மீன ராசியில் ராகு இருந்தால், ஜாதகர் சுமாரான தோற்றத் துடன் இருப்பார். உடல்நலத்தில் குறை இருக்கும். பல மறைமுக வேலைகளைச் செய்து, பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் பெறுவார்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு இருந்தால், எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். குடும்ப சுகத்தில் குறை இருக்கும். பல சட்ட விரோத செயல்களைச்செய்து ஜாதகர் பணத்தைச் சம்பாதிப்பார். கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவார்.
3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். தன் பலவீனத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். மறைமுகமான காரியங் களில் ஈடுபட்டு பணத்தைச் சம்பாதிப்பார்.
4-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு இருந்தால், ஜாதகருக்கு பெற்றோருடன் சுமாரான உறவு இருக்கும். எனினும், அவருக்கு தாயாரின் ஆதரவு இருக்கும். பூமி, மனை சுகம் இருக்கும். ஜாதகர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வார். ஆனால், மனதில் சந்தோஷம் இருக்காது.
5-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் ராகு இருந்தால், படிப்பு விஷயத்தில் பல பிரச்சினைகள் இருக்கும்.
வாரிசுகளுடன் உள்ள உறவில் சில சிக்கல்கள் இருக்கும். ஜாதகருக்கு அலட்சிய குணம் இருக்கும்.எப்போதும் சிந்தனையிலேயே இருப்பார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உழைப்பார். மனதில் சந்தோஷம் இருக்கும்.
6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் ராகு இருந்தால், பகைவர்களால் பிரச்சினை இருக்கும். அவர்களை ஜாதகர் வெல்வார். மாமனாரின் வீட்டிலிருந்து சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.மிகவும் சாதுரியமாக செயல்பட்டு பல சாகசங்களைச் செய்வார். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருந்தவாறு தன் செயல்களைச் செய்வார்.
7-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் ராகு இருந்தால், கணவனாக இருந்தால் மனைவியாலும், மனைவியாக இருந்தால் கணவனாலும் சில கஷ்டங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கடுமையான சோதனைகளைக் கடக்க வேண்டியதிருக்கும். ஜாதகர் பல சாதுரியமான காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்.... பணம் சம்பாதிப்பார்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் ராகு இருந்தால், உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச் சினை இருக்கும். திருமண விஷயத்தில் சிலருக்கு தடைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும்.
9-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் ராகு இருந்தால், அதிர்ஷ்டத்தில் பிரச்சினை இருக்கும். தர்ம காரியங்களைச் செய்வதில் பல தடங்கல்கள் இருக்கும். பெயர், புகழ் கிடைப் பதில் சிக்கல்கள் இருக்கும். கடுமையாக உழைத்து, பயணம் செய்து, பல வேலை களைச் செய்து, பல போட்டி களைச் சந்தித்து ஜாதகர் வெற்றிபெறுவார்.
10-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு இருந்தால், ஜாதகருக்கு தந்தை யுடன் உள்ள உறவில் பிரச் சினை இருக்கும். அரசாங்க விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். பெயர், புகழில் குறை இருக்கும்.
ஜாதகர் தன் அறிவை பயன் படுத்தி, கடுமையாக உழைத்து வெற்றி பெறுவார். போட்டி, பொறாமைகளை அவர் சந்திக்க வேண்டியதிருக்கும்.வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
11-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் ராகு இருந்தால், நல்ல வருமானம் இருக்கும். பல போட்டிகளைக் கடந்து பணவரவு இருக்கும். ஜாதகர் எப்போதும் மனம் தளராமல் இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பல ரகசிய காரியங் களைச் செய்து பணத்தைச் சம்பாதிப்பார்.
12-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் ராகு இருந்தால், ஜாதகருக்கு செலவுகள் அதிக மாக இருக்கும். அவர்மீது போட்டி, பொறாமை இருக்கும்.
தலையில் நோய் இருக்கும். சிலருக்கு சரியாக தூக்கம் வராது. பல செயல்களைச் செய்து ஜாதகர் வெற்றி பெறுவார். வெளித்தொடர்பு களில் பணவரவு இருக்கும்.
செல்: 98401 11534