உங்கள் கைபேசி தரும் நன்மை தீமைகள்! 12 லக்னத்தாருக்கும்... -ஆர் மகாலட்சுமி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/pros-and-cons-your-mobile-phone-all-12-zodiac-signs-r-mahalakshmi-continued

மிதுன லக்னம்

உங்களின் கைபேசி கரகம் சிம்ம சூரியன் ஆவார். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது ரொம்ப பார்வையாக, வசீகரிக்கும் விதமாக, கெத்தாக இருப்பதுபோல் வாங்குவீர்கள். உங்களில் பலருக்கு அரசு வேலை சார்ந்து கைபேசியை அரசாங்கமே வழங்கிவிடும். உங்கள் கைபேசிக்கு எந்தவிதத்திலாவது அரசு சம்பந்தம் இருக்கும்.

இவர்கள் 3-ஆமதிபதி சூரியன் உச்சமா னால், பெரும்பாலும் அரசியல்வாதியாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், அரசு அலுவலக்கென்று ஒரு கைபேசி, லஞ்சம் வாங்க இன்னொரு கைபேசி, வேறு சில தொடர்புகளுக்கென தனி கைபேசி என தினுசு தினுசாக கைபேசியைப் பயன்படுத்துவார்கள். அல்லது பிரபலமான சமையல் கலைஞராக இருந்து, நிறைய கைபேசி கொண்டவராக இருப்பீர்கள். எது எப்படியிருப்பினும், 3-ஆமதிபதியின் உச்ச நிலை, அரசு, அரசியலில் பெரும் பதவிவகித்து, கைபேசிமூலம் நல்ல லாபம் சம்பாதிக்க வழிவகுக்கும்.

3-ஆமதிபதியின் நீசத்தன்மையானது பழையகால பட்டன் கைபேசி அல்லது லேண்ட் லைன் என நின்றுவிடும். அதிலும் இவர்கள் பெரும்பாலும் நோய் விசாரணை, கடன் விவரம் என இவை பற்றித்தான் முக்கால்வாசி நேரம் அழுவார் கள். சிலர் கள்ள லாட்டரி டிக்கெட் பற்றியும், முர ணான காதல் பற்றியும், ஏமாந்து போன லஞ்சப் பணம் பற்றியும் பேசுவீர்கள்.

மிக கவனம்: உங்கள் 3-ஆமதிபதி அசுபத்தன்மையுடன் இருந்தால், உங்களைக் காதலிக்கிறேன் என்று கைபேசிமூலம் கூறி ஏமாற்றிவிடுவர். "சினிமாவில் சேர்ந்து மிகப்பிரபலமாக மிளிரச் செய்கிறேன்' என்றோ, "மினிஸ்டராக்கி விட்டுத்தான் மறு வேலை' என்றோ உங்கள் வங்கிப் பணத்தை முற்றிலும் அபகரித்துவிடுவர். இதற்கும் மேலாக, விபசாரம் சார்ந்த விஷயங்களுக்கு உங்களை அழைத்தோ அல்லது "பொய்யாக உங்கள் எண்ணைக் கொடுத்து அசிங்கப்படுத்துவேன்' என மிரட்டியோ காசு பறித்துவிடுவர்.

குலதெய்வத்திற்கு, தீபமேற்றியும், விளக்கு சம்பந்தமாகவும் காணிக்கையும் அளிக்க கைபேசி உங்களைக் காப்பாற்றும்.

12s

கடக லக்னம்

இந்த லக்னத்தின் கைபேசி அதிபதி கன்னி புதன். நீங்கள் புது கைபேசி வாங்கும்போது, அதனுடைய புதுமைத்தன்மை, தற்போதைய தரவுகளை பதிவிறக்கம் செய்ய இயலுமா, அதனுடைய வேகத்தன்மை போன்றவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் வாங்க முற்படுவீர்கள். மார்க்கெட்டில் இதைவிட புதிய மாடல் வந்தவுடன் உடனே மாற்றிவிடுவீர்கள்.

உங்கள் கைபேசியைக்கொண்டு வியாபாரம், கணக்குத்துறை சார்ட்டர்ட் அக் கவுன்ட்ஸ் என கணக்கு வழக்கு சம்பந்தமான பயன்களுக்கு உட்படுத்துவீர்கள்.

உங்கள் 3-ஆம் வீட்டிலேயே அதன் அதிபதி உச

உங்கள் 3-ஆம் வீட்டிலேயே அதன் அதிபதி உச்சமடைவார். இவ்விதம் அடைந் தால் நீங்கள் உள்நாட்டு வரி மட்டுமல்ல; வெளிநாடு சம்பந்தமான வியாபாரக் கணக்குகள், வரி விவரம், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம், வழக்கு சம்பந்த தாவகள், பத்திரிகை சம்பந்த கட்டுரைகள், ஜோதிட ஆலோசனை, புத்தக வியாபாரம், அயல்நாட்டுத் தூதுரகப் பணிகள் என அசாதாரணமான பணிகளில் கைபேசியின் பயன்பாடு மிக லாபம் தரும்.

கடக லக்ன 3-ஆமதிபதி நீசமாகிவிட்டால், கைபேசியின்மூலம் ஒரு லாபம், ஒரு நல்லது, ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தது என்கிற கதையே கிடையாது. போனைத் தொட்டாலே நஷ்டம்தான் என்கிற கதை தொடரும்.

மிக கவனம்: உங்கள் கைபேசியில் வரும் தகவல்கள், "கோபுரக் கலசத்தைப் பெயர்த்து வைத்திருக்கிறேன்' என்றோ, "இந்த மாதிரி யாகம் பண்ண வில்லை என்றால் வீடு வௌங்காமல் போய்விடும்' எனறோ, வெளிநாட்டு பயணம் சம்பந்தமாகவோ, உங்கள் தந்தையின் கணக்கு வழக்கு சார்ந்தோ, குறிப்பிட்ட ஜோதிடப் பரிகாரம் செய்தே ஆகவேண்டும் என்றோ, உயர் கல்வி சம்பந்தமாகவோ பொய்த்தகவல் கூறி, உங்கள் பணத்தை மோசடி செய்துவிடுவர்.

உங்களுக் குப் பிடித்த திருப்பதி பெருமாள் அல்லது ஸ்ரீரங் கம் ரங்கநாதர், பார்த்தசாரதிப் பெருமாள் என இவர்களில் யாரையாவது துளசி மாலை கொண்டு வணங்க, கைபேசி காலை வாரா மல் இருக்கும்.

சிம்ம லக்னம்

சிம்ம லக்ன 3-ஆமதிபதி துலா சுக்கிரன். இவர்கள் அலைபேசி வாங்கும்போது அதன் அழகை, கவர்ச்சியை பளபளப்பை, நேர்த்தியை முதன்மையாகக் கொள்வர். பார்ப்பவர்கள், "அட இதை எங்கே வாங்கினே... பார்க்க அழகா அம்சமா இருக்கே' என்று கூறவேண்டும். இது இவர்களுக்கு மிகமுக்கியம். இவர்களது கலைத்தொழில் தொடர்புகளுக்கு, ஓரளவா வது பயன்படக்கூடியதாக இருந்தால்போதும் என நினைப்பார்கள்.

இவர்களின் கைபேசி வியாபாரம் பெரும்பாலும் தங்கம், வெள்ளி, வணிகம், வட்டித்தொழில், வாசனை மற்றும் ஆடம்பரப் பொருள் சம்பந்தம், வங்கி, கலைத்துறை,

அழகு நிலையம், அழகான கலைப் பொருட்கள், மது சம்பந்தம் என இவற்றின் பயன்பாட்டிற்கு பேருதவியாக அமையும்.

3-ஆமதிபதி சுக்கிரன் எட்டாமிடத்தில் உச்ச மடைவார். எனவே கைபேசியைப் பயன்படுத்தி மறைமுகமான செயல்களைச் செய்வார்கள். அல்லது இவர்களிடம் நன்றாகப் பேசி, இவர்களது தகவல்களை வாங்கிவிட்டு, பின் அதை ஆதாராமாகக்கொண்டு அவமானப்படுத்தி அழச் செய்வர். சிலர் தங்கம் கடத்துவதற்கும், போதை விஷயங்களுக்கும் கைபேசியைப் பயன்படுத்துவர். ஆக 3-ஆமதிபதி உச்சமானாலும் நேர்வழி நன்மை கிடைக்க வாய்ப்பில்லை.

3-ஆமதிபதி நீசமானால் இவர்களது சொற்களே இவர்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். கைபேசியில் பேசினாலே வில்லங்கம்தான் எனும் நிலை ஏற்பட்டுவிடும். இவர்களின் கைபேசி, இவர்களது பணத்தைப் பறித்துக்கொள்ளும்.

மிக கவனம்: சிம்ம லக்னத்தார். கூடிய மட்டும் கைபேசியை அதிகமாகப் பயன் படுத்தாதீர்கள். 3-ஆமதிபதி உச்சமானாலும், நீசமானாலும் உங்களுக்கு இம்சைதான். கலைத்தொழிலில் உள்ளோர், கூடியமட்டும், உங்கள் உதவியாளர்கள் கைபேசியைப் பயன் படுத்தவும். மேலும் இவர்கள் எண்ணுக்குத் தான், "உங்கள் பணம், அரசு இலாகாவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என்றோ "நீங்கள் சி.பி.ஐயின் விசாரணை வளையத்துக் குள் வந்துவிட்டீர்கள்' என்றோ, "உங்களை இப்போதே கைது செய்யப்போகிறோம்' என்றோ, "அயல்நாட்டு வழக்கு உங்கள்மீது போடப்பட்டுள்ளது' என்றோ, "உங்களுக்கு ஏற்றுமதி- இறக்குமதி சம்பந்த சிக்கல் உள்ளது' என்றோ விதவிதமாகக் கைபேசியில் மிரட்டி வங்கிப் பணத்தை சுத்தமாகத் துடைத்தெடுத்து விடுவர். இவ்வாறு ஏமாந்த பணம் மீண்டும் திரும்பக் கிடைக்க வாய்ப்பே இருக்காது; வெகு கவனம் தேவை.

மகாலட்சுமித் தாயாருக்கு நெய்தீபமேற்றி வழிபட, கைபேசி பாதுகாப்பான பலன் தரும்.

கன்னி லக்னம்

உங்களின் 3-ஆமிடத்துக்கு உரியவர் விருச்சிகச் செவ்வாய். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது சற்று பலமானதாக, எளிதில் உடையாததாக, வலிமையாக இருக் கிறதா என்று அலசி ஆராய்வீர்கள். அழகுக்கு முக்கியத்துவம் தருவதைவிட, அதிகநாள் உழைக்குமா என்று கவனிப்பீர்கள்.

உங்கள் கைபேசி மனை, நிலம், வீடு, கட்டடப் பொருட்கள், பள்ளத் தாக்குகள் சம்பந்த விஷயம், தொழிற்சாலைகள், குளிக்கும் அறை கட்டுவது, துணிகளை சலவை செய்யும் கடை, குப்பைகள் சேகரிக் கும் மேடுகள் மற்றும் கிணறு வெட்டுதல் போன்ற இனங்கள் சார்ந்த பயன், பலன் தரும்.

உங்கள் 3-ஆமதிபதி செவ்வாய் உச்சமாகி இருப்பின், கலைத்துறையில் சண்டைப் பயிற்சியாளர் வேலை, ஜிம் நடத்துவது, விளையாட்டுப் பயிற்சி நிறுவனம், நடிப்புப் பயிற்சிப் பள்ளி, கட்டப் பஞ்சாயத்து, காசு வாங்கிக்கொண்டு அடிக்கும் தொழில், பங்கு வர்த்தகம் நடத்தும் ஏஜென்சி, குழந்தைகள் நலன் என இவைபோன்ற இனங் களில் கைபேசியின் பயனுடன் மிகவும் பிரகாசிப்பீர்கள்.

3-ஆமதிபதி செவ்வாய் நீசமாகிவிட்டால், ஏதோவொரு வகையில் அரசியல்வாதிகளால் மிரட்டப்படுவீர்கள். நீங்கள் அரசியலில் முன்னேறி வந்துகொண்டிருந்தாலும், உங்களின் சில கைபேசிப் பதிவுகள் உங்களைக் கவிழ்த்துவிடும்.

சிலரது சிலபல "ரகசிய தொடர்பு' சங்கதிகள் கைபேசியில் வெளியாகி, அது பலருக்கும் தெரிந்து, அதனை அலசி காயப் போட்டு, கடைசியில் நீங்கள் வெட்கிநிற்க வேண்டியதாகிவிடும். 3-ஆமதிபதி நீசமாகி இருப்பின், தயவுசெய்து கைபேசியில் சமையல் பற்றி விரிவுரையாற்ற வேண்டாம்; சிக்கலாகிவிடும்.

மிக கவனம்: காதல் விஷயம்பற்றி தகவல் வந்தாலும் அல்லது வேறுவிதமாக பரப்புரை வந்தாலும், "வெளிநாட்டு வேலையை வீட்டிருந்தே கணினிமூலம், செய்து, உங்களின் அறிவு, சுறுசுறுப்பைக் கொண்டு தொடர்ந்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம்' என்றாலும் தயவுசெய்து ஏமாந்துவிடாதீர்கள். "வெளிநாட்டிலிருந்து உங்கள் பெயரில் ஏதோவொரு மறைமுகப் பொருள் பார்சல் வந்துள்ளது; அது விஷயமாக உங்களை கைது செய்யப்போகி றோம்' என்றாலும் உடனே சுதாரித்து விடுங்கள். இல்லையெனில் உங்கள் சேமிப்பு அத்தனையும் காணாமல் போய்விடும்.

வேலுடன் உள்ள முருகரை செவ்வாய்க் கிழமைதோறும் வணங்க, கைபேசியில் நல்லவை மட்டும் தருவார்.

துலா லக்னம்

துலா லக்னத்தாரின் கைபேசிக்குரியவர் தனுசு குரு ஆவார். இவர்கள், புதிய கைபேசி வாங்கும்போது, "பர்ஃபெக்ட்' எனும் நிறைவுத் தன்மை சரியாக உள்ளதா என கவனிப்பர். அதன் அம்சங்கள் இவர்களின் வேலைக்கு ஒழுங்காக வருமா என ஆராய்வர். அழகான, லட்சணமான கட்டமைப்பு உள்ளதா, நீண்ட நாள் உழைக்குமா என எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு கைபேசி வாங்குவர்.

பொதுவாக இவர்களின் கைபேசி, ஆன்மிக விஷயங்களுக்குப் பயன்படும். அது யாகம், வேள்வி, மதச் சடங்குகள், கோவில் யாத்திரை, அறநிலையத் துறை, ஜோதிடம், பரிகாரம், பூஜை சம்பந்த பொருள் விற்பனை, நிதித்துறை, கல்வி என விஷயங்கள் சார்ந்து பயன் தரும்.

உங்கள் 3-ஆமதிபதி குரு உச்சமானால் வங்கியில் முதன்மைப் பணி, நீதிபதி, அறநிலையத்துறை மந்திரி, பால்வள அதிகாரி, சட்ட வல்லுனர், சார்ட்டர்ட்டு அக்கவுன்ட், கல்வி அமைச்சர், கல்லூரிப் பேராசிரியர், மதகுருமார்கள் என இந்தவகை மதிப்புமிக்க மனிதர்கள் கைபேசியைப் பயன்படுத்தி, மக்களின் துயர் துடைப்பர்.

துலா லக்ன 3-ஆமதிபதி குரு நீசமானால், அலைபேசி தகவல்மூலம் வீடு, வாசல், வாகனத்தை இழந்துவிடும் அபாயம் உண்டு. நீங்கள் கடன் வாங்கியிருந்தால் உங்களை அலைபேசியில் அழைத்து கேவலமாகத் தீட்டுவார்கள். உங்கள் வீட்டிற்கே வந்து அவமானப்படுத்துவோம் என உதார்விடுவர்.

அல்லது கடன் வேண்டுமா என அலைபேசி யில் கேட்டு, பின் முதல் பணத்தைவிட, அதிகமாக வட்டி கேட்டு மிரட்டுவர்.

மிக கவனம்: வேலை, தொழில் பற்றிய தரவுகள் அலைபேசியில் வந்தால், அதனைக் கண்டுகொள்ளக்கூடாது. அவ்வாறு அதனைத் தொடர்புகொண்டால், உங்களை வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச்சென்று, எதிர்மறை அறிவின் ஆற்றலைப் பயன் படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தி அடிமை யாக்கிவிடுவர். அதுபோல் கடன் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பாக மாட்டிக் கொள்ளாதீர்கள். உடல்நிலை கெடுமளவுக்கு இம்சை செய்துவிடுவர். அதுபோல் காதல் விஷயம், கலைத்துறை சார்ந்தும் ஏமாறும் வாய்ப்புண்டு.

துலா லக்னத்தார் சிவனை வணங்க, அலைபேசி அல்லல்களை அகற்றிவிடுவார்.

விருச்சிக லக்னம்

இவர்களின் கைபேசிக்குரிய அதிபதி மகரச் சனி ஆவார். இவர்கள் புதிய கைபேசி வாங்குவதற்குள் தானும் குழம்பி, பிறரையும் குழப்பிவிடுவர். எத்தகைய கைபேசி வாங்கவேண்டுமென முடிவெடுக்க முடியாமல் திணறுவர். விலையும் குறைவாக இருக்கவேண்டும்; புது மாடலிலும் இருக்கவேண்டுமென அடம்பிடிப்பர். கடைசியில் சற்று புதிதும். இல்லாமல், பழைய மாடலும் இன்றி, இடைப்பட்டவிதமாக கைபேசி வாங்குவர்.

இவர்கள் கைபேசி வாயிலாக வீட்டு உபயோகப் பொருட்கள், நீரும் சேறும் சார்ந்த தொழில்கள், எண்ணெய் வியா பாரம், கட்டடம் சார்ந்த வேலை, வீடு மாற்றும் தரகர் வேலை, கிணறு போடுவது, கல்வி, வாகன வேலை போன்றவற்றுடன் சம்பந்தம் கொண்டு தொழில் விருத்தி செய்வார்கள்.

உங்கள் 3-ஆமதிபதி சனி உச்சம்பெற்றால் வெளிநாட்டு வணிகம் முதன்மை பெற்று, கைபேசிமூலம் வெளிநாட்டு ஆர்டர் வாங்குவீர்கள். வெளிநட்டில் கல்வி பயில, சினிமா ஷூட்டிங் நடத்த கைபேசிமூலம் ஏற்பாடு செய்வீர்கள். கைபேசி அல்லது கணினிமூலம் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்துவிடுவீர்கள். அடுக்குமாடி கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கைபேசி மிக உதவும். இரும்புசார்ந்த கட்டுமானப் பொருட்களின் விஷயத்தில் கைபேசி வணிக மேம்பாடு தரும்.

3-ஆமதிபதி நீசமானால், கைபேசியை வைத்து, எப்போதும் வேலை தேடிக் கொண்டே இருப்பீர்கள். அல்லது கடன் வாங்க அலைபேசியை ஆராய்வீர்கள். சிலர் மருத்துவ உதவி சம்பந்தமாக தகவல்களைத் திரட்டுவர். அலைபேசிமூலம் யாருக்காவது உதவி செய்தால், அவர்கள் ஓஹோவென்று வளர்ந்துவிடுவர். நீங்கள் எப்போதும் தேய்ந்துகொண்டே இருப்பீர்கள்.

மிக கவனம்: கடன், விஷயங்களை கைபேசிமூலம் முடிவெடுக்காதீர்கள். வேலை தேடித்தரும் கைபேசித் தரவுகளை நம்பினால், ஏமாற்றம்தான் மிஞ்சும். உங்களின் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் காந்தப் படுக்கை, கைலாசத்திலிருந்து பிடுங்கிவரப்பட்ட மூலிகை, சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட கல் என எதையாவது சொல்லி உங்கள் பணத்தை ஏமாற்றி விடுவர்.

ஆஞ்சனேயரை வணங்க அனைத்து கைபேசி தகவலும் நன்மை தரும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்....

செல்: 94449 61845

bala061224
இதையும் படியுங்கள்
Subscribe