மனிதனாகப் பிறந்தவன் இந்த பூமிக்குத் தன்னைத் தந்த தாய்க்கும், வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கும் நன்றியோடு நடக்கவேண்டு மென பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அவ்வாறு போற்றத்தக்க அன்னை- தந்தை அமையும் வரம் எல்லாருக்கும் கிடைப்ப தில்லை. சிலருக்கு சுயநலமிக்க தாய்- தந்தை அமைந்துவிடுகிறார்கள். ஒன்பதா மிடத்தைக்கொண்டு ஒருவரின் பாவ- புண்ணியக் கணக்கை அறியலாம். நாம்செய்த பாவ- புண்ணியக் கணக்கின்படிதான், நாம் இன்னாருக்குப் பிறக்கவேண்டும் என்பதே தீர்மாணிக்கப்படுகிறது.
ஒன்பதாமிடம் நன்றாக இருந்தால் வசதிமிக்க நல்ல குடும்பப் பிண்ணணி கொண்ட நல்ல பெற்றோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் அமைந்து, வாழும் காலத்தில் மகிழ்ச்சியோடு வாழ்வர். அதனால்தான் ஒன்பதாமிடம் பாக்கிய ஸ்தானமாகிறது. எப்படிப்பட்டவர்க்கு எப்படி வேண்டுமானாலும் நாம் பிறந்திருக்கலாம். ஆனால் நம்முடைய குணம், தெய்வ சிந்தனை நிச்சயம் நம்மை வாழும் காலத்திலேயே மாற்றும். நமக்குப் பிறர் செய்த தீங்கையே நினைத்து நொந்து வாழாமல், நன்மையைப் பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தால் பேரின்பம் உண்டாகும்.
வள்ளல் குணம்
வள்ளல்தன்மை என்பது பிறருக்கு உதவுவது அல்லது பணம் தருவது மட்டும் என பலர் நினைக்கிறார்கள். சக மனிதன்மீது இரக்க சிந்தனை தோன்றி வழிகாட்டுதல் தருவதும், வாய்ப்பைத் தருவதும்கூட வள்ளல் குணம்தான். ஒரு வேளை பசிக்கு உணவுகொடுப்பது மட்டுமே வள்ளல் தன்மையல்ல. அடுத்தடுத்த வேளைக்கு உணவைத் தேடிக்கொள்ள- தன் தேவையைத் தானே பூர்த்திசெய்ய வழியைக் கற்றுக் கொடுப்பவரே சிறந்த வள்ளலாவார். ஒன்பதாமிடம், ஒன்பதாமதிபதி கேந்திர, கோணங்களில் நல்ல நிலையில் இருந்தால் நற்குணம் நிறைந்தவராகவும், தாராள மனம் படைத்தவராகவும் இருப்பார். பலர் பணக் காரராக இருக்கலாம். ஆனால் கொடுக்கும் வள்ளல் குணம் இருக்காது. ஒன்பது, பத்தாமதிபதி தொடர்புகொண்டு தர்மகர்மாதிபதி யோகம் பெற்றவர்கள் தன்
மனிதனாகப் பிறந்தவன் இந்த பூமிக்குத் தன்னைத் தந்த தாய்க்கும், வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கும் நன்றியோடு நடக்கவேண்டு மென பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அவ்வாறு போற்றத்தக்க அன்னை- தந்தை அமையும் வரம் எல்லாருக்கும் கிடைப்ப தில்லை. சிலருக்கு சுயநலமிக்க தாய்- தந்தை அமைந்துவிடுகிறார்கள். ஒன்பதா மிடத்தைக்கொண்டு ஒருவரின் பாவ- புண்ணியக் கணக்கை அறியலாம். நாம்செய்த பாவ- புண்ணியக் கணக்கின்படிதான், நாம் இன்னாருக்குப் பிறக்கவேண்டும் என்பதே தீர்மாணிக்கப்படுகிறது.
ஒன்பதாமிடம் நன்றாக இருந்தால் வசதிமிக்க நல்ல குடும்பப் பிண்ணணி கொண்ட நல்ல பெற்றோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் அமைந்து, வாழும் காலத்தில் மகிழ்ச்சியோடு வாழ்வர். அதனால்தான் ஒன்பதாமிடம் பாக்கிய ஸ்தானமாகிறது. எப்படிப்பட்டவர்க்கு எப்படி வேண்டுமானாலும் நாம் பிறந்திருக்கலாம். ஆனால் நம்முடைய குணம், தெய்வ சிந்தனை நிச்சயம் நம்மை வாழும் காலத்திலேயே மாற்றும். நமக்குப் பிறர் செய்த தீங்கையே நினைத்து நொந்து வாழாமல், நன்மையைப் பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தால் பேரின்பம் உண்டாகும்.
வள்ளல் குணம்
வள்ளல்தன்மை என்பது பிறருக்கு உதவுவது அல்லது பணம் தருவது மட்டும் என பலர் நினைக்கிறார்கள். சக மனிதன்மீது இரக்க சிந்தனை தோன்றி வழிகாட்டுதல் தருவதும், வாய்ப்பைத் தருவதும்கூட வள்ளல் குணம்தான். ஒரு வேளை பசிக்கு உணவுகொடுப்பது மட்டுமே வள்ளல் தன்மையல்ல. அடுத்தடுத்த வேளைக்கு உணவைத் தேடிக்கொள்ள- தன் தேவையைத் தானே பூர்த்திசெய்ய வழியைக் கற்றுக் கொடுப்பவரே சிறந்த வள்ளலாவார். ஒன்பதாமிடம், ஒன்பதாமதிபதி கேந்திர, கோணங்களில் நல்ல நிலையில் இருந்தால் நற்குணம் நிறைந்தவராகவும், தாராள மனம் படைத்தவராகவும் இருப்பார். பலர் பணக் காரராக இருக்கலாம். ஆனால் கொடுக்கும் வள்ளல் குணம் இருக்காது. ஒன்பது, பத்தாமதிபதி தொடர்புகொண்டு தர்மகர்மாதிபதி யோகம் பெற்றவர்கள் தன் கைகளால் அடுத்தவருக்குக் கொடுக்கும் யோகம் பெறுவார்கள்.
பொருள் வைத்திருப்பவனைவிட கொடுப்ப வனையே உலகம் மதிக்கும்; கொண்டாடும்; வள்ளலாகப் போற்றும். ஒன்பதாமிடம், ஒன்பதாமதிபதிகெட்டவன் கல்நெஞ்சக்கார னாக- இரக்கமற்றவனாக இருப்பான்.
ராஜயோகங்கள் பலருக்கு இருந்தாலும் அதற் கான பலன் சிலருக்கே உண்டு. காரணம், ராஜ யோக அமைப்பு ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் மறைந்தோ, பாவத்தன்மை பெற்றுக் கெட்டோ அல்லது அதற்கான தசாபுத்தி கள்வராமலோ இருக்கும்.
ஒன்பது, பத்தாமிடங் களின் வலுத்தன்மையைப் பொருத்தே ஒருவர் பிற மக்களுக்கு உதவிசெய்வார்; பிற உயிர்களின் பசியைத் தீர்ப்பார். ஒன்பதாமதிபர் ஆட்சியோ, உச்சமோ பெற்றால், தனக்கு இருக்கி றதோ இல்லையோ- தன்னிடம் உதவிகேட்பவர் யாராக இருந்தாலும் மறுக்காமல் உடனே செய்துவிடும் மனம்கொண்டவராக இருப்பார்.
தெய்வ சிந்தனை
கடவுள், உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக வும் காட்சிதருகிறார். தெய்வம் இதுதான் என்னும் ஒற்றை முடிவுக்கு வரமுடியாத எண்ணம் தருவதுதான் ஆன்மிகமாக இருக்கி றது. ஆனாலும் உண்மையில், உலகிற்கே ஒருவர்தான் தேவனாக இருக்கமுடியும். இந்த பூமியில் மனிதர்கள் தோன்றியதிலிருந்து உருவாக்கிய கடவுள்கள் எண்ணிலடங்காதவை. மனிதன் பயந்த, வியந்த சில மனிதர்களை, இயற்கையை தெய்வங்களாக வணங்கியிருக்கி றார்கள்.
தெய்வீகம் என்பது பக்தி, ஆன்மிக ஆர்வம், தெய்வத்தைப் பற்றிய சிந்தனை, தெய்வத்திடம் வேண்டுதல், நிறைவேற்றுதல் என பலவிதமாய் இருக்கிறது. ஒன்பதாமிடம் கெடாமலிருந்தால் தீர்த்த யாத்திரை, கோவில் கட்டுதல்,ஆன்மிகப் பணிகள் செய்தல் என அதன் தசை முழுக்க செய்வர். ஒன்பதிலிருக்கும் ராகு தன் தசை வந்ததும், கடவுள் இல்லையென்று சொன்னவரை கோவில் கோவிலாக வழிபாடு செய்ய வைப்பார்.
மனிதனுக்கு யாரிடத்தில் நம்பிக்கை,தன்னம் பிக்கை தோன்றுகிறதோ அவரே கடவுளாகிறார். அதனைத் தருவது ஜாதகத்தில் ஒன்பதாமிடம். ஒன்பதாமிடம் நல்ல நிலையிலிருந்தால்தான் குழம்பாமலும், யாரையும் குழப்பாமலும் ஒரே முடிவு- ஒரே சிந்தனையாய் வாழ்வார்கள். ஒன்பதாமிடம் கெட்டவர்கள் "தானே கடவுள்; தான் வணங்குவது மட்டுமே கடவுள்' என சொல்லி, தானும்கெட்டு, தன்னைச் சார்ந்தவரையும் கெடுத்து வாழ்வார்கள். ஒன்பதாமிடம் சுப கிரகப் பார்வையில், சுப பலமாக இருக்கும் ஜாதகர்கள் நம்பிக்கை கொடுப்பவர்கள் மட்டு மல்ல; நம்பிக்கையானவர் களும்கூட. ஒன்பதாமிடம் நல்ல நிலையில் இருப்ப வர்நல்லவர் மட்டுமல்ல; நாட்டுத் தலைவராக இருக்கக்கூடிய வல்லவர். தன் குடும்பத்தை மட்டுமல்ல; குடிமக்களையும் குடும்பமாக எண்ணிப் பாதுகாக்கும் ஆற்றல்மிக்கவர். ஒன்பதாமிடம் சுபவலுப் பெற்றால் இவர் பேசும் வார்த்தைகள் வாழ்க்கைக்குப் பயன்படும் வேதமாக மாறும்.
பூர்வபுண்ணியம்
ஒன்பதாமிடம் வலுப்பெற்று நல்ல நிலையில் இருந்தால் தந்தை சிறப்பாக இருப் பார் என்பது மட்டுமல்லாமல், தந்தைவழி பூர்வீக சொத்துகள் கிடைக்கும். பரம்பரை பரம்பரையாக கும்பிட்டுவரும் குலதெய்வத் தின்மீது அன்பு, மரியாதை, பக்தி நிறைந்தவராக இருப்பார். கோவில் கும்பாபிஷேகம் நடத்து வார். தெய்வத்தைத் தேடி, ஆசிர்வாதம், அனு கூலம் பெற தீர்த்த யாத்திரை சென்றுவருவார்.
ஒரு மனிதனுக்கு நல்ல குடும்பம், நல்ல உறவினர், நண்பர்கள் அமைவதும், சொகுசான வீடு, வாகனம், சோதனைகள் குறைந்த வெற்றி கள் பெறுவதும் ஒரு வரம். அதுவேமிகச்சிறந்த பாக்கியம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமி டம் நன்றாக அமைந்தால், அனைத்து பாக்கியங் களையும் பூர்வபுண்ணிய வலுவால் கிடைக்கப் பெற்று அனுபவிப்பார். பல விருதுகள் பெற்று புகழடைபவர்களின் ஜாதகத்தில் ஒன்பதாமி டம் சிறப்பாக இருக்கும். வெகுசிறப்பாக ஒன்பதாமிடம் வலுப்பெற்றால் அழியாப்புகழ் பெறுவார். பூர்வபுண்ணியம் என்பது முன்னோர் கள் சேர்த்துவைத்துக் கொடுத்துச் செல்லும் சொத்துகள் மட்டுமல்ல; நல்ல பெயரை சேர்த்து வைத்துவிட்டுப் போவதும்தான். நம் வாழ்க்கை அவ்வளவுதான் என நொந்து வெறுத்துப்போகும்போது, முகமறியா யாரோ ஒருவர் நம்மைக் காப்பாற்றி முன்னேறச் செய்வது- நம் முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்களால்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
வெளிநாட்டு வாழ்க்கை
பழங்காலத்தில், பிறந்து வளர்ந்த சொந்த நாட்டைவிட்டு ஒருவன் செல்கிறான் என்றால், "பரதேசம் போய்விட்டான்' என கேவலமாகப் பேசுவர். பிழைக்க வழியின்றியோ, இருக்குமிடத் தில் வாழமுடியா சூழ்நிலை காரணமாகவோ இடம்பெயர்ந்து வேறு தேசத்திற்குச் செல்வர்.
தவறான காரியங்களில் ஈடுபட்டு ஊரை விட்டுத் தள்ளிவைத்து வெளியேற்றப் படுவதுகூட பரதேசம்தான். ஆனால் இன்று உலகமயமாகிவிட்டதால் பலரின் கனவு, பிறந்த நாட்டைவிட்டு வெளிநாட்டிற்குச் சென்று பணம்சேர்த்து அங்கேயே வாழ்ந்துவிட முடியுமா என்பதுதான். ஒன்பதாமிடம் ஆட்சி, உச்சம், சுபகிரகப் பார்வை அல்லது ஏதாவது சுபத்தன்மை பெற்று தசை நடந்தால், தனக்குப் பிடித்த நாட்டிற்குச் சென்று தான் விரும்பியடி சம்பாதித்து தன் ஆசைப்படி சந்தோஷமாக வாழ்வார். ஒன்பதாமதிபதி வலுத்தன்மைக்கேற்ப வெளிநாட்டுப் பயணம் நன்மைகள் தரும். ஒன்பதாமதிபதி கெட்டால் வெளிநாடு சென்று அல்லல்படுவர். ஒன்பதாமதி பதி பாவியாக இருந்து, முற்றிலும் வலுத் தன்மையிழந்து, பாவிகளால் பாதிக்கப்பட்டு விபரீத ராஜயோக அம்சம் பெற்றால் குறுக்கு வழியில் வெளிநாடு செல்வார். சட்டத்திற்குப் புறம்பான பாவகாரியங்களில் ஈடுபட்டுப் பணம் சேர்த்து நிம்மதியில்லாமல் சொகுசாக வாழ்வர்.
ஒன்பது பன்னிரண்டாம் இடங்களின் நிலையைப் பொருத்து வெளிநாட்டு வாழ்க்கை நன்மை- தீமையைச் செய்யும். வெளிநாட்டுக் குச்செல்லவேண்டுமானால் குரு சனியைப் பார்க்கவேண்டும். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்தில் சுபகிரகப் பார்வைபெற்ற கிரகங்கள் இருந்து, குருவின் பூரண பார்வை பலமும் பெற்றால் குரு, சனி தசையிலோ அல்லது அதன் புக்திகளிலோ வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும்.நீர் கிரகங்க ளான சந்திரன், சுக்கிரன் நீர் ராசிகளில் நின்றால், சந்திர- சுக்கிர தசைகளில் வெளிநாடு சென்று வருவர். கோவில்களுக்குத் தீர்த்தயாத்திரை, இன்ப சுற்றுலா சென்று வருதல்கூட வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கும். ஒன்பது, பன்னிரண்டாம் அதிபதி தசைகளில் சொந்த ஊரைவிட்டுச் செல்லநேரும். குழந்தைகளுக்கு ஏழரைச்சனி நடந்தாலோ, ராகு தசை நடந் தாலோ தாய்- தந்தையைப் பிரிந்து வெளிநாடு களில் வசிக்க நேரும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை, தொடர்பு ஏற்பட்டு தசை நடந்தால் பரதேச வாழ்க்கையால் குடும்பம் சிதறிப் போகும்.
பரிகாரம்
ஒன்பதாமிடம் கெட்டவர்கள் ஏதோ வொரு சூழ்நிலையில், யாருக்காவது தெரிந்தோ தெரியாமலோ எப்போதாவது துரோகம் செய்து பாவத்தை உண்டாக்கியிருப்பார் கள். அதனால் இந்த ஜென்மத்தில் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருப்பர்.
பரிகாரமென்பது செய்த தவறுக்கு மனம் வருந்தி, திருந்தி மன்னிப்பு கேட்பது. பாவத் தைச் செய்துவிட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்பதாலும், காணிக்கை செலுத்துவதாலும் மட்டுமே ஒருவரின் பாவம் தீராது. பாதிக்கப் பட்டவர்கள், பாதிப்பு கொடுத்தவர்களுக்குத் தருவதுதான் உண்மையான நிவாரணம். அதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தந்த ஜென்மத்திலேயே செய்துவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தன் உயர்ந்த உள்ளத்தால், பாதிப்பு கொடுத்தவர்களை மனதில் வருத்தமின்றி மன்னித்தால்தான் பாவமன்னிப்பு பெறமுடியும். அதனால் ஒன்பதாமிடம் வலுப்பெற்று சுப கடாட்சம் பெற, தலைமுறை தழைக்க ஒன்பதாமதிபதி கிரகத்தின் நிலையறிந்து பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். ஒன்பதாமதிபதிகிரகத்தின் கோவில்களில் வழிபாடு செய்தல், நவகிரக கோவில்களுக்குச் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்துவர பாக்கியம் பெறுவர்.
செல்: 96003 53748