புதனின் மிதுன ராசியில் ராகு உச்சம் பெறுவதால், ஜாதகர் உயரமாக- பலசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். பேச்சாற்றலைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பார். புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பல சவாலான செயல்களில்கூட வெற்றிபெறுவார்.
2-ஆம் பாவத்தில்- குடும்ப ஸ்தானத்தில்- எதிரியான சந்திரனின் கடக ராசியில் ராகு இருந் தால் பண இழப்பு உண்டாகும். குடும்ப வாழ்க்கை யில் பல சிக்கல்கள் ஏற்படும். பணம் சம்பாதிப் பதற்காக ஜாதகர் பல ரகசிய காரியங்களில் ஈடுபடுவார். கடுமையாக உழைப்பார். பல வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்த பின்னரே பணம் சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் சிம்ம ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் தைரிய குணமுள்ள வராக- பலசாலியாக இருப்பார். உடன்பிறப்பு களுடன் சுமாரான உறவே இருக்கும். வாழ்க்கை யின் இரண்டாம் பகுதியில் கடுமையாக உழைத்துப் பணத்தைச் சம்பாதிப்பார். அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raghu_13.jpg)
4-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில்- சுக ஸ்தானத்தில் ராகு பகவான் இருந்தால் அன்னையின் உடல் நலத்தில் பிரச்சினை இருக்கும்.
வீடு வாங்குவதில் சிக்கல் ஏற்படும். ரகசியமான சில செயல்களைச் செய்து ஜாதகர் ஆதாயமடைவார். கடுமை யாக உழைத்துப் பணம் சம்பாதிப் பார். தன் காரியங்களில் வெற்றிபெறுவார்.
5 ஆம் பாவமான திரிகோணத்தில் ராகு இருந்தால், பலருக்கு படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது.
ஜாதகர் புத்திசாலித்தனமான காரியங்களைச் செய்து வெற்றிபெறுவார். பலருக்கு குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு பிள்ளைகளால் கவலை உண்டாகும். ஜாதகர் ரகசியமான பல காரியங்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்.
6-ஆம் பாவமான விருச்சிக ராசியில் ராகு பகவான் இருந்தால் பகைவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் ஜாதகர் அவர்களை வெல்வார். தைரிய குணம் இருக்கும்.
7-ஆம் பாவத்தில் குரு பகவானின் தனுசு ராசியில் ராகு பகவான் இருந்தால் திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். மனைவியின் உடல்நலத்தில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் நிறைய பொய்கள் பேசி பணம் சம்பாதிப்பார். செய்யக்கூடாத பல செயல்களைச் செய்வார். அதன்மூலம் தன் காரியங்களை நிறைவேற்றிக்கொள்வார். ஆனால் சிலநேரங்களில் மனதில் கவலைகள் உண்டாகும்.
8-ஆம் பாவத்தில் சனி பகவானின் மகர ராசியில் ராகு இருந்தால், சில வேளைகளில் உடல்நலத்தில் பிரச்சினைகள் உண்டாகும். முன்னோர்களின் சொத்து கிடைப்பதில் தடைகள் இருக்கும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். அதனால் மனதில் கவலை உண்டாகும். அடிவயிற்றில் நோய் இருக்கும்.
9-ஆம் பாவத்தில் சனி பகவானின் கும்ப ராசியில் ராகு இருந்தால் வாழ்க்கையின் முற்பகுதியில் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும். பிற்பகுதியில் ஜாதகர் பல தகிடு தத்தங்களைச் செய்து வாழ்வின் போக்கையே மாற்றி விடுவார். எனினும் மனதில் மகிழ்ச்சி இருக்காது. தர்ம காரியங்கள் செய்வதில் தடைகள் உண்டாகும்.
10-ஆம் பாவத்தில் குரு பகவானின் மீன ராசியில் ராகு இருந்தால் தந்தையின் உடல்நலத்தில் சில பிரச்சினைகள் உண்டா கும். குடும்ப சந்தோஷத்தில் தடைகள் ஏற்படும். பல போராட்டங் களுக்குப் பிறகு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் உயர்பதவி, புகழுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்.
11-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் புத்திசாலித்தனமாக செயல் பட்டு பணம் சம்பாதிப் பார். பல புதிய முயற்சி களில் ஈடுபட்டு வெற்றி காண்பார்.
12-ஆம் பாவமான விரய ஸ்தானத்தில்- சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு பகவான் இருந்தால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். அதற்காக ஜாதகர் பல செய்யக்கூடாத செயல்களைச் செய்வார். அதன்மூலம் பணம் வரும். சிலருக்கு சரியாகத் தூக்கம் வராது. சிலருக்கு தலையில் பிரச்சினை இருக்கும்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/raghu-t_0.jpg)