வான சாஸ்திரம் (ஆள்ற்ழ்ர்ய்ர்ம்ஹ்) என்பது விண்ணில் ஒளிரும் நட்சத்திரக் கூட்டங்கள், கிரகங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானக்கலை எனலாம். ஜோதிட சாஸ்திரம் என்பதும் இந்த வான சாஸ்திரக்கலையுடன் தொடர்புடையது.
புராதனமும் பெருமையும் வாய்ந்த ஜோதிட சாஸ்திரக்கலையானது பல்வேறு நாடுகளிலும் பரவி பிரபலமடைந்துள்ளது என்பதே உண்மை. பல பல்கலைக்கழகங்களிலும் வான சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரக்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஜோதிட சாஸ்திரமானது சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் பராசர மகாமுனிவரால் தொகுக்கப்பட்டு உலகுக்கு அளிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து வந்த வராகமிகிரர் தொகுத் தளித்த சாஸ்திர நூல்களிலும் அடிப்படை கிரகங் களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களே கணக்கில் கருதப் பட்டன. இவருக்குப்பின் வந்த ஜோதிட மேதைகள் தான் நிழல் கிரகங்களான ராகு- கேது ஆகியவற்றையும் இணைத்து நவகிரகங்களாக விவரித்துள்ளனர்.
அடிப்படையான ஏழு கிரகங்களும் ராசி மண்டல வீடுகளை நேர்மறையாக- பிரதட்சிணமாக (ஈப்ர்ஸ்ரீந்ஜ்ண்ள்ங்) சுற்றிவரும். ஆனால் ராகு + கேது கிரகங்கள் எதிர்மறையாக- அப்பிரதட்சணமாக (ஆய்ற்ண் ஈப்ர்ஸ்ரீந்ஜ்ண்ள்ங்) சுற்றிவருகின்றன.
ராகு- கேது கிரகங்கள் ஒரு ராசி மண்டல வீட்டில் ஒன்றரை வருட காலம் சஞ்சரித்த பின் அடுத்த ராசி மண்டல வீட்டிற்குச் செல்லும். ராகு- கேது கிரகங்கள் எப்போதும் ஒன்றுக் கொன்று சப்தமத்தில்- அதாவது ஏழாம் வீட்டில் 180 டிகிரி தூரத்தில் அமைந்திருக்கும். மற்ற ஏழு கிரகங்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த வீடு என்று அமையப்பெறும்.
ஆனால் ராகு- கேது கிரகங்களுக்கு இப்படி சொந்த ஆட்சி வீடு என்னும் அமைப்பு கிடையாது. எனினும் தாம் இருக்கும் ராசி மண்டல வீடு, சேரும் கிரகம் மற்றும் பார்க்கும் கிரகம் ஆகியவற்றைப் பொருத்துப் பலன்களை அளிக்கும். மேலும் ராகு- கேதுவுக்கு மற்ற கிரகங் களுக்கு இருப்பதுபோல உச்ச வீடு மற்றும் நீச வீடு என்ற நிலைப்பாட்டில் அபிப்ராயப் பேதங்கள் உள்ளன. சில சாஸ்திர நூல் களின்படி ராகு- கேது விருச்சிக வீட்டில் உச்சம் என்றும், ரிஷப வீட்டில் நீசம் என்றும் கூறப்படுகிறது. வேறு நூல்களின்படி ராகு ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீசம் என்றும்; கேது கிரகம் விருச்சிகத்தில் உச்சம்,
ரிஷபத்தில் நீசம் என்றும் கூறப்படுகிறது. சூரியனுக்கு அருகில் (10 டிகிரி தூரத் திற்குள்) வரும் மற்ற கிரகங்கள் தங்கள் சக்தியை இழந்து அஸ்தங்கம் என்னும் நிலைப்பாட்டை அடையும். ஆனால் ராகு- கேது கிரகங்களுக்கு அஸ்தங்கம் கிடை யாது. சூரிய சக்தியையே மிஞ்சிவிடுமென்று கருதலாம். இதுவே கிரகண தோஷம் என்ற அமைப்பாகும்.
ராகு- கேதுவுக்கு சூரியனும் சந்திரனும் பகைமை நிலை என்றும்; சுக்கிரன், சனி நட்பு நிலை என்றும்; மற்ற கிரகங்கள் சமம் என்ற நிலைப்பாடும் உள்ளதாகக் கருதப்படுகிறது.
இதுவரை ராகு- கேது கிரகங்களைப் பற்றிய பொதுவான கருத்துகளைக் கண்டோம். இனி தனி மனிதனுக்கு இந்த கிரகங்களால் உண்டாகும் பலன் களைப் பற்றிப் பார்ப்போம்.
கோட்சார அமைப்பின்படி ஒருவரது ஜென்ம ராசியிலிருந்து ராகு இருக்கும் ராசி வீடுவரை எண்ணி,
அந்த எண்ணிக்கை 3, 6, 11 என்று அமைந்தால், ராகு தசை, ராகு புக்திக் காலங்களில் நல்லது நடக்குமென்று எதிர்பார்க்கலாம். மற்ற வீடுகளில்-
அதாவது 1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12 ஆகிய வீடுகளில் அமைந்தால் தீமையான பலன்களே அதிகம் எதிர்பார்க்கலாம். அதேசமயம் இந்த பாதிப்பு வீடுகளில் அமையும் ராகு கிரகத் திற்கு சுபகிரகங்களின் பார்வை இருந் தால் கெடுதல்கள் குறைவாகிவிடும்.
ராகு கிரகத்துடன் சுபகிரகங்கள் பத்து டிகிரிக்குமேல் அமைந்தால் நல்ல பலன்கள் என்றும், அசுபகிரகங்கள் மற்றும் சுபகிரகங்கள் பத்து டிகிரிக்குள் இருந்தால் கெட்ட பலன்கள் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.
ராகு- கேது கிரகங்கள் ஒருவரது ஜென்ம லக்ன வீட்டில் அல்லது ஏழு, எட்டாம் வீட்டில் அமைவது தோஷத்தைத் தரும். அதேபோல ஐந்தாம் வீட்டில் இருந்து, சுபகிரகப் பார்வையும் இல்லாதிருந்தால் புத்திர தோஷம் எனப்படும். மேலும், ஒருவரது ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னம் உட்பட மற்ற ஏழு கிரகங்களும் ராகு- கேதுக்களுக்கிடையே அமைந் திருப்பது காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
மேற்கூறிய தோஷ அமைப்பு பெற்றவர்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் உரிய பரிகார முறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ராகு- கேது திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல்.
துர்க்கை சந்நிதியில் நெய் தீபமேற்றி வணங்கிவருதல்.
அரச மரத்தை வலம்வந்து வணங்குதல்.
வெள்ளியில் மோதிரம் செய்து கோமேதகக்கல் பதித்து அணிதல்.
இவைதவிர, ராகு கிரக எந்திர வடிவத்தினை வெள்ளி யில் செய்து மார்பில் அணிந்துகொள்ளலாம். இவற்றை முறையாகப் பின்பற்றிவந்தால், தோஷங்கள் விலகி நன்மைகள் வந்தடையும். இந்த ராகு எந்திரம் அதிர்ஷ்டங் களை அள்ளித்தருமென்பது பலரது அனுபவம்.
செல்: 74485 89113