Advertisment

வருட மழைப்பலன்!

/idhalgal/balajothidam/rainy-year

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

வ்வொரு வருடமும் பஞ்சாங்கம் வாங்கியவுடன் நாம் முதலில் பார்ப்பது, "இந்த வருடம் மழைப்பலன் என்ன' என்பதுதான்.

Advertisment

தமிழ்நாட்டிலுள்ள நதிகளும், காட்டாறுகளும், ஓடைகளும், நீர்நிலைகளும் சுயநல அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் திருடப்பட்டு, மக்களும் உயிரினங்களும் குடிக்கவும், விவசாயம் செய்யவும் தண்ணீர் இல்லாமல், வான்மழையை எதிர்பார்த்து வாழவேண்டிய நிலையாகிவிட்டது. இன்று தமிழகம் நீரில்லாத வறட்சி பூமியாக மாறிவிட்டது என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் மழைக் குறைவு சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறுகின்றார்கள். மூடநம்பிக்கை கொண்ட சிலர், கழுதை, தவளை போன்றவற்றுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என நம்பிக்கொண்டு, இன்னும் ஏதேதோ செய்து வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

"நீரின்றி அமையாது உலகு' என்பது முன்னோர் வாக்கு. உலகத்தில் அனைத்து ஜீவராசிகளும், தாவரங்களும் உயிர்வாழ நீரே ஆதாரம்.

Advertisment

krishnar

பூமியில் உள்ள கடல்நீர், நிலத்தடி நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி உறைந்து மேகம் என்ற நிலையில் வானில் உலவும். நீருள்ள மேகம் கருப்பு நிறத்தில் "கார் மேகம்' என்ற நிலையிலும், நீரில்லா மேகம் வெண்மேகமாக பஞ்சுப்பொதிபோலவும் வானில் உள்ளதை நாம் பார்க்கமுடியும். பூமியிலிருந்து ஆவியாகிச் சென்ற நீரே மறுபடியும் மழை நீராக பூமி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

வ்வொரு வருடமும் பஞ்சாங்கம் வாங்கியவுடன் நாம் முதலில் பார்ப்பது, "இந்த வருடம் மழைப்பலன் என்ன' என்பதுதான்.

Advertisment

தமிழ்நாட்டிலுள்ள நதிகளும், காட்டாறுகளும், ஓடைகளும், நீர்நிலைகளும் சுயநல அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் திருடப்பட்டு, மக்களும் உயிரினங்களும் குடிக்கவும், விவசாயம் செய்யவும் தண்ணீர் இல்லாமல், வான்மழையை எதிர்பார்த்து வாழவேண்டிய நிலையாகிவிட்டது. இன்று தமிழகம் நீரில்லாத வறட்சி பூமியாக மாறிவிட்டது என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் மழைக் குறைவு சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறுகின்றார்கள். மூடநம்பிக்கை கொண்ட சிலர், கழுதை, தவளை போன்றவற்றுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என நம்பிக்கொண்டு, இன்னும் ஏதேதோ செய்து வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

"நீரின்றி அமையாது உலகு' என்பது முன்னோர் வாக்கு. உலகத்தில் அனைத்து ஜீவராசிகளும், தாவரங்களும் உயிர்வாழ நீரே ஆதாரம்.

Advertisment

krishnar

பூமியில் உள்ள கடல்நீர், நிலத்தடி நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி உறைந்து மேகம் என்ற நிலையில் வானில் உலவும். நீருள்ள மேகம் கருப்பு நிறத்தில் "கார் மேகம்' என்ற நிலையிலும், நீரில்லா மேகம் வெண்மேகமாக பஞ்சுப்பொதிபோலவும் வானில் உள்ளதை நாம் பார்க்கமுடியும். பூமியிலிருந்து ஆவியாகிச் சென்ற நீரே மறுபடியும் மழை நீராக பூமியில் பெய்யும்.

பூமியில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டால்தான் மழை பெய்யும் நிலை குறைவின்றி இருக்கும். இனிவரும் காலத்தில் தமிழ்நாட்டில் மழை பெய்வதோ, இல்லை நீரின்றி காய்வதோ, மக்கள் நிலத்தடி நீரைக் காப்பாற்றி சேமித்து வைப்பதில்தான் உள்ளது. நீர்தான் நீரை உருவாக்கும்.

மழை, புயல், வெள்ளம், சுனாமி, பூகம்பம், வறட்சி, போர், உயிர்கள் கும்பல் கும்பலாய் மடிதல், அரசு, ஆட்சி மாற்றம் என இன்னும் இதுபோன்றவை பூமியில் நிகழ்வதற்கு வானில் சுற்றிவரும் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களின் கதிர்வீச்சுதான் காரணம்.

இதுபோன்ற நிகழ்வுகள் பூமியில் ஏற்படுவதற்கு முன்பே மனிதர்கள் அறிந்துகொள்ள, அகத்தியர் முதலான தமிழ்ச் சித்தர்கள் 18 பேரும் தெளிவான வழிமுறைகளை நமக்குக் கூறியுள்ளார்கள்.

இனி, சித்தர்கள் கூறிய முறையில் கிரகங்களின் தாக்கத்தால் மழை பெய்யும் காலத்தை அறிவோம். வானில் ஒவ்வொரு நாளும் கிரகங்கள் சுழன்றுவரும் தூர இடைவெளிக் கணக்கினை, அந்த வருடப் பஞ்சாங்கத்தில், மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள 12 ராசிக்கட்டங்களில் டிகிரி, பாதம் என்ற கணக்கில் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த ராசிக்கட்டங்களில் கிரகங்கள் வலப்புறமாக முன்னோக்கி நகரும் நிலையில், ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு முன் ராசி (2-ஆவது இடம்), பின் ராசியை (12-ஆவது இடம்) அறிந்துகொள்ள வேண்டும்.

பூமியில் மழை பெய்வதற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி கிரகங்கள்தான் காரணம். புதன் கிரகத்தின் தாக்கத்தால் காற்று, புயல் உண்டாகும். இந்த கிரகங்கள் கோட்சார நிலையில் ராசி மாற்றம் அடையும் நிலையைக் கொண்டு மழை பெய்யும் காலத்தையும், மழை பெய்யாத காரணத்தையும் சித்தர்கள் கூறியுள்ள வழிமுறைகளில் நாம் அறிவோம்.

"தேடும் கதிர்க்குமுன் புகரோன் செல்லசெவ்வாய் பின் செல்லில்.'வெப்ப கிரகங்களான செவ்வாய், சூரியன் இருக்கும் ராசிக்கு முன்னுள்ள ராசிகளில் மழை கிரகமான சுக்கிரன் இருக்கும் காலங்களில் பூமியில் மழை பெய்யும்.

14-4-2018 சித்திரை மாதம் 1-ஆம் தேதி முதல் வெப்பம் தரும் கிரகமான சூரியன், மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்திலும், அதே ராசியில் அதற்கு முன் நட்சத்திரமான பரணியில், மழை கிரகமான சுக்கிரனும் பயணம் செய்கின்றன. இது சூரியனுக்கு முன் சுக்கிரன் செல்லும் நிலை. இது பூமியில் மழை பெய்யும் நிலையாகும்.

சூரியனுக்கு முன்னுள்ள ராசி, நட்சத்திரங்களில் சுக்கிரன் செல்லும் காலங்களில், தன் இயற்கையான குளிர்ச்சித் தன்மையினால், வான்வெளியில் கருமேகத்திலுள்ள நீரின் உறைநிலையை நீராக மாற்றி, பூமியில் மழைநீராகப் பெய்யச் செய்துவிடும்.

இனி இந்த வருடம் மழை பெய்யும் நாட்களையும், இடங்களையும் அறிவோம்.

14-4-2018-ஆம் தேதிமுதல் 31-10-2018-ஆம் தேதிவரை பூமியில் மழை பெய்யும் காலமாகும்.

"புவியில் மறிஅரி யாழ் அலவன்

புகரோ நிற்கில் புயல் பெரிதாம்.'

மேஷம் (மறி), ரிஷபம் (அரி), மிதுனம் (யாழ்), கடகம் (அலவன்), சுக்கிரன் (புகர்). அடைப்புக்குறிக்குள் உள்ளவை ஒவ்வொரு ராசிக்கும் சித்தர்கள் கூறியுள்ள தமிழ்ப்பெயர்களாகும்.

வெப்பகிரகமான சூரியனைவிட்டு, சுக்கிரன் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் முன்செல்லும்போது காற்றுடன் மழைபெய்யும்.

14-4-2018 முதல் 21-5-2018 வரை தமிழ்நாட்டின் கிழக்கு, தென்கிழக்குப் பகுதி மாவட்டங்களான இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், காற்றின் திசைப்போக்கினைப் பொருத்து, அதன் அருகிலுள்ள உள்மாவட்டப் பகுதிகளிலும் மழைபெய்யும்.

கீழ்த்திசை நாடான இலங்கைக் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, அதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் மழை பெய்யும்.

சூரியனுக்கு முன் ராசிகளில் செல்லும் சுக்கிரனுடன் புதன் இணைந்து சஞ்சாரம் செய்யும் காலங்களில், கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் உருவாகும். காற்றுடன் மழை பெய்யும்- காற்றினால் மழை பெய்யும்.

29-5-2018 முதல் 3-7-2018-ஆம் தேதிவரை, காற்று கிரகமான புதன், மழைகிரகமான சுக்கிரன் இரண்டும் சூரியனுக்கு முன் ராசிகளில் தென்மேற்கு, மேற்குப் பகுதிகளில் சஞ்சாரம் செய்வதால், இக்காலங்களில் தென்மேற்கு, மேற்குதிசைப் பருவக்காற்று அதிகமாகி, கடலில் புயல் உருவாகி கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களிலும், கேரள பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்யும்.

25-6-2018 முதல் 21-8-2018 வரை ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்த நட்சத்திரங்களில், சிம்மம், கன்னி ராசிகளில் சுக்கிரன், புதன் சஞ்சாரம் செய்யும் காலங்களில் தமிழகத்தின் வடமேற்குப் பகுதிகளான தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வடக்கு கேரளா, கர்நாடக மேற்குப் பகுதிகளிலும் மழை பெய்யும்.

"பிழையா மதியைப் பொன் வெள்ளி

வளைக்கில் பெரும் மழையாம்.'

12-9-2018 முதல் 18-9-2018 வரையிலான ஆறு நாட்களில், துலா ராசியில் சந்திரன், சுக்கிரன், குரு இம்மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சாரம் செய்யும்போது வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, அதையொட்டிய மேற்கு, வடமேற்கு மாவட்டங்களிலும், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, இராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற கடற்கரையோர மாவட்டங்களிலும், கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி நல்ல மழை பெய்யும்.

"சாடும் கொண்டல் பூராடம்

வெள்ளி வெள்ளம் மழைசால்.'

11-2-2019 முதல் 22-2-2019 வரை தனுசு ராசி, பூராட நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் நாட்களில் கடலூர், அரியலூர், நாகை, திருவள்ளூர் மாவட்டப்பகுதிகளில் நல்ல மழை பெய்யும். கடற்கரையோர மாவட்டப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

குரு, சனி, கிரகண மழைப்பலன்களும் உள்ளன. அது அடுத்த இதழில்...

செல்: 99441 13267

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe