ரு குடும்பத்தலைவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று நினைக்கும் போது அதற்கு மாறாக நடந்தால் எவ்வாறிருக்கும்? அவ்வாறு நேர்ந்தால் அவர்கள் வசிக்கும் வீட்டின் தலை வாயில் தென்கிழக்கு அல்லது தென் மேற்கில் உள்ளதென்று பொருள். வீட்டின் சமையலறை கிழக்கு மத்தியப் பகுதியில் இருக்கும். மகனது ஜாதகத்தில் லக்னாதிபதி, செவ்வாயுடன் சேர்ந்து லக்னத்தில் இருப்பார்.

அதனால் திருமணமானபிறகு மணமகனின் தாய்க்கும் மனைவிக்கும் மன வேற்றுமை ஏற்படும். சில நேரங்களில் அந்த சிக்கல்கள் விவாகரத்தில் கூட முடியலாம்.

vasthu

ஒரு வீட்டிற்குத் தென்கிழக்கில் பிரதான வாயில் இருந்து, தென்மேற்கு திசையில் சமையலறை இருந்தால் அங்கு வசிக்கும் மருமகளுக்கு நோய் ஏற்படும். கடைசி மருமகளின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் நல்லநிலையில் இருக்காது. அதனால் அங்கு வாழலாமா அல்லது தாய்வீட்டிற்குச் சென்றுவிடலாமா என்று அவள் நினைப்பாள்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சூரியன் சரியில்லை என்றால், சனி பார்வை இருந்தால் அந்த ஜாதகருடைய வீட்டின் சமையலறை தென் மேற்கு திசையில் மத்தியப் பகுதியில் இருக்கும். அதனால் அங்குள்ள பெண்களுக்கு உடல்நலம் பாதிக்கும். தைராய்டு, உடல் பருமன் போன்றவை உண்டாகும்.

ஒருவரது ஜாதகத்தில் சனி 7 அல்லது 8-ல் இருந்தால், அவரது வீடு கிழக்கு திசையில் அகலம் குறை வாகவும், மேற்கில் அகலம் அதிகமாக வும் இருக்கும். அவ்வாறிருந்தால் அவருக்கு பித்ரு தோஷம் இருக்கும். அதனால் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவு ஏற்படும்.

நீளமாக இருக்கும் வீட்டின் தெற்கு மத்தியப் பகுதியில் சமையலறை இருந்தால், அங்கு வசிக்கும் பெண்களின் வாழ்க்கை நரக வாழ்க்கையாக அமையும். பித்ரு தோஷம், செவ்வாய் தோஷம் காரணமாக அங்கு மகிழ்ச்சியே இல்லாமல் போய்விடும். தெற்கு நோக்கி சமையல் செய்யும் அமைப் பிருந்தால் அங்கிருக்கும் பெண்களுக்குத் தற்கொலை எண்ணம்கூட உண்டாகும்.

ஒரு வீட்டின் பிரதான வாசல் கிழக்கிலிருந்து, தென்கிழக்கில் படிக்கட்டுகள் இருந்து, தென்மேற்கில் படுக்கையறை அமைந்திருந்தால், வாஸ்து நன்றாக இருந்தாலும் ஜாதகத்தில் ராகு, செவ்வாய் சரியில்லாமல் இருந்து, படுக்கையறையின் வடமேற்கில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால், அங்கு வசிப்பவர்களுக்கு மனக் குழப்பம் உண்டாகி சண்டை ஏற்படும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை உண்டாகும்.

வீட்டின் படுக்கையறையில் தென்மேற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்து, அந்த வீட்டுத் தலைவரின் ஜாதகத்தில் செவ்வாய், சனியைப் பார்த்தால் அல்லது விரய ஸ்தானத்தில் செவ்வாய், சனி இருந்தால், உறங்கச் செல்லும் நேரத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே வீண் விவாதங்கள் நடக்கும்.

படுக்கையறையின் வடகிழக்கிலும் தென் கிழக்கிலும் கனமான பொருட்கள் அதிகமாக இருந்து, அங்கு உறங்குபவரின் ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்து, 5-ஆம் பாவாதி பதி பாவகிரகத்துடன் இருந்தால், வீட்டின் மத்தியப் பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருக்கும். படுக்கையறையில் கட்டிலுக்கு அருகில் இடம் காலியாக இருக்காது. அதனால் அங்கு வசிப்பவர்களுக்கு வாரிசு இருக்காது.

ஒரு வீட்டின் படிக்கட்டுக்குக் கீழே குளியலறை, கழிவறை இருந்தால், அங்கிருப்பவருக்குத் தோல்நோய் ஏற்படும்.

வீட்டுப் பூஜைறை வடகிழக்கில் இருந்தால், அந்த வீடு மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டுத் தலைவரின் ஜாதகத்தில் புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும்.

குடும்பத்தலைவர் வீட்டின் வடகிழக்கில் உறங்கினால், அவருக்கு 50-க்கு மேல் வயதிருந் தால் மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அவருக்கு சீதளம் உண்டாகும். வடக்கு மத்திய திசையில் கிழக்கில் தலைவைத்துப் படுத்தால், அந்த அறையின் வாசல் வடமேற்கு அல்லது வட கிழக்கில் இருந்தால், அங்கு எல்லாம் சரியாக இருந்தாலும் ஜாதகருக்கு மனதில் எப்போதும் பயவுணர்வு இருக்கும். அதிகமாக சிந்திப்பார்.

ஒரு வீட்டின் வடமேற்குப் பகுதியில் உறங்கு பவர் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார். ஆனால் அந்த அறையின் வாசல் தென்கிழக்கில் இருக்கக்கூடாது. அவ்வாறிருந்தால் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு தோஷம் அதிகமாக ஏற்படும். மனக்குழப்பம் அதிகமாகும். கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்காது.

வீட்டின் வடகிழக்கில் கழிவுநீர்த் தொட்டி இருந்தாலும், வடகிழக்கில் துணி துவைத் தாலும், அங்குள்ளவர்கள் தீவிரமாக முயன்றா லும் எளிதில் வெற்றி கிடைக்காது. அடிக்கடி நோய் உண்டாகும். வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு இருந்தால், அங்கு வசிப்பவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்படும். ஜாதகருக்கு சுக்கிரனும் குருவும் நல்ல நிலையில் அமைந் திருக்காது.

சமையலறை தென்கிழக்கு அல்லது வட மேற்கில் இருக்கவேண்டும். வீட்டின் மத்தியப் பகுதியில் சமையலறை அமைவது நல்லதல்ல. தென்மேற்கு திசையில் கிணறு இருப்பதும் கூடாது. வடகிழக்குப் பகுதியில் துணி துவைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

செல்: 98401 11534