டக லக்னத்தில் ராகு பகவான் தன் எதிரியான சந்திரனின் ராசியில் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மனதில் பல சிக்கல்கள் இருக்கும். சில நேரங்களில் அதிகமான கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு கடுமையாக உழைக்கவேண்டிய திருக்கும். சிலர் ரகசிய செயல்கள் பலவற்றைச் செய்து வெற்றிபெறுவார்கள். உடல்நலத்தில் ஜாதகர் அக்கறையுடன் இருப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் எதிரி சூரியனின் சிம்ம ராசியில் ராகு பகவான் இருந்தால் பணம் வருவதில் பல தடங்கல்கள் இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். பல பகைவர்களைக் கடந்து பெயர், புகழ் கிடைக்கும். மனதில் அதிக சிந்தனைகள் உண்டாகும். ஜாதகர் கடுமையாக உழைத்து வெற்றிபெறுவார்.

rag

3-ஆம் பாவத்தில், கன்னி ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். உடன்பிறந்தோருடனுள்ள உறவில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் பல வழிகளைக் கையாண்டு, கடுமையாக உழைத்து தன் காரியங்களை முடிப்பார். நல்ல பணவரவிருக்கும்.

4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் ராகு பகவான் இருந்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை இருக்கும். பல வழிகளில் முயன்று ஜாதகர்

வாழ்க்கையில் வெற்றிபெறுவார். பல தொழில்களைச் செய்வார். கடுமையாக உழைப்பார்.

5-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் ராகு பகவான் இருந்தால் படிப்பில் தடை இருக்கும். குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் உண்டாகும். பலருக்கு மிகவும் தாமத மாகலி வயதானபிறகுகூட குழந்தை பிறக்கும்.

6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்குப் பகைவர்களால் சில பிரச்சினைகள் உண்டாகும். ஆனால் பல வழிகளைக் கையாண்டு ஜாதகர் எதிரி களை வெல்வார். சாகசச் செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பார். ஜாதகர் கோபகுணம் கொண்டவராகவும் தைரியசாலியாகவும் இருப்பார்.

7-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் ராகு பகவான் இருந்தால் கணவனுக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவனாலும் மனக் கஷ்டங்கள் உண்டாகும். வர்த்தகத்தில் பல தடங்கல்கள் உண்டாகும். சிலருக்கு பிறப் புறுப்பில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பல கஷ்டங்களைக் கடந்து வெற்றிபெறுவார். பணவரவு நன்றாக இருக்கும்.

8-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தால் சில நேரங்களில் மனபயம் உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். ஜாதகர் வாழ்க்கையை நடத்துவதற்காக பல தகிடுதத்த செயல்களைச் செய்வார். பல கஷ்டங்களைக் கடந்து வெற்றிபெறுவார்.

9-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார். பல சிக்கல்களை அவர் சந்திக்க வேண்டியதிருக் கும். தர்மச் செயல்கள் செய்வதில் தடைகள் உண்டாகும். மிகப் பெரிய கஷ்டங்களை ஜாதகர் சந்திக்கவேண்டியதிருக்கும். எனினும், அவர் தைரியமாக இருப்பார்.

10-ஆம் பாவத்தில் மேஷ ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அவர் தைரியமாக அவற்றைச் சந்திப்பார். மிகுந்த புத்திசாலியாக இருப்பார். பல சிரமங்களைக் கடந்து வெற்றிபெறுவார். சிலர் அரசியல் வாதியாக இருப்பார்கள்.

11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். சாதுர்யமாகப் பணத்தை சம்பாதிப்பார். சில நேரங்களில் சிரமங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். எனினும் வாழ்க்கை நன்றாகவே இருக்கும். சிலருக்கு காலில் நோய் இருக்கும்.

12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்திப் பணத்தை சம்பாதிப்பார். சிலர் தலைவலியால் அவதிப் படுவார்கள்.

செல்: 98401 11534