Advertisment

பத்துப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/purpose-seeing-ten-matches-prasanna-astrologer-i-anandhi-continued-last-issue

ணப் பெருத்தம் கணம் என்றால் குலம் என்று பொருள் படும். திருமணமான பெண் தன் பிறந்த வீட்டிலி ருந்து சென்று கணவன் வீட்டில் வாழவேண்டு மென்பது மரபு. எனவே புகுந்த வீட்டில் உள்ளவர்கள் பெண்ணுக்கு இணக்கமாக நடந்துகொள்வார்களா? கணவன் அதை உருவாக்கித் தருவானா என அறிந்துகொள்ள பார்க்கப்படும் பொருத்தம் கணப் பொருத்தமாகும்.

Advertisment

அதேபோல் கணம் என்றால் இனம் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தன்மை உண்டல்லவா? இந்த இனத்தில் ஒற்றுமை இருந்தால் தம்பதிகளுக்குள் மாறுபாடு வராது என்ப தால் முன்னோர்கள் கணப் பொருத்தம் பார்த்து (இனம் பார்த்து) திருமணம் செய்தார்கள்.

Advertisment

கணப் பொருத்தம் மூலம் ஆண்- பெண் இருவரும் எந்த அளவிற்கு நட்பாக அன்யோன்யமாக இருப்பார்கள் என்பதை நிர்ணயிக் கலாம். இந்த பொருத்தம் இல்லை யென்றால் இருவரும் கீரியும் பாம்புமாக நடந்துகொள்வார்கள்.

27 நட்சத்திரங்களை மூன்று கணங்களா கப் பிரித்தனர்.

1. தேவ கணம்

2. மனித கணம்

3. அசுர கணம்

தேவர்களின் குணம் சாத்வீகம் எனவும், மனிதர்களின் குணம் ராஜசம் எனவும், அசுரர் களின் குணம் தாமசம் எனவும் கூ

ணப் பெருத்தம் கணம் என்றால் குலம் என்று பொருள் படும். திருமணமான பெண் தன் பிறந்த வீட்டிலி ருந்து சென்று கணவன் வீட்டில் வாழவேண்டு மென்பது மரபு. எனவே புகுந்த வீட்டில் உள்ளவர்கள் பெண்ணுக்கு இணக்கமாக நடந்துகொள்வார்களா? கணவன் அதை உருவாக்கித் தருவானா என அறிந்துகொள்ள பார்க்கப்படும் பொருத்தம் கணப் பொருத்தமாகும்.

Advertisment

அதேபோல் கணம் என்றால் இனம் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தன்மை உண்டல்லவா? இந்த இனத்தில் ஒற்றுமை இருந்தால் தம்பதிகளுக்குள் மாறுபாடு வராது என்ப தால் முன்னோர்கள் கணப் பொருத்தம் பார்த்து (இனம் பார்த்து) திருமணம் செய்தார்கள்.

Advertisment

கணப் பொருத்தம் மூலம் ஆண்- பெண் இருவரும் எந்த அளவிற்கு நட்பாக அன்யோன்யமாக இருப்பார்கள் என்பதை நிர்ணயிக் கலாம். இந்த பொருத்தம் இல்லை யென்றால் இருவரும் கீரியும் பாம்புமாக நடந்துகொள்வார்கள்.

27 நட்சத்திரங்களை மூன்று கணங்களா கப் பிரித்தனர்.

1. தேவ கணம்

2. மனித கணம்

3. அசுர கணம்

தேவர்களின் குணம் சாத்வீகம் எனவும், மனிதர்களின் குணம் ராஜசம் எனவும், அசுரர் களின் குணம் தாமசம் எனவும் கூறப்படுகிறது.

தேவகணம்: அஸ்வினி, மிருகசீரிடம், புனர் பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனித கணம்: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.

அசுர கணம்: கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

ff

ஆண்- பெண் நட்சத்திரங்கள் ஓரே கணமாக இருந் தால் மிகவும் பொருத்தமாகும். ஆண் தேவ கணமாகவும், பெண் மனித கணமாகவும் இருந்தால் பொருந்தும்.

ஆண் மனித கணமாகவும் பெண் தேவ கணமாகவும், ஆண் அசுர கணமாகவும் பெண் தேவ கணமாகவும் இருப்பது மத்திமப் பொருத்தம்.

பெண் அசுர கணமாகி, ஆண் மனித கணமாக இருக் கும்போது ஆணின் நட்சத்திரத்திலிருந்து 14 நட்சத்திரத் திற்குப் பின் பெண்ணின் நட்சத்திரம் இருந்தால் குற்ற மில்லை; சேர்க்கலாம் என்றொரு விதிவிலக்கு உள்ளது.

சுய ஜாதகத்தில் பெண்ணின் நட்சத்திர ராசியாதி பதியும், ஆணின் நட்சத்திர ராசியாதிபதியும் நட்பு ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால், பெண் அசுர கணமானாலும் குற்றமில்லை என்பது மற்றொரு விதிவிலக்கு.

பெண்ணின் ராசியும், ஆணின் ராசியும் ஏக ராசியானால் அவர்களுடைய தனித்தனி நட்சத்திரங்களைக்கொண்டு கணப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.

பெண்ணின் ராசியும், ஆணின் ராசியும் சமசப்தம ராசியானால் கணப் பொருத்தமுண்டு. அதேநேரம் கடகம், மகரம் சிம்மம், கும்பம் சமசப்தம ராசியாக இருந்தாலும் கணப் பொருத்தம் தனித்தனியாகப் பார்க்க வேண்டும்.

கணப் பொருத்தம் இல்லாவிடில் இருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் லக்னத்தில் நிற்கும் கிரகங்களைக்கொண்டும் குணத்தைத் தீர்மானிக்கலாம்.

மகேந்திரப் பொருத்தம்

மகேந்திரப் பொருத்தம் என்பது புத்திர விருத்திப் பொருத்தமாகும். இந்தப் பொருத்தம் இருந்தால் மக்கட் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெண் நட்சத்திரம் முதல், ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 என்று அமைந்தால், மகேந்திரப் பொருத்தம் உள்ளது எனலாம்.

அல்லது பெண் நட்சத்திரத்துடன் மூன்று மூன்று நட்சத்திரங்களைக் கூட்ட வரும் நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

(1+3 = 4/ 4 + 3 = 7) இப்படி கூட்டும்போது 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வரும்.

இதில் 1, 10, 19 என்பது ஜென்ம தாரை 7, 16, 25 என்பது வதை தாரை.

தினப் பொருத்தத்தில் ஜென்ம தாரையும், வதை தாரையும் பொருந்தாது என கூறப்படுகிறது. ஆனால் மகேந்திரப் பொருத்தத்தில் இவை பொருத்தம் என கூறப் படுகிறது. மேலும் 4, 13, 22 ஷேமம் எனக் கூறப்பட்டாலும் 22-ஆம் நட்சத்திரம் வைநாசிகம்- சேர்க்கக் கூடாது என்கிறார் கள். எனவே பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து 4, 13-ஆக வரும் ஆண் நட்சத்திரத்திற்கு மட்டுமே மகேந்திரப் பொருத்தம் சிறப்பாக அமையும்.

தினப் பொருத்தம் அமைந்தால் மகேந்திரப் பொருத்தம் அமையாது. மகேந்திரப் பொருத்தம் அமைந்தால் தினப் பொருத்தம் அமையாது. இவை ஒன்றுக்கொன்று முரண்பாடான பொருத்தமாகும் என்பதால் பலர் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.

நட்சத்திரரீதியாக மகேந்திரப் பொருத்தம் இல்லாத நிலையில் நாடிப் பொருத்தம் கொண்டும் சிலர் புத்திர பாக்கியத்தை நிர்ணயம் செய்வார்கள். இந்த பொருத்தம் பார்க்கும்போது புத்திரகாரகன் குருவும், 5-ஆமதிபதியும் நன்றாக இருந்தால், மகேந்திரப் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் எந்தவித பாதிப்பும் வராது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

ஸ்திரீ என்றால் பெண் என்றும், தீர்க்கம் என்றால் நீடித்த அல்லது நீண்ட என்று பொருள்படும். சுபிட்சத்தையும், செல்வத் தையும் அளிக்கக்கூடிய பொருத்தம் இது.

நீண்ட ஆயுளுடன் மணமகனுடன் வாழ்வாளா என்பதை அறியும் பொருத்தம். ஆணுக்கு பெண்மீது மோகம் இருந்தால், அந்தப் பெண் அந்த ஆண்மகனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வாள். ஆணுக்குப் பெண்மீது மோகம் இல்லை யென்றால் அந்தப் பெண்ணால் அந்த ஆணைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியாது. திருமணம் செய்யப்படும் பெண், நாராயணன் மார்பில் குடியிருக்கும் மகாலஷ்மிபோல் ஆணின் மனதில் நீண்ட ஆயுளுடன் குடியிருப்பாளா என்பதை அறியக் கூடிய பொருத்தம். பெண் நட்சத்திரத்திற்கும் ஆண் நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரமே ஸ்திரீ தீர்க்கம். பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம்வரை எண்ணும் போது 13-க்குமேல் இருந்தால் சிறப்பான பொருத்தம்.

7-க்குமேல் இருந்தால் மத்திமமான பொருத்தம்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் இல்லாதபோது பெண்ணின் சுய ஜாதகத்தின் எட்டாம் அதிபதி, எட்டில் நின்ற கிரகத்தை வைத்து முடிவு செய்யலாம்.

bala120523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe