ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின்மீது அதிகபாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தங்கள் தாய்நாடு மற்றும் தாய்மொழிமீது அதிக நாட்டம் இருக்கும்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களை, யாராவது கடிந்துகொண்டால் அதை மனதில் வைத்துக்கொண்டு தக்க சமயத்தில் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபகசக்தி இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு ஏற்படுத்திகொள்வார்கள். அதே நேரம் அவர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள்.
அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aadi_2.jpg)
ஆடி மாதத்தில் பிறந்தவர் களிடம் பேசுவதற்குமுன் நன்கு யோசித்து பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்த வர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் என தெரிந்தால் அதில் எளிதில் அகப்பட்டுகொள்ளாமல் நழுவி ஒதுங்கிக்கொள்வார்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதவாறு இவர்கள் எதையும் திட்டமிட்டுச் அந்த செயலை செய்வார்கள். சொந்த, பந்தங்கள் சிலருடன் இவர்களுக்கு ஒத்துபோகாது. அவர்கள்மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள்மூலம் பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறைவு.
இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் முந்தைய தலைவர்களின் புகழை பாடியே நிறைய பணம் சம்பாதித்துவிடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயலில் தீவிரமாக இறங்கினால், இவர்கள் எளிதில் அதில் வெற்றி பெறுவார்கள். அதேநேரம் சோம்பேறியாக இருந்தால் இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்கமுயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.
இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். கடிந்து பேசினாலும், தூற்றினாலும், வசை பாடினாலும் எதற்கும் உடனுக்குடன், நேரடியாக பதிலளிக்கமாட்டார்கள். பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். சில சமயங்களில் பிடிவாத குணம் காரணமாக சொந்தபந்தங்கள், நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். அடிக்கடி தங்கள் குணத்தையும், முடிவுகளையும் மாற்றிக்கொள்வார்கள். சந்தேகம் இவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும்.
பிடிவாதம் கொண்டவர்கள். சுவையான, சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள். தங்கள் ஒரு விஷயத்தில் லாபம் அடைவதாக இருந்தால் அதற்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.
செல்: 98425 50844
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-07/aadi-t_0.jpg)