Advertisment

இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (26) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/ramayana-tells-truths-sin-and-curse-26-chithardasan-sunderji-jeevanadi

திருமணத்திற்குமுன்பு பெண்கள் தொடர்பின்றி ஒழுக்கமாக வாழ்ந்த ஆண்களின் திருமண முகூர்த்தநாளன்று, குரு (ஜாதகன்) கிரகத்துடன் சந்திரன், புதன், சுக்கிரன் என பெண் கிரகங்கள் தொடர்புபெற்றிருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்வில் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு, பெண்பித்தனாக வாழ்வான்.

Advertisment

திருமணத்திற்குமுன்பு மிக கண்ணியமாக வாழ்ந்த ஒரு பெண்ணின் திருமணநாளன்று, சுக்கிரனுடன் (ஜாதகி) சூரியன், செவ்வாய், புதன், சனி என ஆண் கிரகங்கள் தொடர்பு பெற்றிருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும்

Advertisment

வாழ்வில் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வாள்.

முகூர்த்தநாளன்று செவ்வாயுடன் (கணவன்) ராகு தொடர்பிருந்தால், கணவனுக்கு அற்பாயுள், நோய், விபத்து, கணவன்- மனைவி பிரிவு, விவாகரத்து, பெற்ற மகனுக்கு அற்பாயுள், விபத்து போன்ற பலன்களை அனுபவிக்கநேரும். திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்க்கையில் கணவன்- மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சிக்கு கணவன் வீட்டாரே எதிர்ப்பாக இருப்பார்கள். மகிழ்ச்சியாக வாழவிட மாட்டார்கள்.

rr

திருமணநாளன்று செவ்வாயுடன் (கணவன்) கேது (சாபம்) சம்பந்தம் பெற்றிருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்வில் கணவன் சந்நியாசி போன்று குடும்பப் பொறுப்பற்றவனாக இருப்பான். கடமைக்காக வீட்டிற்கு வருவான். ஆண்மைதன்மை, தாம்பத்தியம் குறையும். கணவன்- மனைவி, பிரிவு, விவாகரத்து வழக்குகள் ஏற்படலாம். தொழில் செய்து சம்பாதி

திருமணத்திற்குமுன்பு பெண்கள் தொடர்பின்றி ஒழுக்கமாக வாழ்ந்த ஆண்களின் திருமண முகூர்த்தநாளன்று, குரு (ஜாதகன்) கிரகத்துடன் சந்திரன், புதன், சுக்கிரன் என பெண் கிரகங்கள் தொடர்புபெற்றிருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்வில் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு, பெண்பித்தனாக வாழ்வான்.

Advertisment

திருமணத்திற்குமுன்பு மிக கண்ணியமாக வாழ்ந்த ஒரு பெண்ணின் திருமணநாளன்று, சுக்கிரனுடன் (ஜாதகி) சூரியன், செவ்வாய், புதன், சனி என ஆண் கிரகங்கள் தொடர்பு பெற்றிருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும்

Advertisment

வாழ்வில் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வாள்.

முகூர்த்தநாளன்று செவ்வாயுடன் (கணவன்) ராகு தொடர்பிருந்தால், கணவனுக்கு அற்பாயுள், நோய், விபத்து, கணவன்- மனைவி பிரிவு, விவாகரத்து, பெற்ற மகனுக்கு அற்பாயுள், விபத்து போன்ற பலன்களை அனுபவிக்கநேரும். திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்க்கையில் கணவன்- மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சிக்கு கணவன் வீட்டாரே எதிர்ப்பாக இருப்பார்கள். மகிழ்ச்சியாக வாழவிட மாட்டார்கள்.

rr

திருமணநாளன்று செவ்வாயுடன் (கணவன்) கேது (சாபம்) சம்பந்தம் பெற்றிருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்வில் கணவன் சந்நியாசி போன்று குடும்பப் பொறுப்பற்றவனாக இருப்பான். கடமைக்காக வீட்டிற்கு வருவான். ஆண்மைதன்மை, தாம்பத்தியம் குறையும். கணவன்- மனைவி, பிரிவு, விவாகரத்து வழக்குகள் ஏற்படலாம். தொழில் செய்து சம்பாதிக்கும் எண்ணம் இராது. கடவுளை வணங்கிக்கொண்டு, பக்தி என்னும் பெயரால் கையிலிருக்கும் பணம், சொத்தை அழிப்பான். திருமணத்திற்குப்பின் அந்தப் பெண்ணின் வாழ்க்கை சுகமில்லாமல், சிரமமானதாக அமைந்துவிடும். மனைவிதான் குடும்பத்தை நிர்வாகம் செய்யவேண்டியநிலை உண்டாகிவிடும்.

திருமண முகூர்த்தநாளின் கிரக அமைப்பு நிலைதான் திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்வில் நன்மை- தீமை என எல்லாவித பலன்களையும் தந்து உயர்வு- தாழ்வினை உருவாக்கிவிடுகிறது. பிறப்பு ஜாதகத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை திருமண முகூர்த்த நாளுக்குரிய ஜாதகத்திற்கும் கொடுக்கவேண்டும்.

சித்த ஜோதிடத்தில் சித்தர்கள் கூறியுள்ள வழிமுறையில் திருமண முகூர்த்த நாள் அமைத்துத் திருமணம் செய்துவைத்து, தங்கள் பிள்ளைகள் புத்திரம், களத்திரம், செல்வம், செல்வாக்குடன் வாழ வழி செய்துகொள்ளவேண்டும். திருமண முகூர்த்த நாள் நிர்ணயிப்பதில் அலட்சியம் கூடாது.

ஒருவரின் பிறப்பு ஜாதக ராசிக்கட்டத்தில், பிறந்தபோது இருந்தது போன்றுதான் திருமண முகூர்த்தநாளிலும் கிரகங்கள் சம்பந்தம்பெற்று அமைந்திருக்கும். பிறப்பில் உண்டான பாவ- சாபப் பதிவுகள் அதிகமாவதையும், தடைசெய்து கொள்வதையும் திருமணநாள் தீர்மானிக்கும்.

இந்தக் கட்டுரையில் சித்தர்கள் கூறியுள்ளதைப் படிக்கும் வாசகர்கள், தங்கள் திருமணத்திற்குப்பின்பு அமைந்த வாழ்க்கையில் புத்திரக்குறைவு, தொழில் தடை, கடன், நோய், கணவன்- மனைவி கருத்து வேறுபாடு போன்று இன்னும் பல பிரச்சினைகளை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள், தங்களின் திருமண முகூர்த்தநாளன்று கிரகங்கள் இருந்த ராசிக்கட்டத்தைப் போட்டுப் பாருங்கள். சித்தர்கள் கூறியபடி பலன்தரும் நிலையில் கிரகங்கள் அமைந்திருப்பதை நீங்களே அறிந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் உண்டான பிரச்சினைகளுக்குக் காரணமும் புரியும்.

இன்றையநாளில் ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது என்ற வருத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் கள். இதற்கு குடும்ப கௌரவம், அந்தஸ்து, வரதட்சணை போன்று இன்னும் பல எதிர்பார்ப்புக ளுடன், தாங்கள் நினைத்தப்படி மாப்பிள்ளை, பெண் அமைய வேண்டும் என்று, இதுபோன்ற பல காரணங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளின் திருமணத்தைப் பெற்றவர்களே தடைசெய்து வருகின்றார்கள் என்பதும் ஒரு உண்மையான காரணம்.

திருமணம் சம்பந்தமாக ஜாதகம் பார்க்கும்போது, ராகு- கேது, சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், 7, 8-ஆமிட தோஷம் போன்று பல தோஷங்களை ஜோதிடர்கள் கூறுவதாலும், நட்சத்திரப் பொருத்தம், பத்துப் பொருத்தம் இல்லையென்று கூறிவிடுவதாலும் திருமணம் நடைபெறாமல் தடையாகிவிடுகிறது. திருமணத் தடைக்கு இதுவும் ஒரு காரணம்.

வேதமுறை கணித ஜோதிட முறையில், ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு, 1, 5, 9, 3, 7, 11-ஆவது ராசி களில் கோட்சார குரு வரும் காலத்திலோ அல்லது இந்த ராசிகளை குரு பார்க்கும் காலத்திலோ, "குரு பலன் வந்துவிட்டது. இந்த வருடம் திருமணம் கண்டிப்பாக நடந்துவிடும்' என்று ஜோதிடர்கள் கூறிவிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில், எத்தனை முறை குரு பலன் வந்தாலும், குரு பார்த்தாலும் நிறைய பேருக்குத் திருமணம் தடைப்பட்டுக் கொண்டேவருகிறது.

ஆண்- பெண்ணின் திருமண கால சமயத்திலுள்ள கிரகங்களின் நிலையைப் பற்றி சித்த ஜோதிடத்தில், சித்தர்கள் கூறியுள்ளதை அறிவோம்.

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் (மனைவி) இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கோட்சார குரு வந்து சஞ்சரிக்கும் வருடங்களில் அந்த ஆணுக்குத் திருமணம் நடந்துவிடும். இது நூறு சதவிகிதம் குருபலன் கிடைக்கும்.

சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் ஒரே நட்சத்திர மண்டலத்தில் கோட்சார குரு சஞ்சாரம் செய்யும் காலத்தில் குரு, சுக்கிரன் இணைவுண்டாகி ஜாதகனுக்கு மனைவியை அறியச் செய்து, அடையாளம் காட்டி திருமணத்தை நடத்தி வைத்துவிடும்.

இதேபோன்று ஆணின் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் ராசிக்கு, 1, 5, 9-ஆவது ராசிகளில் கோட்சார சனி சஞ்சாரம் செய்யும் காலமும் ஆணுக்குத் திருமணம் நடக்கும் காலமாகும்.

பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன், கேது சேர்ந்திருந்தால், திருமணத் தடைக் குக் காரணமான பாவ- சாபம் அறிந்து, முயற்சி செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

மீன ராசியில் இப்போது கோட்சார குரு சஞ்சாரம் செய்துகொண்டுள்ளது என்பதால், மீனம், கடகம், விருச்சிக ராசிகளில், பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ஆண்களுக்குத் திருமணம் நடந்துவிடும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில், செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில், கோட்சார குரு சஞ்சாரம் செய்யும் காலத்தில், அவளின் இப்பிறவி கணவணை அறியச்செய்து, அடையாளம் காட்டி, திருமணத்தை நடத்தி வைத்துவிடும்.

மீன ராசியில் இப்போது குரு சஞ்சாரம் செய்துகொண்டிருப்பதால், பிறப்பு ஜாதகத்தில் மீனம், கடகம், விருச்சிக ராசிகளில், செவ்வாய் (கணவர்) இருக்கப் பிறந்த பெண்களுக்கு இந்த வருடம், இதுவரை பரிகாரம் செய்த அல்லது செய்யாத அனைவருக்கும், குருபலனால் திருமணம் நடைபெற்றுவிடும். பெண்ணை அவள் கணவனுடன் இணைத்து வைத்து விடும்.

பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாயுடன் கேது சேர்ந்திருந்தால், பாவ- சாபம் அறிந்து நிவர்த்திசெய்து, முயற்சித்து திருமணம் செய்துவிடவேண்டும்.

திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்க்கையில் பிரிவு, குழப்பம், கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள், தொழில் பாதிப்புகள் இல்லாமலிருக்க சித்தர்கள் கூறியுள்ள நல்ல முகூர்த்தநாள் பார்த்துத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்.

தமிழ்முறை ஜோதிடத்தில் சந்திரன் இருக்கும் ஜென்ம ராசியை முதலாவதாக வைத்து, குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிப் பலன்களைப் பொதுவாகக் கூறவில்லை.

அவரவர் பிறப்பு ஜாதகக் கணக்கீடுபடி அவரவர்க்கு தனித்தனியே பலன் கூறியுள்ளார் கள்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala080722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe