Advertisment

பத்துப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம்!

/idhalgal/balajothidam/purpose-seeing-ten-matches

ராசி என்பது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய ராசியாகும். இதை சந்திர லக்னம் எனலாம். சந்திரன் நிற்கும் வீட்டின் அதிபதி ராசியாதிபதியாகும். மணம் செய்துகொள்ளும் ஆண் தனது மனைவியுடன் நட்புடன் பழகுவானா அல்லது எதிரி போல் நடந்துகொள்வானா என்பதைக் கண்டறிய இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. பெண்ணின் ராசியாதிபதியும், ஆணின் ராசியாதிபதியும் ஒரே கிரகமாகவோ, நட்பு கிரகங் களாவோ அமைந்தால் கணவன் மனைவியுடன் நட்புடன் பழகு வான். (அட்டவணை காண்க.)

பெண்ணின் ராசியாதிபதியும், ஆணின் ராசியாதிபதியும் நட்பு எனில் உத்தமமான நல்ல பொருத்தமாகும். இருவரின் ராசியாதிபதியும் சமம் எனில் பொருத்தமுண்டு. இருவரின் ராசியாதிபதியும் பகை எனில் பொருத்தம் இல்லை எனலாம்.

ppp

பெண்ணின் ராசியாதிபதி பகையாகி, ஆணின் ராசியாதி பதி சமம் எனில் மத்திமமான பொருத்தம் அமையும். பெண் ணின் ராசியாதிபதி சமமாகி ஆணின் ராசியாதிபதி பகையானால் பொருத்தம் கிடையாது.

Advertisment

ராசியாதிபதி பொருத்தம் சிறப்பாக அமைந்தால் மணம் புரிந்துகொள்ளும் தம்பதிகள் நற்புகழ் அடைவார்கள். தீர்க்காயுள், நிறைந்த யோகமான பிள்ளைகள் பிறப்பார்கள்.

வசியப் பொருத்தம்

வசியம் என்றால் ஈர்ப்பு, கவர்தல் அடக்குதல், பழக்குதல், பணிதல் எனப் பொருள்படும். வசியப் பொருத்தம் என்பது ஆண்- பெண் இருவருக்குமான பாசத்தையும் உள்ளன்பையும் வெளிப்படுத்துவதாகும். ஆண், பெண்ணின் வார்த்தைக்கு மயங்குவானா? அவள் சொல்படி நடந்துகொள்வானா என்பதையறிய இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. பெண்மீது ஆடவனுக்கு இனம்புரியாத ஈர்ப்பு, வசியம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் பிரியமாட்டான். எனவே இது விசேஷமான பொருத்தமாகும். தம்பதிகளின் மனரீதியான, உடல்ரீதியான ஈர்ப்பைக் கண்டறிய பார்க்கப்படும் இந்தப் பொருத்தம் ஆண்- பெண் இருவரின் ராசிகளைக் கொண்டு பார்க்கப்படுகிறது. எந்த ராசிக்கு எந்த ராசி வசியமாகும் என்பதில் சில முரண்பாடான கருத்துகளும் உள்ளன. (அட்டவணை காண்க.)

ll

பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசி வசியமானால் பொருத்தமுண்டு. ஆணின் ராசிக்கு பெண் ராசி வசியமா னால் மத்திமமான பொருத்தம் அமையும். ஒன்றுக்கொன்று வசிய மில்லாத ராசிகள் பொருந்தாது.

பெரும்பாலும் இந்தப் பொருத் தம் பலருக்கும் அமைவதில்லை. ஏனென் றால் குறிப்பிட்ட ஒரு ராசிக்கு வசியமாக ஒன்று அல்லது இரண்டு ராசிகளே சொல்லப்பட்டுள்ளன. அதனால் வசியப் பொருத்தம் பல தம்பதிகளுக்கு இருப்பதில்லை.

அதனால் பலர் இந்த பொருத்தத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்ப தில்லை.

தொடரும்.....

செல்: 98652 20406

bala260523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe