ஜூலை 8 2024 முதல் மார்ச் 16 2025 வரை
புதன்
பிறந்த ஜாதகத்தில் புதன் உத்திரட்டாதி யில் இருந்து, கோட்சார ராகு அதனைக் கடக்கும்போது, தாய்மாமன், மாமனார், மாமன் வழி உறவுகளுக்கு கண்டம் ஏற்படும். முறையற்ற சிந்தனை ஏற்பட்டு அதனால் அவதிப்படுவர். புத்தி மந்தம், கெட்ட பழக்க வழக்கம், கள்ளக்காதல்லி அதனால் அவப் பெயர், பிரச்சினைகள், புத்திசாலியின் அறிவை மங்கவைத்து முட்டாளாக்கும். கடைசி சகோதரருக்கு பாதிப்பு, மனஸ்தாபம் ஏற்படும். மொபைல் எண் அல்லது நெட் வொர்க், சிம் கார்ட் மாற்றுவர். பத்திரம், இன்சூரன்ஸ், வட்டி, பேங்க், ஏலச்சீட்டு போன்றவற்றில் பிரச்சினை, ஜாமின், சாட்சிக் கையெழுத்து போட்ட வகையில் தொந்தரவு ஆகியவற்றில் சங்கடம், கடன் பிரச்சினை, தந்திரம் தோல்வி தரும். உடல்நிலையைப் பொருத்தவரை நாக்கு, கை, தோள்பட்டை, கழுத்து, சிறு நரம்பு, விஷக்கடி, தோல் பிரச்சினை, காது, மூக்கு, தொண்டை, கைநடுக்கம் ஏற்படும். காலி இடத்தால் பிரச்சினை தோன்றும். வெளிநாட்டுப் பயணத்தில் தடை உண்டாகும். குடும்பச் சண்டை காரணமாக வீடு இருள் சூழ்ந்திருக்கும். கல்வியில் தடை, நண்பர்களால் பிரச்சினை உண்டாகும். விளம்பரத் துறையில் பாதிப்பு ஏற்படும். பத்திரிகைத் துறையில் பிரச்சினை உண்டாகும். தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு மாற்றம் ஏற்படும். புதன் தசை, புதன் புக்தி, ராகு- கேது புக்திகள் தொல்லையும், சுபத்தன்மை பெற்றால் திடீர் அதிஷ்டம், லாட்டரி புதையல் யோகத்தால் பணவரவும் கிடைக்கும். பூசம், அனுஷத்தில் புதன் இருந்தாலும் மேற்கண்ட பலன் ஓரளவு நடக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை புதன் ஹோரையில்

பரிகாரம்: புதன்கிழமை புதன் ஹோரையில் கருப்பு உளுந்து தானம் செய்வது, கருப்பு உளுந்தை பச்சைத் துணியில் எட்டு பொட்டலங்கட்டி, வாரத்திற்கு ஒன்றாக தலையணையில் வைத்து உறங்கி எட்டு வாரம் கழித்து ஆறு, கடலில் கலக்க கஷ்டம், தோஷம் நீங்கும்.புதன் ஸ்தலமான திருவெண்காடு சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்துகொள்வது நன்று. ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு கெடுபலனைக் குறைக்கும்.
சுக்கிரன்
சுக்கிரன் உத்திரட்டாதியில் நிற்க, கோட்சார ராகு கடக்கும் காலம் வாழ்க்கைத் துணைவரின் உடல்நிலை பாதிக்கப்படும். கண்டத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் கலகம், மனஸ்தாபம், பிரிவு ஏற்படும். சில பெண்கள் தவறான பாதைக்குச் செல்வர். தேவையற்ற உறவைத் தந்து, சுகம் கொடுத்துக் கெடுப்பார். கண் பாதிப்பு, கிட்னி ஸ்டோன், யூரின் இன்பெக்ஷன் போன்ற தொல்லையைத் தரும். சொகுசான ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவர். தேவையற்ற பயண அலைச்சல்கள் ஏற்படும். தலைவலி உண்டாகும். வீடு கட்டுதல் சொகுசு வாகனங்கள் வாங்குதல் போன்ற சுப விரயச் செலவுகள் ஏற்படும். மனைவி, முதல் குழந்தைக்கு சுபச் செலவு செய்ய நேரும். மனபிராந்தி ஏற்பட்டு தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவர். மூத்த சகோதரிக்கு உடல்நலம் பாதிக்கும். சுக்கிரன் கெட்டிருந்தால் மது, மாது, சூது போன்றவற்றில் ஈடுபட்டு கௌரவத்தை இழப்பர். மாடி வீடு கட்டும் யோகம் உண்டாகும். சிலருக்கு கொடுப்பது போன்ற யோகம் தந்து ஏமாற்றுவதும் ஏற்படும். சுக்கிர புக்தி, ராகு- கேது புக்திகள் நடந்தால் மிகுந்த மன ஊளைச்சலைத் தரும். யாரையும் நம்பி ஏமாறும் சூழல் உண்டாகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி வழிபாடு செய்தல், சுக்கிர ஸ்தலமான கஞ்சனூர் சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வரவும். திருநாகேஸ்வரத்தில் ராகுகால பூஜை வெள்ளிக்கிழமை செய்துகொள்வது நன்று. மல்லிகைப் பூக்கள், அதன் வாசனை திரவியங்களைப் பூசிக்கொள்வது, உடல், குடியிருக்கும் வீடு நறுமணம் வீசும்படிவைத்துகொள்ளவும். பெண் பிள்ளைகளுக்கு கல்வி உதவி, தாலிக்கு தங்கம் செய்வது சுபப்பலன்கள் தேடி வரவைக்கும்.
ராகு
பிறந்த ஜாதகத்தில் ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிப்பதால் குடும்பத்தில் மூத்தவர்களான தாத்தா, பாட்டி, தாய், தந்தையருக்கு கண்டத்தைக் கொடுக்கும். தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி தூக்கத்தைக் கெடுக்கும். ஜனன ஜாதகத்தில் ராகு நின்ற அதே வீட்டிற்கு ராகு வரும்போது வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போடும். அதுவரை இருந்த வாழ்க்கையை மாற்றி புது வாழ்க்கை ஆரம்பிக்கும். நல்ல விதமாகவா, கெட்டவிதமாகவா என்பதை தற்சமயம் நடக்கும் தசாபுக்திகளே தீர்மானிக் கும். வீட்டில் புதிதாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவர். தவறான பாதை யில் சரியாகச் செல்வர். யார் தடுத்தாலும் நில்லாமல் விதி அழைத்துச் செல்லும். ஆசை, பேராசையைத் தூண்டி அவமானத்தை அடையச் செய்யும். வயிறு, ஜீரண மண்டலத்தை பாதிக்கும். வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படவேண்டும். விஷக்கடி உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் மகிழ்ச்சி தரும். இருப்பிடத்தை விட்டு இடமாற்றத்தைத் தரும். ஆறு, எட்டு, பன்னிரண்டு, லக்ன பாவர், பாதகாதிபதி, மாரகாதிபதி கிரகத்தின்மீது செல்லும்போது, ராகு தசை, ராகு புக்தி நடப்பவர்களுக்கு கெடுதலைக் கொடுத்து கொடுமைப்படுத்துவார். நல்லோர் பகை, நல்லவர்களை விலக்கி வைப்பர். எதிரி கையில் சிக்கி வாழ்க்கையை இழப்பர். பட்டுத் திருந்தும் காலமாக இருக்கும். ராகுவுடன் இணைந்து எந்த கிரகங்கள் இருக்கிறதோ, அந்த கிரக காரகதுவ உறவு களுடன் பிரிவு, பிரச்சினை உண்டாகும்.
பரிகாரம்: ராகு ஸ்தலம் சென்று ராகுகால பூஜை வியாழக்கிழமை செய்துகொள்வது நல்ல பலன்களைத் தரும். திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று சூரசம்ஹார மூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து கொள்வது உத்தமமான பலன்களைத் தரும். ராகுவுடன் இணைந்து நிற்கும் கிரகத்திற்கு கிரக சாந்தி கொடுக்கவேண்டும். ஆன்மிக யாத்திரை குடும்ப கௌரவத்தை காக்கும்.
கேது
கேது உத்திரட்டாதியில் நின்றிருக்க, ராகு அதன்மீது பயணிக்கும்போது எதிர்பராத நிகழ்வு, அதிர்ச்சிகரமான வாழ்க்கை, விபத்து, கண்டம் ஏற்பட்டு வாழ்க்கை திசை மாறிவிடும். துரதிர்ஷ்டம் பிடித்து விடும். எதிலும் தோல்வி என்கிற நிலை துவங்கிவிடும். வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும். எதை நன்மை என நினைத்து செய்தோமோ அதுவே வாழ்க்கையைக் கெடுத்துவிடும். யாரை துரோகி என நினைத்து, துரோகம் செய்தோமோ அவர்களின் நல்ல உள்ளத்தைத் தெரிந்து கொள்ள நேரும். ஆனால் அவர்களின் அன்பை இழந்து நிற்போம்.சுய கௌரவத்தால், எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஆணவத்தால், தான் என்கிற "ஈகோ' வால் நல்லவர்களைப் பகைத்து தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக்கொள்வர். உடல் ஆரோக்கியம் கெடும். புதிய நோயால் தொல்லையே ஏற்படும். வர வேண்டிய நன்மைகள், காரணமின்றி தாமதமாகி மன உளைச்சலை உண்டாக்கும். கேது தசை, கேது புக்தி நடப்பவர்களுக்கு அதிக துன்பத்தையே தருவார். லக்ன பாவர், ஆறு, எட்டு, பன்னிரண்டு, பாதகாதிபதி, மாரகாதிபதியுடன் இணைந்த கேதுமீது கோட்சார ராகு செல்லும்போது கணிக்க முடியாத கெடுபலன் மற்றும் வாழ்வில் மாற்றியமைக்க முடியாத வலைக்குள் சிக்கிக்கொள்வர். பெண்கள், தரம்தாழ்ந்த கெட்டவனை மணந்து அவதிகள் பல பட போகும் காலம் துவங்கும். இந்த நேரத்தில் செய்யும் சுபகாரியங்கள் அனைத் தும் தோல்வியில் முடியும்; கவனம் தேவை.
பரிகாரம்: கேது ஸ்தலமான கீழ்பெரும்பள்ளம் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்துகொள்வது சிறப்பு. மனித முகமற்ற தெய்வங்களை வழிபடுவது நற்பலனைத் தரும். காளஹஸ்தி, பேரையூர், திருப்பாம்புரம், நாகப் பிரதிஷ்டை செய்த ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது கெடுபலன்களைத் தவிர்க்கும். தசாபுக்திகளுக்கேற்ற பரிகாரம் செய்து ராகு தரும் கெடுபலன்கள் நடப்பதைத் தடுத்துக்கொள்வது நன்று. ராகு உத்திரட்டாதியில் பயணிக்கும் எட்டு மாதகாலம், உத்திரட்டாதியில் கிரகம் இருப்பவர்களுக்கு மட்டுமே கெடுபலன் ஏற்படும். உத்திரட்டாதியில் எத்தனை கிரகங்கள் இணைந்திருக்கிறதோ, ஒரே டிகிரியில் நெருங்கிய நிலையில் இருக்கி றதோ அதனைப் பொருத்தும், லக்னபாவர், 6, 8, 12 அதிபதிகள் இணைவு, ராகு, கேது தசாபுக்தி, பாதகாதிபதி, மாரகாதிபதி சேர்க்கை, அதன் தசாபுக்தி போன்றவை நடக்கும், இருக்கும் நிலையைப் பொருத்து கெடுபலனின் சதவிகிதம் இருக்கும். சுபத் தன்மை பெற்ற ராகு, வக்ரம் பெற்ற கிரக இணைவுகள், சுபம் தரும் தசாபுக்திகள் நடந்தால் திடீர் அதிர்ஷ்டம், பணவரவு, பிரிந்தவர் கூடுவது போன்றசுப நிகழ்வு, சுப நிகழ்ச்சி, சுபப் பலன்கள் நடைபெறும். அதிசயம், ஆச்சரியம் உண்டாகும். பரிகாரம் செய்துகொள்வதால் கெடுபலனைத் தடுத்து வெற்றிமேல் வெற்றிபெற்று இன்பமாக வாழலாம்.
செல்: 6675 98822