Advertisment

ராகு தரும் போதையும் பரிகாரமும்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/rahu-gives-intoxication-and-remedy-r-mahalakshmi

ற்போதைய கால கட்டத் தில் போதையின் தாக்கம் மிக அதிகரித்துள்ளது. ஊடகத் துறையின் எந்த செய்தியும் "போதையின் காரணமாக நிகழ்ந்தது' என கூறுகிறது. இளைஞர்கள் மட்டுமல்லாது, சிறுவர்கள், பெண்கள், மாணவ- மாணவியர் என, எதிர்காலப் பொறுப் புள்ளவர்கள் பலரும் போதையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

Advertisment

"போதை' என்று சொல்லும்போது, ஜோதிடம் அதற்கு ஒரே கிரகத்தை மிக முக்கியமாக சுட்டிக்காட்டுகிறது. அது ராகு பகவான்தான். ஒருவர் ஜாதகத்தில் ராகு எந்த கிரக சம்பந்தம் கொண்டுள்ளாரோ, அதனைச் சார்ந்து போதைப் பழக்கத்தை ஏற்படுத்துவார். கிரக சம்பந்தமென்பது, பிற கிரகச் சேர்க்கை, பார்வை, சார சம்பந்தமாகும்.

ராகு+சூரியன்

ராகு பகவான் சூரிய சம்பந்தம் கொண்டு அதன் தசாபுக்தி நடக்கும்போது, ஜாதகர் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மை:

அரசு கண்டிப்பாகவும் தீவிரமாகவும் கட்டுப்படுத்தப்பட்ட போதை வஸ்துவாக இருக்கும். உஷ்ணம் அல்லது நெருப்பு சார்ந்ததாக இருக்கும். சில முட்செடிகளிலிருந்து பெறப்பட்ட தாக இருக்கும். கசப்பு ருசியுடையது. மலைகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கும். மரம் சார்ந்தது. சில தலைவலிக் கான மருந்தாக அமையும். ரத்தச் சிவப்பான நிறமுடையது. இதனைப் பயன்படுத்தும்போது ரத்தம் கெட்டுப்போவது, மயக்க நிலை, முதுகுத்தண்டு பிரிதல், கண் எரிச்சல், இதயத் துடிப்பு சீர்கெடுதல் என தொடர்ச்சியான அறிகுறிகளைக் கொடுக்கும். வயதானவர்கள், அரசியல்- அரசு சார்ந்தவர்கள் இதனைப் பயன்படுத்துவர்.

Advertisment

பரிகாரம்: நாகூர் ஸ்ரீநாகராஜ சுவாமியை ஞாயிறு மற்றும் அமாவாசையில் வணங்கவும். பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும்.

dss

ராகு+சந்திரன்

ராகுவும் சந்திரனும் சம்பந்தமுள்ள ஜாதகர்கள், அதன் தசா புக்திக் காலத்தில் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மை: பயன்படுத்தும் போதை, திரவம் சார்புடையது. சற்று மணமாக இருக்கும். வெள்ளை நிறமுடையது. இதனை உமிழ் நீரில், வாயில் அடக்கிக்

ற்போதைய கால கட்டத் தில் போதையின் தாக்கம் மிக அதிகரித்துள்ளது. ஊடகத் துறையின் எந்த செய்தியும் "போதையின் காரணமாக நிகழ்ந்தது' என கூறுகிறது. இளைஞர்கள் மட்டுமல்லாது, சிறுவர்கள், பெண்கள், மாணவ- மாணவியர் என, எதிர்காலப் பொறுப் புள்ளவர்கள் பலரும் போதையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

Advertisment

"போதை' என்று சொல்லும்போது, ஜோதிடம் அதற்கு ஒரே கிரகத்தை மிக முக்கியமாக சுட்டிக்காட்டுகிறது. அது ராகு பகவான்தான். ஒருவர் ஜாதகத்தில் ராகு எந்த கிரக சம்பந்தம் கொண்டுள்ளாரோ, அதனைச் சார்ந்து போதைப் பழக்கத்தை ஏற்படுத்துவார். கிரக சம்பந்தமென்பது, பிற கிரகச் சேர்க்கை, பார்வை, சார சம்பந்தமாகும்.

ராகு+சூரியன்

ராகு பகவான் சூரிய சம்பந்தம் கொண்டு அதன் தசாபுக்தி நடக்கும்போது, ஜாதகர் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மை:

அரசு கண்டிப்பாகவும் தீவிரமாகவும் கட்டுப்படுத்தப்பட்ட போதை வஸ்துவாக இருக்கும். உஷ்ணம் அல்லது நெருப்பு சார்ந்ததாக இருக்கும். சில முட்செடிகளிலிருந்து பெறப்பட்ட தாக இருக்கும். கசப்பு ருசியுடையது. மலைகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கும். மரம் சார்ந்தது. சில தலைவலிக் கான மருந்தாக அமையும். ரத்தச் சிவப்பான நிறமுடையது. இதனைப் பயன்படுத்தும்போது ரத்தம் கெட்டுப்போவது, மயக்க நிலை, முதுகுத்தண்டு பிரிதல், கண் எரிச்சல், இதயத் துடிப்பு சீர்கெடுதல் என தொடர்ச்சியான அறிகுறிகளைக் கொடுக்கும். வயதானவர்கள், அரசியல்- அரசு சார்ந்தவர்கள் இதனைப் பயன்படுத்துவர்.

Advertisment

பரிகாரம்: நாகூர் ஸ்ரீநாகராஜ சுவாமியை ஞாயிறு மற்றும் அமாவாசையில் வணங்கவும். பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும்.

dss

ராகு+சந்திரன்

ராகுவும் சந்திரனும் சம்பந்தமுள்ள ஜாதகர்கள், அதன் தசா புக்திக் காலத்தில் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மை: பயன்படுத்தும் போதை, திரவம் சார்புடையது. சற்று மணமாக இருக்கும். வெள்ளை நிறமுடையது. இதனை உமிழ் நீரில், வாயில் அடக்கிக்கொள்வர். சில போதைச் செடியின் இளங்குருத்தாகவும் இருக்கும். வயதான பெண்கள் இதன் விற்பனையில் ஈடுபடுவர். பயனபடுத்துபவர்கள் நிறைய உளறுவார்கள். அதிகமாக விக்கல் எடுக்கும். படகு, கப்பல்மூலம் இதன் விநியோகம் நடக்கும். சளி, மார்பு, வயிற்றுக் கோளாறு, சிறுநீர்ப் பிரச்சினை- குறிப்பாக மார்பில் கபம் கட்டிக்கொள்ளும். பின்விளைவாக எண்ணச் சிதறல் ஏற்பட்டு, சற்று மனப்பிறழ்ச்சியாகும் நிலை ஏற்பட்டுவிடும்.

பரிகாரம்: நாகப்பட்டிணம் அருகே யுள்ள ஆதிநாத சுவாமியை வழிபட்டு, அங்குள்ள கிணற்றில் பாலூற்றவேண்டும்.

ராகு+செவ்வாய்

ராகு, செவ்வாய் சம்பந்தமிருந்து, அதன் தசாபுக்திக் காலத்தில் பின்பற்றும் போதை வஸ்துவின் தன்மைகள்:

போதை வஸ்து பூமி சம்பந்தம் கொண்டது. நெருப்பு இணைவிருக்கும். காரமுடையது. மட்பாண்டம் பயன் கொண்டது. சிவப்பு மற்றும் ரத்தம் சம்பந்தம் கொண்டது. பற்களால் கடித்து போதை ஏற்றுவர். தசை நார்கள்மூலம் போதையை ஏற்பர். சிறைச்சாலை, சுரங்கம், சூதாட்ட இடங்களில் இதன் பயன்பாடு அதிகமிருக்கும். ரசாயன சம்பந்தம் வெகுவாக இருக்கும். இளைஞர்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவர். இவர்கள் அதிக கோபத்தை வெளிப்படுத்தி, சிலசமயம் கொலை, கற்பழிப்பு போன்ற பாதகச் செயல்களும் செய்வர். ஆசன வாய் நோய், மர்ம ஸ்தானப் புண், பால்வினை நோய் தாக்கும்.

பரிகாரம்: மன்னார்குடி அருகி லுள்ள பாமினி சென்று, சிவனுக்கும் நாகராஜனுக்கும் பாலாபிஷேகம், அர்ச் சனை செய்யவேண்டும்.

ராகு+புதன்

ராகுவும் புதனும் சம்பந்தம்கொண்டு அதன் தசை நடந்தால் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மை:

இந்த சேர்க்கையில், போதை வஸ்து இவர்களை அதிகம் சிரிக்கச் செய்யும்.

பிதற்றச் செய்யும். இதனை தோல் வழியாகச் செலுத்துவர். மருத்துவம் சார்ந்த போதை வஸ்துவாக இருக்கும். சில பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். சில விஷ மருந்துகளை போதைக்காக எடுத்துக்கொள்வர். அணு ஆராய்ச்சி நிலையம் சம்பந்த வஸ்த்துகளைப் பயன்படுத்துவர். மிகமிக புத்திசாலித்தனமாக போதைப் பொருட்களை வாங்கவும், வரவழைக்கவும் செய்வர். இதனைப் பயன் படுத்துவோர் அனேகமாக பள்ளிச் சிறுவர் களாக இருப்பர். எந்த பாவச் செயல்களுக்கும் அஞ்சாதவராக மாறிவிடுவர். இவர்களுக்கு தொண்டையில் சீழ்பிடிப்பது, ஈஸ்னோபோலியோ போன்ற நோய் ஏற்படும். நரம்பு வலி, கை, கழுத்து இழுத்துக்கொள்வது, தோல் வியாதி போன்றவை வரிசை கட்டும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகே திருப்பாம்புரம் சென்று வணங்கவும்.

ராகு+சுக்கிரன்

ராகுவும், சுக்கிரனும் சம்பந்தம் ஏற்பட்டு, அதன் தசாபுக்திகள் நடக்கும்போது பயன் படுத்தும் போதையின் தன்மை:

புளிப்பு, இனிப்புச் சுவை கொண்டது. இந்த இணைவு மதுவையும் மாதுவையும் சேர்த்தே கொடுக்கும். போதையும் காமமும் சேர்ந்த இணைவிது. உலகிலுள்ள அத்தனை போதைகளையும் அனுபவிக்கத் துடிப்பார்கள். அதன் தொடர்ச்சியாக தராதரமில்லாமல் பெண் களையும் கெடுப்பர். போதையின் வசப்பட்ட வர்கள் எந்த கீழ்நிலைக்கும் இறங்கிவிடுவர். இதனால் பெண்களுக்கு இந்த தசாபுக்தி கெட்டுப் போய் நடந்தால், போதைக்காக விபச்சாரத்திற்கும் சம்மதித்துவிடுவர். இதற்கு ராகுவின் சாரநாதரும், சுக்கிரனும் கெட்டுப் போய் அசுபத் தன்மை நிறைந்து அமர்ந்திருப்பர். கலைத்தொழில் சம்பந்தம் கொண்டோரை மிக பாதிக்கும். சிறுநீர்க் கோளாறு, குடல்வால் நோய், பால்வினை நோய், சொறி, குஷ்டம் இவை பின்விளைவாகும்.

பரிகாரம்: திருநாகேஸ்வரம் சென்று வணங்கவும். குஷ்ட நோய் உள்ளோர், ஊனமுற்றோருக்கு உதவவும்.

ராகு+குரு

இந்த கிரக சம்பந்தம் தரும் போதை வஸ்துவின் குணங்கள்:

இது மஞ்சள்நிறம் கொண்டதாக அமையும்.

சில போதைகள், மரச்சாமான்களுக்கு வண்ணங் கள் அடிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவர். ரப்பர், மலையிலுள்ள விளைபொருட்கள், மிக இனிப்பு சேர்ந்தவை என இந்த கிரகச் சேர்க்கை நம்பமுடியாத போதைத் தன்மை கொண்டிருக்கும். இதேபோல் இதனைப் பயன்படுத்துவர்களையும் உலகம் லேசில் நம்பமுடியாத நிலையில் இருக்கும். மிக உயர் பிறப்பில் பிறந்தவர்களும், இந்த கிரகச் சேர்க்கை யால் சீரழிந்து விடுவர். "பார்ப்பான் கெட்டால் குட்டிச் சுவர்' என ஒரு பழமொழி உண்டு. இதில் குரு நிலைத்தன்மையுடன் ராகுவுடன் இணையும்போது, இவர்கள் ஆலயத்தில் உள்ளேயே போதைப் பொருளைப் பயன்படுத்து வர். எந்த குற்றவுணர்வுமின்றி செயல்படுவர்.

இவர்கள் எவ்வளவு போதை எடுத்துக் கொண்டாலும் "ஸ்டெடி'யாக இருப்பர். ஆன்மிகவாதிகள், மிகப்படித்தவர்கள் பயன் படுத்துவர். நுரையீரல் புற்றுநோய், மூளை செல்பாதிப்பு ஏற்படும்.

பரிகாரம்: திருநீலக்குடி சென்று சுவாமியை வழிபடவும்.

ராகு+சனி

இந்த கிரகச் சேர்க்கை அமைந்து அதன் தசாபுக்தியில் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மை:

போதை கருமை நிறம் கொண்டிருக்கும். எண் ணெய்த் தன்மையுடன், கொழ கொழவென்று இருக்கும். அக்னி சம்பந்தம் கொண்டது. மிகுந்த துர்நாற்றம் கொண்டதாக அமையும். பூமிக்கு அடியில் தயாரிக்கும் தன்மை கொண்டது.

கழிவுப் பொருட்களிலிருந்து இதனைத் தயாரிப் பர். இதனை வேலை செய்யும் அடித்தட்டு மக்கள், சுடுகாடு போன்றவற்றில் வைத்துப் பயன்படுத்துவர். இதனை பயன்படுத்துபவர்கள். ஆழ்கடலின் அமைதியில் இருந்து, கல் நெஞ்சத் துடன் செயல்படுவர்: கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எதற்கும் அஞ்சமாட்டார்கள். இதுவொரு கொடுமையான இணைவு. இதற்கு ராகுவின் சாராநாதரும், சனியும் மிகக்கெட்டி ருப்பார்கள். வீடுகளில் யாராவது மிக அமைதி யாக மாறிவிட்டால், உடனே அவர்களை கவனியுங்கள். சோம்பலுடன், முரட்டு சுபாவமும் தென்படும். முழங்கால் வாதம், குஷ்டம் போன்ற நோய் தொடரும்.

பரிகாரம்: திருச்செங்கோடு மலைமீதுள்ள நாகநாத சுவாமியை வணங்கவும்.

பொதுவாக, போதை வஸ்துகளுக்கு காரண கிரகம் ராகுதான். அவர் வாங்கிய சாரநாதர் கெட்டு, உடன்சேர்ந்த கிரகமும் அசுபத் தன்மையுடன் இருப்பின், ஜாதகர் களுக்கு, அது ஆணோ- பெண்ணோ போதைப் பழக்கத்தைக் கொடுத்துவிடுவார். இந்த வகை கிரகச் சேர்க்கை இருந்து, அதன் தசாபுக்திகள் நடக்கும்போது, ஜாதகர்கள் ஒன்று அதிகமாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வர். அல்லது மிக ஆழ்ந்த மௌனத்திற்குச் சென்றுவிடுவர். எனவே குடும்பத்தினர் இவர்களைக் கண்காணிப்பது அவசியம். இல்லையெனில் அவமானமும் கண்ணீரும் உறுதி.

குடிப்பழக்கமும் மறைய ஆதிசங்கரர் கூறிய பரிகாரம்:

ஸ்ரீ ஆதிசங்கரர் ஒருமுறை கேரளாவில் பாத யாத்திரை செய்யும்போது, ஒரு கிராமத்தில் கள் குடித்துக்கொண்டிருந்த ஒருவர் சுவாமியைக் கண்ட சந்தோஷத்தில் கள் பானையை நீட்ட, அவரும் அதனை வாங்கிக் குடித்து விட்டார். அடுத்து கொல்லுப்பட்டறையில் ஒருவர் ஈயம் காய்ச்சிக்கொண்டிருந்தார்.

அவரும் சுவாமியைக் கண்ட சந்தோஷத்தில், ஈயக்குவளையை கொதித்த நிலையில் நீட்ட, ஆதிசங்கரர் அதையும் வாங்கிக் குடித்து விட்டாராம்.

அவருக்கு கள், காய்ச்சிய ஈயம் என பேதமே இல்லை. சற்று நேரத்தில் கள் கொடுத்தவர் ஓடிவந்து மன்னிப்புக்கோர, சுவாமி, "கிழக்கு நோக்கிச் செல். எந்த சிவாலயத்தில் ஆடு நிற்கிறதோ, அங்கு தெளிவு பெறுவாய்'' என கூறினார். நமது கள் ஆசாமியும் கிழக்கு நோக்கிச் சென்று ஒரு சிவாலயத்துள் நுழைய, ஒரு ஆடு சிவனை வணங்கியபடி நின்றது.

அந்த ஆடு அவரை ஒரு துர்க்கை சந்நிதியிடம் இழுத்துச்சென்றது. அங்கொரு மகரிஷி சாம்பிராணி தூபம் எழுப்பிக்கொண்டிருந்தார். அந்த தூபத்தின் நடுவே ஸ்ரீ ஆதிசங்கரர் தோன்றி, "இந்த கலியுகத்தில் நிறைய குடும்பங்கள் குடிப்பழக்கத்தால் துன்பப்படும். அதற்குப் பரிகாரமாக, இங்கு தூபமிடும் கைங்கர்யத்தை நீ செய்வாயாக'' எனக் கூறி ஆசிர்வதித்தார்.

இத்திருக்கோவில், சென்னை அருகே திருநின்றவூரிலுள்ள ஹ்ருதயாலீஸ்வரர் ஆலயமாகும். இங்குள்ள நிலச்சுரங்கம் அருகே உள்ள நடராஜர் சந்நிதியில் நறுமணமுள்ள சாம்பிராணி தூபமிட, குடி, போதைப் பழக்கம் மறையும்.

எனவே உங்கள் குடும்பத்தில் யாருக்காவது போதை, குடிப்பழக்கம் இருப்பின், இத்திருத் தலத்திற்குச் சென்று, சாம்பிராணி தூபமிட்டு வணங்கவும்.

செல்: 94449 61845

bala060522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe