Advertisment

ஒன்றரை வருடங்கள் நீடிக்கப் போகும் மழை! ராகு பகவானும் பருவ மழையும்... - முனைவர் ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/rain-will-last-year-and-half-lord-rahu-and-monsoon-rain-dr-r-mahalakshmi

ராகுபகவான் இருப்பு, எப்போதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அவர் பண்ணும் அலம்பல் தாங்க இயலாது. இத்தனைக்கும், ராகு- கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் அமர்ந்துள்ளாரோ, அதனையே தன் சொந்த வீடாக ஆக்ரமித்துக்கொள்வார்.

Advertisment

தற்போது வாக்கியப்படி, 2023 அக்டோபர் 8 முதல், 2025 ஏப்ரல் 26 வரை, மீன ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மீனம் என்பது, ஒரு நீர் ராசியாகும். ராகு ஒரு காற்று கிரகம் ஆவார். எனவே அவர், மீன ராசியைவிட்டு, பின்னோக்கிய பயணமாக, கும்ப ராசியை அடையும் வரை மழையை பொழிந்துகொண்டே இருப்பர். மேலும், ராகுவுடன் சேரும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள் இவையும் இந்த மழை பொழிவைகூட, குறைக்கச் செய்யும்.

Advertisment

இனி ராகு கடக்கும் 1 1/2 வருடங்களில் எந்த மாதம் எவ்விதம் மழை பொழியும்.

rain

2023- கார்த்திகை- நவம்பர், டிசம்பர்

இந்த மாதம், ராகு, சென்ற சாரநாதர் புதன் வக்ரமாகி, நீர் ராசியில் சென்றார். கூடவே சூரியனும், செவ்வாயும் நீர் ராசி யான விருச்சிகத்தில் சேர்ந்து இருந்தனர். குரு, நீர்க் கிரகமான சுக்கிரனை பார்த்தார். எனவே கனமழை பொழிந்தது.

மேற்கண்ட கட்டத்தில், சனி, ராகுவை பார்ப்பதும் சந்திரன் நீர் ராசியான கடகத்தில் இருப்பதும் தெரியவர

ராகுபகவான் இருப்பு, எப்போதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அவர் பண்ணும் அலம்பல் தாங்க இயலாது. இத்தனைக்கும், ராகு- கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் அமர்ந்துள்ளாரோ, அதனையே தன் சொந்த வீடாக ஆக்ரமித்துக்கொள்வார்.

Advertisment

தற்போது வாக்கியப்படி, 2023 அக்டோபர் 8 முதல், 2025 ஏப்ரல் 26 வரை, மீன ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மீனம் என்பது, ஒரு நீர் ராசியாகும். ராகு ஒரு காற்று கிரகம் ஆவார். எனவே அவர், மீன ராசியைவிட்டு, பின்னோக்கிய பயணமாக, கும்ப ராசியை அடையும் வரை மழையை பொழிந்துகொண்டே இருப்பர். மேலும், ராகுவுடன் சேரும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள் இவையும் இந்த மழை பொழிவைகூட, குறைக்கச் செய்யும்.

Advertisment

இனி ராகு கடக்கும் 1 1/2 வருடங்களில் எந்த மாதம் எவ்விதம் மழை பொழியும்.

rain

2023- கார்த்திகை- நவம்பர், டிசம்பர்

இந்த மாதம், ராகு, சென்ற சாரநாதர் புதன் வக்ரமாகி, நீர் ராசியில் சென்றார். கூடவே சூரியனும், செவ்வாயும் நீர் ராசி யான விருச்சிகத்தில் சேர்ந்து இருந்தனர். குரு, நீர்க் கிரகமான சுக்கிரனை பார்த்தார். எனவே கனமழை பொழிந்தது.

மேற்கண்ட கட்டத்தில், சனி, ராகுவை பார்ப்பதும் சந்திரன் நீர் ராசியான கடகத்தில் இருப்பதும் தெரியவரும். எனவே கனமழை பொழிந்து மக்களும், அரசும் ரொம்ப நொந்து போனார்கள்.

2024- பங்குனி- மார்ச், ஏப்ரல் 2024, மார்ச், 14 மற்றும் ஏப்ரல் 13 வரை மேற்கண்ட கிரக நிலையின் கோட்சாரம் ஓடும். இதில் ராகுபகவான், புதன் சாரம் வாங்கியுள்ளார். சாரநாதன் புதன் நீசம். உடன் சூரியனும், அமர்ந்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக, சனி, செவ்வாய், காற்று ராசியில் அமர்ந்துள்ளனர். இதன்படி, நீர ராசியில் அமர்ந்த ராகு, சூரியன், நீச புதன் இவர்களும், காற்று ராசியில் அமர்ந்த சனி, செவ்வாய் இந்த கிரகங்களும், சேர்ந்து, இடி, மின்னல், கனத்த மழை மற்றும் புயல், பூகம்பம் இவற்றை உண்டாக்குவர். இது, மார்ச் 22 அல்லது 27-ல் நடக்கக்கூடும். சனி, செவ்வாய் சேர்க்கை எப்போதும் தீமை தருவதுதான். அதிலும், இந்த இரு கிரகங்களும், சதயம் எனும் ராகு நட்சத் திர காலில் செல்லும் போது விபரீதத்துக்கு அளவே இல்லாமல் போய்விடும். சந்திரன்- கும்பம், மீனத்தில் செல்லும்போதும் பாதிப்பு ஏற்படும். மேலும் ஒரு கிரகண நிலையும் ஏற்படும். எனவே 2024 மார்ச், ஏப்ரல் சற்று கவனமாக இருக்கவேண்டிய மாதமாகும்.

rain

2024- சித்திரை- ஏப்ரல் 14 முதல் மே 13 வரை

இந்த மாதம் சித்திரை 3, 12 வரை, ஏப்ரல் 16 முதல் 25 வரை உள்ள நாட்கள் மழை வரும் காலமாகும். இதன்படி, நீர் ராசியான மீனத்தில் ராகு அமர்ந்துள்ளார். அவர் சாரம் வாங்கிய புதன், நீசபங்கமாகி, நீர் ராசியில் உள்ளார். கூடவே, நீர் கிரகமான சுக்கிரனும் உள்ளார். இவர்கள் கூடவே, நெருப்பு கிரகம் செவ்வாயும் இருக்கிறார். ஒரு நீர் ராசியில், ஒரு நீர் கிரகம், சுக்கிரன் உச்சமாகி அமரும் போது, கண்டிப்பாக மழை பாதிப்பு ஏற்படும். ஏப்ரல் 25-ஆம் தேதியில், சுக்கிரன் மேஷ ராசிக்கு நகன்று அமர்வார். அப்போது மழை நின்றுவிடும். இந்த ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள், கடலில் வேறுபல மாற்றங்களும் ஏற்படும். ஏனெனில் ராகு+ சுக்கிரன்+புதன்+ செவ்வாய் இத்தனை கிரகங்களும், மீன ராசியில் சேர்ந்து இருக்கும்போது, கடல் நிகழ்வுகள் வேறுபடுவது வியப்பில்லை. 2024 வைகாசி மாதம், 1லிலிருந்து 31-ஆம் தேதி வரை, கடல் ராசியான மீனத்தில் ராகுவும், செவ்வா யும் இணைந்து இருப்பார்கள். இதிலும் குறிப்பாக, செவ்வாய் மே 14 முதல் மே 18 வரை ரேவதியில் 1-ஆம் பாதத்தில் சஞ்சாரம். அதே நேரத்தில் ராகுவும் ரேவதி 1-ஆம் பாதத்தில் செல்வார். இரு கிரகங்களும், ரேவதி 1-ஆம் பாதம் புதன் சாரம் கொள்வர். எனவே இந்த நாட்களில் கடல் மாறுபடக்கூடும்.

