சென்ற இதழ் தொடர்ச்சி...

விருச்சிகத்திற்கு ஒன்பதாமதிபதி சந்திரன் நல்லநிலையில் இருந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டம், தந்தையால் யோகம் பெறுவார். தந்தைவழி உறவுகள் மேன்மை தரும். வீடு, வாகனம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் தேடிவரும். தொட்ட தெல்லாம் துலங்கும். அதிர்ஷ்டகரமான தசையாக இருக்கும். வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் படிப்படியான முன்னேற்றம் தந்து, சொகுசாக வாழவைக்கும். கற்பனைசெய்து பார்க்கமுடியா யோகத்தை வழங்குவார். சுபகிரகத் தொடர்பு பிரபலமானவராக மாற்றும் யோகத்தைத் தரும். ஒன்பதாமதி பதி சந்திரன் திரிகோணம் பெற்றால் பெரிய அதிர்ஷ்டம் தரும். அதேவேளை பாதகாதிபதி யான சந்திர தசை கெட்டிருந்தால் தந்தைக்கு கண்டம், தந்தையால் தொல்லையை அனுபவிக்க நேரும். அக்கறை செலுத்த வேண்டியவர்கள் சுயநலமாக செயல்பட்டு, உணர்ச்சிகளுக்கு மரியாதை தராத உறவுகளால் மன சங்கடங்களை அடைவார். சந்திரன் முற்றிலும் பாவத்தன்மை பெற்றுக் கெட்டால், சொல்லமுடியா பல கஷ்டங்களை அடைவார்.

ff

மனம் ஏங்கி வாழவேண்டியிருக்கும். ஏதாவது ஒரு காரணத்தால் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழநேரும். நன்றி கெட்டவர்களால் மனம் நோவார். சிலருக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். மனதை விட்டுவிட்டால் பைத்தியமாக்கி விடும்.

நமக்குத் தேவையானதை நாமே தேடிக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை எதிர் பார்த்தால் பாசமும் கிடைக்காது; பலனும் கிடைக்காது. ஊருக்கு நல்லபிள்ளையாக இருக்கவேண்டி, சொந்த சுகத்தை இழக்க நேரும். ஒன்பதாமதிபதி சந்திர தசையில் எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் ஏமாற்றமும் குறையும்.

தனுசுக்கு ஒன்பதாமதிபதியான சூரியன், தன் தசையில் தந்தைக்கு யோகத்தை வழங்குவார்.

தந்தைக்கு நல்ல பொருளாதார வளம் தந்து, நல்ல கல்வி, அறிவை வளப்படுத்துவார்.குடும் பத்திற்கு அரசால் யோகம் கிடைக்கும். அரசாங் கத் தொழில், அரசாங்கத்தால் லாபம், பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் என பலவித நன்மைகளைத் தருவார். ஊர்மெச்ச வாழும் அறிவு, அந்தஸ்து, பணம், புகழைத் தருவார். சூரிய தசை எதிலும் முதன்மையைத் தந்து அழியாப்புகழ் வழங்கும். சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர், சுபபலம் பெற்று தசை நடந்தால், எண்ணிப்பாராத பங்களா, வாகன வசதி பெற்று நல்லவர்கள் புடைசூழ வலம்வருவார். சூரியன் பலமின்றி பாவகிரகத்தால் பாதிக்கப்பட்டால், தனது தசையில் அரசாங்க தண்டனை, அனைத்து பாக்கியங்களையும் இழக்கச் செய்துவிடும். தந்தைகாரகனான சூரியன் ஒன்பதாமிடமான தந்தை ஸ்தானத்தில் இருந்தால், என்னதான் சூரியன் ஆட்சிபெற்று பலன்தந்தாலும் தந்தையை ஏதாவது ஒருவகையில் பாதித்துவிடும். தந்தைக்கு கண்டம், தாய்- தந்தை பிரிவு, தொழில்ரீதியான பிரிவு அல்லது தந்தை வேறு பெண்ணோடு தொடர்புகொண்டு தாயைவிட்டு விலகுதல், தந்தை நோயால் பாதித்தல் என கெட்ட பலன் களைத் தந்துவிடும். பாவகிரகச் சேர்க்கை, தொடர்பு அதிகமானால் தந்தைக்கு பாதிப்பு, அரசாங்கத்தால் பாதிப்பு, குடும்பமே எதிரியாக மாறுதல் என அனைத்து பாக்கியக் குறைகளையும் தந்துவிடும்.

மகர லக்னத்திற்கு புதன் ஒன்பதுக் குடையவனாகவும், ஆறுக்குடையவனாகவும் வருவார். லக்னாதிபதி சனிக்கு நட்புகிரகமான புதன் ஒன்பதுக்குடையவனாக இருந்து, தந்தைக்கு பலத்தையும், அதிக நன்மைகளையும் தருவார். சுபகிரக பலம்- கோவில், மடம் போன்ற ஆன்மிகச் செயல்களில் ஈடுபடுத்தும். ஜோதிடத்தில் ஆர்வம்,எழுத்துவழி லாபத்தைத் தரும்.புதன் ஆட்சி, உச்சம்பெற்று, சுபகிரக பலம் பெற்று நன்றாக இருந்தால், நல்ல விருது, பட்டம், புகழ், பணம், அந்தஸ்தை தன் திறமையால் பெறுவார்.

என்னதான் ஒன்பதாமதிபதியாக இருந் தாலும், ஆறாமதிபதியின் பலனான தந்தைக்குக் கடன் தொந்தரவுகள், எதிரியால் ஆபத்து, பங்காளிகளால் செய்வினை, சாபத்தால் குடும் பத்திற்கே பாதிப்பைத் தந்துவிடும். பொதுவாக இரு ஆதிபத்யத்தில் ஒன்றாக ஆறு, எட்டு, பன்னிரண்டுக்கு உடையவர்களாக இருந்தால், நிறைய அவமானம், தீமைகள், திடீர் நஷ்டம், எதிர்பாராத இழப்பு, துன்பங்களைத் தரும். ஆறில் புதன் ஆட்சிபெற்றால் கடன்தொல்லை உண்டாகும். நினைத்தது பலிக்காது. வேதனையான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். தம்பதியர் நன்றாக இணங்கி வாழ்ந்தாலும், தான் நேசிப்பவர்களைக் கட்டாயம் பிரிய நேரும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தைக் கூட தந்துவிடும். பாவவலிமை கடும் மன உளைச்சலை தசையில் தரும். கண்ணில் படுபவரையெல்லாம் எதிரியாக மாற்றும். ஜாத கரின் வாயாலே பல வம்புகளை வரவழைக் கும். நரம்பு சம்மந்தமான வியாதியைத் தரும்.

கும்ப லக்னமாக இருந்தால் சுக்கிரன் நான்கு, ஒன்பதுக்கு உடையவராக இருப்பார்.

அதாவது சுக்கிரன் கேந்திர திரிகோண வீட்டிற்கு அதிபதியாக இருப்பார். ஆதலால் ராஜயோகப் பலனை முழுமையாகத் தருவார். சுக்கிரன் ஆட்சி, உச்சபலம் பெற்று தசை நடந்தால், செய்யும் தொழிலில் மேன்மையும் நன்மையும் அடைவார்.

தொழிலில் மக்களின் ஆதரவு பெரிதாய் இருக்கும். மக்கள் விரும்பும், போற்றும் நபராக வலம்வருவார். சுக்கிர தசையில் அழகான- ஆடம்பர பங்களா, கார், விமானத்தில் பயணம், நல்ல தோட்டம், எண்ணியும் பாராத வளர்ச்சி, யோகம் அத்தனையும் வாரிவழங்கும். சுக்கிர தசை நடக்கும்போது தாய்- தந்தை ஜாதகரோடு இல்லாமலிருப்பதுநல்லது. அனைத்து சுக போகத்தையும் சுக்கிரன் வழங்குவார். சுக்கிரன் நேரடியாக பலம்பெறாமல் நீசபங்கம் பெற்றால் இன்னும் அதிக நன்மைகளைச் செய்வார். விபரீத ராஜயோகத்தாலும் சிலருக்குப் பெயர், புகழ், அந்தஸ்தை சுக்கிரதசை வழங்கும். அதே வேளை, பாதகாதிபதி சுக்கிரன்தாய்- தந்தைக்கு பாதிப்பைத் தருவார்.

சுக்கிரன் கெட்டு, பாவகிரக பலம் குறைந்து தசையை நடத் தினால்வாழ்வைக் கடுமை யாக்கும். ஜாதகருக்கு எந்த சுகமான நிகழ்வும் நடக்காது. ஏதாவது தொல்லைகள் ஒன்றுமாற்றி ஒன்று வந்துசேரும். நோய், எதிரி, கடனால் அவஸ்த்தை தந்துவிடும். யாரையா வது அண்டிப் பிழைக்கநேரும். எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் இருப்பதையும் இழக்கநேரும்.

மீன லக்னத்திற்கு இரண்டு, ஒன்பதுக்குரிய செவ்வாய் தசை நடக்கும்போது, லக்னாதிபதி குருவுக்கும் நட்பு கிரகம் என்பதால் தந்தைக்கு லாபம், தந்தையால் லாபம் உண்டாகும். செவ்வாய் தசையில் குடும்பத்திற்கு அனைத்து பாக்கியங்களும் உண்டாக்கும். விரும்பிய இடத்தில் விரும்பிய கல்வி பெறுதல், குடும்பப் பொருளாதார மேம்பாடு ஏற்படும். சுபபலம் பெற்றால் பங்களா, வேலையாட்கள், பணத் தட்டுப்பாடில்லாத வாழ்க்கை கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம், தெய்வத்தால், சித்தர்களால் ஆசிர்வதிக்கப்படுதல், லாபம் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று சுபபலமாக இருந்தால் பல நன்மைகள் பலவழிகளில் தேடிவரும். செவ்வாய் நிலத்தைச் சார்ந்த கிரகமென்பதால், நிலம் சார்ந்த முதலீடுகளை ஜாதகர் செய்வார். ரியல் எஸ்டேட் தொழிலால் லாபம், நன்மைகள் ஏற்படும். அரசாங்க ஆதரவு பெருகும். மக்களுக்காக வாழநேரும். பதவி, புகழ், அரசாங்க நன்மை, அரசாங்கத்தால், அரசியலால் ஆதாயம் பெறும் அதிர்ஷ்டம் உண்டு. புகழின் உச்சிக்கு செவ்வாய் தசை கொண்டுபோகும். வெளிநாடு சென்றுவரும் யோகம் உண்டாகும். பாவகிரகமான செவ்வாய்க்கு பாவகிரகப் பார்வை, தொடர்புஏற்பட்டால், ஜாதகர் பாவகாரியங்களில் துணிந்து ஈடுபடுவார். பிறருக்கு அடியாளாக இருப்பார். கொலைபாதகச் செயல் செய்யும் ரௌடி, தீவிரவாதியாகவும் இருப்பார். தசைகெட்டு நடந்தால், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக தொல்லை களைத் தரும். பிறரை எதிர்பார்த்து வாழ வேண்டிய பொருளாதாரச் சூழ்நிலையே நிலவும்.

செல்: 96003 53748