உங்கள் கைபேசி தரும் நன்மை தீமைகள்! 12 லக்னத்தாருக்கும்... -ஆர் மகாலட்சுமி

/idhalgal/balajothidam/pros-and-cons-your-mobile-phone-all-12-zodiac-signs-r-mahalakshmi

ற்போதைய காலகட்டத்தில், அனைவர் கைகளிலும் அலைபேசி எனும் செல்ஃபோன் உள்ளது. இதன் பயன்பாடு மிக அதிகம். இதன் பிரிவுகளாக தொலை பேசி, கணினி, மடிக்கணினி, டேப்லெட் எனும் கையடக்கக் கணினி என வகை வகையாக உள்ளன. இப்போது, இதன் பயன்பட்டால் இம்சையும் உண்டாகிறதென்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

ஜோதிடம், கைபேசி பற்றிக் கூறியிருக் கிறதா எனில், தகவல் தொடர்பு எனும் காரகத்தில் இதுபற்றி வருகிறது. ஜோதிடம் இதை 3-ஆமிடமாகக் குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு லக்னத்தின் 3-ஆமிடத்தின் சுப- அசுபத் தன்மையைக்கொண்டு அவரவர் கைபேசி நன்மை தருமா- தீமை தருமா என்பதைக் கூறிவிடலாம்.

அலைபேசியும் கிரக சம்பந்தமும் 3-ஆமிடம் சூரிய சம்பந்தம் பெற்றால் அரசு சார்ந்த அலுவலகம்மூலம் கைபேசிப் பயன்பாடு அமையும். சிலரின் தந்தை நல்ல கைபேசி வாங்கித் தருவார்.

122

3-ஆமிடத்திற்கு சந்திர சம்பந்தம் இருப்பின் உணவுத்துறை, கடல் சார்ந்த தொழில், மீன், அரிசி, திரவப் பொருள் விற்பனை என கைபேசியின் பயன்பாடு அமையும். ஜாதகரின் தாயார் கைபேசி வாங்கித் தருவார்.

3-ஆமிடம் செவ்வாய் சம்பந்தம் பெறின், கண்டிப்பாக இராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை சார்ந்து கைபேசி பயன்படும். ஜாதகரின் சகோதரர் கைபேசி வாங்கித் தருவார்.

3-ஆமிடம் புதன் சம்பந்தம் பெற்றால் கல்வி சார்ந்த, வியாபாரம் சார்ந்த பயன் பாடு அமையும். ஜாதகரின் தாய்மாமன் கைபேசி வாங்கித் தருவார்.

3-ஆமிடம் குரு சம்பந்தமாக அமைந் தால் ஆன்மிகத்துறை, வங்கி, நிதித்துறை, ஆசிரியர் பணி சார்ந்த பயன்பாடு இருக்கும். ஜாதகரின் வீட்டுப் பெரியவர்கள்மூலம் கைபேசி கிடைக்கும்.

3-ஆமிடம் சுக்கிரன் சார்பு பெற்றால் கலைத்துறை, உணவு, அழகுக் கலை, வெள்ளி, வைர வியாபாரம் சார்ந்த பயன்பாடு இருக்கும். ஜாதகரின் மனைவி கைபேசி வாங்கித் தருவார்.

3-ஆமிடம் சனி சம்பந்தம் பெறின், தூய்மை செய்யும் துறை, சுரங்கம், கால்வாய், தொழிலாளர்கள் நலன் சம்பந்தப் பணியில் பயன்பாடு இருக்கும். பழைய கைபேசியை வாங்குவார்கள்.

3-ஆமிடம் ராகு சார்பு பெறின், பௌத

3-ஆமிடம் ராகு சார்பு பெறின், பௌதிகம், இஸ்லாமியர்கள், ரசாயனம், வெளிநாடு, கள்ளக் கடத்தல் சார்பான பயன்பாடு இருக்கும்.

3-ஆமிடம் கேது சார்ந்து அமைந்தால், ஆன்மிகம், சந்நியாசி, கிறிஸ்துவர்கள், ஜோதிடர் சார்பான வேலைகளுக்குப் பயன்படுத்துவீர்கள்.

ராகு- கேதுக்கள் பாட்டானார்மூலம் கைபேசி வாங்கித் தருவர்.

