ரிஷப லக்னத்தில் ராகு பகவான் தன் நண்பர் சுக்கிரனின் வீட்டில் இருந்தால், ஜாதகர் நல்ல தோற்றத் தைக் கொண்டிருப்பார். ஆனால், உடல்நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் சாதுரிய குணம் கொண்டவராக இருப்பார். மனபலத்துடன் செயல்களைச் செய்து வெற்றிபெறுவார். பல சிரமங்களை சந்தித்து வெற்றியை சுவைப்பார்.

2-ஆம் பாவமான குடும்ப ஸ்தானத்தில் (மிதுன ராசியில்) ராகு உச்சம் பெறுகிறார்.

அதனால், ஜாதகர் புத்திசா-த்தனமாக செயல்பட்டு பணத்தை சம்பாதிப்பார். வீட்டில் நல்ல பணவசதி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக ஜாதகர் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும்.

rr

Advertisment

3-ஆம் பாவத்தில் ராகு தன் விரோதி யான சந்திரனின் கடக ராசியில் இருந்தால் தைரியம் குறைவாக இருக்கும். உடன் பிறப்புகளால் சில பிரச்சினைகள் உண்டா கும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் எழும். ஆனால், வெளியே ஜாதகர் தன்னை கம்பீரமானவராகக் காட்டிக்கொள்வார்.

4-ஆம் பாவத்தில் ராகு தன் எதிரியான சூரியனின் வீட்டில் இருந்தால் தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். ஜாதகர் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினை இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் குறையிருக்கும்.

5-ஆம் பாவத்தில் ராகு இருந்தால் கல்வியில் பிரச்சினை ஏற்படும். குழந்தைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். ஜாதகர் அதிகமாகப் பேசுவார். சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள். பலர் ரகசிய செயல்களில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிப்பார்கள்.

Advertisment

6-ஆம் பாவமான ரோக ஸ்தானத் தில் தன் நண்பர் சுக்கிரனின் வீட்டில் ராகு இருந்தால், ஜாதகர் பகைவர்களை வெல்வார். பல தகிடுதத்த வேலைகளைச் செய்து வெற்றிபெறுவார். எப்போதும் மன தைரியத்துடன் இருப்பார்.

7-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் ராகு இருந்தால், ஜாதகருக்கு மனைவியுடன் பிரச்சினை இருக்கும். மனைவியின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் பல கஷ்டங்கள் உண்டாகும்.

8-ஆம் பாவத்தில் ராகு குருவின் தனுசு ராசியில் இருந்தால் உடல்நலம் பாதிக் கப்படும். வர்த்தகத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் மிகவும் கவனமாக செயல்பட்டு பணத்தை சம்பாதிப்பார்.

9-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் ராகு இருந்தால், ஜாதகருக்கு தர்மச் செயல்களில் ஈடுபாடு இருக்காது. ஆனால், தன்னை தர்மப் பிரபுவைப்போல காட்டிக்கொள்வார். கடுமையாக உழைத்து, பல தகிடுதத்த செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்.

10-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் சில பிரச்சினைகள் உண்டாகும். சிலரின் தந்தைக்கு வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். ஜாதகர் கடுமை யாக உழைத்து பணம் சம்பாதிப்பார்.

11-ஆம் பாவத்தில் ராகு பகவான், குருவின் மீன ராசியில் இருந்தால், பணவரவில் சில தடைகள் இருக்கும். ஆனால் பாவகிரகம் 11-ஆவது பாவத்தில் இருப்பதால், ஜாதகருக்கு பணவரவு நன்றாக இருக்கும். குறுக்குவழியில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை நன்கு தெரிந்துகொண்டு, ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.

12-ஆம் பாவத்தில் தன் பகைவரான செவ்வாயின் ராசியில் ராகு இருந்தால் அதிக செலவுகள் உண்டாகும். சில நேரங்களில் எதிர் பாராத பல செலவு கள் திடீரென்று ஏற்பட்டு திகைக்க வைக்கும்.

செல்: 98401 11534