Advertisment

ராகு-கேது தோஷம் போக்கும் காளஹஸ்தி!

/idhalgal/balajothidam/rahu-ketu-dosha-male-elephant

ர்ப்ப தோஷத்தைப் பற்றியும், அதற் குரிய பரிகாரத்தைப் பற்றியும் இங்கு காணலாம். நவகிரகங்களில் சர்ப்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படும் ராகு- கேது பின்னோக்கிச் செல்லக்கூடிய கிரகங்களாகும். ராசி மண்டலத்தில் ராகு எங்கு அமைந்துள்ளாரோ அதற்கு 7-ஆவது வீட்டில் கேது அமைந்திருப்பார்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் ராகு- கேது ஆதிக்கம் சற்று அதிகப்படியாக இருந்தால் அவர்கள் வாழ்வில் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டு நல்லது நடக்க- அதாவது திருமணம், குழந்தைப்பேறு, உத்தியோக உயர்வு, தொழில் முன்னேற்றம் ஆகியவை ஏற்பட தாமதமாகிறது.

ff

ஒருவர் ஜாதகத்தில் ராகு- கேதுவின் பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமையப்பெற்றால் அதனை காலசர்ப்ப தோஷமென்றும், காலசர்ப்ப யோக மென்றும் கூறுகிறோம். சர்ப்ப தோஷத் தைப் பற்றி மூல நூல்களில் சரியான பதிவுகள் இல்லாவிட்டாலும், இடையில் வந்த ஜோதிடர்கள் காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகத்தைப் பற்றி பல்வேறு பதிவுகளை செய்துள்ளனர். காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்களுக்கு வாழ்வின் முற்பாதியில் தடைகள் ஏற

ர்ப்ப தோஷத்தைப் பற்றியும், அதற் குரிய பரிகாரத்தைப் பற்றியும் இங்கு காணலாம். நவகிரகங்களில் சர்ப்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படும் ராகு- கேது பின்னோக்கிச் செல்லக்கூடிய கிரகங்களாகும். ராசி மண்டலத்தில் ராகு எங்கு அமைந்துள்ளாரோ அதற்கு 7-ஆவது வீட்டில் கேது அமைந்திருப்பார்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் ராகு- கேது ஆதிக்கம் சற்று அதிகப்படியாக இருந்தால் அவர்கள் வாழ்வில் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டு நல்லது நடக்க- அதாவது திருமணம், குழந்தைப்பேறு, உத்தியோக உயர்வு, தொழில் முன்னேற்றம் ஆகியவை ஏற்பட தாமதமாகிறது.

ff

ஒருவர் ஜாதகத்தில் ராகு- கேதுவின் பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமையப்பெற்றால் அதனை காலசர்ப்ப தோஷமென்றும், காலசர்ப்ப யோக மென்றும் கூறுகிறோம். சர்ப்ப தோஷத் தைப் பற்றி மூல நூல்களில் சரியான பதிவுகள் இல்லாவிட்டாலும், இடையில் வந்த ஜோதிடர்கள் காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகத்தைப் பற்றி பல்வேறு பதிவுகளை செய்துள்ளனர். காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்களுக்கு வாழ்வின் முற்பாதியில் தடைகள் ஏற்படும். பிற்பாதி யில் காலசர்ப்ப தோஷமானது காலசர்ப்ப யோகமாக மாறி மிகப்பெரிய முன்னேற் றத்தை ஏற்படுத்துகிறது.

திருமணத்தைக் குறிக்கக்கூடிய 1, 7, 2, 8 ஆகிய ஸ்தானங்களில் ராகு- கேது அமையப் பெற்றால் திருமணத் தடைகள், இல்லற வாழ்வில் இடையூறுகள் ஏற்படுகிறது. குறிப்பாக திருமண வயது காலத்தில் ராகு- கேது தசை நடைபெற்றாலோ, திருமணத்திற்குப்பிறகு வரக்கூடிய காலங்களில் ராகு- கேது தசை, புக்தி நடைபெறும் காலங்களிலோ இல்லற வாழ்வில் ஒற்றுமைக் குறைவு ஏற்படுகிறது. அதுபோல குழந்தைப் பேற்றைக் குறிக்கக் கூடிய ஸ்தானமான 5-ல் ராகு- கேது அமையப்பெற்றால் குழந்தை பாக்கியம் தடைப்படுகிறது. அடுத்து தொழில் ஸ்தானத் தில் ராகு- கேது அமையப்பெற்றால், குறிப் பாக 10-ஆமதிபதி ராகு- கேது சேர்க்கை யுடன் இருந்தால் அவர்களுக்கு தொழில், உத்தியோக உயர்வுகள் தாமதப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தாய்- தந்தையரைக் குறிக்கக்கூடிய சந்திரனும் சூரியனும் ராகு- கேதுவுக்கு நெருக்கத்தில் இருந்தால் வாழ்வில் நிறைய இடையூறுகள் ஏற்படுகின்றன. சூரியன், சந்திரன், ராகு- கேது தொடர்புடையவர்கள் தாய்- தந்தையர்வகையில் பகை, உறவினர்கள் பகை போன்றவற்றினை சந்திக்கவேண்டி இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் பிறந்த ஊரைவிட வெளிமாநிலங்கள், வெளிநாடு களில் ஒரு பிரகாசமான வாழ்க்கையை அடையமுடிகிறது. அதுபோல உறவினர் களைவிட அந்நிய இன, அந்நிய மதத்தவரின் நெருக்கம் ஏற்படும். சிலர் அந்நிய இன நபர்களைத் திருமணம் செய்யக்கூடிய நிலை ஏற்படுகிறது.

Advertisment

rr

ராகு- கேது தோஷத்திற்குப் பரிகாரமாக உக்ர தெய்வங்களை வழிபடுவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் அம்மன் தலங்களில் அர்ச்சனை, அபிஷேகம் போன்றவற்றை செய்வது, பாம்புப் புற்றுக்குப் பால் விடுவது மிகவும் நல்லது. இதன்மூலமாக கெடுதிகள் குறையும். அடுத்து ராகு- கேது தோஷமுடையவர்கள், திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி எனப்படும் திருக் காளத்தி தலம் சென்றுவருவது கெடுதியைக் குறைத்து நன்மையைத் தருகிறது.

ஆந்திர மாநிலத்திலுள்ள காளஹஸ்தி தலத்திற்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷ பாதிப்புகள் விலகி வாழ்வில் நல்லவை நடக்கின்றன. காளஹஸ்தி செல்பவர்கள் பரிகாரத்தை முடித்துவிட்டு நேரடியாக தங்களது இல்லத் திற்கு வரவேண்டும். ஒருசிலர் திருப்பதியும் செல்வார்கள். அப்படி இரண்டு தலங்களுக் கும் செல்ல நினைப்பவர்கள் முத-ல் திருப்பதிக்குச் சென்றுவிட்டு அடுத்து காளஹஸ்தி செல்வது நல்லது.

காளத்திநாதருக்கு வழிபாடு செய்து வந்தால் திருமணத்தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். வாழ்விலுள்ள இடையூறு கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். காளஹஸ்தி ஆலயத்திலேயே சிறப்பு தரிசனம், சிறப்புப் பூஜைகள் உண்டு. ஆலயக் கட்டுப் பாட்டிலேயே சங்கல்ப பரிகாரங்கள் செய்கி றார்கள். அங்குசென்று முறைப்படி பணம் செலுத்தி பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக்கொண்டு ஆலயத்தில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம்.

குறிப்பாக பூஜைப் பொருட்களில் இரண்டு நாகங்கள், கருப்பு நிற, வண்ண வஸ்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்களைத் தருவார்கள். (வசதி படைத்தவர்கள் வெளியிலிருந்து வெள்ளி நாகங்கள்கூட வாங்கலாம்). இதனை வாங்கிக்கொண்டு ஆலயத்தில் பரிகாரத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று உங்களின் ஜென்ம நட்சத்திரம், ராசி போன்றவற்றினைக் கூறி மனதார பரிகார பூஜையில் கலந்துகொண்ட பின்பு புரோகிதற்கு உங்களால் முடிந்த தட்சணையைக் கொடுத்து, பிறகு ஆலயத்தில் சென்று இறைவனை வேண்டிவிட்டு, பூஜை செய்யப்பட்ட நாகங்களை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு வரலாம்.

இந்த தலத்தில் கற்பூர அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. அபிஷேகம் நடக்கின்றபொழுது அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து இந்தத் தலத்தில் பரிகார பூஜை செய்பவர்கள், அருகேயுள்ள தங்கும் விடுதி களில் பரிகாரம் செய்த அன்று தங்கிவிட்டு, மறுநாள் மீண்டும் ஆலயம் சென்று இறைவனை வணங்கிவிட்டு வீடு திரும்புவது மிகவும் நல்லது. உங்கள் வசதிக்கேற்ப ஒன்பது புளியோதரை, தயிர்சாதம் போன்றவற்றை வாங்கி அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மற்றும் பொருளுதவிகள் செய்வது மிகவும் நல்லது. திருக்காளத்தி செல்பவர்களுக்கு ராகு- கேது தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி நற்பலன் கிடைப் பதை அனுபவத்தில் காணமுடிகிறது.

bala230922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe