சென்னை மாம்பலம் அலுவலகத்திற்கு ஒரு பெரியவரும் அவரது மனைவியும் ஜீவநாடி யில் பலனறிந்துகொள்ள வந்திருந்தனர். அந்தப் பெரியவர், "ஐயா, என் மகளுக்கு 38 வயதாகிறது. இதுவரை திருமணம் நடைபெறவில்லை. பல ஜோதிடர்களை சந்தித்து, அவர்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும் பூஜைகளையும் செய்துவிட்டோம். பல கோவில்களுக்கும் சென்று வந்துவிட்டோம். ஆனால் திருமணம் கூடிவரவில்லை. எப்போது நடக்கும்? என் மகளுக்கு அந்த யோகமுண்டா?'' என்று கேட்டார்.
ஜீவநாடியைப் பிரித்தேன். அதில் அகத் தியர் எழுத்து வடிவில் தோன்றி பதில்கூறத் தொடங்கினார். "இவன் மகளின் திருமணம் தடைப்படுவதற்கு நவ கிரகங்களோ கால நேரமோ தெய்வக் கோபமோ காரணமல்ல. இவன் வம்ச முன்னோர் கள் வாழ்க்கையில், வாழவந்த பெண்ணுக்கு அவர்கள் செய்த பாவமும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மனம்வெறுத்து விட்ட சாபமுமே காரணம். இவனது மகள் முற்பிறவியில் செய்த தவறுகளும் இப்பிறவியில் ஒரு கணவனை அடையத் தடையாக இருக்கிறது. இந்த வம்ச பாவ- சாபத்தால்தான் இந்தப் பெண்ணுக்குத் திருமணம் தடைபட்டுக்கொண்டே
சென்னை மாம்பலம் அலுவலகத்திற்கு ஒரு பெரியவரும் அவரது மனைவியும் ஜீவநாடி யில் பலனறிந்துகொள்ள வந்திருந்தனர். அந்தப் பெரியவர், "ஐயா, என் மகளுக்கு 38 வயதாகிறது. இதுவரை திருமணம் நடைபெறவில்லை. பல ஜோதிடர்களை சந்தித்து, அவர்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும் பூஜைகளையும் செய்துவிட்டோம். பல கோவில்களுக்கும் சென்று வந்துவிட்டோம். ஆனால் திருமணம் கூடிவரவில்லை. எப்போது நடக்கும்? என் மகளுக்கு அந்த யோகமுண்டா?'' என்று கேட்டார்.
ஜீவநாடியைப் பிரித்தேன். அதில் அகத் தியர் எழுத்து வடிவில் தோன்றி பதில்கூறத் தொடங்கினார். "இவன் மகளின் திருமணம் தடைப்படுவதற்கு நவ கிரகங்களோ கால நேரமோ தெய்வக் கோபமோ காரணமல்ல. இவன் வம்ச முன்னோர் கள் வாழ்க்கையில், வாழவந்த பெண்ணுக்கு அவர்கள் செய்த பாவமும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மனம்வெறுத்து விட்ட சாபமுமே காரணம். இவனது மகள் முற்பிறவியில் செய்த தவறுகளும் இப்பிறவியில் ஒரு கணவனை அடையத் தடையாக இருக்கிறது. இந்த வம்ச பாவ- சாபத்தால்தான் இந்தப் பெண்ணுக்குத் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது'' என்று கூறி, அந்த வம்ச சாபம் நிவர்த்தி பெறுவதற்கான வழிமுறைகளையும் கூறினார்.
(ஜீவநாடியில் பலனறிய விரும்புபவர்கள் முன் அனுமதி பெற்றுவரவும்.)
இதுபோன்று வயது முதிர்ந்து திருமண மாகாத ஆண்கள், பெண்கள் பலர் உள்ளனர்.
அவ்வாறுள்ள பலரது ஜாதகத்தை தமிழ் ஜோதிடமுறையில் ஆய்வுசெய்தபோது அவர் கள் ஜாதகத்திலுள்ள கிரக அமைப்புகளை அறிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக சித்தர்கள் கூறியுள்ள தமிழ் முறை ஜோதிடப்படி ராசி, லக்னம், தசை, புக்தி, ஏழாமிடம், எட்டாமிடம், நட்சத்திரம் போன்ற வற்றைக் கணக்கீடு செய்யாமல், கணவன்- மனைவியைக் குறிப்பிடும் உதாரண கிரகங் களை மட்டும் ஆய்வுசெய்து பலன் கூறலாம்.
ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில், அவனது மனைவியைக் குறிப்பிடும் உதாரண கிரகம் சுக்கிரன். அதுபோல ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் அவளது கணவனைக் குறிப் பிடும் உதாரண கிரகம் செவ்வாய்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் சுக்கிரன், ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கு 1- 5; 9- 3; 7- 11 அல்லது 2- 12-ஆவது ராசிகளில் இருந்தால் நிச்சயமாகத் திருமணம் நடைபெறும். அதுபோல ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 1- 5; 9- 12-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்தால், அவனது பூர்வஜென்மத்தில் யார் மனைவி யாக இருந்தாளோ அவளையே இப்பிறவியிலும் மனைவியாக அடைவான்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 1- 5; 9- 3; 7- 11; 2- 12 -ஆவது ராசிகளில் மனைவியைக் குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் இருந்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும். ஆனால் காலதாமதமாக நடைபெறும். ஒரு ஆண் ஜாதகத்தில் மேற்சொன்ன அமைப்பு இல்லாவிடிலும், பரிவர்த்தனை பெற்ற குருவுக்கும் சனிக்கும் 1- 5; 9- 3; 7- 11; 2- 12 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தாலும் திருமணம் நடைபெறும். பரிவர்த்தனை பெற்ற சுக்கிரன் இருக்கும் ராசிக்கு மேற்சொன்ன இடங்களில் குருவும் சனியும் இருந்தாலும் திருமணம் நடைபெறும்.
அதுபோல ஆண் ஜாதகத்தில் வக்ரம்பெற்ற சுக்கிரனுக்கு 4, 8, 12 ஆகிய ராசிகளில் குரு அல்லது சனி இருந்தாலும் நிச்சயம் திருமணம் நடக்கும். வக்ரம்பெற்ற குருவுக்கோ, வக்ரம்பெற்ற சனிக்கோ 4, 8, 12 ஆகிய ராசிகளில் சுக்கிரன் இருந்தாலும் திருமணம் நடைபெறும்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு, சனி, ராகு- கேது ஆகிய கிரகங்கள் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் மனைவியைக் குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் இருந்தால், திருமணம் தடையாகி காலதாமதமாக நடைபெறும். பூர்வஜென்மத்தில் தன் மனைவிக்கு செய்த துரோகத்தால்- அவள் தந்த சாபத்தால் உண்டானது இந்தத் தடை! சரியான நிவர்த்திசெய்தால் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் அவளது கணவனைக் குறிக்கும் உதாரண கிரகமான செவ்வாய், ஜாதியைக் குறிக்கும் உதாரண கிரகம் சுக்கிரனுக்கு 1- 5; 9- 3; 7- 11; 2- 12 ஆகிய ராசிகளில் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும். அதுபோல சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1- 5; 9- 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால், பூர்வஜென்மத்தில் அந்தப் பெண்ணுக்கு யார் கணவனாக இருந்தானோ அவனே இந்தப் பிறவியிலும் கணவனாக அமைவான்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இப்பிறவிக் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கு 1- 5; 9- 3; 7- 11; 2- 12 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் நிச்சயமாகத் திருமணம் நடைபெறும். ஆனால் காலதாமதமாகும். பரிவர்த்தனை பெற்று சுக்கிரனுக்கோ சனிக்கோ மேற்படி ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் திருமணம் நடைபெறும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம்பெற்று, அந்த செவ்வாய்க்கு 4, 8, 12 ஆகிய ராசிகளில் சுக்கிரனோ சனியோ இருந்தால் திருமணம் நடைபெறும். வக்ரம்பெற்ற சுக்கிரனுக்கோ சனிக்கோ 4, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். மேலும் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1- 5; 9- 2 ஆகிய ராசிகளில் சனி, ராகு-கேது கிரகங்கள் இருந்தால் திருமணம் தாமதமாக நடைபெறும். இது பூர்வஜென்மத்தில் அவளது கணவனுக்குச் செய்த துரோகத்தால் உண்டான சாப தோஷமாகும்.
திருமண காலம்
ஒரு ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கு 1- 5; 9- 3; 7- 11; 2- 12 ஆகிய ராசிகளில் கோட்சார நிலையில் குரு சஞ்சரிக்கும்போதும்; பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கு மேற்படி இடங்களில் கோட்சார குரு சஞ்சாரம் செய்யும் காலங்களிலும் திருமணம் ஈடேறும்.
செல்: 99441 13267