Advertisment

உயர்வான வாழ்வு தரும் புஷ்கராம்சம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/pushkaramsam-gives-higher-life-prasanna-astrologer-i-continuation-anandis

ருவர் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் பிறப்பது உன்னதமான உயர்வினைத் தரும் என்பதை சென்ற வாரத்தில் பார்த்தோம். இதை மேலும் ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்ப்போம். 13-7-1971 காலை 6.33 மணிக்கு பிறந்த இந்த ஜாதகர் பிறவியில் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 15 வயது முதல் தனது கடுமையான உழைப்பால் பல கோடிக்கு அதிபதியானவர்.

Advertisment

இன்று இவரிடம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இவருக்கு லக்னப்புள்ளி புனர்பூசம் 4 சூரியன் புனர்பூசம் 2, சனி, கிருத்திகை 4, என மூன்று முக்கிய கிரகங்கள் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் நின்றதால் இவருக்கு அதிர்ஷ்டம் உன்னதமான உயர்வை வழங்கியது. இதற்கும்மேல் இவருக்கு குரு, சனி சம்பந்தத்தால் ஏற்படும் தர்மகர்மாதிபதி யோகமும் உள்ளது.

இதை பார்த்தவுடன் அனைவரும் அவரவர் சுய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்திருப்பீர்கள். சிலருக்கு ஏதாவது ஒரு கிரகமாவது புஷ்கராம்ச நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இத்தகைய அமைப்பில் இருக்கலாம். அந்த அமைப்பு வாழ்க்கையில் பலவித இன்னல்களை அனுபவித்தாலும்கூட பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலையை நிச்சயம் வழங்கியிருக்கும். சிலருக்கு ஒரு கிரகம்கூட ப

ருவர் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் பிறப்பது உன்னதமான உயர்வினைத் தரும் என்பதை சென்ற வாரத்தில் பார்த்தோம். இதை மேலும் ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்ப்போம். 13-7-1971 காலை 6.33 மணிக்கு பிறந்த இந்த ஜாதகர் பிறவியில் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 15 வயது முதல் தனது கடுமையான உழைப்பால் பல கோடிக்கு அதிபதியானவர்.

Advertisment

இன்று இவரிடம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இவருக்கு லக்னப்புள்ளி புனர்பூசம் 4 சூரியன் புனர்பூசம் 2, சனி, கிருத்திகை 4, என மூன்று முக்கிய கிரகங்கள் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தில் நின்றதால் இவருக்கு அதிர்ஷ்டம் உன்னதமான உயர்வை வழங்கியது. இதற்கும்மேல் இவருக்கு குரு, சனி சம்பந்தத்தால் ஏற்படும் தர்மகர்மாதிபதி யோகமும் உள்ளது.

இதை பார்த்தவுடன் அனைவரும் அவரவர் சுய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்திருப்பீர்கள். சிலருக்கு ஏதாவது ஒரு கிரகமாவது புஷ்கராம்ச நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இத்தகைய அமைப்பில் இருக்கலாம். அந்த அமைப்பு வாழ்க்கையில் பலவித இன்னல்களை அனுபவித்தாலும்கூட பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலையை நிச்சயம் வழங்கியிருக்கும். சிலருக்கு ஒரு கிரகம்கூட புஷ்கராம்ச நட்சத்திர சார பாதத்தில் இல்லையே என்று சிறு மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தி இருக்கும். அவர்களுக்குதான் துரதிஷ்டவாதியோ என்ற எண்ணம் மேலோங்கும். அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஜோதிட சுட்சமங்களில் இதுவும் ஒன்று. இங்கேதான் ஜோதிடம் உங்களுக்கு உதவுகிறது. இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு பல வீடு என்பதுபோல் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தை பயன்படுத்தி அனைத்து விதமான நன்மைகளையும் அடைய முடியும் என்பது அனுபவ உண்மை. இந்த நட்சத்திர பாதத்தை கோட்சார கிரகங்கள், தசை நடத்தும் கிரகங்கள், கோட்சார சந்திரன், அன்றைய கோட்சார லக்னம் கடக்கும்போது முக்கிய பணிகளை துவங்கும்போது வெற்றி வாய்ப்பு ஆயிரம் சதவிகிதம் உறுதி.

ss

Advertisment

அதாவது இதை மேலும் புரியும்படி கூறினால் சூரியனின் நட்சத்திர 1, 4-ஆம் பாதம் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்), சந்திரனின் 2-ஆம் பாதம் (ரோகிணி, அஸ்தம், திருவோணம்), குருவின் 2, 4-ஆம் பாதம் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி); சுக்கிரனின் 3-ஆம் பாதம் (பரணி, பூரம், பூராடம்), சனியின் 2-ஆம் பாதம் (பூசம், அனுஷம், உத்திரட்டாதி); ராகுவின் 4-ஆம் பாதம் (திருவாதிரை, சுவாதி, சதயம்) புஷ்கராம்ச நட்சத்திரப் பாதங்களாகும்.

இந்த நட்சத்திரப் பாதங்களில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தினால் ஜாதகருக்கு மேன்மை உண்டு.

ஒருவருக்கு தசை நடத்தும் கிரகம், கோட்சார சந்திரன், வருட கிரகங்களான ராகு- கேது, சனி மற்றும் குரு மாத கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் அன்றைய கோட்சார லக்னம் இந்த நட்சத்திர பாதங்களை கடக்கும்போது நமது எண்ணங்கள், விருப்பங்கள், லட்சியங்கள், பிரார்த்தனைகள் முக்கிய பணிகளை செயல்படுத்த முன்னேற்றத்திற்கான பாதை உடனே திறக்கும். உங்கள் வாழ்க்கையில் நல்ல நேரம் ஆரம்பமாகும். வெற்றி மழையில் நனைவீர்கள். நீங்கள் நினைத்ததை நடத்தும் காலமாக வாழ்நாள் முழுவதும் அமையும்.

ஒரு லக்னம் என்பது தோராயமாக 2.00 மணி நேரம். இந்த இரண்டு மணி நேரத்தில் புஷ்கராம்ச நட்சத்திரத்தை லக்னம் கடந்து செல்லும் நேரத்தையும். கோட்சார சந்திரன் ஒரு ராசியை கடக்கும் இரண்டே கால் நாட்களில் புஷ்கராம்ச நட்சத்திர பாதத்தை கடக்கும். இதுபோல் மாத கிரகங்கள் மற்றும் வருட கிரகங்களை கணக்கிட்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அன்றாட பணிகளை கடைபிடிக்க வெற்றிமீது வெற்றி வந்து உங்களைச் சாரும்.

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் புஷ்கராம்ச நட்சத்திரத்தைச் சேரும்.

ss

சுமார் ஒன்றரை ஆண்டு களுக்குமுன்பு எனது பத்து வருட வாடிக்கையாளர் ஒருவர் நம்மை சந்தித்தார். என்னை கேட்காமல் முக்கிய பணிகள் எதையும் நடத்தமாட்டார். தனது படித்து முடித்த மகனுக்கு தனது குடும்ப நண்பருடன் இணைந்து கூட்டுத் தொழில் துவங்க தனது மகனது ஜாதகத்தை என்னிடம் காண்பித்தார். ஜாதகர் துலாம் லக்னம். 7-ல் குரு, சனி. நடப்பில் குரு தசை. அதாவது 6-ஆம் அதிபதி தசை. ஜாதகம் பார்க்க நம்மை அணுகியபோது கோட்சார ராகு சனியை நெருங்கிக் கொண்டு இருந்தது. நான் ஜாதகரி டம் தங்களுக்கு சுய தொழிலைவிட உத்தியோகமே சிறப்பு என்று கூறினேன். அத்துடன் தற்போது கோட்சாரமும் உங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறிய வுடன் அவர்கள் கிளம்பி விட்டார்கள்.

செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த காரணத் தாலும் ஜாதக ருக்கும் அவரது தந்தைக் கும் புதிய தொழில் வாய்ப்பை கைவிட மனது இல்லாமல் பல லட்சங்களை முதலீடு செய்தார்கள். 7, 8 மாதத்தில் மறுபடியும் நம்மை அணுகி அந்த புதிய நபருடன் தொழிலை தொடர முடியவில்லை என்றார்கள். உறவினர் பார்ட்னர் சிப்பை கேன்சல் செய்துவிட்டார். ஆனால் பணத்தை சில வருடம் கழித்துதான் தரமுடியும் என்று கூறியுள்ளார். நான் ஜாதகருக்கு ஒரு கோவில் பரிகாரத்துடன் பணத்தை திரும்ப கேட்டு பேச்சு வார்த்தை நடத்த புஷ்கராம்ச நட்சத்திர நேரத்தையும் குறித்துக் கொடுத்தேன். ஐந்து கட்டமாக பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார்கள். இரண்டு தவணை பணம் வசூலாகி விட்டது. ஜோதிடத்தால் சாதிக்க முடியாத விஷயமே கிடையாது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதேபோல் பல வருடமாக கும்பாபிஷேகம் நடத்தமுடியாத கோவிலுக்கு சில யாகங்கள் புஷ்கராம்ச நட்சத்திர நேரத்தில் பரிந்துரைத்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பல கோர்ட், கேஸ் பிரச்சினை முடிவிற்கு வந்துள்ளது.

இந்த நேரத்தை பயன்படுத்தி முகூர்த்தம் நடத்த திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தற்போது ஸ்ரீநிவாசன் பஞ்சாங்கத்தில் புஷ்கராம்ச முகூர்த்த நேரத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். இதை பயன்படுத்தி வாழ்வின் உச்சத்தை தொடமுடியும். சுய ஜாதகத்தில் பல கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும், கோட்சார கிரகங்கள் சாதகமற்ற நிலையிலும், தசை நடத்தும் கிரகம் வலிமை இழந்து நின்றாலும் இந்த புஷ்கராம்ச நட்சத்திர பாதங்களை கணக்கிட்டு பயன்படுத்த தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். பல வாடிக்கையாளர்களை பெரிய ஆபத்துகள் மற்றும் பிரச்சினையிலிருந்து காப்பாற்ற நான் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் இது.

செல்: 98652 20406

bala290324
இதையும் படியுங்கள்
Subscribe