Advertisment

12 பாவங்களில் ராகு!

/idhalgal/balajothidam/rahu-12-sins

மேஷ லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தோற்றம் சுமாராகவே இருக்கும். உடல்நலத்தில் சில பிரச்சினைகள் தோன்றும். மனதில் கவலை இருக்கும். இந்த ராகுவால் ஜாதகர் சில மந்திர- தந்திர செயல்களைச் செய்து வசதி படைத்தவராவார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் ராகு, சுக்கிரன் வீட்டி-ருந்தால், பணப் பிரச்சினை இருக்கும். வருமானம் குறையும். பல கஷ்டங்களைச் சந்திக்கவேண்டியதிருக்கும். ஆனால், ராகு தசை வந்தால் ஜாதகர் தைரியமாகப் பேசுவார். பணம் சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் மிதுன ராசியில் ராகு இருந்தால், ஜாதகர் தைரியமாக இருப்பார். உடன்பிறப்புகள் சந

மேஷ லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தோற்றம் சுமாராகவே இருக்கும். உடல்நலத்தில் சில பிரச்சினைகள் தோன்றும். மனதில் கவலை இருக்கும். இந்த ராகுவால் ஜாதகர் சில மந்திர- தந்திர செயல்களைச் செய்து வசதி படைத்தவராவார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் ராகு, சுக்கிரன் வீட்டி-ருந்தால், பணப் பிரச்சினை இருக்கும். வருமானம் குறையும். பல கஷ்டங்களைச் சந்திக்கவேண்டியதிருக்கும். ஆனால், ராகு தசை வந்தால் ஜாதகர் தைரியமாகப் பேசுவார். பணம் சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் மிதுன ராசியில் ராகு இருந்தால், ஜாதகர் தைரியமாக இருப்பார். உடன்பிறப்புகள் சந்தோஷமாக வாழ்வார்கள். ஜாதகர் வெளியே கம்பீரமாகக் காட்சியளிப்பார். ஆனால், அவரது மனதில் கவலை இருக்கும். வெளியே யாருக்கும் அது தெரியாது. ஜாதகர் தன்னம்பிக்கை உள்ளவராக இருப்பார்.

1222

Advertisment

4-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். பூமி, வாகனம் வாங்கும்போது, சில பிரச்சினைகள் உண்டாகும். வீட்டில் சந்தோஷம் குறையும்.

சிலருக்கு அதிக அலைச்சல்கள் இருப்பதால், வீட்டை கவனிக்கமுடியாமல் இருப்பார்கள்.

5-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், வாரிசு உண்டாவதில் சில பிரச்சினைகள் இருக்கும். மிகக் கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டியதிருக்கும். ஜாதகருக்கு அவருடைய பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும்.

6-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், ஜாதகருக்கு விரோதிகள் இருப்பார்கள். அடிக்கடி சண்டை, சச்சரவுகள் நடக்கும். ஆனால், தைரியமாக அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டு வெற்றியைக் காண்பார். நல்ல வருமானம் இருக்கும்.

7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் ராகு இருந்தால், மனைவியின் உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். வர்த்தகத்தில் சிக்கல்கள் ஏற்படும். ஆனால், ஜாதகர் தன் நண்பர்களின் ஒத்துழைப்புடன் புத்திசா-த்தனமாக செயல்பட்டு வெற்றி பெறுவார்.

8-ஆம் பாவத்தில் ராகு, விருச்சிக ராசியில் இருந்தால், ஜாதகருக்கு பல நேரங்களில் பல கஷ்டங்கள் உண்டாகும். தேவையற்ற விஷயங்களைப் பேசுவார். அதனால் பிரச்சினைகள் உண்டாகும்.

9-ஆம் பாவத்தில் ராகு குருவின் ராசியில் இருந்தால், கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிரச்சினைகள் உண்டாகும். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் பிரச்சினை ஏற்படும். கடவுள் நம்பிக்கை குறையும். பெயர், புகழ்பெறும் நேரத்தில் எதிர்பாராத தடைகள் உண்டாகும்.

10-ஆம் பாவத்தில் ராகு பகவான் மகர ராசியில் இருந்தால், ராகு தசையில் பெயர், புகழ் கிடைக்கும். ஆனால், அதற்காக கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். தாயின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும்.

11-ஆம் பாவத்தில் சனியின் ராசியில் ராகு இருந்தால், பல வகைகளில் லாபம் கிடைக்கும். ஜாதகர் தன் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பர். பிள்ளைகளின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். கடுமையாக உழைப்பதால், சிலருக்கு மூட்டுவ- இருக்கும்.

12-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் ராகு இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால், பணக் கஷ்டம் இருக்கும். எதிர்பாராத சில சிக்கல்கள் உண்டாகும். எனினும், ஜாதகர் தைரியமாகத் தன் செயல்களைச் செய்வார். சிலருக்கு சரியாகத் தூக்கம் வராது.

செல்: 98401 11534

bala200821
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe