கோட்சாரப்படி தற்போது ராகு- கேதுக்கள், வாக்கியப்படி 1-9-2020 அன்று பெயர்ச்சி அடைந்தனர்.
திருக்கணிதப்படி 25-9-2020 அன்று பெயர்ச்சி. ராகு ரிஷபத்துக்கும், கேது விருச்சிகத்திற்கும் மாறி சஞ்சாரம் செய்கின்றனர்.
ராகு- கேதுக்களுக்கு சொந்த வீடு கிடையாது. அவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, அந்த ஒன்றரை வருடமும் பலன்களைச் செய்வார்கள்.
ராகு தான் இருக்கும் வீட்டின் பலனைப் பன்மடங்கு பெருக்கிப் பின்னர் கெடுத்துவிடுவார். கேது பலனைக் கெடுத்துவிட்டுப் பின் நற்பலனைக் கொடுப்பார்.
மகாவிஷ்ணு ராகு- கேதுவை உருவாக்கியதே மக்களின் பூர்வஜென்ம பாவக்கணக்கை சீராக்குவதற் கென்றே அறியப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் இருந்தால், அவை லக்னத்துக்கு நல்ல பாவங்களாக இருந்தால் அது பற்றிய நிகழ்வுகள் அதிகரிக்கும். கோட்சாரப் பலன் என்பது சந்திரனைக் கொண்டு ராசியை வைத்துக் கூறப்படுவது. இங்கே 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகள் நிகழவிருக்கும் ராகு- கேது பலன்கள் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
1. அஸ்வினி
மருத்துவ நாட்டமுடைய இவர்களுக்குப் பணவரவு அதிகரிக்கும். அது குறுக்குவழிப் பணமாகவும் இருக்கும். இதுவரையில் உங்கள்மீது சுமத்தப்பட்ட களங்கம் மறையும். ஒரு அபூர்வ சாதுவை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். திருமணம் நிச்சயமாகும். வியாபாரத் தடைகள் நீங்கி வளர்ச்சி பெறும். மனை சிக்கல் தீரும். பூமியை விற்று வந்த பணத்தில் வீடு வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் வழக்குகள் நீர்த்துப்போகும். ஏதோ ஒரு எதிர்பாராத நன்மை கண்டிப்பாகக் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வாரிசுகள் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். தந்தையின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். உங்களின் தடாலடி பேச்சுகள் பிறரை வசீகரித்துவிடும். மலைமீது அமர்ந்த விநாயகரை வணங்கவும். சந்நியாசிகளுக்கு உணவளிக்கவும்.
2. பரணி
இனிய சொல்லும் உணவு நாட்டமும் உடைய இவர்களுக்கு இப்போது வாக்கில் துருக்கி அதிகரிக் கும். பேசிப்பேசியே எதிரிகளைக் கலங்கடித்து விடுவார்கள். திருமணம் நடக்கும். குடும்ப ஒற்றுமையை கவனித்துக் காப்பாற்ற வேண்டும். பூர்வீக சொத்துப் பிரிவினைமூலம் வீடு கிடைக்கும். பிற பெண்களின் தலையீட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். பெண் அரசியல்வாதிகள் சற்று போராட்டத்திற்குப்பின் பதவி கிடைக்கப் பெறுவர். யூரினரி இன்ஃபெக்ஷன் வர வாய்ப்புள்ளது. இளைய சகோதரிக்குத் திருமணம் நடக்கும். சிலருக்கு கையூட்டு கொடுத்தபின் வேலை கிடைக்கும். கல்வி விஷயம் சிறப்பு தரும். திருப்பதி பெருமாளையும் தாயாரையும் வணங்கவும். வயதான பெண்களுக்கு உதவுங்கள்.
3. கார்த்திகை
சிம்ம கர்ஜனையும் காட்டு அரசன் போன்ற கம்பீரமும் உடைய இவர்களுக்கு பழைய வழக்குகள் தீர்க்கப்படும். நல்ல பதவியில் அமர்வர். வீடு, மனை பற்றிய வழக்குகளும் நல்ல தீர்வுக்கு வரும். உங்கள் வாரிசுமீதிருந்த அவமானம் நீங்கிவிடும் தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருந்தால் அது மறைந்து சேர்ந்துவாழ முடியும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை. வழக்கின் தீர்ப்புக் குப்பின் பதவி உயர்வும், அதன்மூலம் மிகுந்த பணவரவும் கிடைக்கும். சிலரின் வாரிசு களுக்கு வெளிநாடு சம்பந்தமான வேலை கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரக் குழந்தை களின் தந்தைக்கு அரசு சார்ந்த பதவி கிடைக் கும். கால் வலிக்கு ஏற்புடைய மருந்து கிடைக் கும். திருவண்ணாமலை சென்று வழிபடவும். தந்தை வயதில் உள்ளவருக்கு உதவவும்.
4. ரோகிணி
அழகும் தாயுள்ளமும் இணைந்தவர்கள். இவர்களில் பெண்களுக்கு, ஒன்று தாயாகும் பாக்கியம் கிடைக்கும்; அல்லது மாமியாராகும் வாய்ப்புண்டு. தாயாகும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும், மாமியாராகும்போது கலப்புமண நிலையும் ஏற்படலாம். யோசனை பலமாகவும் செயல்பாடு மந்தமாகவும் இருக்கும். தொழில் மேன்மையின்போது பங்குதாரர்களின் குறுக்கீடும் தொல்லையும் வரும். ரோகிணி நட்சத்திரப் பெண்கள் அல்லது அவர்களது கணவர்கள் பெரிய அதிகார அரசு, அரசியல் பதவியில் அமரும் வாய்ப்புண்டு. எண்ணம் பெரிய அளவில் நிறைவேறும்போது உங்கள் யோசனைகளால் பின்னடைவு வராமல் கவனமாக இருக்கவேண்டும். ரோகிணி நட்சத்திரக் குழந்தைகள் எதிர்மறை சிந்தனையால் கல்வியில் உயர்வு பெறுவர். தொடை, பாதத்திலுள்ள பிரச்சினைகள் தீரும். கலையுலகினருக்கு எதிர்பாராத நன்மை யுண்டு. சாந்தமான, இஷ்டமான அம்பாளை வணங்கவும். மூத்த சகோதரி வயதிலுள்ளவர் களுக்கு உதவவும்.
5. மிருகசீரிடம்
புத்திசாலித்தனமான வீரமும் அழகான ஆற்றலும் உடைய இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் குடும்பத்துடன் இடம் மாறவேண்டிய சூழல் அடிக்கடி உண்டாகும். அதற்கு வியாபாரம், வேலை மாற்றம், திருமணம் என ஏதோ ஒரு காரணம் இருக்கும். இதனால் செலவு வளர்ந்துகொண்டே இருக்கும். வாழ்க்கைத்துணையின் சாமர்த் தியத்தால் சமாளித்துவிடலாம். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது உரசல் வரும். அரசியல்வாதிகளுக்கு சிறுசிறு தடைகளை சரிசெய்தபிறகு பதவி கிடைக்கும். கலைத் துறையினருக்கு வாய்ப்பு வந்தாலும் பணவரவு சுமாராகத்தான் இருக்கும். வாழ்க்கைத் துணை பெருமுயற்சிக்குப் பின் வேலை கிடைக் கப் பெறுவார். மூல நோய்த் தொல்லை இருப்பவர்களுக்கு குணமாக வாய்ப்புண்டு. நரசிம்மரை வணங்கவும். சிறு குழந்தை களுக்கு உதவவும்.
6. திருவாதிரை
குறைந்த எதிரிகளையும் நிறைந்த ஆற்றலையும் உடைய இவர்களுக்கு இதுவரையில் வேலையில் நிலவிய தடைகள் அகலும். வெளிநாடு செல்லும் வாய்ப்பிருப்பதால் கடன் அடையும். நோய் அகலும். அலைச்சல் அதிகரிக்கும். சில அரசியல்வாதிகள் அரசியலைவிட்டு விலகுவார்கள். அல்லது புதிய இடம்சென்று தேர்தலை சந்திப்பர். தம்பதிகளுக்குள் வேலை விஷயமாக பிரிவுண்டு. சிலர் தங்களுக்கு அல்லது தங்கள் இளைய சகோதரர்களின் பதவி உயர்வுக்கு லஞ்சம் கொடுக்க நேரலாம். எதிர்பாராத நன்மைகளும் நடக்கும்; தீமைகளும் நடக்கும். வீடு மாறுதல் உண்டு. திருவாதிரை நட்சத் திரக் குழந்தைகள் கல்வி நிலையம் மாறுவர். கலைத்துறையினர் வாய்ப்பும் வசதியும் வருமானமும் அதிகம் பெறுவர். அருகிலுள்ள காளியை வணங்கவும். குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவவும்.
7. புனர்பூசம்
நேர்மையான குணமும் புத்திசாலித் தனமும் உடைய இவர்களுக்கு தொழில், வேலையில் ஏற்பட்ட விரும்பத்தகாத இட மாற்றம் மாறும்; தவிர்க்கப்படும். அரசியல் வாதிகளுக்கு வெற்றிக் குறைவும், பண வரவு- செலவும் அதிகமாக இருக்கும். அரசு தொந்தரவு உண்டு. தம்பதிகளுக்குள் ஒருவருக்கு நோய் வந்து நீங்கும். வாடகை வீட்டுப் பிரச்சினை விலகும். வீடு, மனை, வயல் பற்றிய வழக்குகள் நல்லவிதமாக முடியும். சிலர் கடன் வாங்கி மனை வாங்குவர். வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டவர் களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். கலைத் துறையினர் அலைச்சலால் அவதிப்படுவர். புனர்பூச நட்சத்திரக் குழந்தைகளுக்கு படிப்பு பிரச்சினை நீங்கும். திருச்செந்தூர் முருகனை வணங்கவும். அந்தணர்களுக்கு உதவலாம்.
8. பூசம்
அமைதியான குணமும் பூஜை செய்வதில் பெருவிருப்பமும் உடைய இவர்களுக்கு எதிர்பாராத நன்மை கள் கிடைக்கும். பரம்பரை அரசியல் வாதிகள் பயனடைவர். அரசு சார்ந்த கையூட்டுப் பணம் கொட்டும். பூச நட்சத் திரக் குழந்தைகளின் தந்தை நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார். மறுமணத்திற்குக் காத்திருப்போர் நல்ல வரன் கிடைக்கப் பெறுவர். பொதுஜனத் தொடர்பாளர்கள் அலைச்சல் குறைந்து நிம்மதி பெறுவர். கலைத் துறையினர் வேற்றுமொழி சார்ந்த இனங்களில் லாபம் பெறுவர். தொப்புளைச் சுற்றி வலி வர வாய்ப்புண்டு. அருகிலுள்ள துர்க்கையை வணங்கவும். ராகு- கேதுவுக்கு அருகில் நல்லெண்ணெய் தீபமேற்றவும். வேலைசெய்யும் வயதான பெண்களுக்கு உணவளிக்கவும்.
9. ஆயில்யம்
பயணங்களில் ஆசையும் சேவை மனப் பான்மையும் உடைய இவர்களுக்கு இப்போது இளைய சகோதரர்களால் நன்மையும் தீமையும் ஒருங்கே நடக்கும். அவர்கள் நன்மையென எண்ணிச் செய்வது உங்களுக்கு இடையூறு தரும். இந்த நட்சத்திரக் குழந்தை களுக்கு தங்கை கிடைப்பாள். கைபேசி பழுதாகி புதிய கைபேசி வாங்குவர். இவர்களின் சில திட்டங்கள் நல்ல பலன் தரும். ஆன்மிக சிந்தனை மிகும். வாக்குவண்மை பலப்படுவதால், அதன்மூலம் நல்ல ஏற்றம் பெறுவார்கள். தம்பதிகளுக்குள் ஊடலும் கூடலும் மாறிமாறி ஏற்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளை வணங்கவும். சிறு குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுக்கவும்.
10. மகம்
வீரமும் விவேகமுடைய இவர்களுக்கு பெற்றோரின் வீடு சம்பந்தமாக சிறுசிறு பிரச்சினைகள் வரும். தொழில் விரிவடை யும். அரசுப் பதவியும் கௌரவமும் கிடைக் கும். ஆரோக்கியம் சம்பந்தமான முயற்சிகளை மேற் கொள்வார்கள். எதிரிகள் தொல்லை தீரும். வாழ்க்கைத் துணை தொழிலை மாற்றுவார். மக நட்சத்திரக் குழந்தை கள் தங்களின் திறமை யால் கல்வித் தடை களைக் கடப்பர். கலைத்துறையினர் தங்களது யோசனையால், நழுவிப்போகும் வாய்ப்பை இறுகப் பற்றிக் கொள்வர். இவர்களுக்குக் கிடைக்கப் போகும் பெரும் பணவரவு சிலசமயம் எதிரிகளின் சதியால் சற்று குறையும். அரசியல்வாதிகள் மிகவும் கவனமாக இருந்தால் வெற்றி பெறலாம். மார்பில் வாயு சம்பந்தமாக பிடிப்பு ஏற்படலாம். திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கவும். அரசு கடைநிலை ஊழியர்களுக்கு உதவவும்.
11. பூரம்
கம்பீரமும் அழகும் ஒருங்கே இணைந்த இவர்கள் அரசில், அரசியலில் பெரும் பதவியைப் பிடித்துவிடுவர். ஏன்... முதலமைச்சர், பிற துறை அமைச்சராகவும் வாய்ப்புண்டு. வேலையில், தொழிலில் அலைச்சல் இருக்கும். முதலீடு செய்வர். பூர நட்சத்திரப் பெண்கள் மாறுதலுடன் கூடிய பெரும்பதவி பெறுவர். இந்த நட்சத்திரக் குழந்தைகளின் தந்தை அரசு மற்றும் பயணம் சார்ந்த வேலை பெறுவார். வீட்டுக்கடன் அடைபடும். சிலருக்கு சட்டத்திற்குப் புறம் பான பணவரவுண்டு. கலைத்துறையில் சிலருக்கு வேறுபாடான நடிப்பு வாய்ப்பு கிடைத்து பெரும்புகழ் அடைவர். தகவல் தொடர்புத் துறையினர் நல்ல வளர்ச்சி பெறுவர். முதுகில் வலி, பிடிப்பு ஏற்படலாம். ஆண்டாளை வழிபடுவது நன்று. திருமண மாகாத பெண்களுக்கு தாம்பூலம் அளிக்கவும்.
