Advertisment

உங்கள் கைபேசி தரும் நன்மை தீமைகள்! 12 லக்னத்தாருக்கும்... -ஆர் மகாலட்சுமி (சென்ற இதழ் தொடர்ச்சி...)

/idhalgal/balajothidam/pros-and-cons-your-mobile-phone-all-12-zodiac-signs-r-mahalakshmi-continued-0

தனுசு லக்னம்

உங்கள் கைபேசிக்குரிய கிரகம் கும்பச் சனி ஆவார். எல்லாரும் கைபேசி வாங்கும் போது, அழகாக இருக்கிறதா, வெகுநாள் உழைக்குமா என்றெல்லாம் கவனிப்பார்கள். ஆனால் இவர்கள் கைபேசியில் எத்துணை பாஸ்வேர்ட் போட்டுக்கொள்ளலாம், ரகசியம் பாதுகாக்கப்படுமா, கைபேசியை யாராவது தவறுதலாக எடுத்தாலும், அதனை இயக்கமுடியுமா என ரகசியம், தரவுகளின் மறைவுத்தன்மையின் பாதுகாப்பு என இதன் அடிப்படையில்தான் வாங்க முற்படுவர். இவர்களின் கைபேசியை யாருக்கும் தரமாட்டார்கள்.

Advertisment

இவர்களது கைபேசிமூலம் நிர்வாகம், விமானம் சம்பந்த பயண வேலைகள், ஆசிரியர்கள், ஜோதிட வேலை, சிறைத்துறைப் பணி, ஆராய்ச்சிப்பணி, உளவுத் துறை, சுங்க இலாகா அதிகாரி என இவை சார்ந்து வேலைகளின் கைபேசி பயன்பாடு அமையும்.

இவர்கள் கைபேசிக்குரிய கிரகம் சனி உச்ச மானால், கண்டிப்பாக அரசியல்வாதியாக இருப்பார்கள். கல்வி சம்பந்த பள்ளி, கல்லூரி தாளாளராக பதவி வகிப்பார்கள். சொந்தமாக பால் உபரி என்ற பண்ணை நடத்துவார்கள். தனியார் நிதி நிறுவனம்.

12

Advertisment

தங்க வியாபாரம் மேற்கொள்வார்கள். மிகப் பிரபலமான சமையல் கலைஞர்களாக இருப்பார்கள். இதனால் உங்கள் உரையாடல் களில் பணப் பரிவர்த்தனை மிகமிக மதிப்பு வாய்ந்ததாக அமையும். எனவே கைபேசியின் ரகசியத்தன்மையை மிக முதன்மையாகக் கருதுவீர்கள்.

உங்கள் 3-ஆமதிபதி சனி நீசமானால், எப்போதும் காதல் தோல்வியைப் பற்றிப் புலம்பித் தீர்ப்பீர்கள். அல்லது இவர்களின் உருப்படாத வாரிசுகளின் தொல்லையைப் பற்றிய பேச்சாக அமையும். கலைத்துறையில் நுழைவதற்கு கண்ட பேரிடமும் பேசவேண்டி யிருக்கும். சிலர் கள்ளத்தனமாக திருட்டு லாட்டரி வாங்குவதுபற்றி விசாரிப்பர்.

மிக கவனம்: இவர்கள் க

மிக கவனம்: இவர்கள் கைபேசியில் காதல் சொட்டச்சொட்ட யாராவது பேசினால், "ஆவ்' என வாயைப் பிளந்துகொண்டு பேசாதீர்கள். மொத்த ஆப்பும் உங்களுக்கு தான். மற்றும் "சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருகிறேன்' என்றோ, சினிமாஎடுக்க பார்ட்னர் தேவை' என்றோ, உங்களுக்கு "கைலாஸா நாட்டில் அமைச்சர் பதவி வாங்கித் தருகிறேன்' என்றோ, "உங்கள் பூர்வீக சொத்தை நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்கிறோம்' என்றோ உங்களுக்கு லிங்க் அனுப்பினால், அத்துடன் நீங்கள் தொலைந்தீர்கள். மேலும் உங்கள் சொத்து விவரம் கைபேசியில் வராதபடி கவனமாக இருக்கவும்.

சனீஸ்வரரை வணங்க, சர்வ பாதுகாப்பு தருவார்.

மகர லக்னம்

உங்களின் கைபேசிக்குரிய கிரகம் மீன குரு ஆவார். இவர்கள் கைபேசி வாங்கும்போது, அதன் விரைவு, வேகத்தன்மை, சீக்கிர மாகத் தரவுகளின் இறங் கும் தன்மை, ஒன்றைப் பார்த்துக்கொண்டி ருக்கும்போதே, இன்னொரு தரவையும் நோக்கும் வசதி என இவையெல்லாம்தான் முக்கிய அம்சமாக அமையும். மேலும் கைபேசியைப் புதுமை விஷயத்துக்காக அடிக்கடி மாற்றுவர்.

உங்கள் கைபேசி, கல்வி, ஆன்மிகம் நீராதாரம் சம்பந்த இனங்கள், வெளிநாட்டில் கல்விபயலும் ஏஜென்சி, நிதித்துறை, கப்பல் போக்குவரத்து, ஆலயங்களில் நீர்நிலைகளை மேம்படுத்துவது, அயல்நாட்டுத் தூதரகம், வங்கி இவை சார்ந்து பயன்படுத்துவீர்கள்.

மகர லக்ன கைபேசி கிரகம் குரு உச்ச மானால், பெரும்பாலும் வெகுஜனத் தொடர்பு சார்ந்த பயன் இருக்கும் சிலர் வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டுப் பயணம், பணப்பரிமாற்றம் குறித்த செயல் களுக்கு உபயோகப்படுத்துவர். அனேகம் பேர் திருமண நிலையம் திருமண அமைப்பு, திருமண கேட்டரிங் போன்றவை சார்ந்து பேசுவர். திரவம் சார்ந்த பால், மோர், ஐஸ்க்ரீம் என இதன் வியாபாரியாக இருப்பர். வர்த்தகத்துக்குத் தேவையான முதலீடுகளை, கைபேசிமூலமே பேசி ஒருவருக்கொருவர் கைமாற்றிவிடுவர்.

குரு நீசமானால் கைபேசிக்கும் உங்களுக் கும் ஆகவே ஆகாது. ஒன்று அடிக்கடி பழுதாகிவிடும். அல்லது காணாமல் போய்விடும். கைபேசியில் எந்த செய்தி வந்தாலும், எத்தனைத் தகவல், தரவுகள் வந்தாலும், அத்தனை யும் உங்களை ஓட்டாண்டியாக்கி, நடுத்தெருவில் நிறுத்திவிட்டுத் தான் ஓயும். கைபேசியின் சங்காத்தமே வேண்டாம் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவீர்கள்.

மிக கவனம்: உங்கள் கைபேசிமூலம் வரும் இன்னல், இம்சைகளுக்கு நீங்களே முழு காரணம். யாராவது "ஸார், உங்க போனை கொஞ்சம் கொடுங்கள், ஒரு நிமிடத்தில் பேசிவிட்டுத் தந்து விடுகிறேன்' எனக்கூறிவிட்டு, ஏதாவது தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்துவிட்டு பின் உங்களிடம் திருப்பித் தந்துவிடுவர். பின் மாட்டிக்கொண்டால் நீங்கள் தான் இம்சைப்படவேண்டும். சில செய்திகளில், ஏதோவொரு லிங்க்கை ஓபன் பண்ணியதால், அத்தனைப் பணமும் போய்விட்டதென வருமே, அதில் பெரும்பாலோர் மகர லக்னத்தாராக இருப்பர். எனவே உங்கள் குரு நீசமாக இருந்தால், உங்கள் கைபேசி உங்களின் முதல்தர எதிரியாக இருக்கும்; கவனம் தேவை.

கடல், நீர்நிலைகள் அருகிலுள்ள சிவனை வணங்க, கைபேசியை நன்மை தரும் பொருளாக மாற்றுவார்.

கும்ப லக்னம்

இவர்களின் கைபேசிக்குரியவர் மேஷ செவ்வாய். இவர்கள் புது கைபேசி வாங்கும்போது, பெத்த பெரிசாக, எல்லாருக்கும் தெரியும்படி, பெரிய சைஸில் வாங்குவர். நம்ம செல்ஃபோனை, எல்லார் மாதிரியும், சட்டைப் பையில் வைக்கமுடியாது. அவ்வளவு பெரிசு.

அதுக்குன்னு தனியா பை வேணும் என்று பெருமை பேசுவர். தொழில் விஷயமாகப் பேசும்போது, மிக சத்தமாக, எட்டூக்குக் கேட்டும்படி கத்துவார்கள்.

இவர்களின் பயன்பாடு சீருடைப்பணி, வனத்துறை, தீயணைப்புத்துறை, இராணுவம், தொழிற்சாலைகள், மலைப்பகுதி, கரடுமுரடான இடங்கள் என இதுபோன்ற வேலைகளில் கைபேசியை உபயோகப்படுத்துவர். இவர்களின் எண்ணப்படியே காவல்துறை அதிகாரிகளின் மைக்போன் பெரிதாகவே அமைவது அதிசயம்தான்.

கும்ப லக்ன 3-ஆம் அதிபதி உச்சமடைந்தால் வெளிநாட்டு முதலீடு சார்ந்த தொழில்களில் பரபரப்பாக இருப்பார்கள். போக்குவரத்துத்துறை, தீவிரவாதிகளை அடக்கும் வேலை, மருத்துவ ஆராய்ச்சி, வீடு, கட்டுமானம், நிலம் பிரிப்புத்துறை, வேளாண்மைத் துறையில் நல்ல பதவி, துணிச்சலான செயல்கள், பெரிய தொழிற்சாலை அதிபர் என இவ்வித மதிப்புமிக்க வேலைகளுக்கு கைபேசியைப் பயன்படுத்துவர்.

கும்ப லக்ன 3-ஆமதிபதி நீசமானால், வேலை விஷயமாக, எதிர்மறைப் பலன்களே கிடைக்கும். சிலரின் கைபேசி பேச்சு, தகவல்கள் வேலையைப் போக்கடித்துவிடும். மருத்துவரிடம் கைபேசியில் பேசி, மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள். தவறான மருந்து உட்கொள்ளும்படி ஆகிவிடும்.

மிக கவனம்: கும்ப லக்ன 3-ஆமதிபதி செவ்வாய், அசுப நிலையில் இருப்பின், தயவுசெய்து கடன் விஷயங்களுக்கு, கைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். உங்களையே அழித்துக்கொள்ளும் அளவிற்கு டார்ச்சர் கொடுப்பர். வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றாலும் நம்பவேண்டாம். கைபேசியை நம்பி எந்த போட்டி பந்தயத்திலும் ஈடுபடவேண்டாம். பழனி முருகரை வணங்க, கைபேசியின் நல்ல பலன்க ளை பலமாக்குவார்.

மீன லக்னம்

உங்களின் 3-ஆமதிபதி ரிஷப சுக்கிரனே கைபேசிக்குரியவர். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது அழகாக இருக்கி றதா என்பதோடு, பாதுகாப்பையும், உறுதித் தன்மையையும் இணைத்துப் பார்த்து வாங்குவீர்கள்.

உங்கள் கைபேசியைக்கொண்டு, வாக்குமூலம் சம்பாதிக்கும் வேலை, வங்கி, நிதி நிறுவனம், கலை சம்பந்தம், உணவு சார்பு, கருவூலம், வேளாண்மை, மாடுகள் சம்பந்தம், வெள்ளி வியாபாரம், பெண்களின் பாதுகாப்பு என இவை சார்ந்த சம்பாஷணைகளை மேற்கொள்வீர்கள்.

உங்கள் 3-ஆமதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், தொழில் விருத்திக்கு உங்கள் கைபேசி மிகமிக உதவும். இன்னும் சொல்லப்போனால், கைபேசி மூலம் ஒரு தொழிலைத் தொடங்கி, அதுவே வாழ்க்கையின் நிதி ஆதாரமாகிவிடும். அதற்கு இணையாக, எதிர்மறைத் தரவுகளும் பதிவாகும். இவ்வமைப்புகொண்ட மீன லக்னத்தார், தொழிலின் எத்தளத்தில் இருப்பினும், உங்கள் கைபேசி மூலம் தொழிலையும் இணைத்துத் தொடங்குங்கள்; அளப்பரிய வெற்றியை அடையலாம்.

வெற்றியின் அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களையும் சந்திக்க மனதளவில் தயாராக இருங்கள். சினிமா, டி.வி, நாடகம், நாட்டுப்புறக் கலைஞர் கள், பாடகர்கள், கதை, கவிதை எழுதுபவர் கள், இசையமைப்பாளர்கள் என இத்தகை யோரும் கைபேசியை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் 3-ஆமதிபதி நீசமானால், நீங்கள் யாருடன் பேசினாலும், அது உங்களுக்குப் பாதகமாகிவிடும். கைபேசி தம்பதிகளை பிரித்துவிடவும் கூடும். வியாபார விஷயங்களுக்கு கைபேசியைப் பயன்படுத்தினால் இழப்பு ஏற்படும்.

மிக கவனம்: உங்கள் 3-ஆமதிபதி அசுபத்தன்மையுடன் இருந்தால், தயவுசெய்து உங்கள் திருமண விஷயங்களை கைபேசியில் முடிவெடுக்க வேண்டாம். நன்றாக ஏமாற்றப் பட்டுவிடுவீர்கள். தம்பதிகள் தங்களின் தனிப்பட்ட ஃபோட்டோ, தரவுகளை கைபேசியில் பதியவோ, ஸ்டோர் செய்யவோ வேண்டாம். இதை வைத்து, யாராவது உங்களை மிரட்டக்கூடும்; கவனம் தேவை.

மகாலட்சுமித் தாயாரை வணங்க, மங்களங்கள் எல்லாம் பெருகும்.

செல்: 94449 61845

bala131224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe