ன்பதாமதிபதி ஒவ்வொரு லக்னத் திற்கும் ஒவ்வொரு கிரகமாக இருக்கும். தனுசு லக்னத்திற்கு சூரியனும், விருச்சிக லக்னத்திற்கு சந்திரனும் ஒன்பதாமதிபதியாக வருவர். மேலும், ஒரே கிரகம் இரண்டு லக்னங்களுக்கு ஒன்பதாமதிபதியாக வரும். மேஷம், கடக லக்னங்களுக்கு ஒன்பதாமதிபதியாக குருவும்; ரிஷபம், மிதுன லக்னங்களுக்கு சனி ஒன்பதாமதிபதியாகவும்; கன்னி, கும்பத்திற்கு சுக்கிரனும்; துலாம், மகரத்திற்கு புதன் ஒன்பதாமதிபதியாகவும்; அடுத்து சிம்மம், மீனத்திற்கு செவ்வாய் ஒன்பதாமதிபதி யாகவும் வரும். ஒன்பதாமதிபதி இரண்டு லக்னங்களுக்கு ஒரே கிரகமாக வந்தாலும், ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு விதமான பலனையே தரும்.

மேஷம், கடகம் ஆகிய லக்னங் களுக்கு குரு ஒன்பதா மதிபதிதான். ஆனால் மேஷ லக்னத்திற்கு ஒன்பதாமதிபதியாக மட்டுமல்லாமல், பன்னிரண்டாம் அதிபதியாகவும் வருகிறார். கடக லக்னத்திற்கு அதே குரு ஆறு, ஒன்பதுக்கு உடையவராகிறார்.

இதனால் குரு மேஷம், கடக லக்னங் களுக்கு வெவ்வேறு விதமாகவே பலன் தரும். சுபகிரகமான குரு இங்கு முழு நன்மைகளைச் செய்ய இயலாதவராகிறார். குறிப்பாக இரண்டு ஆதியபத்தியத்திற்கான கிரகப் பலன், இரண்டு ஸ்தானங்களின் நிலையைப் பொருத்தே ஜாதகருக்குக் கிடைக்கும்.

muruga

Advertisment

மேஷ லக்னத்திற்குஒன்பதாமதிபதி குரு நன்மையைச் செய்தாலும், விரயாதிபதியான குருவிரயம், நஷ்டம், தீமையையும் தருவார். ஒன்பதில் நின்ற கிரகம், ஒன்பதாமதிபதி நின்ற இடம், கிரகத்தின் பலம், கிரகச் சேர்க்கை, சுப- அசுப கிரகத் தொடர்பைப் பொருத்துதான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும்.

ஒன்பதாமதிபதி வலுப்பெற்றால்தான் தனது தசையில் கோவில்கட்டி கும்பா பிஷேகம் நடத்த வைக்கும். குரு உபதேசம் பெறுதல், சித்தர்களின் ஆசிர் வாதம் பெறுதல், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு, அவர் களுக்கு சேவை செய்தல் போன்ற பணிகளை ஒன் பதாமதிபதி தசை நடக்கும்போதே செய்வார். ஒன்பதா மதிபதி வலுப் பெற்றவருக்குதான், தந்தைவழி சொத்து கள், பாரம்பரிய, பரம்பரை சொத்து களை நிர்வகிக்கும் பொறுப்பு வந்துசேரும். விவசாயம் பார்க்கக்கூட ஒன்பதாமதிபதி வலுப்பெற வேண்டும். விவசாயத்திற்குத் தேவையான நீர் நல்லமுறையில் கிடைக்க குரு, சுக்கிரன், சந்திரன் ஒன்பதாமதிபதியுடன் சம்பந்தம் பெறவேண்டும். அப்போதுதான் குளம், கிணற்றை வெட்டினால் வற்றாத ஊற்று வரும். ஒன்பதாமதிபதி நீசம்பெற்று பலம் குறைந்து தசை நடந்தால் எந்தப் புகழும் நன்மையும் வராது.

தசைப் பலன்கள்

மேஷ லக்னத்திற்கு ஒன்பதாமதிபதி கிரகமான குரு தசையில் குரு, செவ்வாய் சுப பலமாய் ஆட்சி, உச்சம் பெற்றால் அரசாங்க உயர்பதவி,அரசாங்கத்தால் லாபம், அரசியல் பதவியால் நன்மையைத் தரும். ஆன்மிக நாட்டம், கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தல், வள்ளல்தன்மை கொண்டு மதிப்புமிக்க வாழ்க்கை வாழ்வர். நல்ல வேலை, உயர்பதவி, ஆன்மிகப் பணி, வெளிநாட்டு வாழ்க்கை போன்ற லாபகரமான நன்மை நடைபெறும். மேஷ, கடக லக்னத்திற்கு குரு கெடாமல் இருந்தால் அனைத்து பாக்கியங்களும் பெற்று உயர்ந்த இடத்தில் அமரலாம். வெளிநாடு சென்று வருவர். மேஷத்திற்கு பன்னிரண்டாம் அதிபதியாகவும் இருக்கும் குரு, பாவகிரக சம்பந்தம் பெற்று பலவீனமானால் பாக்கியக் குறை, விரயம், அவமானம், தகுதிக்குக் கீழானவர்கள் உபதேசம் செய்யும் நிலை ஏற்படும். கவனக்குறைவு, புத்தி மந்தம், போராட்ட குணமின்றி இருத்தல், தன்னம்பிக்கைக் குறைவு, எதிலும் நஷ்டம் போன்ற பலன்களே நடக்கும். அடிமை வாழ்க்கை அமையும். கணவன்- மனைவி ஒற்றுமையில்லாமல் பிரிவால் வாடுவர். தம்பதியர் ஒற்றுமையாய் இருந்தாலும் வேலைவிஷயமாக தனித்தனியாக வாழும் நிலையைத் தரும்.

ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனி ஒன்பதாமதிபதி என்பதால், அதியோக- ராஜயோகப் பலன்களையே செய்வார். ரிஷப லக்னத் திற்கு ஒன்பது,பத்துக்குடையவன் சனி என்பதால் தொழில் மேன்மை உண்டாகும். சனி ஆட்சி, உச்சம் மற்றும் சுபகிரக வலு கிடைத்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கும். தொழிலில் அதிர்ஷ்டத்தைத் தரும். தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்.

ரிஷப, மிதுன லக்னத்திற்கு ஒன்பதாமதிபதி சனியாக வந்து சுபபலம் பெற்றால் அற்புதமான நல்ல பலன்களைத் தருவார்.

பணம் பலவகையில் வரும். ஸ்திர லக்னத் திற்கு ஒன்பதுக்குடையவர் பாதகாதிபதி என்பதால், ரிஷப லக்னத்திற்கு ஒன்பதுக்கு டைய சனி பாதகாதிபதியாக செயல்படுவார். சுபகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் நன்மைகள் நடைபெற்றாலும், குடும்பத்தில் சில இழப்புகளைத் தவிர்க்கமுடியாது. ஜாதகர் சனி தசையில் நல்ல தொழில் முன்னேற்றம் அடைந்தாலும், தந்தையை பாதித்துவிடும். பாவகிரக வலு சனிக்கு ஏற்பட்டால் ஜாதகரை முன்னேறவிடாது. பெரும் பாதிப்புகளையே தரும். பாதகாதிபதி வலுப் பெறுதல், பாவகிரகத் தொடர்பால் பாதிக்கப் படுதல் போன்றவை எந்த விதத்திலும் நன்மையைத் தராது. அடிமையாக அல்லது முடமாக்கி ஜாத கரை வருந்த வைக்கும்.

மிதுன லக்னத்திற்கு ஒன்பதாமதிபதி சனியாக இருந்து நன்மை பல செய்வார். யோகவானாக மாற்றிப் புகழ் தருவார். சுபகிரக சம்பந்தம், பலம்பெற்றால் தந்தை சிறப்பான முன்னேற்றமடைவார். ஒன்பதாமதிபதி தசையில் அதிர்ஷ்ட யோகம் தரும். ஜாதகருக்கு நல்ல கல்வி, குடும்ப முன்னேற்றம், சந்தோஷத்தைத் தரும். சனி ஆட்சி, உச்சம் பெற்றால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, நினைத்தவுடன் நினைத்ததைச் செய்யும் வல்லமையைத் தருவார். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். மிதுன லக்னத்திற்கு அவரே அஷ்டமாதிபதி யாக இருக்கிறார். பல கஷ்ட- நஷ்டங்களை சனி கொடுப்பார். எதிர்பாராத லாபத்தையும், எதிர்பாராத நஷ்டத்தையும் தருவார். பாக்யாதிபதியைவிட அஷ்டமாதிபதி தன் தசையில் வேலையைக் காட்டியே தீருவார். முதல் பாதியில் அதியோக அதிர்ஷ்டத்தைத் தந்தால் அடுத்து மிகப்பெரிய சறுக்கலைத் தந்துவிடுவார். வாழ்ந்து கெட்டவராக்கி நோகடிப்பார். தசை ஆரம்பத்தில் குடும்பத்தில் யாருக்காவது கண்டத்தைத் தந்துவிட்டால், அதன்பின் ஜாதகர் படிப்படியாக முன்னேறி உயர்ந்த இடத்தைப் பெறுவார். சனி தசையில் நியாயம் தவறி நடந்தால், முடிவதற்குள் அதற்குரிய கடுமையான தண்டனையை வழங்கிவிடும்.

கடக லக்னத்திற்கு ஒன்பதாமதிபதி குரு தன் தசையில் பெரும் நன்மைகளைச் செய்வார். தந்தைக்குப் பலவழிகளில் யோகம் நடக்கும். ஜாதகருக்கு ஆதரவாக தந்தை செயல்படுவார். ஜாதகர் சுயநலவாதியாக இருந்தால், அவ ருக்கே தெரியாமல் துரோகத்திற்கான தண்டனை பெறுவார்.

தன்னை சரிசெய்து நியாயமாக நடந்து கொண்டால் நிறைய புகழ், பணம் பெறலாம்.

இவருக்கு உதவிசெய்ய பலர் வருவர். பாவத் தன்மை கொண்ட குரு வானால், சுயநலவாதி யாக செயல்பட்டு அகப் பட்டுக்கொள்வார். அன்பானவர்களும் விலகிச்சென்று விடுவர். வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருக்கும். தன் சுயநலச் செயலால் குடும்பத்தாராலும் குடும்ப உறுப் பினர்களாலும் ஒதுக்கிவைக்கப்படுவார்.

ஒன்பதாமதிபதியாக மட்டுமின்றி ஆறாமதி பதியாகவும் இருப்பதால், ஆண்களுக்கு நோய், எதிரி, கடனைத் தருவார். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்தைக் கெடுப்பார். உடல் நலத்தைக் கெடுத்துவிடுவார். தன் பிள்ளைகள் மேல் பாசம் இருக்கும். தன் பிள்ளைகள் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதுமென, நியாயமின்றி குடும்பத்திற்குள்ளே அரசியல் செய்து சொத்தை அபகரிக்க நினைப்பார். அதனால் உடன்பிறந்தவர்களுக்கு இவருடைய கெட்ட எண்ணம் புரியும்வரை இவர் நினைத் தபடி செயல்படுவார். தெரிந்தபின்பு கேட்டதை விட்டுக்கொடுப்பார். ஆனால் அன்பு, பாசம், மரியாதையை இழந்துவிட நேரும். குரு தசையைப் பொருத்தவரை, கெட்ட எண்ணமின்றி இருந்தால் தசை நல்லபலனை வாரிவழங்கும்.

சிம்ம லக்னத்திற்கு நான்கு, ஒன்பதாமதி பதியாக செவ்வாய் வந்து, ராஜயோகப் பலனைத் தந்து, வீடு, வாகன யோகத்தையும்; பணம், பெயர், புகழ், அந்தஸ்தையும் கொடுப்பார். மேலும் தந்தைவழி உறவுகள் ஆதரவு கிட்டும். குடும்ப முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசபங்கம், சுபகிரகப் பார்வை, இணைவு, தொடர்பு பெறும்போது அனைத்துவித பாக்கியத்தையும் தருவார். மின்சாரம் சார்ந்த எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், நெருப்பு சம்பந்தபட்ட ஹோட்டல், நிலக்கரி, இரும்பு உருக்கு ஆலை, பட்டாசுத் தொழில், காவல்துறை, மக்கள் பாதுகாப்புத் தொழில் வெற்றிதரும்.

சிம்மம், மீன லக்னங்களுக்கு செவ்வாய் ஒன்பதாமதிபதியாக வருகிறார். அதே வேளை சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதி பதி. அதனால் செவ்வாய் பலமின்றி தீயகிரகத் தொடர்புபெற்றால் தாய்- தந்தைக்கு அதிக தொல்லைகளை உண்டாக்கும். சில ஜாதகருக்கு தாய்- தந்தைக்கு கண்டத்தையும், அதிக சோதனைகளையும் தந்துவிடும்.

அரசாங்க நன்மை இருக்காது. தந்தையால் வெறுக்கப்படுவார். குடும்ப உறுப்பினர் களிடம்கூட நன்றியோடு நடந்துகொள்ள மாட்டார். தன்னுடைய கையை ஊன்றி கரணம் பாய்வதாக பொய் சவடால் பேசுவார். செய்தொழில் பாதிப்பை உண்டாக்கும். தான் என்ற கர்வத்தால் கடைசி காலத்தில் துன்பப்படுவார். செவ்வாய் கெட்டால் தன் தசையில் முழுதாய்க் கெடுத்துவிடுவார்.

கன்னி, கும்பத்திற்கு சுக்கிரன் ஒன்பதாமதி பதியாக வருகிறார். கன்னி லக்னத்திற்கு இரண்டு, ஒன்பதுக்குடையவனாக இருந்து, சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றுசுபபலம் பெற்றால், குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தன்னாலும், குடும்ப உறுப்பினர் களாலும் பொருளாதார லாபம் கிடைக்கும். கேது தசையில் முயற்சி செய்து போராடி நொந்து வரும்போது, சுக்கிர தசை ஆரம்பித்த தும் கலைத்துறையில் வெற்றி, லாபம், புகழ் பெற்றுவிடுவார். நினைத்த லட்சியத்தை அடைந்துவிடுவார். யாரும் நினைத்துப் பார்க்கமுடியா வளர்ச்சியை அடைவார். பணம் திருப்திகரமாக இருக்கும். எந்தத் துறையில் பணியாற்றினாலும் முன்னேற்றத்தையே கொடுக்கும். வாக்கு சுத்தம், எழுத்து சுத்தம், சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கவேண்டும்- தன்னைப்போலவே எல்லாரும் இருக்கவேண்டுமென்று எண்ணுவார். அதனால் திறமைக்கேற்ற பலன் சுக்கிரதசை முழுவதும் கிடைக்கும்.

பலமற்ற சுக்கிரனாகி பாவகிரக சம்பந்தம் ஏற்பட்டால் பெண்களால் லாபம் ஏற்பட்டு, பெண்களாலேயே தீமையும் அடைவார். ஆடம்பர- அலங்கார நாட்டம் தொல்லையாக முடியும். எந்த நல்ல பலனுமின்றி, சுகங்கள் கிடைக்காமலும், சுகத்தை அனுபவிக்க முடியாதவராகவும் இருப்பார். சுக்கிரன் நீசமாகி பாவகிரக வலுப்பெற்றால் அவமானகரமான காரியங்களையும், சட்டத்திற்குப் புறம்பான காரியங்களையும் சுக்கிர தசையில் செய்வார். மோசமான- பலம் குறைவாக சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தண்டனைக் கைதியாகிவிடுவார்.

துலாம், மகரத்திற்கு புதன் ஒன்பதாமதி பதியாகிறார். துலா லக்னத்திற்கு புதன் ஒன்பது, பன்னிரண்டாம் அதிபதியாக இருப்பார். ஒன்பதாமதிபதியாக புதன் இருந்து பிதுரார்ஜித சொத்துகள், தந்தைவழி ஆதரவு தருவார். பங்காளிகள் ஒன்றுமையாக, தந்தைவழி சொத்துகளை முறையாகப் பகிர்ந்துகொள்வர். புதன் என்றாலே அனைத்து துறையிலும் ஞானம் கொடுக்கும்.

பின்னர் நடப்பதை முன்பே அறியும் மதியூகம் உண்டாக்கும். அதனால் அனுபவப்பட்ட பின்னரே பிறருக்கு ஆலோசனை வழங்குவார். ஜோதிட ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி பலவித கண்டுபிடிப்புகளை உலகுக்கு எடுத்துச் சொல்வார். பல தலைமுறைகளுக்குப் பயன்படும்படி, தான் கண்டறிந்ததை புத்தக மாக்கி வழங்குவார். கலை, எழுத்துத் துறையில் சாதனை பல புரிவார். கலையால் புகழ், லாபம், நன்மை கிட்டும். புதன் ஆட்சி, உச்சபலம் பெற்று, சுபகிரகத் தொடர்பு, பார்வையால் பலமிக்கவரானால் அரசாங்க ஆலோசகராக- பிரபலமானவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். சமயோசித புத்தி கொண்டவர் என்தால், இவருடைய அறிவு போற்றப்படும் படியும், பயன்படும் வகையிலும் இருக்கும்.

அதேபோல் பன்னிரண்டாம் அதிபதியான புதன் ஆரம்பத்தில் பலவித பாடங்களை நடத் துவார். எதையெடுத்தாலும் நினைத்ததற்கு மாறாகவே பலன் தருவார். வாழ்க்கையை வெறுக்கவைத்து பற்றற்ற நிலையை வழங்கு வார். அதன்பிறகே யோகத்தையும் அழியாப் புகழையும் தருவார். அதிக துன்பத்தில் கற்றுக்கொள்ளும் பாடமே வாழ்வில் உயர்நிலைபெற வழிவகுக்கும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748