சென்ற இதழ் தொடர்ச்சி...
16. விசாகம்
இந்நட்சத்திரம் துலாத்தில் 1, 2, 3-ஆம் பாதமும், விருச்சிகத்தில் 4-ஆம் பாதமும் உள்ளது. துலாத்தில் 20.00 டிகிரியில் இருந்து 30.00 டிகிரியும், விருச்சிகத்தில் 3.20 டிகிரி வரையும் உள்ளது. விசாகத்தின் சாரநாதர் குரு ஆவார். எனவே விசாக நட்சத்திரத்தில் ராகுபகவான் சென்றால் அங்கு குரு+ராகு எனும் நிலை ஏற்படும். ராசி, லக்னம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
மச்சம்: மார்பு பகுதியில் மச்சம் இருக்கும்.
குணம்: இவர்கள் மனதிற்குள் எவ்வளவு வருத்தம் இருப்பினும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளலாமல் மனதில் பூட்டி வைத்துக்கொள்வர். மறைத்துக் கொள்வார்களே தவிர, மறக்கமாட்டார்கள். ராகு எனும் அசுப கிரகம், குரு எனும் சுப சாரத்தில் செல்வதால், சட்டென்று பதில் சொல்லாமல் செய்துவிடும். எனினும், பிறருக்கு, வேண்டிய நன்மைகளை செய்துவிட்டு, கடைசியாக, சொல்லிக் காண்பித்துவிடுவர். பலன் பெற்றவர் கள், இவர் எதையும் மறைக்கவில்லை, குத்திக்காட்டி பேசுகிறாரே என மனம் நொந்து போய்விடுவர். இதற்கு இரண்டு அறை கொடுத்திருக்க லாம் என யோசிக்க வைத்துவிடுவர். இதுதான் ஒரு சுபரின் காலில் அசுபர் ராகு கொடுக்கும் குணமாகும். இவர்கள் சிரித்து பேசுகிறார்களெ என நம்ப இயலாது.
நல்ல பலன்+ தொழில்: குரு எனும் ஞானகாரகன் காலில், அசுப ராகு செல்லும்போது, இவர்கள் இருப்பதை இல்லாதது போல் இல்லாததை இருப்பதுபோல் பேசவும், மாற்றவும் வல்லவர்கள். அனேக
மாக இவர்களின் மாறுபட்ட பேச்சுத்திறமை கிரிமினல் வக்கீல் மற்றும் ஜோதிடர் ஆக்கிவிடும். கல்லூரியில் பேராசிரியராக இருப்பர். அரசியல் களத்தில் பேச்சாளராக ஜொலிப்பர்.
வங்கி, இன்சுரன்ஸ் துறை அமோகமாக சரிப்பட்டு வரும். திருமணதரகர், ரியல் எஸ்டேட் வேலைக்கு சரியான ஆளாக அமைவர். தங்க நகை வியாபாரிகளாக சிறப்படைவர். குழந்தைகள் நல மருத்துவராக ஆகிவிடுவர். கடன் சார்ந்த தொழில் இவர்களுக்கு கைவந்த கலையாகும். சித்த, ஆயுர்வேத மருத்துவராக மாறலாம். ஆலோசனை கூறும் துறையில் இடம் பெறுவார். குரு நல்ல சுப நிலையில் இருந்து, அவரின் காலில் ராகு சென்றால் மேற்கண்ட தொழில்களில் நிபுணர் ஆகிவிடுவர்.
கெட்ட பலன்: விசாக நட்சத்திரம் செல்லும் ராகு, அதன் சாரநாதர் குரு

கெட்ட பலன்: விசாக நட்சத்திரம் செல்லும் ராகு, அதன் சாரநாதர் குரு கெட்டுவிட்டால், இவர்களுக்கு நேர்மையான செயல், நேரான வழி என்றால் என்ன என்றே தெரியாது. அரசியலில் அண்டர் கிரவுண்ட் வேலையா, ரைட்டு, தங்கத்தில் செம்பு மிக்ஸிங் தொழிலா, டபுள் ரைட்டு, குழந்தைகளுக்கு போதை விற்பனையா சரி. துட்டு வாங்கிவிட்டு, மார்க் அதிகம் போடணுமா ஓ.கே., போலிச் சாமியாரா, அட மடமே வைத்துவிடலாம். சாமியை வைத்து ஏமாத்துணுமா, அட கைவந்த கலையாச்சே, வட்டிக்கடை பிஸினஸ், ரொம்ப பிடிச்சதாச்சே, போலி மத போதகர், ரொம்ப பிடிச்ச வேலை, பரிகாரம் பல சொல்லும் ஜோதிட தொழிலா, நான்தான் ஃபர்ஸ்ட் என இன்ன பிற மரியாதையான தொழில்களை நாசமாக்கி விட்டுத்தான் ஓய்வார்கள். குரு+ராகு இணைவு இதுவும் செய்யும், இதற்கு மேலேயும் செய்யும்.
நோய்: அனேகமாக, சிறுநீர், கர்ப்பபை, ஆசனவாய் நோய் வரக்கூடும்.
நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடம் ராகுவை பாட்டனார், குருவை ஜாதகர் என்றும் குறிப்பிடுகிறது. ஒன்று இவரின் தாத்தா நிறைய பெண்களை ஏமாற்றியிருப்பர். அல்லது ஜாதகர் ஆசிரியத் தொழிலில் பெரும் தில்லுமுல்லு செய்திருப்பார். அல்லது இவர்கள் வம்சத்தில், கோவில் சொத்தில் வேண்டாத்தனம், குறிப்பாக கோவில் நகைகளை மோசடி செய்திருப்பர் என உணரலாம்.
பரிகாரம்: தில்லை காளியை வணங்க லாம். அருகிலுள்ள காளிக்கு, முடிந்த ஆபரணம் வாங்கி சாற்றலாம். அல்லது மஞ்சளால் மாலை கோர்த்து கொடுக்கலாம். மஞ்சள் புடவை, குங்குமம் காணிக்கை ஆக்கலாம்.
17. அனுஷம்
இது விருச்சிக ராசியில் 3.20 டிகிரிமுதல் 16.40 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் சனி ஆவார். இந்த அனுஷ நட்சத்திரத்தில், ராகுபகவான் நின்றால், அங்கு சனி+ராகு கிரக இணைவு ஏற்படும்.
மச்சம்: இவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் மச்சம் இருக்கும். ராசி, லக்னம் ஏதுவாகிலும் இருக்கலாம்.
குணம்: ராகு ஒரு பொல்லாத, பெரும் போக்கு கிரகம். அவர் செல்லும் சாரநாதர் சனி மிகமிக மந்த கிரகம். இருப்பதோ செவ்வாயின் விருச்சிக வீட்டில். எனவே இவர்களின், அத்தனை செயல்களிலும், ஒரு இருட்டுத்தனம், ஒரு இரகசியம் பொதிந்திருக்கும். இவர்கள் வாழ்வின் எந்த தளத்தில் வாழ்ந்தாலும், வெளிப்படைத்தன்மை என்பது இரவே இராது. அது மட்டுமல்ல; இவர்களின் சந்தோஷம், துக்கம், கண்ணீர் என எதனையும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஒரு புது விஷயத்தை, இவர்களிடம் பகிரும்போது, அதற்கு எந்தவொரு ரியாக்ஷனும் காட்டாமல், தேமேயென்று நிற்பர். சொன்ன நபர் மண்டை குழம்பி போய்விடுவர். இதைவிட முக்கியம் இந்த கிரக சேர்க்கை, ஜாதகத்தில் இருப்பின், அவர்கள் கொலை செய்துவிட்டுகூட, மிக அமைதியாக இருப்பர். இவர்களைக் கணிப்பது மிக கஷ்டம்.
ஒடுக்கப்பட்ட, விலக்கப்பட்ட செயல்களை யாருமறியாமல், செய்துமுடிப்பதில், வெகு ப்ரியம் கொண்டவர்கள். இந்த மாதிரி அமைப்பில் குழந்தைகள் இருந்தால், விளையாட்டு, பேச்சு போட்டி என நாலு பேருடன் பழக்கமாகி, கலந்து பேசும்வகையில் மாற்றுங்கள்.
நல்ல பலன்+ தொழில்: சாரநாதர் சனி சுபத்தன்மை பெறின் இந்த மாதிரி நபர்கள், சுரங்கத் தொழிலுக்கு மிக பொருத்தமானவர்கள். விருச்சிக ராசியை, ஒரு ஆழ்ந்த, பள்ளமான, பள்ளத்தாக்கான,
பாதளமான இடத்தைக் குறிப்பதாகும். மேலும் இங்கு அமைந்துள்ள கிரகச் சேர்க்கையும் லேசுப்பட்டதல்ல. எனவே இவர்களின் முக்கிய தொழில் சுரங்கம் சம்பந்த வணிகமாக அமையும். அல்லது நடுக்காட்டில், சூரிய வெளிச்சம் இல்லாத பொந்து போன்ற இடத்தில் வேலை செய்வர். சிலர் அடர்த்தியான மரங்கள் கொண்ட எஸ்டேட்டில் வேலை பார்ப்பர். பெட்ரோல் எடுக்கும் பணியில் சேர்வர். சிலர் குழாய் பதிக்கும் வேலை அல்லது சாக்கடை தோண்டும் வேலையை பின்பற்றுவர். சிலர் சுடுகாட்டிலும், சிலர் சவக்கிடங்கிலும் பணியாற்றுவர். சிறைத் துறை வேலை ஏற்புடையது. மேற்கண்ட இடங்கள் அருகே போவதற்கே, சாதாரண ஜனங்கள் அச்சப்படுவர். ஆனால் இவ்வித கிரகச் சேர்க்கை ஆட்களுக்கு இவ்வேலைகள் வெகு ஈர்ப்புடையதாக இருக்கும்.
கெட்ட பலன்: சாரநாதர் சனி அசுபத்தன்மை பெறின் ஏற்கெனவே கூறியதுபோல் இந்த கிரகச் சேர்க்கை, அழுத்தமான அச்சமுட்டுவதாக, திகிலானதாக இருக்கும். இதனால், இவர்களின் சாரநாதர் சனி நீசமாகி இருப்பின், அதில் அமர்ந்த ராகு, ஜாதகரை கொலை செய்ய தூண்டுவார். கூலிக்கு கொலை செய்பவராக இருப் பார். கற்பழிப்பு, தாலி பறிப்பு இவை சகஜம். சுயநலமான அயோக்யனாக இருப் பார். கருணை என்பது துளியும் இருக்காது. குடிப்பது, போதை பொருள் பயன்பாடு வெகு அதிகமாக இருக்கும். வெகு முரட்டுத்தனமானவர். இவருடைய வாழ்க் கைத்துணை ஒரு கட்டத்தில், இவரை விட்டு நீங்கிவிடுவார். இவரைக் கண்டால், காவல் துறையே அச்சப்படும் அளவிற்கு வாழ்வு அமையும்.
நோய்: புற்றுநோய், மறைவிடங்களில் நோய், பால்வினை நோய்கள் என சட்டென்று வெளியே சொல்லமுடியாத நோய்கள் வரும்.
நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடம் ராகுவை பாட்டனாராகவும், சனியை வேலையாட்களாகும் கூறும். ஒன்று உங்கள் பாட்டனாரின் மரணம் உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களால் உண்டாகி இருக்கக்கூடும். அல்லது உங்கள் தாத்தா, வேலை செய்யும் ஆட்களிடம் முரண்பாடாக நடந்து, அவர்களை மிக காயப்படுத்தி இருப்பார்.
பரிகாரம்: திருவக்கரை காளியை வழிபடலாம். அனுஷம் எனும் சனி சாரம் ஏற்று, ராகுபகவான் செல்லும்போது, பைரவர் வழிபாடே ஏற்புடையது. எனவே, அருகிலுள்ள கோவில்களில் காளியையும், பைரவரையும், தீபமேற்றி வணங்கவும்.
18. கேட்டை
இந்த நட்சத்திரம், விருச்சிக ராசியில், 16.40 டிகிரிமுதல் 30 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் புதன் ஆவார். இக்கிரக அமைப்பில் ராகு+புதன் என வரும்.
மச்சம்: கேட்டை நட்சத்திரத்தில், ராகு நின்றால், வலது விலாப்புறத்தில் மச்சம் இருக்கும். ராசி, லக்னம் எதுவாகிலும் அமையலாம்.
குணம்: ராகு எப்போதும் வேகமான, பரபரப்பான எதிர் சிந்தனையாளர். அவர் வாங்கிய புதன் சற்றே, நகைச் சுவையான குதர்க்க புத்திசாலி கிரகம். இந்த கிரக இணைவானது ஜாதகரை ஒழுங்காக சிந்திக்கவிடாது. சிந்தனையில் சிக்கல் வரும். இந்த சிக்கல் எண்ணங்களை குசும்புத்தனமாக ஆகிரமிக்கும். இந்த குசும்பு வார்த்தைகளில் சலங்கை கட்டி ஆடும். இந்த வார்த்தைகள் சில சமயம் சிலரை நோகடிக்கும். சிலரை அழச்செய்யும். சிலரை அதிரடிக்கும். சிலரை, நாலு அறை கொடுக்கச் செய்யும். உடனே இந்த ஜாதகர்கள் திருந்தி விடமாட்டார்கள். மனசில் கறுவிக்கொண்டே, அண்டர் கிரவுண்ட் வேலை செய்ய ஆரம்பித்து, எதிரியை கருவறுத்துவிடுவர். கால ஓட்டத்தில், இவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தம் கற்பிக்கப்படும். இவரின் தீவிரமான யோசனைகளை கண்டு, மக்கள் இவரை அணுக அச்சமுறுவர்.
நல்ல பலன்+ தொழில்: ராகு சார வாங்கிய புதன் சுபத்தன்மை பெற்று இருப்பின், இவர்களைப்போல் மிகச் சிறந்த கிரிமினல் வழக்கறிஞர்களை காணவே இயலாது. இவ்வித மாறுபாடான புத்தி, இவர்களை நல்ல நகைச்சுவை நடிகராக மாற்றும். இவர்கள் எழுத்துலகில், பிறர் எழுதத் தயங்கும் விஷயங்களை, செய்திகளை விரிவாக எழுதி பிரமிக்கச் செய்வர். தகவல் தொடர்பு துறையில் மாறுபாடாக செயல்
பட்டு முதன்மை பெறுவர். இவர்கள் கிசுகிசு செய்திகளை எழுதுவதில் இல்லாடியாக இருப்பர். அச்சகத் துறையை வேறுபாடாக கையாள்வர். தையல் துறையை, மாறுபாடாக, வேறுபாடாக மாற்றி நல்ல லாபம் காண்பர். வருமான வரி சம்பந்தமான தணிக்கை, துறையை அசால்ட்டாக கையாள்வார். ஒப்பந்த துறையில் கில்லாடி யாக இருப்பர். அதுபோல் கணிதம் சம்பந்த மாக, சுருக்கமான வழிகளைக் கண்டுபிடித்து, ஆச்சர்யப்படுத்துவர். பல மொழிகள் பேசுவதில் வல்லவராக இருப்பர்.
கெட்ட பலன்: ராகுபகவான், புதனின் சாரம் பெறும்போது, அங்கு ஒரு ஒயிட் காலர் குற்றம் வந்து அமர்ந்துவிடும். இந்த சாரநாதர் புதன் கெட்டிருந்தால், முதல் வேலையாக கள்ள நோட்டு, அது எல்லா தேச கள்ள நோட்டையும் அச்சடித்துவிடுவர். திருட்டு, கொள்ளையடிப்பது எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என ரொம்ப ஈஸியான விஷயமாகும். கொஞ்சமாக, சொந்த தேவைக்கு கஞ்சா செடி வளர்ப்பார். பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் வாங்கிவிடுவார். ஒரு அச்சகம் தொடங்கி, தடைப்பட்ட செய்திகளை மட்டும் அச்சடிப்பார். செம்பு உலோகத்தை தங்கம் என்பார். அசிங்க அசிங்கமாக பேசுவதிலும், நாதாரித்தனமாக எழுதுவதிலும் மிகப் ப்ரியம் கொண்டவர். ஊர், உலகிலுள்ள அத்தனை கெட்ட பயல்களுக்கும் இவர்தான் வழக்கறிஞராக இருந்து, அவர்களை வெளியே கூட்டிவருவார். ஆக, சாரம் வாங்கிய புதன் கெட்டு, அதில் செல்லும் ராகு ஜாதகரை, சட்டப்புறம்பான செயல்களை மட்டுமே செய்யச்செய்யும்.
நோய்: பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பை கோளாறு, மறைவிடங்களில் சிறு கட்டி தோன்றுதல் என இவ்விதமான நோய் தாக்கம் வரும்.
நாடி ஜோதிடம்: ராகுவை தாத்தா என்றும் புதனை இணைய சகோதரன் அல்லது தாய்மாமன் என்றும் கூறும். இதன்படி, தாத்தாவுக்கும், தாய்மாமனுக்கும் ஆகாது எனலாம். அல்லது இருவரும் சேர்ந்து, சட்டபுறம்பான செயல்களைச் செய்வார்கள் என்றும் கணிக்கலாம்.
பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூர் சென்று, ஸ்ரீராமனுஜரை வணங்குவது நல்லது. அருகிலுள்ள துர்க்கைக்கு குங்குமம் மற்றும் கற்பூரம் வாங்கி காணிக்கை செலுத்தவும்.
(அடுத்த இதழில்
மூலம், பூராடம், உத்திராடம்)
செல்: 94449 61845