3-ஆமிடம் உச்சமானால் கைபேசி நன்மைகள் தரும். நீசமானால் அவமானமும் கஷ்டமும் தரும்.

கைபேசியும் 12 பாவங்களும் 3-ஆமதிபதி லக்னத்தில்: உங்கள் கைபேசியை நீங்களே வாங்குவீர்கள். கைபேசியையும் உங்களையும் பிரிக்கவே முடியாது. அனைத்து செயல்களையும் கைபேசிமூலம் முடித்துவிடுவீர்கள்.

3-ஆமதிபதி 2-ஆம் வீட்டில்: எப்போது கைபேசி வாங்கினாலும் முழுப்பணத்தைக் கொடுத்து வாங்குவீர்கள். உங்களின் அனைத்து வங்கி, நிதி சார்ந்த தகவல்களால் கைபேசி நிரம்பியிருக்கும்.

3-ஆமதிபதி 3-ஆம் வீட்டில்: கைபேசி என்பது கர்ணகவசம் போல எப்போதும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும். கைபேசி இல்லையெனில் ஒரு விஷயமும் நடக்காது என பதறுவீர்கள் சர்வம் கைபேசிமயம் என வாழ்நாள் ஓடும்.

3-ஆமதிபதி 4-ஆம் வீட்டில்: இந்த அமைப்பினர் பொதுவாக ரியல் எஸ்டேட், விவசாயம், தண்ணீர் பகிர்வு, கல்வி, ட்யூஷன், எண்ணெய் வியாபாரம், வாகன ஏஜென்சி, தோட்டம், பால் விற்பனை மற்றும் மூ-கை மருத்துவம் சார்ந்து பயன்படுத்துவர்.

3-ஆமதிபதி 5-ஆம் வீட்டில்: சினிமா, நாடகம், இசைக் கலைஞர்கள் இவ்வமைப்பு பெறுவர். பங்கு வர்த்தகம் செய்வோர், விளையாட்டு வீரர்கள், குழந்தைப்பேறு மருத்துவர்கள், சில யாகம் செய்யும் அந்தணர்கள், வைதிக சடங்குகள் செய்வோர் என இவ்வகை அமைப்பு நற்பலன் தரும். மற்றும் எப்போதும் காதல் செய்வோர், அது சார்ந்து சில்மிஷம் செய்வோரும் இதனை நன்கு பயன்படுத்துவர்.

3-ஆமதிபதி 6-ஆம் வீட்டில்: மாதச்சம்பளம், கைபேசியில் இருப்பு வைக்கும் நபர்களுக்கு இருக்கும். சில மருத்துவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், வாடகை வீடு தேடிக்கொடுக்கும் தரகர்கள், சேவை, உழவாரப்பணி செய்வோருக்கும் இவ்வமைப்பு இருக்கும். நிறைய கடன் வாங்குவோருக்கும், நோய்த் தாக்கம் உடையவர்களுக்கும், நிறைய எதிரிகள் கொண்டவர்களுக்கும் இவ்வமைப்புண்டு.

3-ஆமதிபதி 7-ஆம் வீட்டில்: வியாபாரிகள், வணிகர்கள், தொழில் செய்வோர் என இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். விலையைத் தெரிந்துகொள்ளவும், பணம் வாங்குவதற்கும், பொருட்களின் இருப்பு நிலையைத் தெரிந்துகொள்ளவும் இவ்வமைப்பு பயன்தரும். மேலும் திருமண மையம், திருமண ஏற்பட்டாளர்கள், திருமண கேட்டரிங், திருமணம் செய்துவைக்கும் ஐயர், பியூட்டீஷியன் என இவ்வகை மக்கள் கைபேசியால் பலனை நன்கு அனுபவிப்பர்.

3-ஆமதிபதி 8-ஆம் வீட்டில்: இவ்வமைப்பு சுபத்தன்மையுடன் இருந்தால், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் வேலை, கிரிமினல் வக்கீல், கட்டப் பஞ்சாயத்து செயவோர், ஏற்றுமதி- இறக்குமதி என பயன் பெறுவர். இவ்வமைப்பு அசுபத் தன்மை பெறின், கள்ளக்கடத்தல், போதைப்பொருள் விற்பனை, பெண் விஷயங்கள், சட்டத்திற்குப் புறம்பான விஷயம் மற்றும் இறுதிச் சடங்கு காரியங்கள் போன்றவற்றுக்குப் பயன்படும்.

3-ஆமதிபதி 9-ஆம் வீட்டில்: இது பெரும்பாலும் சுபச்சடங்குகள் செய்யும் அந்தணர்களுக்கு அமையும். யாகம், கும்பாபிஷேகம், வேள்வி, மதச்சடங்குகள், திருமணம் போன் றவை செய்வோர் இவ்வமைப்பு பெறுவர். மேலும் வெளிநாட்டுக்கல்வி சம்பந்தம், வெளிநாட்டு ஏஜென்சி, அயல்நாட்டில் வேலை, பிறநாட்டுப் பணப் பரிவர்த்தனை, விமானப் பதிவுச்சீட்டு இவை சம்பந்தம் கொண்டோர் இவ்வமைப்பினால் மிகப் பயன்பெறுவர்.

3-ஆமதிபதி 10-ஆம் வீட்டில்: பெரியபெரிய தொழிற்சாலைகள் வைத்திருப்போர், நீதிபதிகள், அரசாங்கத்தில் மதிப்பான பதவி வகிப்போர், வானிலை அதிகாரிகள், மருத்துவர்கள், அரசிய-ல் முதன்மைப் பெற்றோர் என இவர்களுக்கு இந்த அமைப்பு மிகப் பயன்தரும். இவ்வமைப்பு அசுபத்தன்மை பெற்றால் இவர்கள் ஈமச்சடங்குகள் மற்றும் அது சார்ந்த செயல்களுக்கு கைபேசியைப் பயன்படுத்துவர்.

3-ஆமதிபதி 11-ஆம் வீட்டில்: இவ்வமைப்பு பெரும்பாலும் அரசியல் வாதிகள் மற்றும் சமையல் கலைஞர்கள், சொசைட்டிகள், கிளப்கள், வார்டு, கார்ப்பரேஷன் கவுன்சிலர், வட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர்கள் என பலருடன் எப்போதும் தொடர்பில் இருக்கும்வகையில் பயன்தரும். கைபேசியின் உபயோகம் மிகப் பெருக்கம் தரும். எப்போதாவது கைபேசியை எடுக்கவில்லை யெனில் எதிரில் தொடர்புகொள்ளும் பொதுஜனம், "போனை எடுக்கிறானா பாத்தியா; செம திமிர்' எனத் திட்ட ஆரம்பித்துவிடுவர்.

3-ஆமதிபதி 12-ஆம் வீட்டில்: இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு கைபேசி ஒ-த்தாலே செலவு அல்லது அலைச்சல் வந்துவிட்டது என அர்த்தமாகிவிடும். சிலரின் அலைபேசி அடிக்கடி தொலைந்து போய்விடும். சிலர் வெளிநாட்டி-ருந்து தாய்நாட்டுக்குப் பேசுவர்.

இனி 12 லக்னத்துக் கும் கைபேசி தரும் நன்மை- தீமைகளைக் காணலாம்.

மேஷ லக்னம்

உங்கள் கைபேசிக்குரியவர் மிதுன புதன். நீங்கள் புதிய கைபேசி வாங்கும்போது, அதில் நிறைய டெக்னிக்கலான பயன்பாடு உள்ளதா- அதன்மூலம் பொதுமக்கள் தொடர்பு வியாபாரம், வர்த்தக மேன்மை தருமா என்ற விஷயத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

உங்களின் பலருக்கு மாதச்சம்பளம் கைபேசியில் சேர்ந்துவிடும். வணிகர்கள் கைபேசி மற்றும் கணினி, க்யூஆர் ஸ்கேன்மூலம் பணம் பெறுவதென கைபேசியின் பயனை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்வீர்கள்.

உங்களின் புதன் உச்சமானால், வேலை விஷயத்தில் கைபேசி, கணினி மிக உபயோகம் தரும். மேலும் கடன் வசூ-க்கவும், சேவை செய்யவும் பயன்படுத்துவீர்கள். சிலர் மருத்துவராகவும், சிறைச்சாலை அதிகாரியாகவும், கைத்தொழில் மேன்மை அமைப்பாளராகவும் கைபேசியைப் பயன்படுத்துவர்.

புதன் நீசமானால், கூடியமட்டும் கைபேசிப் பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்.

பேசினால், மிகுந்த விரயத்துக்கு ஆளாகி விடுவீர்கள்.

மிக கவனம்: 3-ஆமதிபதி புதன் அசுபத் தன்மை கொண்டிருந்தால், "வெளிநாட்டில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன்' என்றோ, "ஒத்த ரூபா முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்' என்றோ, "வங்கியிலுள்ள உங்கள் கணக்கு காணாமல் போய்விட்டது; இந்த -ங்கைத் தட்டு' என்றோ கபடமாகப் பேசி, உங்களை கா- செய்துவிடுவர்.

பெருமாளை துளசிமாலை கொண்டு வணங்க, அலைபேசி அல்ல--ருந்து காத்து ரட்சிப்பார்.

ரிஷப லக்னம்

உங்களின் கைபேசிக்குரியவர் கடகச் சந்திரன். நீங்கள் புதிய கைபேசி வாங்கும் போது, அதனின் வேகச் செயல்பாட்டை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள். கொஞ்சம் மெதுவாக இருப்பினும் தவிர்த்துவிடுவீர்கள். உங்கள் கைபேசி, கணினி போன்றவை எல்லா தரவுகளையும் நிமிட நேரத்தில் பதவிறக்கம் செய்யவேண்டு மென எதிர்பார்ப்பீர்கள். இந்தக் காரணத் துக்காக சந்தைக்கு வரும் புதிய கைபேசியை மாற்றியபடி இருப்பீர்கள்.

உங்கள் கைபேசியின் பயன்பாடு, திரவவகை சார்ந்ததாக அமையும். உணவு சம்பந்த கேட்டரிங் துறையாக இருக்கும். அரிசி, பூ, மீன் முத்துகள் வியாபாரம் சம்பந்தமாக பயனிருக்கும்.

சந்திரன் உச்சமானால் கதை, கவிதை, நாடகம், சினிமா வசனம், கலைத்துறை சார்ந்து பிரபலமடைய கைபேசி நன்கு உதவும். மேலும் கைபேசியில், "வெந்நீர் காயவைப்பது எப்படி?' என்பது போன்ற குறிப்புகளை வெளிட்டு மிகப் பிரபலமாகி விடுவீர்கள்.

சந்திரன் நீசமடைந்தால் கைபேசிமூலம் வியாபாரம், பொருள் விநியோகம், நான்கு பேருக்கு அறிவுரை, வாழ்வு மேன்மைக்கு வழிகாட்டுதல், திருமண மையம் என எதை ஆரம்பித்தாலும், உடனே நாலாபுறமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி, கைபேசியை தலையைச் சுற்றி தூர எறியுமளவிற்கு ஆகிவிடும்.

மிக கவனம்: ரிஷப லக்னத்தாருக்கு சந்திரன் கெட்டிருந்தால், நீங்கள் ஆண்- பெண் சம்பந்த திருமணம் அல்லது வேறுபட்ட விஷயங்கள் போன்றவற்றில் மிக கவனமாக இருக்கவேண்டும். யாராவது ஒரு பெண், இனிமைக் குர-ல் இனிக்க இனிக்கப் பேசி உங்களை ஈர்த்துவிட்டால், கடைசியில் உங்கள் பணம் பறிபோய்விடும். அல்லது அது ஒரு ஆணாக இருந்து, குரல் மாற்றிப் பேசலாம். அல்லது நிறைய கல்யாணம் முடித்தவரும் உங்களை ஏமாற்றக் கூடும். எனவே கைபேசியில் வரும் திருமணத் தகவல்களை நன்றாக அலசி ஆராயவேண்டும்.

உங்களின் இஷ்டமான அம்பாளுக்கு மல்-கை மாலைசாற்றி வணங்க, கைபேசி மூலம் நல்லது மட்டுமே தருவார்.

தொடர்ச்சி அடுத்த இதழில்....

செல்: 94449 61845

bala291124
இதையும் படியுங்கள்
Subscribe