Advertisment

பத்துப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/purpose-seeing-ten-matches-prasanna-astrologer-i-anandhi

ரஜ்ஜுப் பொருத்தம்

சுபமாக சுப மங்கலத்தோடு வாழ்பவள் சுமங்கலி. நமது தமிழ் கலாச்சாரத்தில் சாஸ்திரங் களில் திருமாங்கல்யத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். திருமணச் சடங்கின் முக்கிய அம்சம் ஆண், பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டிவிடுவதுதான். "எல்லாச் சூழ்நிலையிலும் உனக்கு ஆதரவாக இருப்பேன்' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான். ஆண் பெண் ணிற்கு தாலி கட்டுகிறான்.

Advertisment

ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக மரணமடைந்தால் அவளை தெய்வமாக வழிபடுவார்கள். சுமங்கலித்துவம் நிறைந்த பெண்கள் வாழும் குடும்பம் ஒரு கோவிலாகும். பெண்களுக்கு இத்தகைய பாக்கியத்தை வழங்குவது ரஜ்ஜுப் பொருத்தம். நட்சத்திரப் பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாகக் கருதப்படுவது ரஜ்ஜுப் பொருத்தமாகும்.இதனை கயிறு பொருத்தம் அல்லது மாங்கல்யப் பொருத்தம் எனலாம். ரஜ்ஜு என்றால் கயிறு அல்லது சரடு என்று பொருள்படும். மணமகளின் மாங்கல்ய பாக்கியம் பற்றி அறிய உதவும் பொருத்தம். அதாவது மணமகனின் ஆயுள் பற்றிக் கூறும் பொருத்தம். மணமக்கள் நீண்டகாலம் வாழ்வார்களா என்று தெரிவிக்கும் பொருத்தம். அதனால் மற்ற பொருத்தங்கள் இருந்து ரஜ்ஜுப் பொருத்தம் இல்லையென் றால் திருமணம் செய்யக்கூடாதென்று கூறப்படுகிறது. ரஜ்ஜுப் ப

ரஜ்ஜுப் பொருத்தம்

சுபமாக சுப மங்கலத்தோடு வாழ்பவள் சுமங்கலி. நமது தமிழ் கலாச்சாரத்தில் சாஸ்திரங் களில் திருமாங்கல்யத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். திருமணச் சடங்கின் முக்கிய அம்சம் ஆண், பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டிவிடுவதுதான். "எல்லாச் சூழ்நிலையிலும் உனக்கு ஆதரவாக இருப்பேன்' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான். ஆண் பெண் ணிற்கு தாலி கட்டுகிறான்.

Advertisment

ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக மரணமடைந்தால் அவளை தெய்வமாக வழிபடுவார்கள். சுமங்கலித்துவம் நிறைந்த பெண்கள் வாழும் குடும்பம் ஒரு கோவிலாகும். பெண்களுக்கு இத்தகைய பாக்கியத்தை வழங்குவது ரஜ்ஜுப் பொருத்தம். நட்சத்திரப் பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாகக் கருதப்படுவது ரஜ்ஜுப் பொருத்தமாகும்.இதனை கயிறு பொருத்தம் அல்லது மாங்கல்யப் பொருத்தம் எனலாம். ரஜ்ஜு என்றால் கயிறு அல்லது சரடு என்று பொருள்படும். மணமகளின் மாங்கல்ய பாக்கியம் பற்றி அறிய உதவும் பொருத்தம். அதாவது மணமகனின் ஆயுள் பற்றிக் கூறும் பொருத்தம். மணமக்கள் நீண்டகாலம் வாழ்வார்களா என்று தெரிவிக்கும் பொருத்தம். அதனால் மற்ற பொருத்தங்கள் இருந்து ரஜ்ஜுப் பொருத்தம் இல்லையென் றால் திருமணம் செய்யக்கூடாதென்று கூறப்படுகிறது. ரஜ்ஜுப் பொருத்தம் 27 நட்சத்திரங்களை சிரசு, கழுத்து, வயிறு, தொடை, பாதம் என ஐந்து விதமாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ரஜ்ஜுப் பொருத்தத்தில் ஆரோகணம், அவரோ கணம் என்ற பகுப்பும் உண்டு. ஆரோகணம் என்பது ஏறுமுகம்.

Advertisment

ss

அவரோகணம் என்பது இறங்குமுகமாகும். ஆண்- பெண் இருவரின் நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவானால் பொருந்தாது. இருவரும் வெவ்வேறு நட்சத்திர ரஜ்ஜுவானல் சர்வ உத்தமப் பொருந்தும். ஆண்- பெண் நட்சத் திரங்களில் ஒன்று ஆரோகணத்திலும் மற்றொன்று அவரோ கணத்தில் இருந்தால் மத்திமமான ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு. சிரசு ரஜ்ஜுக்கு மட்டும் ஆரோகண, அவரோகண இயல்புகள் இல்லை.

சிரசு ரஜ்ஜு

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று உடைபட்ட செவ்வாயின் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜு ஆகும். சிரசு என்றால் தலை. ஆண்- பெண் இருவரும் சிரசு ரஜ்ஜுவாக இருந்தால் தலைக்கு பாதிப்புலி அதாவது தலைவனுக்கு பாதிப்பாகும்.

கண்ட ரஜ்ஜு

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் (ஆரோகணம்) சந்திரனின் நட்சத்திரம். திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரம் (அவரோகணம்) ஆகிய ஆறும் கண்ட ரஜ்ஜுவாகும். கண்டம் என்றால் கழுத்து. ஆண்- பெண் இருவரின் நட்சத்திரங்களும் கண்ட ரஜ்ஜு வாக இருந்தால் மாங்கல்யம் அணியக்கூடிய கழுத்துகொண்ட பெண்ணிற்கு தீமை உண்டாகும். அதாவது கண்ட ரஜ்ஜுவினால் மனைவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

வயிறு ரஜ்ஜு

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் (ஆரோகணம்) சூரியனின் நட்சத்திரம், புனர் பூசம், விசாகம், பூரட்டாதி (அவரோகணம்) குருவின் நட்சத்திரம் உடைபட்ட இந்த ஆறு நட்சத்திரங்களும் வயிறு ரஜ்ஜுவாகும். ஆண்- பெண் இருவரின் நட்சத்திரமும் வயிறு ரஜ்ஜுவாக இருப்பின் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு ஆபத்து ஏற்படும். அதாவது தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளை களுக்கு வாழ்க்கை முடிவு உண்டாகலாம். அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காது.

தொடை ரஜ்ஜு

dd

பரணி, பூரம், பூராடம் (ஆரோகணம்) சுக்கிரனின் நட்சத்திரம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி (அவரோ கணம்) சனியின் நட்சத்திரங்கள் ஆகிய இந்த 6-ம் தொடை ரஜ்ஜு வாகும்.

ஆண்- பெண் இருவரும் தொடை ரஜ்ஜு வாக இருந்தால் நிறைவான தாம்பத்திய சுகம் இருக்காது. தம்பதிகளின் செல்வங்கள், சேமித்த சொத்துகளையும் இழக்க நேரிடும்.

பாத ரஜ்ஜு

அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை- ஆரோகணம் கொண்டவை. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை- அவரோகணம் கொண்டவை. பாதம் என்றால் கால். ஆண்- பெண் இருவரின் நட்சத்திரங்களும் பாத ரஜ்ஜு வானால் பயணத்தில் காலில், குறிப்பாக பாதத்தில் பாதிப்பிருக்கும். வாழுமிடத்தில் ஆபத்து உண்டாகும். பிரிவு ஏற்படுதல் அல்லது சந்நியாசம் செல்லுதல் போன்ற பலன்கள் நடக்கும்.

ரஜ்ஜு தட்டுதல்

தம்பதிகளின் ஜென்ம நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவை குறிகாட்டும் நட்சத்திரங்களாக இருந்தால் அவற்றை சேர்ப்பதில் சிரமம் இருக்கும். இணைக்கக் கூடாது. இருவரின் ஜென்ம நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவாக இருந்து அவையிரண்டும் ஆரோகணம், அவரோகணமாக அமைந்தால் பொருந்தாது. இருவரும் ஒரே ரஜ்ஜுவாக இருந்து, ஒன்று ஆரோகணமாகவும் மற்றொன்று அவரோகணமுமாக இருந்தால் மத்திமான பொருத்தம் சேர்க்கலாம் என பார்த்தோம். இரண்டு நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவாக ஆரோகணமோ, அவரோகணமோ ஒரே நிலையில் இருந்தால் ரஜ்ஜு தட்டுகிறது என்பார்கள். ஆண்- பெண்களுக்கு .சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமானால் பொருந்தும் என்றும், அதற்கு ஏக நட்சத்திரப் பொருத்தம் என்றும் பெயர் உண்டு. ஏக நட்சத்திரம் என்றால் ஒரே ரஜ்ஜுவாகத்தான் இருக்கும். ஏக நட்சத்திரப் பொருத்தம் இருப்பதால் அவர்களுக்கு இந்த ரஜ்ஜுப் பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது என்ற விதிவிலக்கும் உள்ளது. நமது வாழ்க்கை அனுபவத்தில் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாமல் சிறப் பாக வாழும் தம்பதிகளையும் பார்க்கிறோம். ரஜ்ஜுப் பொருத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பிரச்சினைக்குரிய மணவாழ்க்கை வாழும் தம்பதிகளையும் பார்க்கி றோம். இதுபோன்ற முரண்பாடுகள் இருந்தாலும் ஆண்- பெண் இருவரின் உயிர், நோய் சார்ந்த விஷயம், புத்திர நாசம், திரவிய நாசம் போன்ற முக்கிய பாதிப்புகள் இருப்பதால் ரஜ்ஜுப் பொருத்தம் பார்க்கப்படுவது முக்கியம் என்று பலர் விரும்புகிறார்கள். பத்துப் பொருத்தத்தில் ஒன்பது பொருத்தம் இருந்து ரஜ்ஜுப் பொருத்தம் இல்லையென்றால் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்.

மணமக்களாகப் போகும் ஜோடிக்கு

ரஜ்ஜு தட்டுகிறது என்றால், அது மணமக்க ளுக்கு ஆபத்தானதாக இருக்குமென்பதால் இதைத் தவிர்ப்பதற்காக ரஜ்ஜுப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமென்பது வலியுறுத்தப்ப்படுகிறது. ரஜ்ஜுப் பொருத்தம் குறித்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் ஆண், பெண் எட்டாம் பாவக வலிமையோடு குறுகிய காலத்திற்கு மாரக தசையோ அல்லது இவர்களின் நட்சத்திரங்களில் நிற்கும் கிரகங்களின் தசையோ வரமால் இருக்கவேண்டும். இருவரின் ஜாதகங்களில் நடைபெறும் தசாபுக்திப் பலன்களை ஆய்வுசெய்தபிறகு இணைப்பது சாலச் சிறந்தது. அதற்காகதான் திருமணப் பொருத்தத்தைப் பார்க்கும்போது ஜோதிடத் தில் அனுபவம் உள்ளவரிடம் ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது அவசியம்.

தொடரும்.....

செல்: 98652 20406

bala020623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe