சென்ற இதழ் தொடர்ச்சி...
19. மூலம்
இது தனுசு ராசியில் 1 டிகிரிமுதல் 13.20 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் கேது ஆவார். இவரின் காலில் ராகு சென்றால், அங்கு ராகு+கேது எனும் இணைவு ஏற்படுகிறது. இது இரு பாம்புகளின் தொடர்பு எனக்கொள்ளலாம். லக்னம், ராசி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
மச்சம்: இவர்களுக்கு இடது விலாப் புறத்தில் மச்சம் இருக்கும்.
குணம்: ஒரு தனுசு எனும் குருவின் வீட்டில் ராகு எனும் பாபர், கேது எனும் இன்னொரு பாபரின் காலில் பயணம். இவர்களுக்கு நல்ல புத்தி, சீரிய சிந்தனை எல்லாம் இருக்கும்தான். ஆனால் நடைமுறைக்கு வரும்போது, எல்லாம் கோணலாகிவிடும். நிறைய தர்மம் செய்யணும் என பர்ûஸ திறக்கும் நேரம், எதுக்காக காசை வீணா செலவளிக்கணும், கொஞ்சம் கொடுத்தால் போதும் என செயலாற்றுவர். இந்த வகை ஆட்கள், உழவாரப்பணி செய்தாலும், வேலை செய்வதுபோல் நடிக்கவே செய்வர். இவர்கள் தெய்வத்தை வணங்கினாலும், முழுமையாக தொழாமல், சாமி என்ன நகை போட்டிருக்கு, மாமி போட்டிருந்த அட்டிகை சூப்பர், எந்த கடையில் வாங்கியது என கேட்கணும் என இந்த லட்சணத்தில்தான் வழிபாடு அமைந்திருக்கும். இவர்களுக்கு கடைத் தேங்காயை எடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் உயர்ந்த பண்பாளர்கள் எனும் பெயர் இருக்கும்.
நல்ல பலன்+தொழில்: இவ்வமைப்பு உள்ளவர்களின் ஜாதகத்தில், சாரநாதர் கேது சுபர் பார்வை, சுபர் சேர்க்கைப்பெற்று சுபத்தன்மையுடன் இருந்தால், இவர்கள் நல்ல பக்தியுடன் திகழ்வர். எனினும் ராகுஇருப்பதால், இவர்கள் குடும்பத்தை கவனிக்காமல், கோவில் கோவிலாக சுற்றுவர். இதனால் குடும்பம் இவரை வெறுக்கும். இவ்வமைப்பு, சிலரை பிற மனிதர்களை பாசமாக, பத்திரமாக பாதுகாக்கச் செய்யும். இந்த நேரம் இவர்கள் குடும்பத்தினரைஅலட்சியப்படுத்தி, பிறமனிதர்களைஅன்புடன் நடத்துவர். இதனால் இவர்களை ஊர்க்காரர்கள் ஆஹா இவரைப்போல் நல்ல மனிதர் உண்டா என மதிப்பாக நடத்துவர். இந்த அழகில், வேறு வழியில்லாமல், இவரது வாழ்க்கைத் துணையே அத்தணை பொறுப்பையும் செய்ய வேண்டியிருக்கும். இவர்கள் அனேகமாக அர்ச்சகர் பணிபுரிவர். அல்லது வெளிநாடு சம்பந்தமான தொழில் புரிவர். இயற்கை சார்ந்த பழைய விதைகள் பற்றிய விழிப்புணர்வு வேலை இருக்கும். சிலர் மடங்களில், பசு சாலைகளில் வேலைபுரிவிர்.
சென்ற இதழ் தொடர்ச்சி...
19. மூலம்
இது தனுசு ராசியில் 1 டிகிரிமுதல் 13.20 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் கேது ஆவார். இவரின் காலில் ராகு சென்றால், அங்கு ராகு+கேது எனும் இணைவு ஏற்படுகிறது. இது இரு பாம்புகளின் தொடர்பு எனக்கொள்ளலாம். லக்னம், ராசி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
மச்சம்: இவர்களுக்கு இடது விலாப் புறத்தில் மச்சம் இருக்கும்.
குணம்: ஒரு தனுசு எனும் குருவின் வீட்டில் ராகு எனும் பாபர், கேது எனும் இன்னொரு பாபரின் காலில் பயணம். இவர்களுக்கு நல்ல புத்தி, சீரிய சிந்தனை எல்லாம் இருக்கும்தான். ஆனால் நடைமுறைக்கு வரும்போது, எல்லாம் கோணலாகிவிடும். நிறைய தர்மம் செய்யணும் என பர்ûஸ திறக்கும் நேரம், எதுக்காக காசை வீணா செலவளிக்கணும், கொஞ்சம் கொடுத்தால் போதும் என செயலாற்றுவர். இந்த வகை ஆட்கள், உழவாரப்பணி செய்தாலும், வேலை செய்வதுபோல் நடிக்கவே செய்வர். இவர்கள் தெய்வத்தை வணங்கினாலும், முழுமையாக தொழாமல், சாமி என்ன நகை போட்டிருக்கு, மாமி போட்டிருந்த அட்டிகை சூப்பர், எந்த கடையில் வாங்கியது என கேட்கணும் என இந்த லட்சணத்தில்தான் வழிபாடு அமைந்திருக்கும். இவர்களுக்கு கடைத் தேங்காயை எடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் உயர்ந்த பண்பாளர்கள் எனும் பெயர் இருக்கும்.
நல்ல பலன்+தொழில்: இவ்வமைப்பு உள்ளவர்களின் ஜாதகத்தில், சாரநாதர் கேது சுபர் பார்வை, சுபர் சேர்க்கைப்பெற்று சுபத்தன்மையுடன் இருந்தால், இவர்கள் நல்ல பக்தியுடன் திகழ்வர். எனினும் ராகுஇருப்பதால், இவர்கள் குடும்பத்தை கவனிக்காமல், கோவில் கோவிலாக சுற்றுவர். இதனால் குடும்பம் இவரை வெறுக்கும். இவ்வமைப்பு, சிலரை பிற மனிதர்களை பாசமாக, பத்திரமாக பாதுகாக்கச் செய்யும். இந்த நேரம் இவர்கள் குடும்பத்தினரைஅலட்சியப்படுத்தி, பிறமனிதர்களைஅன்புடன் நடத்துவர். இதனால் இவர்களை ஊர்க்காரர்கள் ஆஹா இவரைப்போல் நல்ல மனிதர் உண்டா என மதிப்பாக நடத்துவர். இந்த அழகில், வேறு வழியில்லாமல், இவரது வாழ்க்கைத் துணையே அத்தணை பொறுப்பையும் செய்ய வேண்டியிருக்கும். இவர்கள் அனேகமாக அர்ச்சகர் பணிபுரிவர். அல்லது வெளிநாடு சம்பந்தமான தொழில் புரிவர். இயற்கை சார்ந்த பழைய விதைகள் பற்றிய விழிப்புணர்வு வேலை இருக்கும். சிலர் மடங்களில், பசு சாலைகளில் வேலைபுரிவிர். ஆயுர் வேத மருத்துவராக இருப்பர். குற்றவியல் வழக்கறிஞர், கெமிக்கல், மருந்து சம்பந்த தொழில் செய்வர்.
கெட்ட பலன்: மூல நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது, அதன் சாரநாதர், கேதுஅசுபர் பார்வை பெற்றிருந்தால், அங்கிங்கே திருடினால் சுவாரஸ்யமாக இராது என்று, கோவிலில் திருட தோன்றும். போலி சாமியாராகி, மடம் ஆரம்பித்து, இது பெண் சிஷ்யர்களுக்கு மட்டுமே உள்ள மடம் என அறிவிப்பு செய்வர். காணிக்கைகள் ஒன்லி தங்கம் அல்லது வெளிநாட்டு கரன்சி மட்டும் என கெடுபிடி செய்வர். போலி மருத்துவராகி, பெரிய ஆஸ்பத்திரி கட்டி கை ராசி மருத்துவர் என அவர்களே விளம்பரமும் செய்துகொள்வர். நீதிமன்றத் தில் பிறழ் சாட்சிகளை உருவாக்க தனி பிரிவு வைத்து மெயின்டெய்ன் பண்ணுவர். இதோ இப்போதே கடவுளை வரவழைக்கிறேன். உங்களின் உடைஞ்ச காலை ஒட்ட வைக்கி றேன் என கூப்பாடு போட்டு, அதனை மத போதனை என கூறிவிடுவர். எல்லா வற்றையும்விட, மாயமந்திரம், செய்வினைசெய்கிறேன் என கிளம்பிவிடுவர். இதுதான் ராகுவின் செயல்பாட்டில், மிக மோசமானதாக அமையும்.
நோய்: இடுப்பு சம்பந்த நோய்கள், வாத நோய்கள், பார்க்கின்ஸன் பாதிப்பு, சிலருக்கு நுரையீரல் தொந்தரவு வரும்.
நாடி ஜோதிடம்: ராகுவை தகப்பன் வழிபாட்டன் என்றும், கேதுவை தாய்வழி பாட்டன் என்றும் கூறும். மேலும் ராகுவை முஸ்லீம் எனவும், கேதுவை கிறிஸ்துவர் என்றும் பகரும். எனவே இவர்கள் சார்ந்த தொந்தரவுகளை ஜாதகர் அனுபவிப்பார் எனலாம்.
பரிகாரம்: இந்த கிரக இணைவுக்கு திருநாகேஸ்வரம் ஏற்புடைய கோவில் ஆகும். அருகிலுள்ள கோவிலில் இரு பாம்புகள் இணைந்துள்ள, நாகருக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடவும். பிற மத மக்களின் தேவைக் கேட்டறிந்து உதவுங்கள்.
20. பூராடம்
இது தனுசு ராசியில் 13.20 டிகிரிமுதல் 26.40 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் சுக்கிரன் ஆவார். எனவே ராகு+சுக்கிரன் என கணக்காகும். இவர்களின் ராசி, லக்னம்எதுவாகவும் இருக்கலாம்.
மச்சம்: இவர்களுக்கு முதுகில் மச்சம் இருக்கும்.
குணம்: இவர்களுக்கு எப்போதும் தான் அழகாக இருக்கவேண்டும் என்றல்ல, தான் மட்டுமே அழகாக இருக்கவேண்டும் எனும் பேராசை உண்டு. மேலும் இந்த ஆண்கள் தங்கள் மனைவி உலக பேரழகியாக இருக்க
வேண்டும் என மிக விரும்புவர். சரி பொண்டாட்டி சற்று ஏறக்குறைய அழகில் அமைந்துவிட்டால், அதற்காக ரொம்ப ஒர்ரி பண்ண மாட்டார்கள். அழகான பெண்ணை தங்கள் சின்ன வீடாக வைத்துக்கொள்வர். ப்ராப்ளம் சால்வ்ட். நிறைய பெண்களோடு பழக பிடிக்கும். விதவிதமான அசைவை உணவு உண்ண மிக விரும்புவார். நகை, ஆடை என எதிலும் புதுமையாக இருக்கவிரும்புவர். திருமணமும் வெளிமத, வேறுஇன மனிதர்களுடன் நடத்தவே ஆசைப் படுவர். இசை, பாடல், சினிமா எல்லாமே வெளியூர், வெளிநாட்டு கலைதான் பிடிக்கும்.
அட சரக்குகூட, ஃபாரின் சரக்குத்தான். உள்ளூர் சரக்கை நுனி விரலாலும் தொடு வேனோ என பந்தா காட்டுவர். சுருண்ட தலைமுடி நல்ல புஸþ புஸþ வென்று இருக்கும்.
நல்ல பலன்+தொழில்: ராகுபகவான் பூராட நட்சத்திரம் வாங்கி, அந்த சாரநாதர் சுக்கிரன் சுபத்தன்மையோடு இருந்தால், ஜாதகர் பெரும்பாலும் வெளிநாட்டு பணம் கையாள்வார். கலைத்துறையின் எந்த பிரிவில் இருப்பினும், தனது வேறுபாடான முயற்சியால், தனித்தன்மையுடன் மிளிர்வார். கோவில் நகைகளை, புதுமை புருத்தி செய்து அணிந்துகொள்வார். வெளிநாட்டு வாகனம் வாங்குவார். அல்லது அது சார்ந்த தொழில் செய்வார். நிறைய வட்டி தரும் தொழில் தொடங்குவார். இவர்கள் இனிப்பு, உணவு மற்றும் உணவு தயாரிப்பு பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலை செய்வர். இதேபோல் மலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் தொழில் அதிபதி ஆவார். வெள்ளி நகை தயாரிப்பை வெளிநாட்டுக்கு விரிவுபடுத்துவார். வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வர். சில பெண்கள்,அரசியலில் சேர்ந்து, அமைச்சர் ஆகிவிடுவர். எனவே ராகுவின் சாரநாதர் சுக்கிரன் சுபத் தன்மையோடு இருந்தால், வெளிநாடு சம்பந்த நல்ல தொழில்கள் கைகூடும்.
கெட்ட பலன்: ராகு, பூராட நட்சத்திர காலில் நிற்கும்போது, அதன் சாரநாதர் சுக்கிரன், அசுபத்தன்மை அடைந்து கெட்டிருந்தால், அந்த ஜாதகர் மொடாக் குடியனாகி, மட்டையாகி கிடப்பார். நிறைய பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வார். இந்த மாதிரி கிரக அமைப்பு இருப்பின் சினிமா எனும் கலை உலக பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது. சிக்கி சீரழிந்து, பசியோடு நடு ரோட்டில் கிடக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக விரும்பத்தகாத, சட்டப்புறம்பான செயல் களைச் செய்யநேரிடும்; கவனம்தேவை. ஒன்று பணம் இருக்கவே இருக்காது.
அல்லது கள்ளப்பணம், சட்டபுறம்பான வழிகளில் வரும் பணம் மட்டுமே கிடைக்கும். கர்ப்பபையில் கட்டி ஏற்படும். திருமணம் தோல்வி அடையும். கவரிங் எனப்படும் போலி நகைகளை மட்டுமே அணியமுடியும். நிறைய பொய், கபட வார்த்தை என வாக்கு சுத்தமில்லாமல் போய்விடும். இவ்விதம் ராகுவின் சாரநாதர் சுக்கிரன் கெட்டுப்போய் இருக்கும் குழந்தைகளுக்கு, கண்டிப்பாக ஒரு கைத்தொழிலை சிறு வயதிலேயே கற்று கொடுத்துவிடுங்கள்.
நோய்: தண்டு நாளங்களில் வலி, இடுப்பு தொடைகளில் அதிக வலி, வாதநோய், அதிக சளி பாதிப்பு, அளவுக்கு மீறிய குடிப்பழக்கம் என இவ்வித நோய்கள் தாக்கும்.
நாடி ஜோதிடம்: ராகுவை கள்ளத்தனம்,வெளிநாடு எனவும், சுக்கிரனை மனைவி, பிற பெண்கள் எனவும் நாடி ஜோதிடம் அடையாளம் காட்டுகிறது. எனவே இவ்வமைப்பு உடையவர்கள், ஏதோ ஒருவிதத்தில், பிற இன, பிற மத நபருடன் தொடர்புகொள்வர் எனக் கூறலாம்.
பரிகாரம்: இவ்வமைப்பு உள்ளவர்கள் திருவாரூர்- திருப்பெருவேளுர்- மணக்கால் ஐயம்பேட்டை நாராயணரை வணங்கவேண்டும். அருகிலுள்ள மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றியும், நல்ல நெய்யும் வாங்கியும் கொடுக்கவும். உங்களால் முடிந்தால், பெருமாள் கோவிலுக்கு உளுந்தும்,சர்க்கரையும் வாங்கிக்கொடுங்கள்.
21. உத்திராடம்
இந்த நட்சத்திரம் தனுசு ராசியில் 26.40 டிகிரிமுதல் 30 டிகிரிவரையும், மகரத்தில் 0 டிகிரிமுதல் 10.00 டிகிரிவரையும் உள்ளது. இதன் சாரநாதர் சூரியன் ஆவார். ராகு பகவான் உத்திராட நட்சத்திரம் எடுத்துச் சென்றால் அது ராகு+சூரியன் எனும் கணக்காகும்.
மச்சம்: இவர்களுக்கு இடுப்பில் மச்சம் இருக்கும்.
குணம்: எப்போதும் ராகு+சூரியன் இணைவு ஒரு கிரகண தோஷம் உண்டாக்கி விடும். எனவே இவ்வித அமைப்பு உள்ள ஜாதகர்கள், தங்கள் மனத்தினுள் இருப்பதை, சட்டென்று வெளியே சொல்ல இயலாமல் தவிப்பர். அது நல்ல விஷயம் அல்லது கெட்ட சமாச்சாரமோ, எதுவாயினும் வெளிப்படுத்த மிகத்தயங்குவர். இதனால் ஏற்படும் கெட்ட பெயரையும், கொஞ்சம் சுணங்காமல் ஏற்றுக்கொள்வர். வாழ்நாள் முழுவதுமே, பிறர் என்ன நினைப்பார்களோ, எனும் எண்ணத்திலேயே, கழித்துவிடுவர். ஒரு கால கட்டத்திற்கு பின், எவரும் இவரை நம்பாமல், வாழ்வில் தேங்கிவிடுவர்.
நல்ல பலன்+தொழில்: ராகு பகவான்உத்திராடம் எனும் சூரிய சார நட்சத்திரத்தில் செல்லும் நேரம், சூரியன் சுபமாக இருப்பின்இவர்களின் அரசியல் ஈடுபாடு, தொடர்புஇவை நேரிடையாக இராது. அரசியல் நிகழ்வு
களின் பின்புலமாக, தொடர்பாளராக, பிண்ணனி செயலராக பணிபுரிவர். பெரும்பாலோருக்கு, இவர் அரசியலில், அரசாங்கத்தில், அதிகாரிகள் மட்டத்தில், மிக செல்வாக்கு உடையவர் என்பதே தெரியாமல்
இருக்கும். ஆனால் இவரை தொடர்புகொண்டால் எந்த விஷயத்தையும், யார் மூலமாவது, எப்படியாவது முடித்து கொடுத்துவிடுவார். இந்தமாதிரி அண்டர் கிரவுண்ட்வேலைமூலம் ஆள் பழக்கம் மட்டுமல்ல,
நல்ல பணப்புழக்கமும் பெற்றுவிடுவார். நாளை பின்னே ஏதாவது வில்லங்கம்வந்தால் எனக்கு ஒன்றுமே தெரியாது என பாதுகாப்பாக ஒதுங்கி விடுவார். இவரைப்பற்றி அறியாதவர்கள் இந்த ஆள் ஏன்எப்போதும் மண்ணுமாதிரி முழித்துக் கொண்டே இருக்கிறான் என நகையாடுவர்.
கெட்ட பலன்: ராகுபகவான் உத்திராட நட்சத்திரத்தை தொட்டு, அதன் சாரநாதர், சூரியன் கெட்டு அசுபத் தன்மைஅடைந்திருந்தால், இவர்கள் கண்டிப்பாகஅரசாங்க விருந்தினர் ஆகிவிடுவார். ஏனெனில், கள்ளநோட்டு அடித்தாலும்,அரசாங்கத்துக்கு எதிராக தீவிரவாத செயல்களில் இறங்கினாலும், வெளி நாட்டுக்கு, நமது நாட்டு இரகசியங்களை சொன்னாலும் ஒரு நாட்டிலிருந்து,இன்னொரு நாட்டுக்கு அனுமதி இல்லாமல் சென்றாலும் அரசு சட்டத்தை மீறி போதை பொருள் விற்றாலும், பாம்பு போன்றவற்றை வெளிநாட்டுக்கு கடத்தினாலும், வெடி குண்டு தயாரித்தாலும், போலி பத்திரம் தயார் செய்தாலும், அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வரியை கட்டாமல் இருந்தாலும், அரசாங்கம் வாடாப்பா வா என கைதுசெய்து, சிறையில் களி தின்ன வைத்துவிடும்.
நோய்: முழங்காலிலுள்ள எலும்பு தேய்மானம் அடைதல், முடக்குவாதம், தொடை எலும்பு முறிவு என கால் தொடை சம்பந்த நோய் தாக்குதல் வரும்.
.
நாடி ஜோதிடம்: ராகுவை பெரும் போக்கான, ஜாலியான கிரகமாகவும், சூரியனைதந்தை கிரகமாகவும், நாடி ஜோதிடம்உருவகப்படுத்தியுள்ளது. எனவே, இதன் மூலம் இவ்வமைப்பு உள்ள ஜாதகரின் தந்தை,குடி, குட்டி என படுஜாலியாக இருப்பார் எனத் தெரிகிறது.
பரிகாரம்: தர்மபுரம்- காரைக்கால் துர்க்காதேவியை வணங்கவும். அருகிலுள்ள, காளிக்கு நிறைய விளக்கேற்றி வணங்கவும். முடிந்தால் தேவை கேட்டறிந்து, மின் விளக்கு விநியோகம் செய்யவும்.
(அடுத்த இதழில்:
திருவோணம், அவிட்டம், சதயம்)
செல்: 94449 61845