ப் இமயவர்கோன், அரக்கோணம்.
என் மகன் ரயில்வேயில் அப்ரன்டீசாக தற்காலிகப் பணியில் இருக்கிறார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மகனுக்கு நிரந்தர வேலை வேலை கிட்டுமா?
15-10-1997-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் குரு நீசம். எனினும் லக்னாதிபதி சனியுடன் பரிவர்த்தனை. அதனால் நீசபங்க மடைகிறார். இவரின் வேலை ஸ்தானாதி பதி புதன் உச்சம். அப்படியானால் இவருக்கு மிகப்பெரிய வேலை கிடைத் திருக்கவேண்டும். ஆனால் கிடைக்க வில்லை. இதன்காரணம், புதன் உச்ச வர்க்கோத்தமம் பெற்று, கூடவே 8-ஆம் அதிபதி சூரியனு டன் உள்ளார். இதுவொரு மைனஸ் பாயின்ட். மேலும் 6-ஆம் அதிபதி உச்ச புதனை, சனி தனது நேர்பார்வையால் பார்க்கிறார். இந்த சனி ஜாதகரின் வேலைக்கு தடை, தாமதத்தைக் கொடுப் பார். சூரியன் 8-ஆம் அதிபதி ஆவதாலும், சனி பார்ப்பதாலும் அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் சம்பந்த வேலை கிடைக் கும். நடப்பு 2022, மே மாதம்வரை கேது தசை. இதில் வேலை முன்னேற்றம் கிடைக்காது. அடுத்து வரும் சுக்கிர தசை நிரந்தர வேலை தரும். வேலையிடத்தில் வில்லங்கம் வராமல் கவனமாக இருக்கவேண்டும். வேலை நிரந்தரமாக- நரசிம்மருக்கு 17 வாரம் விளக்கேற்றவும். அவ்வப்போது பானகம் நைவேத்தியம் செய்து விநியோ கம் செய்யவும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jothidamanswers_14.jpg)
ப் ஜெ. தேவேந்திரன், சென்னை-23.
வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் தடை ஏற்படு கிறது. மகள் கல்லூரியில் படிக்கிறாள். இரட்டைக் குழந்தை களான மகன்கள் பள்ளியில் படிக்கிறார்கள். மனைவி மிக பலவீனமானவளாக இருக்கி றாள். ஒரு நாளைக் கடத்துவதே யுகமாகத் தோன்றுகிறது. இத்தகைய தொடர் துயரம் எதனால்? எப்போது விடிவுகாலம்?
9-7-1965-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. ராசிக்கு 2-ல் கேது; 8-ல் ராகு. வாழ்க்கை துயரம் நிரம்பியதாகக் கூறியுள்ளீர்கள். இதற்கு ஜாதகத்தில் நிரம்ப குற்றம் உள்ளது. லக்னத்தில் ராகு, 7-ல் கேது என்பதுடன், லக்ன 8-ஆம் அதிபதி குருவும் இருக்கிறார். ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஒரு எதிரியை- அவர் நல்லவரா கவே இருக்கட்டும்- உடன் வைத்துக்கொண்டி ருந்தால் எப்படியிருக்கும்? குரு எட்டாம் அதிபதியாகி, லக்னத்தில் ராகுவுடன் உள்ளார். இது ஒரு மைனஸ் ஆகும். 5, 6-ன் அதிபதிகள் சுக்கிரன், புதன் சேர்க்கை. புதன் தனாதிபதியும் ஆவார். ஆக, இந்தச் சேர்க்கை ஜாதகருக்கு ஆரோக்கியம், பணவசதி, மனதைரியம் என எதையும் அணுகவிடாது. 10-ஆமிட அதிபதி சனி வக்ரம். 10-ல் ஒரு பாவி யாவது இருத்தல் அவசியம். எனவே, வேலை பார்ப்பதில் குறையொன்றுமில்லை. தொடர் துயரத்திற்கு முக்கியமான காரணம் உள்ளது. சந்திரன் இரு பாவர்களான கேது மற்றும் செவ்வாய்க்கிடையே அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறார். இதனால் உங்கள் எண்ணங் கள் செயல் வடிவம் பெறாமல் போய் விடுகிறது. வாழ்வில் முன்னேற இயலாமல் கஷ்டப்படுகிறீர்கள். மேலும் நடப்பு சுக்கிர தசை 6-ஆமிட தசை. "47 முதல் 67 வயது வரை நல்ல நேரத்திலேயே நாழி கறக்கும்; கோடை நேரத்தில் கேட்கணுமா' என்பர். அதனால் 6-ஆமிடத்திலுள்ள பாப கர்த்தாரி சந்திரனும், 6-ஆமிட சுக்கிரனும் உங்களுக்கு மிகக் கஷ்டம் கொடுக்கிறார்கள். மேலும், சுக்கிர தசையில் ராகு புக்தி 2020, பிப்ரவரிமுதல் 2023, மார்ச்வரை. சற்று இறுக்கிப் பிடிக்கும் காலம்தான். வெள்ளிக்கிழமைதோறும் விரதமிருக்கவும். தேவி கருமாரியம்மனை வணங்கவும். உங்கள் ஜாதக அமைப்பிற்கு ஏதாவது ஒரு சித்தரை கண்டிப்பாக வணங்க வேண்டும். மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.
ப் ராமசுப்பு, தென்காசி.
என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்? காலசர்ப்ப தோஷம் இருப்பதால் 27 வயதுக்குமேல்தான் திருமண யோகம் என்று சிலர் கூறுகிறார்கள்.
18-1-1996-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். ராசியில் சந்திரன் நீசம். எனினும், ஆட்சி நாதன் செவ்வாயின் உச்ச நிலையால் சந்திரன் நீசபங்கம் அடைகிறார். லக்னாதி பதி செவ்வாய் உச்சம். உடன் சூரியன். இதுவொரு காலசர்ப்ப யோக ஜாதகம். ராகு- கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் இருந்தால் அது காலசர்ப்ப தோஷ ஜாதகம். ராகு- கேதுவுக்கு வெளியே, லக்னம் முதற் கொண்டு, இருந்தால், அது கால சர்ப்ப யோக ஜாதகம். இவருக்கு 10-ஆமிட சூரியன் வர்க்கோத்தமம். ராசி, அம்சம் இரு கட்டங்களிலும் ஒரே கட்டத்தில் ஒரு கிரகம் அமைவது வர்க்கோத்தமம் எனப் படும். இவ்வித அமைப்பிலுள்ள கிரகம் நல்ல பலன்தரும் வலிமையுடையதாக இருக்கும். அவர் உச்ச செவ்வாயுடன் இருப்பதால், கண்டிப்பாக அரசு வேலை மற்றும் சீருடை, இராணுவப் பணிக்கான வாய்ப்புண்டு. நடப்பு சுக்கிர தசையில் புதன் புக்தி 2024, ஜனவரிவரை. இதற்குள் இவர் திருமணம் நடந்துவிடும். ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருப்பினும், அந்த கிரகங்கள் வெவ்வேறு நட்சத்திரக் காலில் உள்ளனர். அதனால் பயமில்லை என்றாலும், வரன் பார்க்கும் போது பெண் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் பலமாக இருப்பது போலவும், நாக தோஷமுள்ள பெண்ணாகவும் பார்க்க வேண்டும். 2025-க்குப் பிறகு வரும் சூரிய தசை, வேலை விஷயமான சீருடைப் பணி மேன்மையை, மிக உயரிய பதவியைக் கொடுக்கும். பெற்றோர் அவ்வப்போது சிறுசிறு உடல் உபாதைகளோடு, பூர்ண ஆயுளுடன் இருப்பார்கள். சனி, சந்திரன் இணைவிருப்பதால் தாலிதானம் செய்துவிட்டு திருமணம் நடத்தவும். குலதெய்வப் பிரார்த்தனை அவசியம். 5-ஆமிட அதிபதி குரு அம்சத்தில் நீசம். பூர்வபுண்ணைய குற்றம் சிறிது உள்ளது. வயதான புரோகிதருக்கு வஸ்திர தானம் செய்வது நன்று. வருடத்துக்கு ஒருமுறை இவ்வாறு செய்தல் அவசியம்.
ப் ஆர். சந்தான கிருஷ்ணன், திருச்சி-1.
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்?
நடப்பு 39 வயது. திருமணமாகவில்லை; இன்னும் ஒரு பெண்கூட பார்க்கவில்லை என மிகவும் ஆதங்கப்பட்டிருக்கிறீர்கள். 30-10-1982-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி உச்சம். அருமை! ஆனாலும் திருமணமென்ற நிகழ்வு நடக்கவேயில்லை. காரணமென்ன? லக்னாதிபதி சனி 10-ல்; கூடவே சூரியன், புதன், சுக்கிரன், குருவும் உள்ளனர். ஜோதிட விதிப்படி 10-ஆமிடத்தில் அதிக கிரகம் இருப்பின், அது சந்நியாச யோக ஜாதகம் எனப்படும். உங்கள் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானாதிபதி சூரியன் நீசபங்கம். சனி தனது 3-ஆம் பார்வையால் செவ்வாய், கேதுவைப் பார்க்கிறார். எனவே, விருப்பத் திருமணம் அமைய வாய்ப்புள்ளது. அதுவும் வரும் பெண் முதல் தாரமாக இருக்க வாய்ப்பில்லை. முதல் திருமண பந்தத்திலிருந்து விலகியவராக இருப்பார். இப்போது சுக்கிர தசை குரு புக்தி 2022, டிசம்பர்வரை. அதற்குள் உங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ளவும். முதல் திருமணப் பெண்தான் வேண்டும் என்று அடம்பிடித்தால், வாழ்க்கை முழுவதும் சந்நியாசியாகவே இருந்து விடுவீர்கள். உங்கள் ஜாதகத்தில் திருமண வாய்ப்பென்பது 20 சதவிகிதம்தான் உள்ளது. கிரக அமைப்புகள் அவ்வாறு உள்ளன. வாழ்க்கையில் பிடிப்பற்று இருக்கும் ஒரு பெண்ணுக்குத் துணையாக இருங்கள். சுக்கிர தசை குரு புக்தியில் திருமணம் கூடிவர, கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலுள்ள கருவூர் சித்தர் ஜீவசமாதியை தரிசித்துவரவும்.
ப் எம்.எம். சுந்தரம், திண்டுக்கல்-1.
திருமணம் செய்துகொள்ளவில்லை. சேமிப்பு எதுவுமில்லை. என் அந்திமக் காலம் எப்போது?
29-8-1955-ல் பிறந்தவர். மீன லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். இந்த ஜாதகம் ஜோதிட ஆர்வலர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஜாதகம். லக்னாதிபதி குரு உச்சம்; நன்று. மேலும் 11, 12-ன் அதிபதி சனி உச்சம். 7-ஆம் அதிபதி புதன் உச்சம். ஆக. இந்த ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சம். குரு, சந்திரன் பரிவர்த்தனை. சூரியன் ஆட்சி. ஆஹா! என்னவொரு அற்புதமான ஜாதகம் என நினைக்கிறீர்களா? ஆனால் ஜாதகர் தான் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும், பண வசதியே இல்லையென்றும், எப்போது மரணமடைவேன் என்றும் கேட்டிருக்கிறார். சனி என்ற உச்ச கிரகம், குரு என்ற இன்னொரு உச்ச கிரகத்தைப் பார்க்கிறது. உச்சனை, உச்சன் பார்த்தால் பிச்சையெடுப் பார் என்பது ஜோதிட விதி. மேலும் களஸ்திர ஸ்தானாதிபதி புதன் உச்சம் பெற்றும், செவ்வாய், சனி என இரு பெரும் பாவி களுக்கிடையே அகப்பட்டுக் கொண்டார். அதனால் அவ ரால் திருமணம் என்ற பந்தத் தைத்தர இயலா மல் போய்விட்டது. தனாதிபதி 6-ல் மறைந்து லாபாதிபதி 8-ல் மறைந்ததும் பலனற்று பணப்பலன் இல்லாமல் போய்விட்டது. 56 வயதிலிருந்து உச்ச சனி 8-ஆமிடத்தி லிருந்து தசை நடத்துகிறார். நல்ல ஆயுள் பலமுள்ள ஜாதகம். அடுத்த வரவுள்ள புதன் தசையில் எந்த புக்தியில் மாரகம் என வினவியுள்ளார். புதன் தசையே மாரக தசைதான். அதன் ஆரம்பத்திலிருந்தே கவன மாக இருந்து கொள்ளுங்கள். ஜனனமும் மரணமும் இறைவனின் விருப்பமல்லவா!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/jothidamanswers-t.jpg)