னிதர்களை ஆபத்துக் காலத்தில் காக்க உதவும் ஜோதிடம் ஒரு கண்ணென்றால், வாஸ்து மற்றொரு கண். வாஸ்து சாஸ்திரம் இன்று நேற்று தோன்றிய தல்ல. இதிகாச காலத்திலேயே நமது முன்னோர்களால் பயன்படுத்தப் பட்டுவந்த கலை. குடியிருக்கும் வீடும், தொழில் நிறுவனங் களும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப் பட்டிருந்தால் ஆனந்தமான வாழ்க்கை யுண்டு. வாஸ்து விதிகளுக்கு மாறாக இருப்பின் வாழ்க்கை கேள்விக்குறிதான். முயற்சிகள் பலிதமாகாது. நல்ல சிந்தனைகள் தடைப் படும். நிம்மதியின்மை நீடிக்கும்.

ஒருவருடைய ஜனனகால ஜாதகத்தின் படிதான் வாழ்க்கை அமையுமென்பது நியதி.

ஜாதகப்படி வினைப்பயன் சுபத்தன்மை யுடன் இருந்தால் அவருக்கு அமையும் சொத்துகள் வாஸ்துப்படி அமையும். இல்லை யேல் வாஸ்து சாஸ்திரத்தின் விதிக்கு மாறான சொத்தே கிடைக்கும். இதை வைத்துப் பார்க்கும்போது ஒருவரது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் தொழில் நிறுவனம் முக்கிய காரணமாகும் என்பது தெளிவாகும்.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என்பார்கள். அதேபோல் வீட்டின் அமைப்பும் மனிதர்களின் உடலமைப்பும் ஒன்றுதான். உடல், இருப்பிடம், அண்ட வெளி ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்றா கப் பின்னிப் பிணைத்திருக்கின்றன. இந்தப் பிறவியில் ஒருவர் அனுபவிக்கும் அனைத்து இன்ப- துன்பங்களை யும் ஒருவரின் உடலே ஏற்கிறது. உடல் மற்றும் மனோ காரகனாகிய சந்திரன் பஞ்சபூதங்கள் வாயி லாக ஒருவரை செயல் படுத்துகிறது. அதா வது உடல்மூலம் அனு பவிக்கும் அனைத்து நன்மை- தீமைகளுக் கும் குடியிருக்கும் வீட்டிற்கும் நெருங் கிய சம்பந்தமுள்ளது.

Advertisment

விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம்வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். பஞ்சபூதங்களின் இயக் கத்திற்கேற்ப நவகிரகங்களிலிருந்து கதிர் கள் வெளிப்பட்டுகொண்டே இருக்கின் றன. அந்த ஒளிக்கதிர்கள் காந்த அலைகளாக மாறி ஜீவராசிகளை வந்தடைகின்றன. உடலிலுள்ள சக்கரங்கள் "டிஷ் ஆன்டனா' வைப்போல் இயங்கி, உடலின் உட்பகுதிக்கு அந்த ஆற்றலை இழுத்துச்சென்று மற்ற உடல்பாகங்களை இயக்குகின்றன. இது போன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக் குள் ஒன்றாக இயங்கி, உயிர்களை- இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது.

நவகிரகங்களும், பஞ்சபூதங்களும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக்கொண்டிருக்கிறதோ, அதேபோல் உடல், மனம், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பஞ்சபூதங் களாலான மனித உடலில், மூச்சானது காற்றாகவும், வெப்பம் உயிர்த்துடிப்பாக வும், நீர் ரத்தமாகவும், மண் சதையாவும் எலும்பு களாகவும் இருந்து உடலை இயக்கிறது. அதன் படி பஞ்சபூதங்களின் ஐந்து சக்திகள் வாஸ்துவை ஆள் கின்றன.

நீர்

Advertisment

விவசாய நிலமானாலும், வீட்டுமனையானலும் வடகிழக்கு (ஈசான்யம்) சார்ந்தே நீர்நிலைகள் இருக்கவேண்டும். அதாவது பூமிக்குக்கீழ் தண்ணீர்த்தொட்டி (சம்ப்), போர்வெல், கிணறு போன்றவை வட கிழக்குப் பகுதியில் அமைவது மிகவும் சிறப்பு.

மற்ற பகுதிகளில் நீர்நிலைகள் வரும்பட்சத்தில் சில கெடுதலான பலன்கள் தரும்.

நெருப்பு

பஞ்சபூதங்களின் ஒரு சக்தியான நெருப்பிற்குரிய பகுதி தென்கிழக்கு. இங்கே சமையலறையை வைத்துக்கொள்ள வேண்டும். இயலாதபட்சத்தில் வட மேற்குப் பகுதியில் சமையலறை அமைத்துக் கொள்ளலாம். மற்ற எந்தப் பகுதியிலும் சமையலறையோ அடுப்பு போன்ற அமைப்பு களோ வருவதைத் தவிர்ப்பது நல்லது.

அப்படி வரும்போது கெடுதலான பலன்கள் உண்டாகும்.

நிலம்

பஞ்சபூத சக்தியான மண்ணுக்குரிய பகுதி தென்மேற்கு. இந்தப் பகுதிக்கு கன்னிமூலை, குபேரமூலை, நிருதிமூலை என பல்வேறு பெயர்கள் உண்டு. இந்தப் பகுதி உயரமாக இருப்பின் பல நன்மையான பலன்களும், தாழ்வாக- பள்ளமாக இருந்தால் எண்ணிடலங்காத தீமையான பலன்களும் நடைபெறும்.

காற்று

பஞ்சபூதங்களின் மற்றொரு சக்தியான காற்றுக்குரிய பகுதி வடமேற்காகும். இதற்கு வாயுமூலை என்ற பெயரும் உண்டு. செப்டிக் டேங்கை இந்தப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். கழிவுகள்மூலம் உற்பத்தியாகக் கூடிய வாயு காற்றில் கரைந்து மனிதர்களுக் குக் கெடுதலைத் தருமென்பதால், வட மேற்கைத்தவிர வேறு பகுதியில் கழிவறை, கழிவுகள் தேங்கும் பள்ளம் அமைந்தால் பல கெடுதலான விளைவுகள் ஏற்படும்.

ஆகாயம்

பஞ்சபூத சக்திகளில் ஒன்றான ஆகயமானது வீட்டின் தரைக்கும் மேற்கூரைக்கும் இடையிலுள்ள வெற்றிட அமைப்பாகும். வீட்டின் உள்ளமைப்பில் மிக உயரமான மேல்தள அமைப்பு வரும்பட்சத்தில், ஆகாயம் என்னும் பூதமானது அந்த வீட்டில் உள்ளவர்களுக்குத் தீமையான பலனைத் தரும். பூமி தென்மேற்கிலிருந்து வட கிழக் காகச் சுற்றுவதால், இயற்கையாக பூமியில் நீரோட்டம் தென்மேற்கிலிருந்து வடகிழக் காகச் செல்கிறது. பொதுவாக நீரோட்டம் உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கிச் செல்லும். பூமியின் தற்சுழற்சிப் பாதை தென்மேற்கிலிருந்து வடகிழக்காகச் செல்வதால், பூமியின் தென்மேற்குப் பகுதி உயர்வான பகுதி யாகவும், வடகிழக்குப் பகுதி தாழ்வானதுமாக வாஸ்து சாஸ்திரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தெற்கும் மேற்கும் உயர்ந்திருக்க வேண்டு மென்றும், வடக்கும் கிழக்கும் தாழ்ந்திருக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது. பூமி, சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதுடன், குறிப்பிட்ட அளவு வட கிழக்காக அமைந்த சாய்வான நிலையில் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. இதன் காரணமாக பூமியின் மேற்பரப்பிலுள்ள கட்டடங்கள் அமைந்துள்ள இடங்களுக் கேற்ப, வடகிழக்கை மையமாகக்கொண்ட சக்தி அலைகளின் தாக்கங்களால் சலனங் கள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில் உண்டாகும் விளைவுகள் நன்மைகளைத் தந்தால் உச்சமென்றும், தீமைகளைத் தந்தால் நீசமென்றும் வகைப்படுத்தியுள்ளார்கள்.

வடகிழக்குப் பருவக்காற்று, தென்மேற்குப் பருவக்காற்று என்று இரு வகையான பருவக் காற்றுகள் வீசுகின்றன. இதில் வடகிழக்குப் பருவக் காற்று உடல் ஆரோக் கியத்தை அதிகரிக்கும். தென்மேற்குப் பருவக் காற்று வாடைக்காற்றா கும். இந்தக் காற்று உடலில் பட்டால் ஆரோக்கியம் கெடும். எனவே மிகுதியான உச்ச நற்பலன்களைப்பெற வடகிழக்கிலிருந்து வீசும் காற்று தாராள மாக வீட்டிற்குள் வரவேண்டும் என்பதற் காக, வடக்கிலும் கிழக்கில் அதிக காலியிடம் விடவேண்டுமென்று கூறப்படுகிறது. முடிந்தவரை வீட்டிற்குத் தெற்கிலும் மேற்கிலும் காலியிடம் விடக்கூடாது.

சிலருக்கு கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகு நிம்மதி நிலைப்பதில்லை. நிம்மதி யின்மையைத் தவிர்ப்பதற்கு வீடு கட்டும் முன்பு மனையை நன்றாக சரிபார்த்து வாங்கவேண்டும். அதன்படி ஒருவர் வாங்கக்கூடிய நிலம் காலிமனையோ, விவசாய நிலமோ அல்லது கட்டடங்களோ- அவை சதுரமாக அல்லது செவ்வகமாக இருப்பது சிறப்பு. சதுரவடிவ மனையில் உயிரோட்ட சக்தி அலைகள் அதிகம்.

cas

செவ்வக வடிவ மனை யில் உயிரோட்ட சக்தி அலைகள் சதுரவடிவ மனையைவிட சற்று குறைவு. சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனைகள் வசிப்பதற்கு ஏற்றவை. இவையிரண்டுமே அதிக நன்மையும் சுகமும் அளிக்கவல்லவை.

முக்கோண வடிவ மனை அக்னியுடன் தொடர்புடையது. இது தீயினால் உண்டா கும் தீமையை வரவேற்பது போன்றதாகும். மனிதர்கள் வசிப்பதற்கு முக்கோண வடிவ மனையை முழுவதும் தவிர்க்கவேண்டும். தெரியமால் வாங்கியிருந்தால் அல்லது பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதை சதுரம் அல்லது செவ்வகமாக சரிசெய்துகொண்டு, மீதமுள்ள மனையைப் பயன்படுத்தக் கூடாது.

வட்ட வடிவ மனை, "ஜிக்ஜாக்'- வளைந்த அமைப்புள்ள மனைகள், தெருக்குத்து, ஒரு மூலை வெட்டுப்பட்ட அமைப்புள்ள மனைகள், கட்டிடங்களைத் தேர்வு செய்யக்கூடாது.

மனிதர்களைப்போலவே நிலங்களுக்கும் பாலினம் உண்டு. நிலத்தை ஆண்மனை, பெண்மனை என இரண்டாகப் பகுக்கலாம். தெற்கு- வடக்குப் பகுதி நீள‌ம் அதிகமாக இருந்து, கிழக்கு- மேற்குப் பகுதி நீள‌ம் குறைவாக இருந்தால் அது பெண்மனை எனப்படும். இந்த மனையில் பெண் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும் அல்லது பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் இருப்பார்கள். இதுபோன்ற மனையில் பெண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றாற்போல் வீடு அமைப்பது நல்லது.

கிழக்கு- மேற்குப் பகுதி நீள‌ம் அதிகமாக இருந்து, தெற்கு- வடக்குப் பகுதி நீள‌ம் குறைவாக இருந்தால் அது ஆண்மனை எனப் படும். இங்கு பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அல்லது ஆண் களின் ஆதிக்கம் மிகுதி யாக இருக்கும். இந்த மனையில் ஆண் ஜாதக அமைப்பிற்கு ஏற்றாற் போல் வீடு அமைப்பது நலம்.

இவை எல்லாவற் றுக்கும் மேல், ஒருவர் நிலம் வாங்கும்போது வாசல் எந்தப் பக்கம் பார்த்திருக்கவேண்டும் என்பதில் பல்வேறுவித மான முரண்பாடுகள் நிலவிவருகின்றன. ராசியின் அடிப்படையிலா? ஜென்ம நட்சத் திரத்தின் அடிப்படையிலா அல்லது கிரகங் களின் பலம் அல்லது பலவீனத்தின் அடிப்படை யிலா போன்ற பல்வேறு சந்தேகங்கள் இருந்துவருகின்றன.

பொதுவாக பலர் ராசியின் அடிப் படையில்தான் நிலத்தைத் தேர்வுசெய்கிறார்கள்.

நட்சத்திரத்தின் அடிப்படையில் தேர்வு செய்வது மிகக் குறைவு. ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்னரீதியான சுபர் எனில், ஜாதகருக்கு சுபப்பலன்கள் மிகுந்துகொண்டே இருக்கும். பலர் கிரகங்களின் ஆட்சி, உச்சம் மற்றும் நீசத்தன்மையை வைத்து கிரகங்களின் வலிமையை எளிதில் தீர்மானிக்கிறார்கள். அது தவறான முறையாகும். ஒரு கிரகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஷட்பலம் கொண்டே தீர்மானிக்கவேண்டும். ஷட் என்றால் ஆறு, பலம் என்றால் வலிமை. ஆறு விதங்களில் காணப்படும் வலிமை. அதாவது ஸ்தான பலம், திக் பலம், கால பலம், சேஷ்ட பலம், நைசார்க்கிய பலம் மற்றும் த்ருக் பலம் என்ற ஆறு நிலைகளில் கணக்கிடவேண்டும்.

ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் பலமாக உள்ளன என்று நினைக்கக்கூடாது. நீச கிரகங்கள் வலிமையற்றைவை என்றும் கணிக்கக்கூடாது. எனவே ஷட்பல முறையில் ஆராய்ந்தபிறகே அதன் உன்னத பலத்தை நிர்ணயிக்க வேண்டும். தற்போது ஜோதிட மென்பொருட்கள்மூலம் எளிதில் கிரகங் களின் ஷட்பலத்தை அறிந்துவிடலாம். ஷட் பலத்தில் வலிமைபெற்ற கிரகத்தின் அடிப் படையில் மனையை எவ்வாறு தேர்வுசெய்ய லாம் என்பதை இங்கு காணலாம்.

சூரியன்

சூரியன் வலிமைபெற்றவர்கள் கிழக்குப் பார்த்த மனையைத் தேர்வு செய்யலாம். தந்தையின் உதவியுடனோ, அரசு குடியிருப் பிலோ அல்லது அரசாங்க உதவியுடனோ வீடு கட்டும் அமைப்பு உண்டாகும். வீட்டுக்கருகில் அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் அல்லது அரசுப் பணிபுரிபவர்கள் இருப்பார் கள். வீட்டுக்குள் சூரிய ஒளி நன்றாக வரும்படி யான அமைப்பிருக்கும். வீட்டில் "சோலார் சிஸ்டம்' போன்ற மின்சாதனங்கள் இருக்கும்.

வீட்டில் தீபஒளி எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.

அரசியல் தலைவர்கள், பொதுத்தொண்டு செய்பவர்கள், பொதுத்துறையில் உயர் பதவி வகிப்பவர்கள், அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்கள், நிர்வாகம் தொடர்பான பதவியில் இருப்பவர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், நிதி நிர்வாகிகள், சிவன்கோவில் கட்டுபவர்கள், சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள், சிவநாமத்தைப் பெயராகக் கொண்டவர்கள், பரம்பரை குலத்தொழிலைச் செய்பவர்களின் ஜாதகத்தில் சூரியன் வலிமையாக இருக்கும். குடும்பத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து வழிநடத்தும் ஆண்- பெண்களுக்கும் சூரியன் பலமாகவே இருக்கும். அவர்களுக்கு புகழ், அந்தஸ்து, கௌரவம், தலைமைப் பதவி தேடிவரும். ஆயுள், ஆரோக்கியம், மன வலிமை நிரம்பியவர்கள். பரம்பரை சொத்து உண்டு. நிறைந்த பொருள் வரவு, அரசின் ஆதரவும் உண்டு.

சூரியன் வலிமை குறைந்து, கிழக்குப் பார்த்த வாசலுள்ள வீட்டில் இருப்பவர் களுக்கு அரச தண்டனை கிடைக்கும். புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும். உஷ்ண நோய், பார்வைக் குறைபாடு, பித்தநோய், தண்டுவடம், முதுகெலும்பு பாதிப்பு உண்டாகும். பொருள் பற்றாக்குறை நீடிக்கும்.

கிழக்குப் பார்த்த மனையில் வசிக்கும் சூரியன் பலம் குறைந்தவர்கள், தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். சூரிய ஒளி வீட்டிற்குள் படரும்படி வீட்டு ஜன்னல்களை அமைக்கவேண்டும். சிவன் கோவில்களுக்குச் சென்றுவரும்போது வாசலிலுள்ள ஏழைகளுக்குத் தவறாமல் தானம் செய்யவேண்டும். ஞாயிற்றுக்கிழமை தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவுசெய்து நல்லாசி பெற்றால், கோடி புண்ணியம் தேடிவரும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406