செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை
புரட்டாசி 1-ஆம் தேதியன்று சூரியன் எனும் நெருப்பு கிரகம் கன்னி எனும் நில ராசியில் உள்ளார்.
காற்று கிரகம் புதன் உச்சமடைந்து, சூரியனுடன் நில ராசியில் உள்ளார்.
சுக்கிரன் என்னும் நீர்கிரகம் நீசபங்க நிலையில் சூரியன், புதனுடன் நில ராசியில் உள்ளார்.
குரு எனும் ஆகாய கிரகம் விருச்சிகம் எனும் நீர் ராசியில் அமர்ந்து மீனம், கடகம் எனும் இரு நீர் ராசிகளையும்; ரிஷபம் எனும் நில ராசியையும் பார்க்கிறார்.
சனி, கேது, எனும் காற்று கிரகங்கள் தனுசு எனும் நெருப்பு ராசியிலும்; ராகு எனும் காற்று கிரகம் மிதுனம் எனும் காற்று ராசியிலும் உள்ளனர்.
ஆக, புரட்டாசி முதல் தேதி கிரக
செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை
புரட்டாசி 1-ஆம் தேதியன்று சூரியன் எனும் நெருப்பு கிரகம் கன்னி எனும் நில ராசியில் உள்ளார்.
காற்று கிரகம் புதன் உச்சமடைந்து, சூரியனுடன் நில ராசியில் உள்ளார்.
சுக்கிரன் என்னும் நீர்கிரகம் நீசபங்க நிலையில் சூரியன், புதனுடன் நில ராசியில் உள்ளார்.
குரு எனும் ஆகாய கிரகம் விருச்சிகம் எனும் நீர் ராசியில் அமர்ந்து மீனம், கடகம் எனும் இரு நீர் ராசிகளையும்; ரிஷபம் எனும் நில ராசியையும் பார்க்கிறார்.
சனி, கேது, எனும் காற்று கிரகங்கள் தனுசு எனும் நெருப்பு ராசியிலும்; ராகு எனும் காற்று கிரகம் மிதுனம் எனும் காற்று ராசியிலும் உள்ளனர்.
ஆக, புரட்டாசி முதல் தேதி கிரக நிலைப் படி முதல் ஒரு வாரத்திற்கு மழைக்கான வாய்ப் பில்லை.
செப்டம்பர் 24, 25, 26-ஆம் தேதிகளில் சந்திரன் எனும் நீர் கிரகம் புனர்பூசம், பூசம், ஆயில்யம் எனும் நட்சத்திரங்களின் கடகம் எனும் நீர் ராசியில் சஞ்சரிக்கும்போதும், அவரை குரு பார்ப்பதாலும், இந்த மூன்று நாட்களுக்கு மழையுண்டு. வடக்குப் பகுதியில் பெய்யும்.
மேலும் செப்டம்பர் 25 அன்று செவ்வாய் எனும் நெருப்பு கிரகம், நெருப்பு ராசியாகிய சிம்மத்தைவிட்டு கன்னி எனும் நில ராசிக்குப் பெயர்கிறார். எனவே வெப்பத்தின் தாக்கம் குறையுமென்று நம்பலாம்.
அன்றே, வாக்கியக் கணிதப்படி, செப்டம்பர் 25 அன்று, புதன் எனும் காற்று கிரகம், கன்னி எனும் நில ராசியைவிட்டு நீங்கி துலாம் எனும் காற்று ராசியில் புகுகிறார். எனவே காற்றின் தாக்கம் அதிகமுண்டு.
தொடர்ந்து சந்திரன், செப்டம் பர் 28, 29, 30 தேதிகளில் உத்திரம், ஹஸ்தம், சித்திரை நட்சத்திரங்கள் கொண்ட கன்னி ராசியில் சஞ்சாரம் மேற்கொள்கிறார். அப்போது, கன்னி ராசியில் வெப் பக்கிரகம் சூரியன், பகை கொண்ட செவ்வாய் இருப்பினும், புதன் பரிவர்த்தனையால், நீசபங்கம் கொண்ட சுக்கிரன் எனும் நீர் கிரகத்துடனிருந்து, சந்திரனும் அவருடன் சஞ்சாரம் செய்வதால், மேற்கண்ட மூன்று நாட்களும் நல்ல காற்றுடன் மழை எனும் அளவில் மழை கொட்டும்.
கன்னி ராசி, தெற்குப் பகுதிகளைக் குறிப் பதால் தென் திசையிலுள்ள இடங்களில் மழை பெய்யும்.
தொடர்ந்து செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2 தேதிகளில் சந்திரன் துலா எனும் காற்று ராசியில், காற்று கிரகம் புதனுடன் சஞ்சரிப்பார். அப்போது மேற்கு திசை இடங்களில் காற்று அதிகமாகவும், மழை சுமாராகவும் பொழியும்.
புரட்டாசி 16 (அக்டோபர் 3) அன்று சுக்கிரன் துலா ராசிக்கு ஆட்சியாகி அமர்வார்.
அக்டோபர் 2, 3, 4 தேதிகளில் சந்திரன் எனும் நீர் கிரகம் நீர் ராசியான விருச்சிகத்தில், அங்குள்ள குருவுடன் உலவுவார். எனவே வடக்கு திசையிலுள்ள இடங்களில் நன்மை தரும் அளவில் மழை பெய்யும். விசாகம் என்பது அக்னி மண்டல நட்சத்திரம். அது தவிர்த்து அனுஷம், கேட்டை எனும் மகேந்திர மண்டல நட்சத்திரங்களில் செல்லும்போது பயனுள்ள மழைகிட்டும்.
அடுத்த மழை வாய்ப்பு, சந்திரன் மீனம் எனும் நீர் ராசியில், பூரட்டாதி தவிர்த்து உத்தி ரட்டாதி, ரேவதி எனும் வருண மண்டல நட்சத் திரங்களில் சுற்றும்போது உண்டு. குரு பார்வை யில் இருப்பதால், பயன்படும் விதத்தில் மழை பெய்யும். மேலும் சூரியன், செவ்வாய் என இரு வெப்ப கிரகப் பார்வை இருப்பதால், அதிக மழை யின்றி சுமாராகத் தூவும். அக்டோபர் 11, 12, 13 தேதிகளில் வடக்குப் பகுதி களில் மழைத் தூறலுக்கு வாய்ப் புண்டு.
மேலே உள்ள தேதிகளில் தவிர மற்ற நாட்களில் வறண்ட வானிலை காணப்படும். செப்டம்பர்- 30, அக்டோபர்-1 ஆகிய தேதிகளில் சுமாரான புயலுக்கு மேற்கு பக்க முள்ள இடங்களில் வாய்ப் புள்ளது.
செல்: 94449 61845