தனுசு லக்னத்திற்கு 12 பாவங்களில் ராகு!

/idhalgal/balajothidam/raghu-12-bhavas-sagittarius

னுசு லக்னத்தில், குருவின் ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் சிறிது பிரச்சினை இருக்கும். மறைமுகமான செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார். ஜாதகர் வெளியே நல்லவரைப்போல காட்சியளிப்பார். ஆனால் உள்ளே குள்ளநரியின் குணமிருக்கும். மனதில் சிந்தனை அதிகமாக இருக்கும்.

2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் ராகு இருந்தால் ஜாதகரால் அதிகமாகப் பணம் சம்பாதிக்கமுடியாது. குடும்ப சந்தோஷத்தில் குறையிருக்கும். ஜாதகர் சாதுரியமாகத் தன் காரியங்களை முடிப்பார். அதன்மூலம் வெற்றி கிடைக்கும். பல கஷ்டங்களைக் கடந்து பணம் சம்பாதிக்க வேண்டியதிருக்கும்.

rr

3-ஆம் பாவ

3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். துணிச்சலைப் பயன்படுத்தி பணத் தைச் சம்பாதிப்பார். சாதுரியமாகத் தன் செயல்களைச் செய்துமுடிப்பார். கடுமையான உழைப் பாளியாக இருப்பார்.

4-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் ராகு இருந்தால் தாயாரின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். குடும்பத்தில் பல பிரச் சினைகள் ஏற்படும். ஜாதகர் மன தைரியத்துடன் இருப்பார். சாதுரியமாக செயல்பட்டு அனைத் தையும் சமாளிப்பார். எனினும், பெரிய பிரச் சினையில் அவர் அகப்பட்டுக்கொள்வார்.

5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், செவ்வாயின் மேஷ ராசியில் ராகு இருந்தால் ஜாதகருக்கு வாரிசுகளால் பிரச் சினைகள் ஏற்படும். மனதில் அதிகமான சிந்தனைகள் இருக்கும். படிப்பு விஷயத்தில் தடங்கல்கள் உண்டாகும். பல குறுக்கு வழிகளைக் கையாண்டு தன் காரியங்களை முடிப்பார்.

6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு இருந்தால் ஜாதகரைப் பார்த்து பகைவர்கள் பயப்படுவார்கள். தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு தொண்டை கட்டும்.

7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு பகவான் இருந்தால் அவர் உச்ச பலனைக் கொடுப்பார். ஜாதகருக்கு மனைவியால் மன தைரியம் கிடைக்கும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் நடக்கும். பல மறைமுக வேலைகளைச் செய்து ஜாதகர் வர்த்தகத்தில் பணத்தை சம்பாதிப்பார்.

8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் ராகு இருந்தால் ஜாதகர் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். உடல்நலம் கெடும்.

வயிற்றில் பிரச்சினை உண்டாகும். சிலருக்கு சொத்து விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். அதில் சிலர் ஏமாந்துவிடுவார்கள்.

9-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். சிலர் பெரிய அளவில் ஏமாற்றப்படுவார்கள். சிலருக்கு கடவுளை வழிபட மனமிருக்காது. பலர் எந்த செயலைச் செய்வதற்கும் அஞ்சமாட்டார்கள். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார்கள்.

10-ஆம் பாவத்தில் தன் நண்பரான புதனின் கன்னி ராசியில் ராகு இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும்.

அரசாங்க விஷயங்களில் சில பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில நேரங்களில் நஷ்டம் ஏற்படும்.

11-ஆம் பாவத்தில் துலா ராசியில் ராகு இருந் தால் வருமானம் பெருகும். ஜாதகர் சாதுரிய மாக செயல்களைச் செய்து பணம் சம்பாதிப் பார். ஆனால் அதில் கடுமையான போட்டியிருக்கும்.

12-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் ராகு பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். மனதில் கவலைகள் உண்டாகும். சிக்கல்கள் அதிகமிருக்கும். வெளித் தொடர்புகளில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எனினும் ஜாதகர் தன் வேலைகளை தைரியமாகச் செய்வார்.

செல்: 98401 11534

bala060123
இதையும் படியுங்கள்
Subscribe