Advertisment

கடந்தகால, நிகழ்கால, எதிர்கால பலன்களை துல்லியமாகச் சொல்லும் பிரசன்னா ஜோதிடம் ! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/prasanna-astrology-accurately-predicts-past-present-and-future-results-0

பிரபஞ்ச சக்தியின் பரிணாம வளர்ச்சியே பிரசன்னம். கேள்வியாளர் அதாவது பிரஜகர் கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள கிரக நிலவரங்களையும் கண்ணில் தென்படும் சகுன நிமித்தங்களையும் வைத்து கூறக்கூடிய பலன்கள் 100 சதவிகிதம் பலிதமாகும்.

தற்போது சோழி பிரசன் னம், தாம்பூல பிரசன் னம், ஜாமக்கோள் பிரசன் னம், ஆரூடப் பிரசன்னம் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. இதற்கு கோட்சார கிரக நிலவரம் மிக முக்கியம். நமது முன்னோர் கள் ஞான திருஷ்டியிலும் கண்ணுக்கு முன்தெரியும் சம்பவங்களையும் மனதில் வைத்து பிரசன்னம் கூறினார் கள். அதைப் பற்றிய ஒரு சிறு கதையை பார்க்கலாம். ஒரு சமயம் ஒரு பெண் ஒரு முனிவரிடம் சென்று தன் மகன் காணாமல் போய் விட்டான். கிடைப்பானா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்பொழுது ஒருவர் கிணற்றில் தண்ணீர் இறைத் துக் கொண்டிருந்தார்.

அந்த தண்ணீர் வாளி அறுந்து கிணற்றில் விழுந்தது.

வாளி கிணற்றில் விழுந்த அதிர்வில் கிணற்றுத் தண்ணீர் சிதறி சிறிது வெளியே கொட்டியது. கிணற்று நீர் வெளியில் சிதறிய சம்பவத்தையும் நிமித்தமாக வைத்து அந்த முனிவர் காணாமல் போனவர் வெகுவிரைவில் வந்து சேர்வார் என்று பலன் கூறினார். இப்போது வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். வாளி கிணற்றில் விழுந்த போது அவர் காணாமல் போனவர் மாண்டுவிட்டார் என்று தானே பலன் சொல்ல வேண்டும் ஏன் அவர் வெகு விரைவில் திரும்பிவருவார் என்று பலன் கூறினார் என்ற சந்தேகம் வரலாம்.

கிணற்றுக்குள் கிடந்த நீர் வெளியே வந்து சிதறியது நிமித்தம் காணாமல் போன பொருள் மறைவாக இருந்த பொருள் திரும்பி வந்து சேரும் என்பது சகுனம்.

சகுனங்களையும் நிமித்தங்களையும் வைத்துக் கூறக்கூடிய பிரசன்னம் பொய்க்காது ஜாதகரின் உண்மையான நிலையை மிகத் தெளிவாக எடுத்துக்

பிரபஞ்ச சக்தியின் பரிணாம வளர்ச்சியே பிரசன்னம். கேள்வியாளர் அதாவது பிரஜகர் கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள கிரக நிலவரங்களையும் கண்ணில் தென்படும் சகுன நிமித்தங்களையும் வைத்து கூறக்கூடிய பலன்கள் 100 சதவிகிதம் பலிதமாகும்.

தற்போது சோழி பிரசன் னம், தாம்பூல பிரசன் னம், ஜாமக்கோள் பிரசன் னம், ஆரூடப் பிரசன்னம் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. இதற்கு கோட்சார கிரக நிலவரம் மிக முக்கியம். நமது முன்னோர் கள் ஞான திருஷ்டியிலும் கண்ணுக்கு முன்தெரியும் சம்பவங்களையும் மனதில் வைத்து பிரசன்னம் கூறினார் கள். அதைப் பற்றிய ஒரு சிறு கதையை பார்க்கலாம். ஒரு சமயம் ஒரு பெண் ஒரு முனிவரிடம் சென்று தன் மகன் காணாமல் போய் விட்டான். கிடைப்பானா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்பொழுது ஒருவர் கிணற்றில் தண்ணீர் இறைத் துக் கொண்டிருந்தார்.

அந்த தண்ணீர் வாளி அறுந்து கிணற்றில் விழுந்தது.

வாளி கிணற்றில் விழுந்த அதிர்வில் கிணற்றுத் தண்ணீர் சிதறி சிறிது வெளியே கொட்டியது. கிணற்று நீர் வெளியில் சிதறிய சம்பவத்தையும் நிமித்தமாக வைத்து அந்த முனிவர் காணாமல் போனவர் வெகுவிரைவில் வந்து சேர்வார் என்று பலன் கூறினார். இப்போது வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். வாளி கிணற்றில் விழுந்த போது அவர் காணாமல் போனவர் மாண்டுவிட்டார் என்று தானே பலன் சொல்ல வேண்டும் ஏன் அவர் வெகு விரைவில் திரும்பிவருவார் என்று பலன் கூறினார் என்ற சந்தேகம் வரலாம்.

கிணற்றுக்குள் கிடந்த நீர் வெளியே வந்து சிதறியது நிமித்தம் காணாமல் போன பொருள் மறைவாக இருந்த பொருள் திரும்பி வந்து சேரும் என்பது சகுனம்.

சகுனங்களையும் நிமித்தங்களையும் வைத்துக் கூறக்கூடிய பிரசன்னம் பொய்க்காது ஜாதகரின் உண்மையான நிலையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறும். நான் நமது "பாலஜோதிட'த்தில் சகுனங் களும் நிமித்தங்களும் என்ற தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியது உங்களுக்கு நினைவில் இருக்குமென்று நம்புகிறேன். என் அனுபவத்தில் நான் பல விசயங்களை நிமித்தம் மூலமாக உணர்ந்து இருக்கிறேன். பிரபஞ்ச சக்திக்கும் நிமித்தத்திற்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதை பார்க்கலாம்.

மிக எளிமையான உதாரணமாக திருமணம் தொடர்பான விஷயத்தை பேசிக் கொண்டு இருக்கும் போது யாரவது திருமணத்திற்கு பத்திரிகை கொண்டு வந்தால் திருமணம் சுபமாக நடக்கப் போகிறது என்பதற்கு பிரபஞ்சம் கொடுத்த நிமித்தம்.

Advertisment

ss

முக்கியமான தொழில் ஒப்பந்தம் பற்றிய சிந்தனையில் இருக்கும் போது நமக்கு திருட்டு, கொள்ளை பற்றிய தகவல் கிடைத்தால் ஒப்பந்தத்தின் மூலம் ஏமாற்றம் நடக்கப்போகிறது என்பதை நிமித்தம் மூலமாக பிரபஞ்சம் உணர்த்துகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாரதி கூறினார். இதன் பொருள் ஒரு பெண் நன்னெறிகளுடன், நல்ல குணங்களுடன், நல்ல செயல்களுடன் வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. ஒரு பெண் பெண்ணாக பிறப்பதே பாக்கியம்.

பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் அல்ல. ஆண்களை விட பல மடங்கு உயர்வானவர்கள்.

தனது பெண்மையால் குடும்பத்தை கோவிலாக்குவார்கள். தனது அன்பால் புத்தி சாதுர்யத்தால் சகிப்புத் தன்மையால் குடும்பத்தை நெறி தவறாது வழி நடத்தும் பராசக்தி. பசிக்கு உணவு வழங்குவதில் அன்ன பூரணி. குடும்ப பொருளாதாரத்தை கையாளும் மகாலட்சுமி. இது போன்ற பல்வேறு நல்ல அம்சங்கள் நிறைந்த பெண் திருமணத்திற்குமுன் தாய்மை அடைந்தால் அது பெண் குலத்திற்கே இழுக்கல்லவா.

திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் தாய்மை அடைய முடியாமல் மன அழுத்தத்துடன் பல பெண்கள் இருக்க கன்னிப் பெண் தனது கன்னித் தன்மையை இழப்பது சமுதாயச் சீர்கேடு. சில தம்பதியருக்கு திருமணம் ஆகி, பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்க சில தோஷங்களே காரணம். திருமணத்திற்குமுன் கழுத்தில் மாங்கல்யம் இல்லாமல் ஒரு பெண் கருவை சுமப்பதும் தோஷமே. பல விதமான புத்திர தோஷங்கள் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

அதைப் பற்றி நாம் தனியாக வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.

இது போன்ற சம்பவங்கள் எந்த குடும்பத்தில் நடக்கிறதோ அந்த குடும்பத்திற்கு பந்த தோஷம் உள்ளது என்று பொருள். அதாவது நம்பிக்கை துரோகம் செய்த குடும்பம். ஒரு பெண்னை கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய குற்றம். அல்லது பஞ்சமகா பாதகங்களை செய்த குடும்ப பின்னணி உள்ள குடும்பம் என்று கூறலாம்.

ஒரு நாள் எனக்கு போன் வந்தது. அது ஒரு இளம் பெண்ணின் குரலாக ஒலித்தது. அந்தப் பெண் உங்களுக்கு பிரசன்னம் பார்க்கத் தெரியும் என்பது உண்மை என்றால் நான் என்ன கேள்வி கேட்கப் போகிறேன் என்று கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு உங்களுக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகாமல் கர்ப்பமாக உள்ளீர்கள் அது பற்றிக் பேசப் போகிறீர்கள் என்று கூறினேன். உடனே மீண்டும் அந்தப் பெண் போன் இணைப்பை துண்டித்தார். மீண்டும் 2 நிமிடத்தில் போன் செய்தார் . அந்த பெண் 23-3-2025 அன்று காலை 11.07 மணிக்கு போன் செய்தார். நான் எனது அலுவலகத்தை திறந்து 2 நிமிடம் ஆகியது.

நான் அலுவலகத்தை திறந்துகொண்டு இருக்கும் போது எனக்கு அருகாமையிலுள்ள வீட்டைச் சேர்ந்த இரு சகோதரிகள் எனது அலுவலகத்தை கடந்து சென்றார் கள். அதில் திருமணமான சகோதரியின் கைக்குழந்தையை திருமணமாகாத சகோதரி தூக்கிச் சென்றார். இது ஒரு புறம் இருக்கட்டும். இது எனக்கு கிடைத்த நிமித்தம்.

போன் இணைப்பை துண்டித்த அந்த பெண் மறுபடியும் போன் செய்து நான் கருத்தரித்து உள்ளேனா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அப்படி கருத்தரித்து இருந்தால் எத்தனை மாதம் ஆகிறது. நான் விரும்பிய நபர் நான் வீட்டு விலக்கு ஆகவில்லை என்று கூறியது முதல் என்னிடம் பேசவில்லை அவன் என்னை திருமணம் செய்வாரா? என்று கேட்டார்.

அந்தப் பெண் போன் செய்தபோது ரிஷப ஆரூடம். அன்றைய நாளில் குரு ஐம்பது டிகிரியில் சென்று கொண்டிருந்தார். ரிஷப லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான குரு லக்னாதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகி லாப ஸ்தானத்தில் சென்று கொண்டிருந்தது. லக்னத்தில் குரு இருந்ததால் குழந்தை என்று பலன் எடுக்கப்பட்டது. குரு அஷ்டமாதிபதியாகி 1, 6,க்கு டைய சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்று புதன் ராகு, சூரியன் சம்பந்தம் இருந்தது. இந்த பிரசன்ன ஆரூடப்படி ஒழுக்கத்தை குறிக்கக் கூடிய 4ம் அதிபதி சூரியனுக்கு ராகு சம்பந்தம் ஏற்பட்டதால் திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் என்று கணிக்கப்பட்டது. குரு ஐம்பது டிகிரியில் சென்று கொண்டிருந்ததால் அந்தப் பெண்ணிடம் 50 நாள் கரு உள்ளது என்று கூறப்பட்டது. அந்த பெண் வீட்டு விலக்காகி 48 நாள் ஆகி விட்டது என்று கூறினார். உன்னிடம் பழகிய பையன் 2, 3 நாட்களில் வேலையை மாற்றி விட்டு வேறு ஊருக்கு செல்லப் போகிறான்.

பெற்றோர் மற்றும் காவல் துறை உதவியுடன் அந்த நபரை தேடுங்கள் என்று கூறினேன்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக எனக்கு பிரபஞ்சம் உணர்த்திய நிமித்தம். ஒரு இளம் பெண் சகோதரியின் குழந்தையை சுமந்து சென்றதை நிமித்தமாக வைத்து திருமணத்திற்குமுன்பு கர்ப்பம் என்று கூறினேன். நான் பலன் கூறிய போது கோச்சார லக்னத்தை கணிக்கவில்லை. அன்றைய தினம் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரம் லக்னம் ஆரூடம் இரண்டும் சுக்ரனின் வீடு. ஒரு விசயத்தை பிரபஞ்சம் எவ்வளவு அழகாக உணர்த்துகிறது. பிரபஞ்ச சக்தி தனது அனைத்து செயலை ஒவ்வொரு விநாடியும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதை உணர நாம் பிரபஞ்ச சக்தியுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும்.

ஆரூடம் ரிஷபத்தில் சென்று கொண்டிருந்ததை வைத்து கூறப்பட்ட பலன். ஆரூடம் என்பது 5 நிமிடம். போன் வந்த நேரம் 11.7 என்பதால் 7 நிமிடத்திற்கு ரிஷபத்தில் ஆருடம் செல்லும். மறுமுறை போன் செய்தபோது உனக்கு பலன் கூற முடியாது பெற்றோர்களை அழைத்து வா என்று கூறினேன். அந்த பெண் எனக்கு தந்தை இல்லை. தாய் வயோகதிகம் ஆனவர்? வெளியில் வரமாட்டார். என்று கெஞ்சினார்.

நாள் அதிகமாகி விட்டால் சட்டத்தால் கூட அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முடியாது என்ற மனிதாபிமானத்திற்காக பலன் கூறினேன். சென்ற வார கட்டுரையை படித்த பலர் போன் செய்தார்கள். யார் போன் செய்தாலும் கால்ஸ் நோட்டில் நேரம் குறிக்கப்படும். தயவுசெய்து இலவச பலன் கேட்கவேண்டாம். அந்தப் பெண் போனை பிளாக் பண்ணிவிட்டார். ஆனால் என் கணிப்பு அந்தப் பெண்ணிற்கு 20 வயது இருக்கவேண்டும். இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டேன். எனது பிரசன்ன அனுபவத்தை எழுத இந்த சம்பவமே தூண்டுகோலாக இருந்தது. ஒரு 16 வயது குழந்தை வாட்ஸ் ஆப்பில் தனது பிறப்பு விபரத்தை அனுப்பி எனக்கு எப்ப நட்பு கிடைக்கும். காதல் திருமணம் நடக்குமா, அரேன்ஜ்டு மேரேஜா என்று மெசேஜ் போடுகிறார். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இனி அடுத்த வாரம் காணாமல் போனவரை கண்டுபிடித்த ஒரு பிரசன்னம் பார்க்கலாம்.

-சந்திப்போம்.

செல்: 9865220406

Advertisment
bala160525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe