திருமணத் தடையை ஏற்படுத்தும் முற்பிறவி சாபங்கள்!

/idhalgal/balajothidam/prenatal-curses-prevent-marriage

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ன்றைய நாளில் ஏராளமான ஆண்களும் பெண்களும் 50 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் முதிர்கன்னிகளாக, முதிர்காளையராக தங்களது திருமணத் தடைக்குக் காரணம் என்னவென்று தெரியாமல் கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருவரின் திருமணத் தடைக்குக் காரணம், அவர் முற்பிறவியில் தன் மனதால், வாக்கால், உடலால் பிறருக்குச் செய்த பாவச் செயல்களே ஆகும். இந்த பாவ- சாபப் பதிவு 27 வகையானது. ஒவ்வொரு திருமணத்தடைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.

திருமணம் தடையாகிவரும் ஆண்களும் பெண்களும், நாம் முற்பிறவியில் யாருக்கு என்னவிதமான பாவங்களைச் செய்தோம்- அதனால் நமக்கு ஏற்பட்ட சாபமென்ன என்பதையறிந்து, அதற்குரிய சரியான சாபநிவர்த்தி செய்தால் திருமணத்தடை நீங்கி நல்லமுறையில் திருமணம் ஈடேறும் என்பது சித்தர்கள் வாக்கு.

mm

ஆண்- பெண் பிறப்பு ஜாதகத்தில், லக்னத்திற்கு ஏழாவது ராசியில் சனி இருந்தால் திருமணம் தடை, தாமதமாகும். இத

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ன்றைய நாளில் ஏராளமான ஆண்களும் பெண்களும் 50 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் முதிர்கன்னிகளாக, முதிர்காளையராக தங்களது திருமணத் தடைக்குக் காரணம் என்னவென்று தெரியாமல் கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருவரின் திருமணத் தடைக்குக் காரணம், அவர் முற்பிறவியில் தன் மனதால், வாக்கால், உடலால் பிறருக்குச் செய்த பாவச் செயல்களே ஆகும். இந்த பாவ- சாபப் பதிவு 27 வகையானது. ஒவ்வொரு திருமணத்தடைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.

திருமணம் தடையாகிவரும் ஆண்களும் பெண்களும், நாம் முற்பிறவியில் யாருக்கு என்னவிதமான பாவங்களைச் செய்தோம்- அதனால் நமக்கு ஏற்பட்ட சாபமென்ன என்பதையறிந்து, அதற்குரிய சரியான சாபநிவர்த்தி செய்தால் திருமணத்தடை நீங்கி நல்லமுறையில் திருமணம் ஈடேறும் என்பது சித்தர்கள் வாக்கு.

mm

ஆண்- பெண் பிறப்பு ஜாதகத்தில், லக்னத்திற்கு ஏழாவது ராசியில் சனி இருந்தால் திருமணம் தடை, தாமதமாகும். இது ஒருவகை பாவச் செயலைக் குறிப்பிடுகிறது. ஏழாவது ராசியில் ராகு இருந்தால் திருமணம் தடையாகும். இது வேறொருவகை பாவத்தைக் குறிக்கும். ஏழாவது ராசியில் கேது இருந்தால் திருமணம் தடைப்படும். இது இன்னொரு வகையான சாபத்தைக் குறிக்கும்.

லக்னத்திற்கு ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 3, 6, 9, 12-ல் இருந்தால் திருமணம் தடை, தாமதமாகும். 7-க்குரிய கிரகம் லக்னத்திற்கு 2, 5, 8, 11-ல் இருந்தால் திருமணம் தடைப்பட்டு நிற்கும்.

7-க்குரிய கிரகத்துடன் ஒரே ராசியில் ராகு சேர்ந்திருந்தால் திருமணத் தடையை உண்டாக்கும். கேது சேர்ந்திருந்தால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டேவரும்.

ஒரு ஆண் அல்லது பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4, 6, 8, 10-ஆவது ராசிகளில் 7-க்குரிய கிரகம் இருந்தால் திருமணமே நடக்காமலும் போகலாம். இது நான்குவிதமான உறவு களால் ஏற்பட்ட பூர்வஜென்ம சாபம்.

குரு நின்ற ராசிக்கு 4, 6, 8, 10-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்தாலும் திருமணம் தடையாகும். சுக்கிரன் நின்ற ராசிக்கு 1, 2, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தாலும் திருமணம் தடையாகும்.

ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 7, 9, 12 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் தாமதத் திருமணம். சாபம் நிவர்த்தியானால் 30 வயதிற்குமேல் திருமணம் நடைபெறும். அதுபோல பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கு 1, 2, 5, 7, 9, 12 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் திருமணம் தடைப்படும். சாபம் நிவர்த்தியா னால் 30 வயதிற்குமேல் திருமணம் நடக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு ஏழாவது ராசிக்குரிய கிரகம் அல்லது குரு நின்ற ராசிக்கு ஏழாவது ராசிக்குரிய கிரகம் சனியாக இருந்தால் திருமணம் தடையாகி நடக்கும்.

ஆண்- பெண் இருவர் ஜாதகங்களிலும் குரு நின்ற ராசிக்கு 1, 2, 5, 7, 9, 12 ஆகிய ராசிகளில் சனி இருந்தால் திருமணம் தாமதமாக நடைபெறும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு, செவ்வாய், சுக்கிரன், ஆகிய மூன்று கிரகங்களும் அடுத்தடுத்து மூன்று ராசி களில் வரிசையாக இருந்தால் திருமணம் தடைபட்டுக் கொண்டேவரும். இவரின் தம்பிக்குத் திருமணம் நடந்தபின்தான் இவருக்கு நடக்கும். அதுபோல ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகியவை அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக இருந்தால் அந்தப் பெண்ணின் திருமணம் தடைபட்டுக் கொண்டேவரும்; எளிதில் நடக்காது. தங்கைக்கு அல்லது தம்பிக்குத் திருமணம் நடந்தபின்னரே ஜாதகிக்கு நடக்கும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு, கேது, சுக்கிரன் ஆகியவை அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக இருந்தால் திருமணம் தடையாகிக்கொண்டே வரும். திருமணம் நடந்தாலும் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, பிரிவு என ஏற்பட்டுவிடும். தாம்பத்திய சுகம் குறையும். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

ஒரு பெண் ஜாதகத்தில் சுக்கிரன், கேது, செவ்வாய் ஆகியவை அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக இருந்தால் ஜாதகிக்குத் திருமணம் கைகூடாமல் தடையாகும். அவ்வாறு நடந்தாலும் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு, விவாகரத்து என ஏற்படும். தாம்பத்திய சுகம் இராது. வாழ்க்கையில் ஏதாவது ஒருகுறை இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 ஆகிய ராசிகளில் கேது இருந்தால், அவள் முதல் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு அல்லது விவாகரத்து பெற்று வேறொரு ஆணை இரண்டாம் தாரமாக மணம்புரிய நேரலாம்.

திருமணத்தடைக்கு இதுபோன்று இன்னும் பல காரணங்கள் உள்ளன. இங்கு சில காரணங்களை மட்டும் எழுதியுள்ளேன். திருமணத்தடையில் சிக்கித் தவிக்கும் ஆண்- பெண்கள் அதற்குக் காரணமாகவுள்ள பூர்வ ஜென்ம பாவ- சாபங்களை அறிந்து, அவற்றுக் குரிய நிவர்த்தி செய்து இல்லற வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சாபங்களுக்கு பூஜை, பரிகாரம் போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களால் நிவர்த்தி கிடைக்காது. நடைமுறைச் செயல்களால்தான் வாழ்வில் உயர்வையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கிக்கொள்ள முடியும்.

செல்: 99441 13267

bala010121
இதையும் படியுங்கள்
Subscribe