2023- ஆடி- ஜூலை, ஆகஸ்ட் மாதத்தின் கிரக நிலை மீன ராசி எனும் நீர் ராசியில் ராகு செல்ல இன்னொரு நீர் ராசியான கடகத்தில், சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் சஞ்சரிப்பர். இது ஜூலை 31 வரை சுக்கிரன் நீர் ராசியான கடகத்தில் இருப்பார். சுக்கிரன், கடகத்தில் இருக்கும் போது, சந்திரனும் கடகத்தில் செல்லும் காலம் மழை பெய்யக்கூடும்.

2024 ஐப்பசி மாதம், அக்டோபர், நவம்ப ரில் சுக்கிரன், நீர் ராசியில், விருச்சிகத்தில் சஞ்சரிக்கும்போது சந்திரன், விருச்சிகத்தில் கடக்கும்போது மழை தருவார்.

சுக்கிரன் அக்டோபர் 14 முதல் நவம்பர் 8 வரை விருச்சிக சஞ்சாரம். இதில் நவம்பர் 3, 4, 5 வரை சந்திரன். விருச்சிக சஞ்சாரம் செல் வார். ஒரு நீர் ராசியில், இரு நீர் கிரகங்கள் செல்லும் போது, மழை பொழிவதில் தடை ஏதும் இல்லை. மேலும் ராகு உத்திரட்டாதி நட்சத் திரம் கொள்வார். உத்திரட்டாதி என்பது சனி சாரம் சாரநாதர் சனியும் இந்த விருச்சிகத்தை நோக்குவதால், மழை பொழிய வாய்ப்புண்டு.

rain

2025- தை மாதம்- ஜனவரி, பிப்ரவரி

இந்த மாதம் நீர் ராசியில் அமர்ந்த ராகு, பூரட்டாதி எனும் குரு சாரம் பெறுகிறார்.

சாரநாதர் குரு, வக்ரகதியில் செல்கிறார். கூடவே சுக்கிரனும் செல்கிறார். கடகம் எனும் நீர் ராசியில், நெருப்பு கிரகம் செவ்வாய் வக்ரகதியில் அமர்ந்துள்ளார். எனவே சந்திரன் மீனம் அல்லது கடகத்தில் செல்லும்போது, ஒருவித விபரீதமான மழையைக் காணலாம்.

2025- பங்குனி- மார்ச், ஏப்ரல் மாதத்தின் கிரகநிலை இதில் மீன ராசியில் ராகுவுடன், வக்ர மடைந்த சுக்கிரனும், சூரியனும் அமர்ந்துள் ளனர். இதில் ஏப்ரல் 10-ஆம் தேதி புதனும் சேர்ந்துகொள்வார். எனவே இந்த கால கட்டத்தில் மழை குறைவாகவும், காற்று அதிகமாகவும் இருக்க வாய்ப்புண்டு. மேலும் கடல் சில மாற்றங்களையும் சந்திக்கக்கூடும்.

வாக்கியப்படி, 2025 சித்திரை 13, ஏப்ரல், 26 அன்று ராகுபகவான் தன் பின்னோக்கிய பயணத்தில், கும்ப ராசிக்கு நகர்வார். எனவே இந்த கால கட்டம்வரை மழை, புயல் என அவ்வப்போது அட்டென்ட்ன்ஸ் கொடுக்கும்.

ராகுபகவான் எந்த ராசியில் இருக்கி றாரோ, அந்த ராசியினை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடுவார். எனவே மீன ராசியில் ராகு இருக்கும்வரை கடல் சீற்றமும், மழைத் தாக்கமும் மாறி, மாறி வந்து கொண்டேதான் இருக்கும். மனிதர்கள் தான், தங்கள் வாழ்வியலை, இதற்கேற்ப, சீரமைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு தெருவையும், இளைஞர்களும், ஓய்வுபெற்றவர்களும் இணைந்து, சரிசெய்யுங்கள்.

வேறு வழியில்லை ராசா. ஏனெனில் ராகு is waiting.

கடல் சார்ந்த இன்னல் தீர ஸ்ரீவராஹ மூர்த் தியை வழிபடுதல் நலம்.

bala291223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe