சுபிட்சம் தரும் கல்வி யோகம்! -க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/prosperous-education-yoga-ka-gandhi-murugeshwar

ல்வியின் அடிப்படையே ஆரம்பக் கல்வியில்தான் இருக்கிறது. ஆரம்பக் கல்வியை எப்படிக் கற்றுக்கொள்கிறோமோ அதன்படிதான் வாழ்க்கையில் நடந்துகொள்வோம். கல்வியைக் கசடறக் கற்றுக்கொள்பவர்கள் எப்போதும் தெளிவாக இருப்பர். அதனால் யாரிடமும் எளிதில் ஏமாறமாட்டார்கள். ஏமாறும் சூழல் வந்தாலும் அல்லது ஏமாந்துவிட்டாலும் உடனடியாகத் தன்னை மாற்றிக்கொண்டு, நல்ல முடிவுகளை உடனுக்குடன் எடுத்து துயரத்திலிருந்து உடனே மீண்டுவிடுவர். ஆனால் கல்வியில் மந்தமாய் இருப்பவர்கள் அதிர்ஷ்டத்தில் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், எதையும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவர்களாகவே இருப்பர். திடீரென்று துன்பம் வந்தால் என்ன முடிவெடுப்பதென்று புரியாமல் மேலும் ஏமாறுவர். ஆறுதல் தேடிப்போய் உளறி, அங்கும் ஏமாந்து, அந்த ஏமாற்றத்திற்கும் இன்னொரு வழிதேடித் திரிவர். கல்வி என்பது ஏதோ வேலைவாங்குவதற்காகப் படிப்பதல்ல.

இன்று படித்ததற்கேற்பவேலை கிடைக்காதென்பது எல்லா பெற்றோர் களுக்கும் தெரியும். ஆனாலும் ஏன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்? வெற்றுப் பெருமைக்காக அல்ல; குறிப்பிட்ட வயதுவரை ஒழுக்கமாகவும், கெட்ட வழிகளில் போகாமலும், கெட்ட பழக்கவழக்கத்திற்கு அடிமையாகிவிடாமலும் இருப்பதற்காகதான்.

ee

பணம் சம்பாதிப்பதற்கு முன்பு சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். எந்தத் தொழிலிலும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருந்தால்தான் முன்னேற்றம் அடையமுடியும். குறுக்குவழியில் வெற்றிபெற்றவர்கள் எந்தத் தொழிலிலும் நிலையாக இருக்கமுடியாது. கொஞ்சநாள் சந்தோஷமாக இருந்தாலும் சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவர்.

கல்வியையும் ஒழுக்கத்தையும் சம்பந்தபடுத்துவது ஏனெனில், கல்வி ஸ்தானமான நான்காமிடம் ஒழுக்கத்தையும் குறிப்பதால்தான். இரண்டாமிடம் நன்றாக இருந்து ஆரம்பக் கல்வியை நன்றா கப் படித்துக்கொண்டிருந்தவர்கள், நான்காமிடம் கெட்டிருந்தால் உயர்கல்வி படிக்கமுடியாமலும், படிக்கும்போதே ஒழுக்கம் தவறிய செயல்களில் ஈடுபட்டும் வாழ்க்கையில் சுகத்தை இழப்பர்.

ல்வியின் அடிப்படையே ஆரம்பக் கல்வியில்தான் இருக்கிறது. ஆரம்பக் கல்வியை எப்படிக் கற்றுக்கொள்கிறோமோ அதன்படிதான் வாழ்க்கையில் நடந்துகொள்வோம். கல்வியைக் கசடறக் கற்றுக்கொள்பவர்கள் எப்போதும் தெளிவாக இருப்பர். அதனால் யாரிடமும் எளிதில் ஏமாறமாட்டார்கள். ஏமாறும் சூழல் வந்தாலும் அல்லது ஏமாந்துவிட்டாலும் உடனடியாகத் தன்னை மாற்றிக்கொண்டு, நல்ல முடிவுகளை உடனுக்குடன் எடுத்து துயரத்திலிருந்து உடனே மீண்டுவிடுவர். ஆனால் கல்வியில் மந்தமாய் இருப்பவர்கள் அதிர்ஷ்டத்தில் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், எதையும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவர்களாகவே இருப்பர். திடீரென்று துன்பம் வந்தால் என்ன முடிவெடுப்பதென்று புரியாமல் மேலும் ஏமாறுவர். ஆறுதல் தேடிப்போய் உளறி, அங்கும் ஏமாந்து, அந்த ஏமாற்றத்திற்கும் இன்னொரு வழிதேடித் திரிவர். கல்வி என்பது ஏதோ வேலைவாங்குவதற்காகப் படிப்பதல்ல.

இன்று படித்ததற்கேற்பவேலை கிடைக்காதென்பது எல்லா பெற்றோர் களுக்கும் தெரியும். ஆனாலும் ஏன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்? வெற்றுப் பெருமைக்காக அல்ல; குறிப்பிட்ட வயதுவரை ஒழுக்கமாகவும், கெட்ட வழிகளில் போகாமலும், கெட்ட பழக்கவழக்கத்திற்கு அடிமையாகிவிடாமலும் இருப்பதற்காகதான்.

ee

பணம் சம்பாதிப்பதற்கு முன்பு சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். எந்தத் தொழிலிலும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருந்தால்தான் முன்னேற்றம் அடையமுடியும். குறுக்குவழியில் வெற்றிபெற்றவர்கள் எந்தத் தொழிலிலும் நிலையாக இருக்கமுடியாது. கொஞ்சநாள் சந்தோஷமாக இருந்தாலும் சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவர்.

கல்வியையும் ஒழுக்கத்தையும் சம்பந்தபடுத்துவது ஏனெனில், கல்வி ஸ்தானமான நான்காமிடம் ஒழுக்கத்தையும் குறிப்பதால்தான். இரண்டாமிடம் நன்றாக இருந்து ஆரம்பக் கல்வியை நன்றா கப் படித்துக்கொண்டிருந்தவர்கள், நான்காமிடம் கெட்டிருந்தால் உயர்கல்வி படிக்கமுடியாமலும், படிக்கும்போதே ஒழுக்கம் தவறிய செயல்களில் ஈடுபட்டும் வாழ்க்கையில் சுகத்தை இழப்பர். தாயார், உறவினர் பேச்சைக் கேட்காமல் பகைத்துக்கொண்டு நஷ்டத்தையும் கஷ்டத்தையுமே காண்பர். அதனால் தான் தாயார் பேச்சை மதிக்காதவர்கள் அதிக துன்பத்தை அனுபவிக்கிறார்கள். இரண்டாமிடம் (ஆரம்பக் கல்வி) சிறப்பாக இருக்கிறதென்றால் குடும்பம், தாய்- தந்தை வருமானம், நற்குணம், செல்வம், செல்வாக்கு தானாக வரும். அதேபோல் நான்காமிடம் நன்றாக இருந்தால் உயர்கல்வி, தாயார், சுகம், வீடு, வாகனம் கிடைத்து,உற்றார்- உறவினர் ஆதரவு தானாகக் கிடைத்து நிம்மதி தந்துவிடும். அதனால்தான் பெற்றோர்கள் "எப்படியாவது ஒரு டிகிரி முடிச்சுடுப்பா' என குழந்தைகளிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒருவருக்கு கல்வி நல்லமுறையில் நடந்துவிட்டாலே வாழ்வில் சுபிட்சம் வந்துவிடும். இனி ஜாதகப்படி ஆரம்பக்கல்வி, உயர்கல்வி நிலை எப்படி என்பதைக் காண்போம்.

கல்வி

ஒருவரின் கல்விபற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஜாதகத்தில் லக்னத் திற்கு இரண்டாம் வீடு ஆரம்ப கல்வி, நான்காம் வீடு உயர்கல்வியின் நிலையையும் பார்க்கவேண்டும். 2, 4-ஆம் அதிபதிகள் 3, 6, 8, 12-ல் மறைந்தால் கல்வியில் மந்தம், தடை, பெற்றோரைப் பிரிந்து வெளியூரில் படித்தல், அடிக்கடி பள்ளி மாறுதல், வறுமை போன்ற காரணங்களால் கல்வி பயில போராட்டம் நடத்தவேண்டியதாகிவிடும். சிலருக்குக் கல்வி நன்றாக இருந்தால் உடல்நிலையைக் கெடுக்கும். உடல்நிலை பாதிப்பில்லாதி ருந்தால் கல்வியைக் கெடுக்கும். 2, 4-ஆம் இடத்திற்கு 3, 6-க்குடையவர் பார்வை, ராகு- கேதுக்கள் தொடர்பானது வெளிநாடு களில் கல்விபெறும் யோகத்தைத் தரும்.

குரு பார்வை 2, 4-ஆம் இடங்களுக்குக் கிடைப்பதும், வித்தைகாரகன் புதன் பலம்பெற்று சுபகிரகப் பார்வை, தொடர்பு பெற்றால் கல்வியைத் தங்குதடையின்றி முடிப்பர். பொதுவாக குரு, புதன் பலமிழந்து கெட்டு, தீயகிரகச் சேர்க்கை, பார்வை இருந்தால் கல்வியைக் கெடுக்கும்.

உயர்கல்வி

ஆரம்பக் கல்வி ஸ்தானமான இரண்டாமிடம் நன்றாக அமைந்து, சுப வலுத்தன்மை பெற்றால் ஆரம்பக் கல்வியை சிறப்பாக முடித்துவிடுவர். அதன்பின் உயர்கல்வியைக் குறிக்கும் நான்காமிடம், நான்காம் அதிபதி, நான்காமிடத்திற்கு சுபர் பார்வை, இணைவு, சுபத்தன்மை பெறவேண்டும். அப்போதுதான் ஆசைப்பட்டபடி கல்வி அமையும். மருத்துவராக சூரியன், செவ்வாய், கேது பலம்பெற்று 10-ஆமதிபதி தொடர்புவேண்டும். சூரியன், செவ்வாய் சாரம்பெறுதல், செவ்வாயைவிட சூரியன் வலுப்பெறவேண்டும்.

அப்போதுதான் மருத்துவராக முடியும். 2-ஆம் வீடு தொடர்பு கண் மருத்துவர்; ராகு- பல் மருத்துவம்; 5-ஆமதிபதி- குழந்தை நலம்; 9, 10, 11-ல் கேது பலம்- அறுவை சிகிச்சை நிபுணர் என உயர்த்தும். மேற்கண்ட கிரக அமைப்பிருக்கும் சிலருக்கு மருத்துவராக முடியாமல் இருப்பார்கள். காரணம் கிரகங்களின் பலம் குறைந்திருக்கும். ஆனாலும் அவர்களுக்குமருத்துவத் துறை சார்ந்த படிப்பு, தொழிலே அமையும்.

அதாவது நர்சிங், பார்மசிஸ்ட், பாராமெடிக்கல் பட்டயப் படிப்பையே பெறுவர். இன்று வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கவைக்க போட்டிபோடுகின்றனர். மருத்துவர் உயிர் காக்கக்கூடியவர். படிக்க முடியாதவரை வறட்டு கௌரவத்திற்காக மருத்துவக் கல்வி படிக்கவைப்பது சமூகத்திற்குச் செய்யும் துரோகம் என்பதைப் பெற்றோர் கள் உணரவேண்டும். முதலில் நாம் தரமற்ற மருத்துவரிடம் மருத்துவம் பார்க்க முடியுமா?.

செவ்வாய், புதன் 4-ஆமதிபதி இணைவானது பொறியியல் கல்வி தரும். சனி, புதன் இணைவு, பார்வை கிரக இடத்தைப் பொருத்து பொறியியல் துறையில் பல்வேறு கல்வி பெறுவர். சட்டக்கல்வி பயில குரு, தர்க்கம் செய்யவைக்கும். செவ்வாய், பேச்சாற்றல் பெற புதன் பலம்பெற்றால் சிறந்த வழக்கறிஞர். சந்திரன் பலம்பெற்றால் எதிரியின் மனமறிந்து வாதாடவும், 4-ஆமதிபதி, குரு, செவ்வாய் இணைவு, பார்வை உரிமையியல் வழக்கறிஞராகவும், அரசாங்க நீதிபதியாகவும் பதவி உயர்வைத் தரும்.

4-ஆமிடத்தில் சூரியன் இருந்தால் அரசியல்; 4-ல் சந்திரன்- மனம், மொழி; செவ்வாய்- இரும்பு, நெருப்பு, மருந்து; 4-ல் புதன்- இலக்கியம்; குரு- வேதம், உபதேசம்; நான்மிடத்தில் நான்காமதிபதி, சுக்கிரன்- கலை, கணினி; ராகு- கேது கமிஷன்துறை, மக்கள் பாதுகாப்புத் துறை சார்ந்த கல்வியைக் கொடுக்கும். நான்காமிட சனி உடலுழைப்புத்துறை மற்றும்தொழிற்கல்வியில் எந்தத் துறை என கிரக நிலை, கிரகம் நின்ற நட்சத்திர அதிபரின் வலுத்தன்மையைப் பொருத்து உயர்கல்வியைப் பெறுவர். எந்தத் துறை கல்விபயின்றா லும் 4-ஆமதிபதி பத்தாம் அதிபதியுடன் தொடர்பு கொண்டால் தான் கற்ற கல்விக் கேற்ற தொழில் அமையும்.

2, 4-ஆமதிபதிகள் சிறப்பாக இருந்து நல்ல தசை நடந்தால் ஊர்மெச்சும் கல்வி பெறுவர். சந்திரன், 12-ஆமதிபதி சிறப்பு பெற்றால் வெளிநாடுகளில் சென்று கல்வி பெறுவர். 10-ஆமதிபதி 2, 4-ஆமிடங்களுடன் தொடர்புபெற்றால் படித்ததற்கேற்ப வேலை கிடைத்துவிடும். யார் வேண்டுமானாலும் எதையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் பத்தாமிடத்தைப் பொருத்தே தொழிலில் வெற்றிபெற முடியும்.

2, 4-ஆமிட அதிபதிகள் 3, 6, 8, 12-ல் கெட்டிருந்தால், புத்தகத்தை எடுத்தால் வேறு சிந்தனைகள் வந்து படிக்கவிடாமல் செய்யும். 2, 4, 9-ஆமதிபதிகள் பாதித்தவர்கள் நன்றாகப் படிக்காமல் தாய்- தந்தையருக்கு வேதனை தருவர். லக்ன செவ்வாய், இரண்டாமிடச் செவ்வாய் கெட்டிருந்தால் தாய்- தந்தையையே திட்டுவார்கள். கல்வியில் நாட்டமில்லாமல் பிடிவாதம் பிடித்தவர்களாக இருப்பர். கண்டச்சனி, அஷ்டமச்சனி, ஏழரைச்சனிக் காலங்களில் படிப்பில் கவனம் குறைந்து அவப்பெயர் ஏற்படும். நான்காமிடம் பாதித்தவர்கள் ஆரம்பக் கல்வியில் நன்கு படித்த மாணவர்களாக இருந்து, உயர்கல்வியில் கோட்டைவிடுவர். நீச, பாவகிரக தசையும் கல்வியைக் கெடுக்கும்.

இன்று "கொரோனா' வந்தபிறகு மாணவர்கள் படிக்காமலேயே பட்டம்பெற்று, நேர்முகத் தேர்வுகூட நடத்தாமல் பெரிய வேலை, நல்ல சம்பளம் கிடைக்கவேண்டுமென ஆசைப்படுகின்றனர். பெற்றோரும் சேர்ந்து கனவுகாண்கிறார்கள். இப்படி எண்ணுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

இன்று மாணவர்கள் படிக்கச்சொல்லி மனம் புண்படும்படி பேசினால் தற்கொலைக்கும் முயற்சி செய்துவிடுகிறார்கள். தவறுசெய்தால் கண்டிக்கும் ஆசிரியர்களை தண்டிக்கவும் சட்டம் இருக்கிறது. யாரும் கண்டிக்க முடியவில்லை. உயிர்மீதான பயம் பிள்ளைகளுக்கு சாதகமாகிவிட்டதென்பதால் சரியாகப் படிக்காமல் ஒழுக்கம் தவறுகி றார்கள். பெற்றோர்கள் பணம் கட்டியாவது ஒரு பட்டம் வாங்கித்தர தயாராகிவிட்டனர்.

அவ்வாறு பட்டம் பெற்றவர்களுக்கு, கஷ்டப்பட்டுப் படித்தவர்களின் அறிவுத்திறன் புரியாது. நம்மைப்போலதான் எல்லாரும் பட்டம் வாங்கியிருப்பார்கள் என்று நினைத்து அனைவரையும் மட்டமாகவே நினைப்பர். இப்படிப்பட்டவர்கள் நல்ல மாணவனாக மட்டுமல்ல; நல்ல மனிதனாக வும்கூட வளரமாட்டார்கள்.

2, 4-ஆமதிபதிகள் சுபத்தன்மை பெற்றால் நல்ல மாணவனாக்கும். 2, 4-க்குரியவர்கள் கேந்திர திரிகோணம், பத்தாமிடத் தொடர்பு நல்ல தொழிலைத் தரும். குருச்சந்திர யோகம், குருமங்கள யோகமிருப்பவர்கள் அரசாங்கத்தால் புகழப்பட்டு பெரிய பதவி வகிப்பர். நான்காமிடம் வாகன யோகத்தையும் தருமென்பதால்தான் நன்கு படித்து, நல்ல நிலையிலிருப்பவர்கள் சொகுசான வாகன வசதிபெற்று சுகமாக வாழ்கிறார்கள். நான்காமிடத்தின் சுபத்தன்மையின் நிலையைப் பொருத்துதான் வீடானது பங்களாவா?

அப்பார்ட்மென்டா என்பது தீர்மானிக்கப்படும். அதேபோல சாதாரண காரா? சொகுசான காரா என்று சந்தோஷத்தின் அளவும் தீர்மானிக்கப்படும்.

பெரும்பாலானோர் பக்கத்து வீட்டுக்காரன், சொந்தக்காரன் முன்பு கௌரவம் வேண்டும் என்பதற்காகதகுதிக்குமீறி பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள். நான்காமிட உயர்கல்விக்காக செலவழிப்பதால், நான்காமிட காரகத்துவமான வீடு,வாகனம், சுகத்தை இழந்துவிடுவார்கள்.

நான்காமிடம் நன்றாக இருந்தால்தான் நன்கு படித்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். நான்காமிடம் சுமாராக இருந்து படிப்பவருக்கு சுமாரான வாழ்க்கையும், நான்காமிடம் கெட்டு உயர்கல்வி படிக்காதவர்கள் வாழ்க்கை உருப்படாமலும் போகும். கோடியில் ஒருவருக்கு முன் ஜென்ம கர்மாவால் கல்வி கற்காமலே பெயர், புகழ் கிடைத்துவிட்டால், அதனையே முன்னோடியாக நினைத்து, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக படிக்காமல் பலர் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.ஆதலால் நான்காமிட நிலையறிந்து அதிக உழைப்பைப் போட்டால் இன்பத்தை எளிதாகப் பெறலாம்.

bala090421
இதையும் படியுங்கள்
Subscribe