Advertisment

ராகு குரிகார பூஜா விதி! -டி. ஜெயந்தி

/idhalgal/balajothidam/rahu-krishna-pooja-fate

ராகு என்றதும் ஒருவித அச்சம் ஏற்படு வது இயற்கை. வயதானவர்கள் சிலர் "ராகு என்ற பெயரே தோஷம்' என்றும் சொல்வார்கள்.

Advertisment

இராவண குணம் கொண்ட ராகு ரா- என்றால் இராவணன் என்றும், கு- என்றால் குணம் என்றும் அனுபவத்தில் கண்டு இட்ட பெயரே ராகு என்பர். தீய செயல்களை உடனே செய்விக்கும் குணத்தை தான் இப்படிச் சொல்கிறோம்.

ராகு ஒரு நிழல் கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே. சூரியன், சந்திரன் தன் சுற்றுப் பாதையில் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் இரு வெட்டுப் புள்ளிகள் உள்ளன. வடக்குப் புள்ளி ராகு; தெற்குப்புள்ளி கேது ஆகும். இதனால் ராகு- கேதுவுக்கு சொந்த வீடுகள் இல்லை.

ராகு எந்த கிரகத்துடன் சேருகிறதோ அந்த கிரகத்தின் பலனைத் தானே தன் இயல்பில் கொடுக்கும். இதனால்தான் சில விபரீதங்களை ஜாதகர் சந்திக்க நேரிடுகிறது.

Advertisment

குறுகியகால போகம், அலிலித்தன்மை அடை

ராகு என்றதும் ஒருவித அச்சம் ஏற்படு வது இயற்கை. வயதானவர்கள் சிலர் "ராகு என்ற பெயரே தோஷம்' என்றும் சொல்வார்கள்.

Advertisment

இராவண குணம் கொண்ட ராகு ரா- என்றால் இராவணன் என்றும், கு- என்றால் குணம் என்றும் அனுபவத்தில் கண்டு இட்ட பெயரே ராகு என்பர். தீய செயல்களை உடனே செய்விக்கும் குணத்தை தான் இப்படிச் சொல்கிறோம்.

ராகு ஒரு நிழல் கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே. சூரியன், சந்திரன் தன் சுற்றுப் பாதையில் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் இரு வெட்டுப் புள்ளிகள் உள்ளன. வடக்குப் புள்ளி ராகு; தெற்குப்புள்ளி கேது ஆகும். இதனால் ராகு- கேதுவுக்கு சொந்த வீடுகள் இல்லை.

ராகு எந்த கிரகத்துடன் சேருகிறதோ அந்த கிரகத்தின் பலனைத் தானே தன் இயல்பில் கொடுக்கும். இதனால்தான் சில விபரீதங்களை ஜாதகர் சந்திக்க நேரிடுகிறது.

Advertisment

குறுகியகால போகம், அலிலித்தன்மை அடைதல், மது, மாது, வதந்தி, முறை யற்ற நண்பர்கள், பொய், எலக்ட்ரானிக்ஸ், மாந்திரீகம், எல்லாவிதமான கண்டங்கள்- பயங்கள், வட்டி கட்டுவது, வட்டி வாங்குவது, அடகுவைப்பது- அடகு பிடிப்பது, எதிலும் புகழ்ச்சியைத் தேடுதல், அதிக போக உணர்வு, தற்புகழ்ச்சி, தற்கொலை முயற்சி கள், கர்ப்பம் கலைத்தல், சூதாட்டம், களவு போன்றவற்றில் ஆர்வம், வரவுக்கு மீறிய செலவு, லாப- நஷ்டம், ஆராய்ச்சி விஞ்ஞானி, கலைஞர்கள், கெட்ட கனவு போன்றவை ராகுவின் காரகத்துவங்களாகக் கொள்ளப் படுகின்றன.

ராகுவின் தன்மைகள்

ராகு என்றால் காற்று ராசி எனப் பொருள் கொள்ளலாம். மேலும் ராகு நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் போன்றவையும் காற்று ராசியில்தான் வருகின்றன.

raghu

நெருப்பு, நிலம், காற்று, நீர் என ஒன்றன் பின் ஒன்றாக மேஷம்முதல் மீனம்வரையிலான 12 ராசிக்குள் இப்படியாக 27 நட்சத் திரங்களும் இந்த நான்கு பிரிவுக்குள் வந்து விடும். பிரிவுக்கு ஏற்றாற்போல் அந்த நட்சத்திரம் செயல்படத் தொடங்கும். இப்படியாகப் பார்க்கும்போது ராகு நட்சத்திரங்கள் அனைத்தும் காற்று ராசியிலேயே வருகின்றன. இதனால் இந்த நட்சத்திரங்கள், ராகு காற்றின் குணத்தைப் பெறுகின்றன.

அதாவது காற்றைப்போல் செயல்படுவார்கள். எப்படியெனில் காற்றை நாம் கையால் பிடிக்கமுடியுமா? காற்று ஓரிடத்தில் நிற்குமா? நாம் காற்றைப் பார்க்கமுடியுமா? காற்று நாம் சொன்னதைக் கேட்குமா?

இப்படியாக ஒரு ஜாதகருக்கு ராகு தசை அல்லது புத்தி வரும்போது அந்த ஜாதகரைப் பிடிக்கமுடியாது. ஓரிடத்தில் நிற்கமாட்டார், சொல்வதைக் கேட்கமாட்டார். வேலையை அடிக்கடி மாற்றுவார். தன் அறிவில் எது தோன்றுகிறதோ, அதை அப்படியே தன் மனதிடம் கேட்காமல் செய்வார். தைரியமாகச் செயல்படுவார். வெளிநாட்டிற்குப் போகும் வாய்ப்புகள் வரும். அந்நிய மொழி, அந்நிய ருக்கு உதவுதல் என ஜாதகர் செயல்படுவார்.

ராகுவின் பரிகார முறைகள்

பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமான காளஹஸ்தியில் ராகு- கேது தோஷம் நீங்க சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது. இதில் ராகு காலத்தில் கலந்துகொண்டால் தோஷம் நீங்கும்.

 ராகுவின் அதிதேவதை பத்ரகாளி எனப்ப டும் துர்க்கையாகும். ராகு காலத்தில் துர்க் கைக்கு நறுமண மலர்களாலும், தீப நைவேத்யத் துடனும் வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.

 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் மஞ்சள் பூக்களான தங்க அரளி, சாமந்தி ஆகியவற்றை அர்ச்சனைக்கும், மஞ்சள்நிறப் பழங்களை நைவேத்யமாகவும் படைத்து துர்க்கையைப் பூஜிக்கவேண்டும்.

 எலுமிச்சை மாலையை ராகு காலத்தில் துர்க்கைக்கு அணிவிப்பது சிறப்பான தாகும். ராகுகால பூஜையின்போது துர்க்காஷ்டகம், ஸ்ரீலலிதா நவரத்தினமாலை, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமப் பாராயணம் செய்து அம்மனின் அருளைப் பெறலாம்.

 ராகுவுடன் சூரியன் சேர்ந்தால் பித்ரு தோஷமாகக் கருதுகின்றனர். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்காமல் ஜாதகருக்கு அனைத்து காரியங்களும் தடைப்படுகின்றன. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்துகொள்ள நம் முன்னோர் களுக்கு தர்ப்பணம், திதி செய்வது மிகவும் அவசியம்.

 ராகுவுடன் சந்திரன் இருந்தால் தோஷமாகும். திங்களன்று ராகு காலத்தில் கருமாரியைப் பூஜிக்கவேண்டும்.

 ராகுவுடன் செவ்வாய் இருந்தால் துர்க்கையையும்; ராகுவுடன் சனி இருந்தால் பைரவரையும்; ராகுவுடன் புதன் இணைந்தால் வராக மூர்த்தியையும்; ராகுவுடன் சுக்கிரன் இணைந்தால் காமாட்சியையும்; ராகுவுடன் குரு இணைந்தால் ருத்திரனையும் பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு முறையாக வழிபாடு செய்து வந்தால் ராகுவால் ஏற்படும் தீமைகள் நம் வாழ்க்கையில் குறுக்கிடாமல், அனைத்து பாக்கியங்களையும் அடையலாம்.

செல்: 98414 12523

bala281218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe