பம், மிதுனம், விருச்சிகம் போன்ற ராசிகளில் ஒன்றாக இருந்து, 10-க்குரியவர் உச்சம் பெற்றால் கிரீட யோகமாகும்.எனவே இந்த கிரீட யோகமானது வெகுசிறப்புகளைத் தரவல்லது. ராஜயோகங்களில் இது மிகப்பெரிய ராஜயோகமாகும். குறிப்பிட்ட தசாபுக்தி வரும்போது நிச்சயமாகப் பதவியைத் தந்துவிடும்.

உச்சன் வக்ரம் பெற்றிருந்தால் பரிகாரங்கள் செய்துகொள்ளவேண்டும். உச்சன் வேறு எந்த விதத்தில் கெட்டிருந்தாலும் சாந்திப் பரிகாரங்கள் கண்டிப்பாக செய்துகொள்ளவேண்டும்.

பரிகாரங்கள்

10-க்குரிய உச்ச சூரியனுக்கு சூரியனார்கோவில் பரிகாரத்தலமாகும். ஸ்ரீமந்நாராயண ரட்சை அணியவும்.

10-க்குரிய உச்ச சந்திரனுக்கு திங்களூர் பரிகாரத்தலமாகும். ஸ்ரீபராசக்தி ரட்சை அணிந்துகொள்ளவும்.

10-க்குரிய உச்ச செவ்வாய்க்கு வைத்தீஸ்வரன்கோவில் பரிகாரத்தலமாகும். பதவி ரட்சை அணிந்துகொள்ளவும்.

10-க்குரிய உச்ச புதனுக்கு திருவெண்காடு பரிகாரத்தலமாகும். ஸ்ரீமகாவிஷ்ணு ரட்சை அணிந்துகொள்ளவும்.

10-க்குரிய உச்ச குருவுக்கு ஆலங்குடி பரிகாரத்தலமாகும். பதவி ரட்சை அணியவும்.

10-க்குரிய உச்ச சுக்கிரனுக்கு கஞ்சனூர் பரிகாரத்தலமாகும். ஸ்ரீமகாலட்சுமி ரட்சை அணியவும்.

10-க்குரிய உச்ச சனிக்கு திருநள்ளாறு பரிகாரத்தலமாகும். உச்ச சனிக்குரிய ரட்சை ஸ்ரீமந் நாராயண ரட்சையாகும்.

உச்ச ராகுவுக்கு திருநாகேஸ்வரமும், உச்ச கேதுவுக்கு கீழப்பெரும்பள்ளமும் பரிகாரத்தலங்களாகும். பதவி ரட்சை அணியவும்.

செல்: 93644 93102