12. உத்திரம்
கம்பீரமான அறிவும் தீர்க்கமும் உடைய இவர்களுக்கு, இவர்களைப் பற்றிய வதந்தி, பொய்ச் செய்தி போன்றவை மறையும். இதனால் மனதளவில் தெளிவு பெறுவர். பிற மத வழிபாட்டில் ஈர்ப்பு வரும். மூத்த சகோதரிக்குத் திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலரின் தந்தை வேறொரு திருமணம் செய்து பிரிந்து செல்வார். அல்லது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வார். சிலரது வீடு விற்கப்படும். இவர்களுக்கும் வாரிசுகளுக்குமிடையே இருந்த சொத்துப் பிரச்சினை நீங்கி மன வேற்றுமை மறையும். இவர்கள் சார்ந்த செய்தித்துறை பிரச்சினை தீர்வதால், அதில் உறுதியான மனதோடு வேலை செய்வார்கள். அரசியல்வாதிகள் தங்களின் உண்மையான மத நம்பிக்கைக்கு மாறாக நடந்துகொள்வர். சங்கரநாராயணர் வழிபாடு நன்று. அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவவும்.
13. ஹஸ்தம்
விரைவான சிந்தனையும் ஞாபகசக்தியும் உடைய இவர்களுக்கு புரட்சிகரமான புதுவித சிந்தனை அதிகமாகும். கலையுலகில் பாட்டெழுதும் கவிஞர்கள் புகழ் பெறுவர். சிந்தனையின் வேகம் தொழில் விருத்தியைத் தரும். இதுவரையில் இருந்துவந்த மறதி குறையும். தாயின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். தந்தையின் வேண்டாத விருப்பங்களை நிறைவேற்றவேண்டிய சூழலும் வரும். சிலரது தந்தை மதுவுக்கு அதிகம் செலவழிப்பார். திரவப் பொருட்கள் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். பழைய செல்போன், டிவி போன்றவற்றை மாற்றி புதிதாக வாங்குவார்கள். அரசியல் வாதிகள் குறுக்குவழியில் செல்வாக்கு பெறுவர். கலைத்துறையினருக்கு பணம், புகழ் கிடைக்கும். கடல், நதியோரமுள்ள அம்மனை வழிபடவும். கைத்தொழில் புரிவோருக்கு முடிந்த உதவி செய்யவும்.
14. சித்திரை
அறிவும் அழகும் வீரமும் உடைய இவர்களில் சிலருக்கு சட்டத்திற்குப் புறம்பான தொழில், வேலைகள் நன்கு நடக்கும். குறுக்குவழியைக் கைக்கொண்ட அரசியல்வாதிகள் வெற்றி பெறுவர். வேலையில் சம்பளம் சற்று தடையுடன் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளோர் பேசும்போது தடுமாற்றம் அடைவர். வாழ்க்கைத் துணையின் நிலை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சிலரின் பிள்ளைகள் இவர்களின் சிரம தசையின்போது தாங்கிப் பிடிப்பர். பெண் களிடம் கவனமாகப் பழகுதல் வேண்டும். வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வணங்கவும். வசதியற்றவர்களின் திருமணத் திற்கு உதவவும்.
15. சுவாதி
மிகுந்த ரோஷமும் மாறுபாடான எண்ணமும் உடைய இவர்களுக்கு இருவிதப் பலன்கள் நடக்கக்கூடும். ஒன்று, பெண்களால் அவமானம், இல்லறப் பிரிவு, செல்வக் குறைவு போன்றவற்றால் அவதிப்படலாம். அல்லது இதுவரையில் இருந்து வந்த அவமானங்கள் அழியும். பிரிந்த மனைவி திரும்ப வந்து இல்லறம் இனிக்கும். வெளிநாட்டு ஆதரவோடு தொழில் மேன்மை பெறும். பணவசதி பெருகும். ஆக, நல்லது நடந்தால் மிக உச்சமாகவும், கெடுதல் நடந்தால் மிக மோசமானதாகவும் இருக்கும் அருகிலுள்ள சிவன் மற்றும் நடராஜரை வணங்கவும். கடனால் பெரும் துன்பம் அடைந்தவர்களுக்கு உதவவும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94449 61845