Advertisment

கன்னி லக்னத்திற்கு 12 பாவங்களில் ராகு!

/idhalgal/balajothidam/rahu-12-sins-kanni-lakshman

ன்னி லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் இருப்பார்.பலசாலியாகவும் இருப்பார். மனபலம் அதிகமாக இருக்கும். ஆழமாக சிந்திக்கக் கூடியவராக இருப்பார். தன் மூளையைப் பயன்படுத்தி மிகப்பெரிய செயல்களைச் செய்வார். கோபகுணம் கொண்டவர். தன் வேலைகளை மிகவும் துணிச்சலாக செய்து வாழ்க்கையில் உயர்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகரின் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். சில நேரங்களில் பெரிய அளவில் நஷ்டம் உண்டாகும். பணத்தைச் சம்பாதிப்பதற்காக பல வழிகளைக் கையாள்வார் ஜாதகர். கடினமாக உழைத்துப் பணம் ஈட்டுவார். சில நேரங் களில் கடுமையான வார்த்தைகளில் பேசுவார்.

Advertisment

dd

3-ஆம் பாவத்தில் செவ்வ

ன்னி லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் இருப்பார்.பலசாலியாகவும் இருப்பார். மனபலம் அதிகமாக இருக்கும். ஆழமாக சிந்திக்கக் கூடியவராக இருப்பார். தன் மூளையைப் பயன்படுத்தி மிகப்பெரிய செயல்களைச் செய்வார். கோபகுணம் கொண்டவர். தன் வேலைகளை மிகவும் துணிச்சலாக செய்து வாழ்க்கையில் உயர்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகரின் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். சில நேரங்களில் பெரிய அளவில் நஷ்டம் உண்டாகும். பணத்தைச் சம்பாதிப்பதற்காக பல வழிகளைக் கையாள்வார் ஜாதகர். கடினமாக உழைத்துப் பணம் ஈட்டுவார். சில நேரங் களில் கடுமையான வார்த்தைகளில் பேசுவார்.

Advertisment

dd

3-ஆம் பாவத்தில் செவ்வா யின் விருச்சிக ராசியில் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். தன் செயல் களைத் துணிச்சலாகச் செய்வார். குடும்பத்தில் உள்ளவர்களால் அவரின் மகிழ்ச்சி கெடும். சில நேரங்களில் கஷ்டங்களைக்கூட தைரியமாக ஜாதகர் கையாள் வார்.

4-ஆம் பாவத்தில் தனுசு ராசியில் ராகு பகவான் இருந்தால் தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வீடு வாங்குவதில் தடைகள் ஏற்படும். ஜாதகரின் குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். சிலர் தாங்கள் பிறந்த ஊரிலிருந்து வெளியேறி வேற்றூரில் வாழ்க்கையை நடத்துவார்கள்.

5-ஆம் பாவத்தில் ராகு பகவான் சனி பகவானின் மகர ராசியில் இருந்தால் ஜாதகருக்குத் தன் பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும். படிப்பு விஷயத்தில் ஜாதகருக்கு இடையூறுகள் இருக்கும். சிலர் படித்ததற்கும் வாழ்வுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லாமல் இருப்பார்கள். ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். தனக்கு ஆதாயம் வருகிறது என்பதற்காக, சிலர் நல்லது- கெட்டது என பார்க்காமல் எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பார்கள்.

6-ஆம் பாவத்தில் ராகு பகவான் சனியின் கும்ப ராசியில் இருந்தால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். புத்திசாலித்தனத் தைப் பயன்படுத்தி பல பிரச்சினைகளிலும் வெற்றிபெறுவார். நோய் பாதிப்பிருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

7-ஆம் பாவத்தில் குரு பகவானின் மீன ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் சில சிரமங்கள் இருக்கும். வியாபாரத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் வர்த்தகத்தைச் செய்யவேண்டியதிருக்கும். அதில் ஜாதகர் பல சாகசங்களைச் செய்து வெற்றிபெறுவார்.

8-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு விபத்துகள் ஏற்படும். வயிற்றில் நோய் இருக்கும். இல்வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றும். மனக் கஷ்டம் ஏற்பட்டாலும் ஜாதகர் தைரியமாக வாழ்க்கையை மேற்கொள்வார்.

9-ஆம் பாவமான மூலத் திரிகோணத்தில், சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் தர்மத்தை சரியாகக் கடைப்பிடிக்க மாட்டார். வாழ்க்கை யின் முற்பகுதியில் கடுமை யாக உழைக்க வேண்டிய திருக்கும். பல துன்பங்களை சந்திக்க வேண்டிய திருக்கும். போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும்.

10-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் பல போராட்டங் களை சந்திக்க வேண்டிய திருக்கும். ரகசிய செயல் களைச் செய்து வெற்றி பெறுவார். பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசியல் வாதிகளாக பவனி வருவார்கள்.

11-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு பணவரவு இருக்கும். பல கஷ்டங்களைக் கடந்து அவர் பணம் சம்பாதிப் பார். பெயர், புகழ் கிடைக் கும். சிலருக்குப் பிள்ளைகளால் தொல்லைகள் இருக்கும்.

12-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளால் பல கஷ்டங்கள் உண்டாகும். வாழ்க்கை நடத்து வதற்கு சிரமப்பட வேண்டியதிருக்கும். எனினும் ஜாதகர் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்வார்.

செல்: 98401 11534

bala010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe